ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Thursday, May 6, 2021

கொரானாவில் இருந்து பாதுகாக்க

 கொரானா வைரஸ் என்பது உலகத்தின் மிக நுண்ணிய நச்சுக் கிருமி. இது பாக்டீரியாவை விட 100 மடங்கு சிறியது.

உலகில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வைரஸ்கள் இருக்கின்றன. சில வகை வைரஸ்களை மட்டுமே நாம் அறிந்திருக்கிறோம். சளியை ஏற்படுத்துவதும் வைரஸ்தான். நாய்க்கடியில் உருவாகும் ரேபிஸ், போலியோ, எச்.ஐ.வி போன்ற நோய்களை ஏற்படுத்துவதும் வைரஸ்கள்தான்.

கரோனா வைரஸ், சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவியதாகக் கூறப்படுகிறது. வவ்வால்கள் மற்றும் எறும்புத் தின்னிகள் போன்றவற்றில் இருந்து இவை பரவியிருக்கலாம். ஓரிடத்தில் நிலை கொண்டிருக்கும் வைரஸ் சில நாட்களுக்கு அப்படியே இருக்கும். ஒரு செல்லுக்கு நுழையும்போது உயிர் பெற்று இயங்கத் தொடங்கும், வளர ஆரம்பிக்கும். 

இரண்டாவது அலையில், கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்திருக்கிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு, நோய் அறிகுறி இல்லாமல் இருப்பவர்களிடமிருந்து (A Symtematic) பெருமளவில் இது பரவ ஆரம்பித்திருக்கிறது. தவிர, இந்த முறை இந்த வைரஸ் மூச்சுப் பாதையின் துவக்கத்தில் அதாவது மூக்கில் தேங்குவது அதிகமாக இருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்த கொடிய நோயை ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பு நிச்சயம் தேவை. அதற்கான விழிப்புணர்வு பதிவே இது.

கோவை மருத்துவரின் பார்வையில் கொரானா பாதிப்பு

video பார்க்க மேலே இருமுறை இடைவெளியுடன் click செய்யவும்.

கோவிட்-19 ன் பொதுவான அறிகுறிகள் காய்ச்சல், சோர்வு, மூச்சுத் திணறல் மற்றும் வறட்டு இருமல் தான்.

சில நோயாளிகளுக்கு உடல் வலி, மூக்கில் சளி ஒழுகுதல், தொண்டைப் கரகரப்பு, கண் எரிச்சல்,  சுவை & வாசனை இழப்பு, வாந்தி, வயிற்றுப்போக்கு கூட இருக்கலாம். இந்த நோயின் அறிகுறிகள் ஆரம்பத்தில் மிகக் குறைவாகவே இருக்கும். பிறகு படிப்படியாக அதிகரிக்கும். சிலருக்கு வைரஸ் தாக்கம் இருந்தாலும் எந்த அறிகுறிகளும் இருக்காது.அதனால் அவர்கள் உடல் ரீதியாக நன்றாகவே உணருவார்கள். பெரும்பாலான மக்கள் (சுமார் 80 சதவீத மக்கள்) எந்த சிறப்புச் சிகிச்சையும் இல்லாமலேயே நோயிலிருந்து மீண்டு வருகிறார்கள்.
நோயை ஏற்படுத்தும் வைரஸ் காற்று வழியாகப் பரவுவதை விட, சுவாச துளிகளுடன் தொடர்பு கொள்வதன் மூலமே பெரும்பாலும் பரவுவதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் சமீீபத்திய முடிவுகள் இந்த தொற்று காற்றில் 6 அடி பரவும் என்பதை நிரூபணம் செய்கிறது.
இதைப்பற்றி ஒரு வீடியோ;



நாம் செய்ய வேண்டிய பொதுவானவை: 
1) கிருமிநாசினிகள் அல்லது சோப்பு மற்றும் தண்ணீரில் கை மற்றும் கால்களை, வெளியில் சென்று வீடு திரும்பும்போது முழுமையாகச் சுத்தம் செய்ய வேண்டும். உங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் உங்கள் அருகில் இருக்கும் வைரஸ்கள் அழியும்.

