ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Saturday, June 15, 2013

புதன் மகாதிசைபுதன் மகாதிசை, புதன் புத்திப் பலன்கள்

புதமகாதிசை மொத்தம் 17 ஆண்டுகளாகும். இதில் புதனது சுயபுத்தி 2 வருடம் 4 மாதம் 27 நாள்களாகும். இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களாவன: மூதாதையரின் கூட்டும் அதனால் மகிழ்ச்சியும் இன்பமும் நேரும். குலதெய்வம் மனமொன்றி இருந்து குடும்ப நலத்தைக் காக்கும். அதோடு குடும்பப் பொறுப்புணர்ந்து புத்திரனும் நற்குணம் நற்புகழ் பெற்று வாழ்வான் என்று போகர் அருளால் புலிப்பாணி பாடினேன்.

இப்பாடலில் புதன் மகாதிசையில் புதன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


புதன் மகாதிசை, கேது புத்திப் பலன்கள்


புதமகாதிசையில் கேது பகவானின் ஆதிக்க காலம் 11 மாதம் 27 நாள்களாகும் . இக்கால கட்டத்தில் நிகவும் பலன்களாவன: மாண்டு போகலாம் என்ற எண்ணத்தை அளிக்கும். வலியபகை வந்து சேர்தலோடு செய்தொழில் நாசம் அடையும். விரும்பத்தகாத வியாதிகளும் வந்தடையும்., அதனால் மரணமும் நேரும். நிறைந்த செல்வங்கள் தேடிப் பெற்றாலும் அவை அழிவுறும். ஒவ்வொரு நாளூம் புதுப்புதுப் பகைவர் தோன்றுவர். இதனை நீ அறிவாயாக என்று போகர் அருளால் புலிப்பாணி பாடினேன்.

இப்பாடலில் புதன் மகாதிசையில் கேது புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


புதன் மகாதிசை, சுக்கிர புத்திப் பலன்கள்

புதமகா திசையில் சுக்கிர பகவான் புத்தி 2 வருடம் 10 மாதங்களாகும். தனது ஆதிக்க காலத்தில் சுக்கிரபகவான் நிகழ்த்தும் பலன்களைக் கூறுகிறேன். கேட்பாயாக! தேவதை கோபத்தால் குடும்பத்தில் தர்க்கம் ஏற்படும். இது தீமையானதே எனினும் மனைவி மக்களுடன் அன்யோன்யமான வசியமுடன் இச்சாதகன் அலங்காரமுடன் வாழ்ந்திருப்பான். பொன்னாபரணச் சேர்க்கை உண்டாகும். வாகனயோகம் ஏற்படும். பெருமைமிக்க அரசரின் கருணையும் உண்டாகும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறும் இக்கருத்தைக் கவனமாகக் கேட்பாயாக!

இப்பாடலில் புதன் மகாதிசையில் சுக்கிர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

புதன் மகாதிசை, சூரிய புத்திப் பலன்கள்


புதமகா திசையில் சூரியனின் ஆதிக்க காலம் 10 மாதம் 6 நாள்கள். இக்காலத்தில் நிகழ்த்தும் பலன்களைக் கூறுகிறேன். கேட்பாயாக! இச்சாதகன் இக்கால கட்டத்தில் சிவார்ச்சனை செய்வதோடு ஹோம சாந்தி முதலியன நிகழ்த்தி நிறையருள் பெறுவான். இவன் பூமியில் பரதேசியாக ஆகித்திரிவான். பின்னர் மடாதிபதியாகி இல்லறத்தினைத தொடர்வான் எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் புதன் மகாதிசையில் சூரிய புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


புதன் மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள்

புதமகா திசையில் சந்திர புத்திக்காலம் 1 வருடம் 5 மாதங்களும். இவன் தன் ஆதிக்க காலத்தில் நிகழ்த்தும் பலன்களைக் கூறுகிறேன். கவனமாகக் கேட்பாயாக! பெண்களால் கலகமும் ,இளைப்புநோய், சயரோகம் முதலிய நோய் உபாதைகளும் ஏற்படும். அரசனின் தொல்லையால் குடும்பத்திற்கே கேடு உண்டாகும். அதேபோல் பெண்களாலும் குடும்பமும் பாழாகும். அளவில்லாத செல்வமும் எதிர்பாரா வண்ணம் அழியும். தீதியை நினையாத வேசையரைச் சேர்ந்தின்புறம் சந்தர்ப்பம் ஏற்படும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் புதன் மகாதிசையில் சந்திர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


