ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Wednesday, June 12, 2013

ஜோதிடம்: அடிப்படை - பகுதி 2


ஜோதிடம்: அடிப்படை -  பகுதி 1ன் தொடர்ச்சி


 
1.14
கேந்திர, திரி கோண, மறைவு வீடுகள்

ஜோதிடர்கள் ஜாதகத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் வீடு
என்பார்கள்.உங்களுடைய லக்கினம் எதுவோ -அதுவே பிரதானமானது.
அதிலிருந்து துவங்குவதுதான் எல்லா பலாபலன்களும்.
லக்கினத்தை - முதல் வீடு என்று எடுத்துக் கொள்ளுங்கள்.
- 1 , 5 , 9 - ஆகிய வீடுகள் - திரி கோண ஸ்தானம். (லக்ஷ்மி ஸ்தானம்)
- 1 , 4 , 7 ,10 - கேந்திர வீடுகள் என்பர். ( விஷ்ணு ஸ்தானம் )
- 3, 6 , 8 , 12 - மறைவு வீடுகள் என்று கூறுவர். அதாவது , இந்த வீட்டில் இருக்கும் கிரகங்கள் - பலம் இழந்து இருக்கும்..
- 2 , 11 - உப , ஜெய ஸ்தானங்கள் என்பர்.

1
ஆம் வீடு - திரி கோணமும் , கேந்திரமும் ஆகிறது...
எந்த ஒரு கிரகமும் - திரி கோணத்திலோ , கேந்திரத்திலோ - நின்றால் - அது  பலத்துடன் நிற்கிறது என்று அர்த்தம்.
2 , 11 - வீடுகளில் நின்றால் - பரவா இல்லை , நல்லது.
3 ஆம் வீடு - சுமார்.
6 ,8 ,12 - ஆம் வீடுகள் - நல்லதுக்கு இல்லை. அப்படினா என்ன, ஒரு சுப கிரகம் , இந்த வீடுகள் லே இருந்தா, அதுனாலே ஏதும் , பெருசா நல்லது பண்ண முடியாது.


1.15
ஒரு கிரகம் கெட்டு விட்டது , பலம் இல்லை என்று எப்படி கூறுவது?

ஒரு கிரகம் , நீசம் ஆகி இருந்தால்.... மறைவு வீடுகளில் இருந்தால்... பகை வீட்டில் இருந்தால்... பகை கிரகங்களுடன் சேர்ந்து இருந்தால்... , அந்த கிரகம் சரியான நிலைமையில் இல்லை என்று பொருள்.

1.16 கிரகங்களின் பார்வைகள் :

எல்லா கிரகத்துக்கும் ஏழாம் பார்வை - பொது.
சனி க்கு - 3 , 10 ஆம் பார்வைகள் உண்டு.
செவ்வாய்க்கு - 4 , 8 ஆம் பார்வைகளும் உண்டு.
குருவுக்கு - 5 , 9 ஆம் பார்வைகளும் உண்டு.


1.17 காரகன்:(authority)
தந்தைக்குக் காரகன் சூரியன்
உடல் காரகன் சூரியன்
மனம், தாய்க்குக் காரகன் சந்திரன் 
ஆயுள், தொழில் காரகன் சனி
களத்திர காரகன் சுக்கிரன்
தனம், புத்திர காரகன் குரு
கல்வி, புத்தி காரகன் புதன்
நிலம், ஆற்றல், திறமைகளுக்குக் காரகன் செவ்வாய்


1.18  சந்திர ராசி என்றால் என்ன? அது எதை ஆதாரமாகக் கொண்டது?
ஒரு ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசி, சந்திர ராசி எனப்படும். அது ஜாதகன் பிறந்த நட்சத்திரத்தை ஆதாரமாகக் கொண்டது.
 
1.19 . லக்கினம் எதற்குப் பயன்படும்? சந்திர ராசி எதற்குப் பயன்படும்?
பிறந்த ஜாதகம் (Birth Chart) என்பது வாகனம்,தசாபுத்தி என்பது ரோடு,கோள்சாரம் என்பது டிரைவர்.லக்கினத்தையும் அதை அடுத்துள்ள பன்னிரெண்டு வீடுகளையும் வைத்து ஜாதகனுடைய வாழ்க்கையையும், தசாபுத்தியைவைத்து அந்த ஜாதகன் பயனடையப் போகும் காலத்தையும் கோள்சாரத்தைவைத்து அந்தப் பலன்கள் கையில் கிடைக்கும் காலத்தையும் அறியலாம்.
 