2) முகக் கவசம் (N95 mask) கட்டாயம் அணிவது. சாதாரண cloth mask virusகளை தடுக்காது. இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நபர்களைப் பராமரிப்பவர்களுக்கும் முகக்கவசங்கள் (N95 mask) கட்டாயம் என்கிறது உலக சுகாதார மையம். முகக் கவசம் கண்டிப்பாக மூக்கை மூடிய படி இருக்க வேண்டும்

3) சளி, இருமல், தும்மல் உள்ளவரிடம் இருந்து 2 மீட்டர் (6 அடி) தள்ளி இருக்கவும்.
நாமும் சரி நம்மைச் சுற்றி இருப்பவர்களும் சரி,  தும்மல் இருமல் வரும்போது அடுத்தவர் மீது படும்படி நடக்கக்கூடாது.

4) தேவையில்லாமல் கண், மூக்கு வாய் போன்றவற்றில் கைகளை வைக்க வேண்டாம். வைரஸ் இவைகளில் சம்பந்தப்படும்போதுதான் நம் உடலுக்குள் செல்கிறது. காலையில் தினமும் மூக்கில் தேங்காய் எண்ணெய் 2 சொட்டுக்கள் விடலாம். இது வைரஸ் எதிர்ப்பாற்றலை மேம்படுத்தும்.

5) உங்கள் பகுதியில் தடுப்பூசி கிடைத்தால் அதை போட்டுக் கொள்வது பற்றி பரிசீலிக்கலாம், ஆனால் இது கொரானா பாதிப்பை முற்றிலும்  தடுக்காது, மாறாக மோசமான பாதிப்பு மற்றும் உயிரிழப்பை தடுக்கும். ரத்தக் கொதிப்பு(Blood Pressure), ஹை சுகர்(High Sugar), இதயக் கோளாறுகள் உள்ளவர்கள் தடுப்பூசி போடும் முன் உங்கள் மருத்துவரை  கண்டிப்பாக கலந்து ஆலோசிக்கவும். 

6) உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் வீட்டிலேயே இருப்பது நல்லது.  உடனே மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.

7) கொரோனா பாதித்தவர்கள்  முடிந்தவரை குப்புறப்படுத்து உறங்குவது, (இது உங்கள் நுரையீரலை விரிவடையச் செய்து மூச்சு விட எளிதாக்குகிறது), எடுத்துக்கொள்ள வேண்டிய மாத்திரைகள் பற்றிய சென்னை மாநகராட்சியின் அறிவுரை (video)




8) கொரோனா பாதிப்புள்ள அல்லது அதிக கூட்ட நெருக்கம் இருக்கும் இடங்களுக்குச் செல்லவே கூடாது. அப்படியே செல்ல நேரிட்டாலும் தொடுவதோ கைகுலுக்குவதோ கூடாது. நமது பாரம்பரிய முறைப்படி கைகளை கூப்பி வணக்கம் சொல்லலாம். 
அத்தியாவசியத் தேவையன்றி வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்.

9) இறைச்சி, தயிர், தரமற்ற உணவுகள்,  மது, புகையிலை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், நோயிலிருந்து மீளும் வரை தலைக்கு எண்ணெய் தேய்ப்பது மற்றும் தலைக்கு குளிப்பது உள்ளிட்டவை  செய்யக் கூடாது ஏனெனில் இது உடலை குளிர்வித்து சளியை அதிகப்படுத்தும்.

