ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Saturday, June 15, 2013

புலிப்பாணி ஜோதிடம் - சூரிய மகாதிசை

சூரிய மகாதிசை, சூரிய புத்திப் பலன்கள்

கதிரோன் என்றழைக்கப்படும் சூரிய மகாதிசை வருடம் 6 ஆகும். இதில் சூரிய பகவானின் பொசிப்பு நாள் 108 ஆகும். இக்கால கட்டத்தில் இவரது திசை நடக்கும் ஜாதகனுக்கு நெருப்பினால் பீடை ஏற்படும். உறவினர் பகையாகும். அபமிருந்து தோடம் ஏற்படும். வெகுவான பொருட்சேதம் நிகழும். தந்தையாருக்கு அரிஷ்டம் ஏற்படுவதுடன் கண்ணோய் ஏற்படுதலும் ஜுர உபாதை நேருதலும் ஏற்படும். கொடுமையான நாள்களாக இருக்கும் என்று போகர் அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சூரிய மகாதிசையில் சூரிய புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

சூரிய மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள்

இச்சூரிய மகாதிசையில் சந்திரனின் பொசிப்புக்காலம் 6 மாத காலங்களாகும். இக்காலகட்டத்தில் ஏற்படக்கூடிய பலனைச் சொல்கிறேன். கேட்பாயாக! கெடுதலே இல்லாத தனலாபம் வாய்ந்து சொத்து சேர்க்கை மிகும். நோயுபாதை இருப்புன் அவை நீங்கித் தேகமானது நலம்பெறும். அரசர்களால் பெருமையும் பாராட்டும் பரிசும் வந்தடைவதால் வெகுவான மகிழ்ச்சியுண்டாம். எனவெ இரவி திசையில் சந்திர புத்தி சிறப்பான நாள்களே என்று போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சூரிய மகாதிசையில் சந்திர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

சூரிய மகாதிசை, செவ்வாய் புத்திப் பலன்கள்

மேலும் இச்சூரிய மகாதிசையில் செவ்வாயின் பொசிப்புக் காலம் 126 நாள்களாகும். இக்காலகட்டத்தில் இச்சாதகனுக்கு ஏற்படும் பலன்களாவன: பிறரால் புகழப் பெறும் தோரணை நேரும்; சொல்லுதற்குரிய நல்ல பூமி வாய்த்தலும், தனலாபம் ஏற்படலும், செல்வச் செழிப்பும் கன்று காலிகளும் பொருட் சேர்க்கையும் ஏற்படும். விளைச்சல் பெருகி அதனால் நற்பொருட் சேர்க்கையும் சுபகாரியங்களும் மனையில் நிகழும். நவதானிய விளைவு மிகுதலால் அரச செல்வம் பெற்றவன் என்று பிறர் போற்றும் பெருமையும் புகழும் ஏற்படும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சூரிய மகாதிசையில் செவ்வாய் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


சூரிய மகாதிசை, இராகு புத்திப் பலன்கள்

இன்னும் இச்சூரிய மகாதிசையில் கரும்பாம்பு எனக் கூறப்படும் இராகுவின் பொசிப்புக் காலம் மிக ஆகாத தொன்றேயாகும். இவனது பொசிப்புக் காலம் பத்து மாதம் இருபத்தி நான்கு நாள்களாகும். இக்காலகட்டத்தில் ஏற்படும் பலன்களாவன: பொன் பொருள் சேதமாகும். பெண்நாசமும் உண்டாகும். சத்துருக்களுடன் சண்டையிடுதல் போன்ற தீயன நிகழும். உடல் நலத்தைப் பீடிக்கும். கொடிய வியாதிகள் வந்தடையும், மனைவி மக்களைப் பிரிந்து வாழச் செய்யும். இவனது பொசிப்புக் காலத்தை நலமில்லாத நாள்களே என்று துணிந்து சொல்லுக எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சூரிய மகாதிசையில் இராகு புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.