1.20. கோச்சாரம் (கோள் சாரம் - Transit of planets) என்பது என்ன?
ஒவ்வொரு கோளும் வானவெளியில் சுழன்று ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசியில் இடம் பெயர்ந்து அமருவதே கோள்சாரம் எனப்படும்.
 
1.21. தசா / புத்தி என்பது என்ன? அதன் பயன் என்ன?
ஜாதகன் பிறந்த நட்சத்திரத்திற்கு அதிபதியான கிரகம் எதுவோ அதற்குரிய தசாதான் ஜாதகனின் ஆரம்ப தசா, அதை அடுத்து ஒவ்வொரு தசாவாக மாறிக் கொண்டே வரும் மொத்த தசா காலம் 120 ஆண்டுகள். ஒவ்வொரு தசாவையும் மற்ற கோள்கள் பங்குபோட்டுக் கொள்ளும். அதற்கு புத்தி என்று பெயர் (Sub period). ஒவ்வொருகிரகமும் அதன் தசாவில் அல்லது புத்தியில்தான் தனக்குரிய நல்ல அல்லது தீய பலன்களைக் கொடுக்கும்

ஒரு தசையை ஒன்பது பகுதிகளாக பகுப்பதுதான் புக்தி:
அதாவது ஒன்பது கிரகங்களும் ஒவ்வொரு தசையின் காலத்தில் புக்தியாக பங்கெடுத்து பரிபாலனம் செய்யும். ஒரு தசை 10 வருடம் என்றல் அதில் ஒன்பது சமம் இல்லாத காலமாக புக்திகள் பிரிக்கபடுகிறது. அதில் எந்த ஒரு தசையும் தனது புக்தி கொண்டு ஆரம்பிக்கும். அதாவது ராகு தசை என்றால் அதில் ராகு புக்தி முதலில் தொடங்கும் (தனது புக்தி ). அதாவது தனது கிரகத்தின் பங்களிப்பை முதலில் செய்து விடும். அதன் பின்பு மேலே உள்ள வரிசை படி, குரு புக்தி, சனி புக்தி, புதன் புக்தி, கேது புக்தி, சுக்கிர புக்தி என தொடரும். அதேபோல் புதன் தசை என்றால் முதலில் புதன் புக்தி, (தனது புக்தி ) அதன் பின்பு வரிசையாக கேது புக்தி, சுக்கிர புக்தி, சூரிய புக்தி என ஒன்பது புக்திகளும் நடந்து வரும்.
ஜோதிட துறையில் வழமையாக சொல்லுவது என்னவென்றால் எந்த ஒரு தசையில் தனது புக்தி ஒருவருக்கு நல்லதை செய்கிறதோ அந்த தசையில் மற்ற புக்திகள் கெடுதல் செய்யும். அதாவது கொடுத்து கெடுப்பது. ஆக ஒரு தசையின் தனது புக்தி காலமானது பலருக்கு நல்லது செய்யாமல் கெட்டதும் செய்யாமல் மந்தமாக அல்லது நடுத்தரமாக நடந்தால் மற்ற புக்திகள் விசேஷமாக இருக்கும் என்று சொல்லுகின்றனர்.
ஒரு புக்தியை ஒன்பது பகுதி காலங்களாக பிரிப்பது தான் அந்தரம்.
எப்படி தசையில் ஒன்பது பகுதி புக்தியோ அதுபோல் புக்தியில் ஒன்பது பகுதிதான் அந்தரம். அதாவது ஒரு தசை நடந்தால் ஒன்பது கிரகங்கள் புக்தியாக பங்கு கொள்கிறதோ அதேபோல் ஒரு புக்தியில் ஒன்பது பகுதிகளாக அந்தரம் என்ற காலம் பங்கேடுக்கிறது.
உதாரணமாக ஒருவருக்கு குரு தசை நடக்கிறது என்றால் முதலில் குரு புக்தி, சனி புக்தி, புதன் புக்தி, என ஒன்பது கிரகங்கள் தொடரும். அதுபோல் அந்த குருதசையின் குரு புக்தி எடுத்துக்கொண்டால் குரு அந்தரம், சனி அந்தரம், புதன் அந்தரம் என ஒன்பது கிரகங்களும் அந்தரம் காலமாக செயல்படும்.
ஆக ஒரு மனிதனின் ஆயுள் = 9 தசையாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தசைக்கும் ஒன்பது புக்திகளாக பிரிக்கப்பட்டு ஒன்பது புக்திகளுக்கும் ஒன்பது அந்தரங்களாக பிரிக்கப்படும் கால புருஷன் ஒருவரின் வாழ்வை நிர்ணயிக்கின்றான்.
இதில் பெரும்பாலும் யாரும் அனைத்து தசைகளை நிறைவு செய்வது இல்லை. 70 வயது ஆயுள் என்றால் 3 அல்லது 4 தசைகள் நடக்காமலே ஆயுள் முடிந்து விடும்.
மேலும் ஒரு கிரகம் ஒரு ஜாதகத்தில் நல்ல பலம் பெற்றால் அந்த தசை முழுவதும் நல்லதே நடக்கும் என்றும் சொல்ல இயலாது. என் என்றால் புக்தி என்ற பங்களிப்பு ஓவ்வொரு தசையிலும் அனைத்து கிரகங்களுக்கும் உள்ளது. அதைவிட அந்தரம் என்ற பங்களிப்பும் அனைத்து கிரகங்களுக்கும் உள்ளது.
எனக்கு குரு தசை நடக்கிறது எனக்கு ஜாதகத்தில் குரு உட்சமாக இருக்கிறது நல்ல பலன் நடக்கும் என்று நினைக்ககூடாது. குரு தசையில் சனி புக்தி சேவை புக்தி கேது அந்தரம் என்று வரும் அல்லவா அப்போது நம்மை போட்டு பார்த்து விடும்.
சனி எனக்கு ஜாதகத்தில் கெட்டு போய் உள்ளது சனி தசை முழுவதும் கேடுதலே நடக்கும் என்று கலங்க வேண்டாம். அதில் நல்ல கிரகங்கள் புக்தி மற்றும் அந்தரம் நடக்கும்போது மூச்சு விட வாய்ப்பு வரும்.