பாரம்பரிய மருத்துவத்தில் கொரானா உட்பட அனைத்து வகை காய்ச்சலும்  வராமல் தடுக்க பரிந்துரைக்கப் பட்டவை;

10) கசாயம்
சித்த மருத்துவர் பரிந்துரைத்தது
நுரையீரலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் ஆடாதொடை 5 இலைகள், சிற்றரத்தைச் சிறிதளவு, அதிமதுரம் சிறிதளவு, மிளகு 5, திப்பிலி 2 ஆகியவற்றை எடுத்துக்கொண்டு கசாயம் தயாரிக்க வேண்டும். இந்தக் கசாயத்தை வெறும் வயிற்றில் காலை நேரத்தில் பருக வேண்டும். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 20 மிலியும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு 60 மிலியும் கொடுக்கலாம். மதிய உணவில் இஞ்சி, பூண்டுகளை அதிகம் சேர்த்து புதினா, கொத்தமல்லி துவையல் செய்து சாப்பிடலாம். மாலையில், தூதுவாளை, மஞ்சள், சீரகம், மிளகு ஆகியவற்றை கொண்டு தூதுவாளை சூப் செய்து பருகலாம்.

வாரம் ஒரு முறை நிலவேம்பு கசாயம் குடிக்கலாம், வாழை தண்டு/பூ சாப்பிடலாம். சித்த மருத்துவக் கடைகளில் கபசூர குடிநீர் விற்கப்படும். அதையும் பருகினால், உங்கள் அருகே கொரோனா வைரஸ் வர பயப்படும். 

11) உணவு முறை
சமூக வலைதளங்களில் இடம்பெற்ற உணவுமுறை மருத்துவ video:


அறிகுறி தெரிந்த நாள் முதல் பூரண குணமாகும் வரை சூடாண நீர் மட்டுமே அருந்தவும்.

பச்சை காய்கறிகள், முந்திரி, பாதாம், நிலகடலை, கொண்டகடலை, காளான், பயிறு வகைகள், சிறுதானியங்கள் (கம்பு, ராகி, சோளம், தினை.... உள்ளிட்டவை),
பூண்டு மஞ்சள் சேர்த்த பால், 
இஞ்சிசாறு தேன் கலந்த சுடுநீர், 
கிராம்பு சேர்த்த தேங்காய் பால், எலுமிச்சை கலந்த மோர், துளசி, வெற்றிலை, கடுக்காய், நெல்லிக்காய், கொய்யா, மாதுளை, அத்திப்பழம், அண்ணாச்சி அல்லது ஆரஞ்சு,  வாழைபழம், வல்லாரை அல்லது முருங்கை கீரை, பாகற்காய், வெந்தயம், மிளகு ரசம், முட்டை (சின்ன வெங்காயம், pepper பிடித்தவர்கள் சேர்த்துக் கொள்ளலாம்), போன்ற உணவுகளில் உங்களால் முடிந்தவற்றை தினமும் சேர்த்துக் கொள்ள  வேண்டும். நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். 

 12) பிராண சக்தி அதிகரித்தல்
காலை வேளையில் குறைந்தது 15 நிமிட அளவு சூரிய ஒளி படும்படி நடக்க வேண்டும். 8 வடிவ  நடைப்பயிற்சி  செய்யலாம். பிராணயாமம், சூரிய நமஸ்காரம் தினமும்  செய்தால் உடல்நலம், ஆத்மபலம் உண்டாகும்.

பொதுவாக நீங்கள் உள்ளிழுக்கும் மூச்சை 15 வினாடிகளுக்கு உங்களால் மூச்சைவெளியிடாமல் அடக்க முடியும் என்றால் உங்களது நுரையீரல் திறன்  நார்மலாக உள்ளது என்று அர்த்தம். நுரையீரல் திறன் மேம்பட தினமும் பலூன் ஊதும் பயிற்சி மேற்கொள்ளலாம்.

