ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Friday, January 17, 2014

ஜாதக உதாரணங்கள் - 1 - அரவிந்த் கெஜ்ரிவால்

ஜாதக உதாரணங்கள் -

முன்னாள் டில்லி முதல்அமைச்சர் - அரவிந்த் கெஜ்ரிவால்

ஜாதக சிறப்பம்சங்கள்


லக்ன அதிபதி, ராசி அதிபதி சுக்கிரன் 4ல் வர்கோத்தமம் - மிகவும் சிறப்பு
1ல் சந்திரன் உச்சம்
4ல் சூரியன் ஆட்சி, 10 ம் இடம் சூரியன் செவ்வாய் பார்வை - 
அரசில் அல்லது அரசியலில் பதவி
ஜாதகத்தில் உள்ள யோகங்கள்
கால சர்ப்ப யோகம், - (திடீர் வசதி வாய்ப்புகள் வழங்கியது)

கஜ கேசரி யோகம், - (ஆஸ்தி, முன்னேற்றம், வெற்றி வழங்கியது)
புத ஆதித்ய யோகம் - (கல்விமான், புத்திசாலி, பேச்சாளர் ஆக்கியது)

11 வது வீட்டில் ராகு - (லாபம் பெருகியது)
10ம் அதிபதி சனி 12ல் வர்கோத்தமம், நீசம் -  அவர் சில 
 நேரங்களில் தொழில் ரீதியில் பிரச்சனைகளை
 சந்திக்க நேரிடும். (தொழில் மாற்றம்). இதனாலேயே இவர் முழு 5 வருடம் முதல்வராக பணியாற்ற முடியாமல் போனது.


நடப்பு தசா புத்தி -  குரு தசை சுக்கிர புத்தி
 

இவரைப் பற்றி:
அரவிந்த் கெஜ்ரிவால் அரியானாவிலுள்ள இசாரில் 1968 ஆம் ஆண்டு‍ ஆகஸ்டு‍ 16 ஆம் நாள் பிறந்தவர்[2] [3] கேஜ்ரிவாலின் தந்தை கோவிந்த ராம் கேஜ்ரிவால், தாய் கீதா தேவி. ஐஐடி கரக்பூரில் 1989 ஆம் ஆண்டு இயந்திரவியல் பொறியியல் பட்டம் பெற்றவர். 1992ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமைப் பணிகளில் ஒன்றான இந்திய வருவாய்த்துறைப் பணியில் (IRS) சேர்ந்து தில்லியில் வருமானவரி ஆணையர் அலுவலகத்தில் பணி புரிந்தார். அங்கு பணி புரியும்போது அரசுத்துறையில் தகவல்கள் வெளிப்படையாக இல்லாமையே ஊழலுக்கு வழிவகுப்பதை உய்த்தறிந்தார். தான் பணியில் இருக்கும்போதே ஊழலுக்கு துணைபுரியும் செயலாக்கங்களை மாற்றவும் எதிர்க்கவும் போராடி வந்தார்.[4] வருமானத்துறை அலுவலகத்தில் ஒளிவின்மையைக் கொணர பல மாற்றங்களை துவக்கி வைத்தார்.
சனவரி 2000 ஆம் ஆண்டில் தற்காலிக பணிஓய்வு பெற்றுக்கொண்டு பரிவர்த்தன் - என்ற தில்லியை மையமாகக் கொண்ட குடிமக்கள் இயக்கமொன்றைத் துவக்கினார். இது நியாயமான, ஒளிவுமறைவற்ற, பொறுப்புள்ள அரசாண்மைக்காக பாடுபடுகிறது. பெப்ரவரி,2006ஆம் ஆண்டில் முழுவதுமாக பணிஓய்வு பெற்றுக் கொண்டு பரிவர்த்தன் பணிகளில் இறங்கினார்.[5]
அருணா ராய் போன்றவர்களுடன் இணைந்து தகவல் பெறும் உரிமைக்காக அமைதியான சமூக இயக்கத்தை நடத்தினார். 2001ஆம் ஆண்டில் தில்லியில் தகவல்பெறும் உரிமைச்சட்டம் நிறைவேறியது. [3] நாட்டளவில் 2005ஆம் ஆண்டு நிறைவேறியது. அதன்பிறகும் சட்டத்தை ஏட்டளவில் நிற்கவிடாது மக்களறியும் வண்ணம் இந்தியா முழுவதும் பயணித்து பரப்புரை யாற்றினார்.[6][7] மேலும் தனது அமைப்பின் மூலம் இச்சட்டத்தின் மூலம் சிறப்பான தகவல்களைப் பெற்று அரசாண்மையில் மாற்றங்களைக் கொண்டு வருபவர்களுக்கு விருதுகள் வழங்கத்தொடங்கினார்.[8] இவ்வகையில் அரசின் செயல்களை மக்களும் கண்காணித்து பங்கேற்க தூண்டுகிறார்.
பெப்ரவரி6, 2007இல் சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி 2006ஆம் ஆண்டுக்கான "ஆண்டின் சிறந்த இந்தியர்" பட்டத்தை பொதுமக்கள் சேவைக்காக அரவிந்துக்கு வழங்கியது.
அண்ணா அசாரே தலைமையில் ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டார். 26 நவம்பர் 2012ல் ஆம் ஆத்மி கட்சியைத் துவக்கி, 2013 இல் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் பின்னணி இல்லாதவர்களை வேட்பாளர்களாக போட்டியிடச் செய்து மக்களின் ஆதரவைப் பெற்றார்[9]. 15 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் தில்லி முதல்வர் பதவியில் இருந்த சீலா தீக்‌சித்தை புது தில்லி சட்டமன்ற தொகுதியில் 25,864 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.[10][11] திசம்பர் 28ஆம் தேதி டெல்லி முதல்வராக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால். [12]
பிள்ளைகள் இரண்டு
பயின்ற கல்விசாலை இந்திய தொழில்நுட்பக் கழகம் கரக்பூர்