 
1.22. தசா புத்திகள்
ஒரு ஜாதகரின் பிறந்த நட்சத்திரத்தின் அதிபதியின் தசைதான் துவக்க தசை.
 தசா புத்திகளின் கால அளவு, மற்றும் வரிசை என்ன?

சூரிய தசை - 6 ஆண்டுகள்  
சந்திர தசை - 10 ஆண்டுகள்  
செவ்வாய் தசை - 7 ஆண்டுகள் 
 ராகு தசை - 18 ஆண்டுகள் 
குரு தசை - 16 ஆண்டுகள்  
சனி தசை - 19 ஆண்டுகள் 
 புதன் தசை - 17 ஆண்டுகள் 
 கேது தசை - 7 ஆண்டுகள்  
சுக்கிர தசை - 20 ஆண்டுகள் 

மொத்தம் 120 ஆண்டுகள்

1.23 அஸ்தமனம்

ஒரு கிரகம் வலிமை இழந்து போவதுதான் அஸ்தமனம் இரண்டு கிரகங்கள் 5 டிகிரிக்குள் அமர்ந்திருந்தால், 2-வதாக இருக்கும் கிரகம் வலிமை இழக்கும். இந்த விதிப்படி சூரியனுடன் ஒரு கிரகம் 10 பாகைக்குள் இருக்கும்போது வலிமை இழந்துவிடும்

1.24 அஷ்டகவர்கம்
அஷ்டவர்க்கம் என்பது ஒரு கிரகத்தின் வலிமையையும், ஒரு வீட்டின் தன்மையையும் மதிப்பெண்கள் கொடுத்துக் கணிப்பது.ஒரு வீட்டில் ஒருகிரகத்தின் அதிகபட்ச மதிப்பெண் 8,  ஒரு ஜாதகத்தின் மொத்த மதிப்பெண் 337
(
யாராக இருந்தாலும் 337 மட்டுமே)
ஒரு வீட்டின் சராசரி மதிப்பெண் - 28 (337/12)
இந்த மதிப்பெண்களை வைத்து ஒரு ஜாதகத்தில் உள்ள நன்மை தீமைகளை சுலபமாக அறியலாம்.