13) மூச்சுக்குழாய் சுத்தப்படுத்துதல் (தினமும் ஒன்று முதல் மூன்று முறை) ;
i) மூக்கு மற்றும் வாய் வழியாக சிறிது மஞ்சள் உடன் நொச்சி, வேப்பிலை, தைலமர (eucalyptus) , கற்பூரவல்லி, துளசி  போன்ற  உங்கள் பகுதியில் கிடைக்கும் தளைகளைபோட்டு ஆவி பிடிக்கும் பழக்கத்தை தினமும் கடைபிடித்தல் நல்லது. குறைந்தபட்சம் மூக்கு (வலது பிறகு இடது) & வாய் வழியாக தலா 12 முறை அல்லது 3 நிமிடம் சூடான ஆவியை  உள்ளிழுத்து விடவும். 

மற்றும்

ii) கிராம்பு, உப்பு, மஞ்சள் சேர்த்த வெதுவெதுப்பான கரைசல் நீரில் தினமும் வாய் கொப்பளிக்க வேண்டும்.
இதனால் ஏதேனும் கிருமிகள் வாய் அல்லது தொண்டை பகுதியில் இருந்தால் அது கொள்ளப்படும்.

தினமும் ஆழமான மூச்சு விடும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆழமாக நீளமாக மூச்சு ஒவ்வொரு முறையும் உள்ளிழுத்து விட வேண்டும்.

14)  Oxygen அளவு சீராக இருக்க


நமது உடலில் ரத்த ஆக்ஸிஜன் 95க்கு கீழ் குறையாமல் இருக்க வேண்டும்.Oxygen குறைபாடு ஏற்படும் பட்சத்தில் குப்புற படுத்து மூச்சு விட வேண்டும். 

தீவிர மூச்சுத்திணறல் அல்லது சுவாசித்தல் ஒரு நிமிடத்திற்கு 30 தடவைக்கு மேல் இருந்தாலோ அல்லது ஆக்சிஜன் அளவு 90%க்குக் கீழ் சென்றாலோ, அது ‘தீவிர கொரோனா’வாகும். இத்தகைய நிலையை எட்டும் 3% சதவிகிதம் மக்களுக்கு நிச்சயம் ஆக்சிஜன் மட்டுமே உயிரைக் காக்கும் மருந்தாகும். கிராம்பு, மஞ்சள், பட்டை முதலியவை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும்.

 கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களுக்கு நுரையீரலில் நீர் கோர்த்து சளி தங்குவதால் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டு மூச்சு திணறல் வருகிறது. அப்போது, வெண்டிலேட்டர் கருவி மூலம் சிகிச்சையளிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. லிங்க முத்திரை செய்வதால் நுரையீரல் பை விரிவடைவதுடன், உடல் வெப்பம் அதிகரிக்கிறது. உடல் வெப்பம் அதிகரிக்கும் போது நுரையீரலில் தேங்கியுள்ள நீர் கரைந்து சுவாசிக்கும் திறன் இயல்பாக அதிகரிப்பதை ஐஐடி நிபுணர் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

எப்படி செய்வது


உட்கார்ந்த நிலையிலோ அல்லது படுத்த நிலையிலோ இந்த முத்திரையைச் செய்யலாம். முதலில் ஆள்காட்டி விரலை மூக்கின் அடியில் வைத்து மூச்சை கவனிக்க வேண்டும். எந்த நாசி துவாரத்தில் குறைவான அளவு மூச்சு வருகிறது அல்லது அடைத்திருக்கிறதோ, அந்தப் பக்கம் உள்ள கையின் கட்டை விரலை செங்குத்தாக உயர்த்திப் பிடிக்க வேண்டும். மற்றொரு கையின் ஆள்காட்டி மற்றும் கட்டை விரலால், உயர்த்திப் பிடித்த கட்டை விரலின் அடியில் சுற்றி வளைத்து, இரு கைகளின் மற்ற அனைத்து விரல்களையும் கோர்த்துக் கொள்ள வேண்டும்.