புதன் மகாதிசை, செவ்வாய் புத்திப் பலன்கள்

இந்த புதமகா திசையில் செவ்வாயின் ஆதிக்க காலம் வெற்றியினைத் தராத 11 மாதம் 27 நாள்களாகும். இக்கால கட்டத்தில் இச்சாதகன் பெண்களால் கிரந்தி முதலிய ரோகங்களைப் பெறுவான். சத்துரு உபாதையுண்டாகும், அதனால் மனத்தில் பீடியும் மயக்கமும் உண்டாகும். நோயுபாதையால் மனமுடைய சகோதரமும் நஷ்டமடையும். பலவகைச் செல்வமும் பங்கப்படும். வெகுதனம் நல்கும் பூமியும் விளைச்சல் குன்றி துர்ப்பலனே தரும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

இப்பாடலில் புதன் மகாதிசையில் செவ்வாய் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

புதன் மகாதிசை, இராகு புத்திப் பலன்கள்

புதமகா திசையில் இராகு புத்தி தீங்கு தருகின்ற 2 வருடம் 6 மாதம் 18 நாள்களாகும். இவ்விராகு பகவான் இவரது ஆதிக்ககாலத்தில் நிகழ்த்தும் பலன்களாவன: தேக பலத்தைச சிதைக்கும். பலவித நோய்களும் மயக்கமும் ஏற்பட்டு அதனால் பெரும் பொருட் சேதம் உண்டாகும். முரண்பட்டுப் பேசக் கூடிய பகைவர்களால் அறிவற்றவர் நேசம் ஏற்படும். இடையீடில்லாத வியாதிகளால் பெரும் பொருள் சேதமாவதுடன் நல்ல கட்டுக்கோப்போடு வீடு முதலாக விளைவயலும் பெருநிதியும் அழியும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் புதன் மகாதிசையில் இராகு புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

புதன் மகாதிசை, வியாழன் புத்திப் பலன்கள்

புதமா திசையில் வியாழ பகவான் புத்திக் காலம் பெரும் புகழ் தருவதான 2 வருடம் 3 மாதம் 6 நாள்களாகும். இவர் தன் ஆதிக்க காலத்தில் அளிக்கும் பலன்களைக் கூறுகிறேன். கேட்பாயாக! சத்துரு உபாதையும், நோயும், மனபயமும் நீங்கி சகலவிதமான செல்வ நலங்களும் பெருகி இப்பூமியில் பெரும் புகழுடன் வாழ்வான். சகலவிதமான யோகங்களும் சித்திக்கும். அனேக புத்திரர்களும் இச்சாதகனுக்கு உண்டாம் என்று போகர் பேரருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் புதன் மகாதிசையில் வியாழன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

புதன் மகாதிசை, சனி புத்திப் பலன்கள்


புதமகா திசையில் சனிபகவான் புத்திக்காலம் 2 வருடம் 8 மாதம் 9 நாள்களாகும். இவர் ஆதிக்க காலத்தில் நிகழ்த்தும் பலன்களாவன: பலமுள்ள சத்துருக்கள் இச்சென்மனுக்குச் சூன்யம் வைப்பர். உயிர்கொல்லி நோயைப் போல இருந்த நிலை சிதைந்து கேடுற நேரிடும். மனைவியும் புத்திரரும் மரணமடைவதுடன் சாதகனும் மடிய நேரிடும். மனைவியும் புத்திரரும் மரணமடைவதுடன் சாதகனும் மடிய நேரிடும். மனைவியும் புத்திரரும் மரணமடைவதுடன் சாதகனும் மடிய நேரிடும் என்று போகரது அருட்கருணையால், புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் புதன் மகாதிசையில் சனி புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.