1.25 .நவாம்சம்
Navamsam is the magnified version of a Rasi Chart
ஒரு ராசியை ஒன்பது சமபாகங்களாகப் பிரித்து, ராசியில் உள்ள கிரகம் அதன் எந்தப் பகுதியில் உள்ளது என்பதைக்
காட்டுவதுதான் நவாம்சம்.(குறிப்பாக கணவன் அல்லது மனைவியைப் பற்றி அறிய உதவும்)

1.26 சுற்றும் காலம்
ஜோதிடப்பலன்கள்  அறிய  முதலில் ஒவ்வொரு கிரஹமும் ஒவ்வொரு ராசியில்எவ்வளவு காலம்  நிலைத்திருக்கும் என அறிந்துக்கொளவது  அவசியம் முதலாவதாக சந்திரன் ஒன்றுதான் 12 ராசிகளை முப்பது நாட்களில் சுற்றி வருகிறான் அதாவது ஒவ்வொரு ராசியிலும் அவன் 2 ½ நாடகள் தான்  தங்குவான்
அடுத்தபடியாக நாம் சூரியனைச்சொல்லலாம்   .சூரியன், சுக்கிரன், புதன் 12 ராசிகளை ஒரு ஆண்டில் சுற்றிவருகிறான்  
செவ்வாய் கிரகம் 1 ½ ஆண்டுகளில்  12 ராசிகளைக்  கடக்கின்றன .இவை  ஒவ்வொரு ராசியிலும் சுமாராக 45 நாட்கள் தங்கி இருக்கும் ஆனால் சில சம்யம் செவ்வாய்  ஒரு ராசியில் அதிக மாதங்கள் தங்க வாய்ப்புண்டு. சிலசமயம்  ஆறு மாதங்கள் கூட அந்த இடத்திலேயே இருக்கும்
பின் வருவது குரு ,இந்தக்கிரகம்  12  ராசிகளை  12 ஆண்டுகளில் கடக்கிறது ஒரு ராசியில் ஒரு வருடம்  தங்கி இருக்கும் சில சம்யம் வக்ரமாகி  ஒரு சில மாறுதல் ஏற்பட வாய்ப்பு உண்டு
மந்தன் என்ற பெயரிலேயே தெரிகிறது சனி மிகவும் மெதுவாக 12 ராசிகளைக் கட்க்கும் என்று ,,,சனி 12 ரசிகளைக்கடக்க முப்பது ஆண்டுகள் பிடிக்கின்றன  இவர் ஒரு ராசியில் 2 1/2 வருடங்கள் தங்குகிறார்
ராகு கேது  18 ஆண்டுகளில்  12 ராசிகளைக் கடக்கின்றன  இவை ஒரு ராசியில் 1 1/2 வருடம்தங்கி இருக்கும் .எல்லா கிரகங்களும் முறைப்படி ராசிகளை வலம் வர இந்த ராகு கேது மட்டும்  ராசிகளை இடது பக்கமாக எதிர்திசையில் செல்கின்றன மேலும் இரண்டும் ஒரே  நேரத்தில் ஒரு ராசியிலிருந்து  மற்றொரு ராசிக்கு செல்கின்றன  மற்ற எல்லா கிரகங்களும் தனித்தனியே நகர ராகு கேது மட்டும் சேர்ந்தே நகருகின்றன  ராகு கேது பெயர்ச்சி என்று இரண்டையும் சேர்த்தே தான் சொல்லுவார்கள் ராகு  கேது ஒருவர்க்கொருவர்  பார்த்த வண்ணம் ஒருவர்க்கொருவர் 7 ம் இடத்தில் சஞ்சரிப்பார்கள் உம்...  மேஷ்த்தில் ராகு இருந்தால் அதற்கு 7ம் இடமான துலாத்தில் கேது இருக்கும்  ரிஷ்பத்தில் ராகு இருந்தால் விருச்ச்சிகத்தில்  கேது இருக்கும்