15) உடற்பயிற்சி
யோகாசன முறையில் நாடிசுத்தி,  பிராணயாமம் தினம் செய்து வந்தால் உங்களுக்கு மூச்சு பிரச்சனை ஏற்படாது.
உங்களால் முடிந்த பயிற்சிகளை காலையில் தினம் குறைந்தது அரை மணி நேரம் செய்யலாம். கொரானா பாதிப்பு உள்ளவர்கள் Pulse Oximeter உபயோகப்படுத்துதல் மற்றும் உடற்பயிற்சி செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை விளக்கும் video. (சமூக வலைதளங்களில் இடம்பெற்றது)



16) மன தைரியம் 
மன மகிழ்ச்சி தரும் விஷயங்களை பார்ப்பது, கேட்பது, சிந்திப்பது, பேசுவது. இவை உங்களிடம் நேர்மறை ஆற்றலை உண்டாக்கி, உங்களை வியாதிகளில் இருந்து விடுவிக்கும். மன தைரியம் மிக முக்கியம். தெய்வம் உங்களை காக்கும் என்று நம்புங்கள். பயம், கவலை முதலியன எதிர்மறை ஆற்றலை உண்டாக்கி நோயை அதிகப்படுத்தும். 
கொரானாவினால் ஏற்படும் மரணங்களில் 20% - 30% வரை மன பயத்தினாலேயே ஏற்படுகிறது. Negative செய்திகளை கேட்காதீர்கள்.

17) மற்றவை
சூடாண உணவு மற்றும் நீர், தினமும் குறைந்தபட்சம் 1.5 லிட்டர் நீர் குடிப்பது,  காற்றோட்டமான அறை - கதவு ஜன்னல்களை முடிந்த மட்டும் திறந்து வைப்பது, நல்ல ஓய்வு, வீட்டில் சாம்பிராணி தூபம் இடுவது நல்லது.

18) கொரோனா வீட்டு தனிமையில் இருப்பவர்கள் எப்போது மருத்துவமனையில் சேர வேண்டும் மற்றும் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது, இதைப்பற்றி ஒரு வீடியோ


மேலே சொன்ன வழிமுறைகள் பல்வேறு மருத்துவர்களின்  கருத்துக்கள், சமூக வலைதளங்களில் இடம்பெற்றது.  

கொரானா ஏற்படுத்திய பாதிப்புகள்
கொரானா இரண்டாம் அலை  - கோரதாண்டவம் 
சில மாநிலங்கள் திடீரென உயர்ந்த தொற்று எண்ணிக்கையை சமாளிக்கத் தயார் நிலையில் இல்லை; மருத்துவ ஆக்சிஜன் விரைவில் தீர்ந்து போனது; மருத்துவமனையில் படுக்கைகள் விரைவில் தீர்ந்தது; காத்திருந்து காத்திருந்து ஆம்புலன்சிலேயே சிலர் இறந்தனர், உடல்களை எரியூட்ட இடங்கள் போதவில்லை, சில கிராமங்களில் கங்ஙையில் உடல்கள் மிதக்க விடபட்டன. தடுப்பூசி மற்றும் ரெம்டெசிவிர் போன்ற மருந்துகள் தட்டுப்பாடு. மாநில அரசுகள் இடங்களை தயார் செய்யும்போது போதிய மருத்துவ பணியாளர்கள் இல்லை, மருத்துவ மாணவர்கள் தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். சில இடங்களில் மருத்துவர்களே இந்நோய்க்கு பலியானார்கள். மே 2021 முதல் வாரத்தில்,  தோராயமாக தினமும் 4 லட்சம் பேருக்கு மேல் தொற்று ஏற்பட்டது, 4000 பேருக்கு மேல் தினமும்  இந்தியாவில் இறந்தனர். அரசு கணக்குகளில் வராத இறப்புகள் இன்னும் அதிகம். 