சூரிய மகாதிசை, வியாழன் புத்திப் பலன்கள்

மேலும் இந்த இரவி திசையில் வியாழ பகவானின் பொசிப்புக் காலம் 288 நாள்களாகும். நன்மை தரும் இக்காலகட்டத்தில் ஏற்படும் பலன்களாவன; விவரமுடன் நன்மைதரத் தக்க சம்பத்து ஏற்படின் சில சிறு சுபவிரங்களும் ஏற்பட்டு தனஹானியுண்டாகும். என்சொல் என்றும் தவறாது, தீவினைகள் அகலும். மிகவும் குறைவற்ற இன்பம் ஏற்பட்டு சுக செளக்யத்துடன் வாழும் நிலை ஏற்படும். இதுவரை ஏற்பட்டிருந்த சத்துருக்களும் இச்சாதகனை வணங்கி மித்துருவாகிச் சுகிப்பன் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சூரிய மகாதிசையில் வியாழன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


சூரிய மகாதிசை, சனி புத்திப் பலன்கள்

வணங்குவதற்குரிய இரவியின் திசையில் இவனது மகனான சனிபகவானின் பொசிப்புக்காலம் பதினொரு மாதம் பன்னிரெண்டு நாள்களாகும். இக்காலகட்டத்தில் விளையும் பலன்களாவன: மனம் வேறுபட்ட சத்துருக்களாலும் அரச பீடையாலும் பெருந் தனக்கேடு ஏற்படும். அதேபோல் பிதுர் மரணமும் எதிர்பாராவண்ணம் ஏற்படும்.கெடுதியான பலன் களையே சனிபகவான் ஏற்படுத்திவைப்பார் என்று கூறுக என போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சூரிய மகாதிசையில் சனி புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


சூரிய மகாதிசை, புதன் புத்திப் பலன்கள்

தானென்று கூறத்தகும் சூரிய மகாதிசையில் புதபகவானின் பொசிப்புக் காலம் மிகவும் பாதகமானதே. இது பத்து மாதம் ஆறு நாள்கள் நிகழும். இக்கால கட்டத்தில் ஏற்படும் பலன்களாவன: தீராத வியாதி வந்து தேக நலத்தைக் கெடுக்கும் வானளாவிய சிறந்த செல்வமும் பொருளும் சேதம் அடையும். இதுவரை நன்மைகளையே அளித்து வந்த புத்தியானது நாசமாகும். அரசனைப் போல் வாழ்ந்த இச்சாதகனின் குடும்பத்தை நாசமடையச் செய்யும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சூரிய மகாதிசையில் புதன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


சூரிய மகாதிசை, கேது புத்திப் பலன்கள்

இன்னுமொன்று இந்த இரவியின் திசையில் செம்பாம்பு என்று கூறப்படும் கேதுபகவானின் பொசிப்புக் காலம் மிகவும் பொல்லாத நாள்களேயாகும். அதுவும் 125 நாள்களேயாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவன: காரியக்கேடு ஏற்படும். மனைவி நாசத்தை ஏற்படுத்தும். கேடு செய்யும் சத்துருக்களிடம் சென்று சரணடையச் செய்யும். இருந்தமனை ஊர்விட்டு ஓடிவிடச் செய்யும். பூமியில் பலவிதமான தெண்டங்களை அடையச் செய்யும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.

இப்பாடலில் சூரிய மகாதிசையில் கேது புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


சூரிய மகாதிசை, சுக்கிர புத்திப் பலன்கள்

மேலுமொன்று இந்த இரவியின் திசையில் சுக்கிரபுத்தி 1 வருட காலமாகும். இச்சுக்கிர பகவானின் பொசிப்புக் காலத்தில் ஏற்படும் பலன்களாவன: சுக்கிரனது பகைவன் சூரியனாதலால் சூத்திர மிக்க வாய்வு உபாதை ஏற்பட்டு திரேக நலத்தைக் கெடுக்கும். பகைமைகளை உண்டாக்கும். நற்பலன்கள் வாய்த்தல் ஏற்படாது. மனைவிக்குப் பலவித அரிஷ்டங்களை உண்டாக்கும். திரண்ட பொருட் சேதம் எற்படும். நற்பலன்கள் விளையாது என்று கூறுவாயாக எனப் போகரின் அருளாணையால் புலிப்பாணி புகன்றேன்.

இப்பாடலில் சூரிய மகாதிசையில் சுக்கிர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.