1.27
வக்ரகதி  ..
ராகு கேது  எப்போதுமே இடமிலிருந்து வல்மாக் எல்லா ராசிகளையும் வளைய வரும் anticlockwise .எல்லா கிரகங்களும்  மேஷ்த்திலிருந்து ஆரம்பித்து  ரிஷபம்   மிதுனம் என்று சுற்ற ராகு  கேது  கடகத்திலிருந்து ஆரம்பித்து மிதுனம் ரிஷபம் மேஷம் என்று பின்னுக்கு வந்து சுற்றும் இதே போல்  தான்  நட்சத்திர நிலை.யும்  .எல்லா கிரகங்களும் அசுவனி பரணி கிருத்திகை  ரோஹிணி என்று சுற்றி வர  ராகு கேது  ரோகிணி கிருத்திகை பரணி  அஸ்வினி என்று சஞ்சரிக்கும் ஆனால் சில சந்தர்ப்பங்க்ளில்  செவ்வாய்  புதன்  குரு  சுக்கிரன் சனி என்ற ஐந்து கிரகங்க்ளும்  திடீரென்று பின்னுக்கு வருவதுண்டு இதைத் தான் வக்கிரகதி என்கிறார்கள்  இந்த வக்கிரகதி  தன்மை சில சமயம் வரைதான் நீடிக்கும் பின்  வழக்கம் போல் சுற்ற ஆரம்பித்துவிடும் உதாரணமாக குரு தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்குப்போனபின் சில சம்யங்க்ளுக்கு திரும்பவும் தனுர் ராசிக்கே வந்துவிட்டு பின்  திரும்ப மகர  ராசிக்கு செல்லும் ,இதையே குரு வக்கிரகதியில் சஞ்சரிக்கிறார் என்பார்கள் சூரிய சந்திரனுக்கு இதுபோல்  வக்ரகதி  கிடையாது

1.28
கிரஹங்கள் பலன் தரும் காலங்கள்

சூரியன், செவ்வாய், கிரஹங்கள் ஆரம்ப காலத்திலேயே பலன்களைக் கொடுப்பார்கள்.
 
சந்திரன், புதன் கிரஹங்கள் அவர்கள் காலம் முழுவதும் பலன்களைக் கொடுப்பார்கள்.
 
குருவும், சுக்ரனும் அவர்கள் காலத்தின் மத்தியில் பலன்களைக் கொடுப்பார்கள்.
 
சனி, ராகு, கேது பிற்காலத்திலேயே பலனைக் கொடுப்பார்கள். 


1.29
கிரஹங்கள் அடுத்த ராசிகளின் பார்வை 
ஒரு ராசியில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும்போது, அதை விட்டுப் போவதற்குமுன்பே அடுத்த ராசிகளைப் பார்ப்பார்கள். கிரஹங்கள், தாங்கள் இருக்கும் ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு மாறுமுன், அந்தந்த அடுத்த ராசியின் குண விசேஷங்களை முன்னதாகவே அடையப்பெற்று, அதற்குத் தகுந்தவாறு அடுத்த ராசியின் பலாபலன்களை ஜாதகருக்கு கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
அதாவது,
சூரியன் -5 நாள்
புதன்,சுக்ரன் -7 நாள்
செவ்வாய் -8 நாள்
குரு -2 மாதம்
ராகு,கேது -3 மாதம்
சனி                                  - 6 மாதம்  

1.30 கிரஹங்கள் வலிமை 

உச்சம்  - 100% வலிமை
மூலத்திரிகோணம் - 90% வலிமை
சொந்த வீடு - 80% வலிமை
நட்பு வீடுகள் - 60% வலிமை
சம வீடுகள் - 50% வலிமை
பகை வீடுகள் - 40% வலிமை
நீச வீடுகள் - 10% வலிமை
இந்த அளவுகள் எல்லாம் எடைபார்க்கும் இயந்திரத்தை வைத்துச் சொல்லப் பட்டதல்ல! அனுபவத்தில் பெற்ற உத்தேச அளவுகள்

1.31 ஷட்பலம்
ஷட்பலம் என்பது ஆறுவகை பலமாகும். அவை ஸ்தானபலம், திக் பலம், சேஷ்ட பலம், கால பலம், திருக் பலம், நைசர்கிக பலம் என்பனவாகும்.


திக் பலம் :
லக்னத்தில் குருவும் புதனும்,
நான்கில் சந்திரன் சுக்கிரன், 
ஏழில் சனி, பத்தில் 
சூரியன் செவ்வாய் இருப்பது

ஷட்பலம் அறிவதன் மூலமே கிரகத்தின் உண்மையான வலிமையை அறிய முடியும். மேலும் பாவ பலத்தையும் அறிய வேண்டும். இதன் பிறகே ஜாதகத்தின் பலாபலன்களை சரியாக கணிக்க முடியும். இதை கணிக்க விரிவான ஜோதிட அறிவும் ஓரளவு கணித அறிவும் அவசியம்.


1.32  




தொடர்ச்சி: ஜோதிடம் - பகுதி 3ல்