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சில நபர்கள் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 1 வாரத்திற்கு இரண்டு லட்சத்திற்கு மேல் வசூலித்தார்கள், ஆக்சிஜன், மருந்து,  மாத்திரைகள், ஆம்புலன்ஸ் சேவைகள்  நான்கு மடங்கு வரை விலை ஏற்றப்பட்டன. சுவாசிக்கும் காற்றிற்கு(Oxygen) கூட கட்டணம் செலுத்த வேண்டியது ஆயிற்று. உலக அளவில்  கோடிக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். 

பொதுவாக ஆரம்பகட்ட அலோபதி மருத்துவ முறையுடன் சித்தா, யோகா, இயற்கை மருத்துவம் போன்ற முறைகளையும் தொற்று அறிகுறி ஆரம்பித்த  நாள் முதல் சேர்த்து கடைபிடிக்கும் போது நோயாளிகள் 100% குணமடைகிறார்கள். உயிர் இழப்புகள் பெருமளவில் தடுக்கப்படுகிறது. கொரானாவை வெற்றிகரமாக  குறைத்த  பல நாடுகளில் இந்த வழிமுறைகளை அங்குள்ள மக்கள்  கடைபிடிக்கிறார்கள், விரைவில் குணமடைகிறார்கள்.

இதனை கடைபிடித்து அனைவரும் கொரானாவை வெல்ல எல்லாம் வல்ல இறைவனை பிரார்தனை செய்வோம்.

கொரானா நமது ஆயுளை பாதிக்குமா என்பது பற்றிய ஜோதிட விளக்கங்களை முந்தைய பதிவில் காணவும்.

Tuesday, March 17, 2020

கொரானாவும் ஆயுள் பாவமும்

உலகையே இன்று அச்சுருத்தும் பெரிய விஷயம் கொரானா வைரஸ் தொற்று நோய் என்றால் அது மிகையாகாது.

டிசம்பர் 2019 மாதம் முதல் சீனாவில் பரவிப் பல உயிர்களைப் பலி வாங்கிய கொரோனா வைரஸ் இப்போது வரை உலகில் நூற்றுக்கும் மேர்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவிலும் பலருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு புறம் நோய் பரவும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் மறுபுறம் கொரோனா குறித்த வதந்திகளும் வலம் வந்து கொண்டே இருக்கின்றன. இதனால் கொரோனா வைரஸ் மற்றும் அது ஏற்படுத்தும் கோவிட்-19 (COVID-19) நோய் குறித்த கேள்விகளுக்கு உலக சுகாதார மையம் (WHO) விளக்கமளித்துள்ளது. அவற்றில் சிலவற்றை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

ஒரு ஆய்வில், இந்த நோயை சரியாக கையாளாவிட்டால் ஒன்றரை கோடிக்கும் அதிகமான மக்கள் மரணிக்க அல்லது கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

கொரோனா ஒரு தொற்றுநோய் என்பதால் இதனால் பாதிக்கப்படுபவர்கள் படும் வேதனை மிகவும் அதிகம். இவர்களை யாரும் கவனிப்பதில்லை, சில சமயங்களில் இவர்களின் குடும்ப உறுப்பினர்களே அல்லது நண்பர்களே கைவிட்டு விடுகின்றனர். இறப்பு ஏற்படும்பட்சத்தில் யாரும் உதவ முன்வருவதில்லை. சில இடங்களில் அனாதைப் பிணங்களாக குப்பைகளில் வீசி எறியப்படுகின்றனர்.

இந்த நோயைப் பற்றியும், பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றியும்,
ஜோதிடரீதியாக யாரெல்லாம் மீண்டு வருவார்கள் என்பதையும் பார்ப்போம்.

ஜோதிடரீதியாக இதை ஆராய்வோம்.
இதுகுறித்து பஞ்சாங்கத்தில் டிசம்பர் மாதம் 2019 (மார்கழி) மேற்கு திக்கில் இருந்து புதிய வைரஸ் நோய் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் ஆறு கிரக கூட்டணி தனுசில் இருந்து ராகு பார்வை பெற்றது. அதன்படியே சீனாவில் கொரோனா உருவாகி உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருவது குறிப்பிடத்தக்கது. ராகு கிருமிகளுக்கு காரகன் என்பதாலும் காற்று ராசியில் இருந்து பார்வையிட்டதாலும் இந்நோய் காற்றைப்போல வேகமாக பரவுகிறது. இந்த கிரக கூட்டணி ராசி மாரும்போது  இந்த வைரஸ் நோய் ஏப்ரல் 14ம் தேதி முதல் படிப்படியாக குறைந்து ஜுன் 30க்குள் கட்டுக்குள் வரும் என்று கணிக்கப்படுகிறது. ஆனாலும் ஒழிப்பது 
 கடினம். மீண்டும் கடினமாக தாக்கும் அபாயம் உண்டு.

எந்த ஒரு நோய் வந்தாலும் நம் கர்மவினை முடியாமல் நாம் இந்த உலகத்தை விட்டு நீங்க மாட்டோம்.
அந்த கர்ம பதிவை காட்டும் கண்ணாடியே நமது ஜாதகம். 

எட்டாம் பாவம் என்பது ஜாதகரின் ஆயுள் பற்றி கூறுகிறது. ஆயுள் காரகன் சனி, ஜாதகரின் லக்னத்திற்கு பாதகம் செய்யும் பாப கிரகங்களின் நிலையை வைத்துதான் ஒருவரின் ஆயுள் பற்றி கூற முடியும். ஒருவரின் ஆயுள் முடிவு பல விதமாக இருக்கலாம் என்றாலும், நோயால் ஏற்படும் மரணம் பற்றிதான் நாம் இங்கே பார்க்கப் போகிறோம்.


8-ம் இடத்திற்கான அதிபதி, எட்டில் இருப்பது அந்த ஜாதகருக்கு நீண்ட ஆயுளைத் தரக்கூடும். 8-ம் இடத்திற்கான அதிபதி 6-ல் மறைவதை விட, 12-ல் மறைவது, நல்ல ஆரோக்கியத்தையும், தீர்க்க ஆயுளையும் வழங்கும். எட்டாம் இட அதிபதி இரண்டாம் இடத்தில் இருந்தால், அவர் 7-ம் பார்வையாக எட்டாம் இடத்தைப் பார்ப்பார். அதன் மூலம் ஜாதகருக்கு தீர்க்க ஆயுள் கிடைக்கும். எட்டாம் இடத்தின் அதிபதி லக்னத்தில் இருந்தால் சில சங்கடங்கள் தோன்றும் என்றாலும், நல்ல ஆயுள் பலன் இருக்கும்.

மேஷ லக்னத்திற்கு செவ்வாய் லக்னாதிபதியாகவும், எட்டாம் இட அதிபதியாகவும் உள்ளார். எனவே செவ்வாய் நீச்சம் பெற்றால் உடல் ஆரோக்கியம் கெடும். மனக் கஷ்டம் இருக்கும். எந்நேரமும் நோய் இருந்து கொண்டே இருக்கும். துலாம் லக்னத்திற்கு, சுக்ரன் தான் லக்னாதிபதியாகவும், எட்டாம் இட அதிபதியாகவும் இருக்கிறார். இவர் உச்சம் பெறுவது ஆறாம் இடம் என்பதால் நோய் தாக்கம் அதிகரிக்கும்.

ரிஷபம் மற்றும் சிம்ம லக்னத்திற்கு குரு தான் எட்டாம் இடத்தின் அதிபதி. இந்த ஜாதகர்களைப் பொறுத்தவரை குரு நீச்சம் பெறாமல் இருப்பது நல்லது. உச்சம் பெறாமலும் இருக்க வேண்டும். குரு உச்சம் பெறாமல் எந்த இடத்தில் இருந்தாலும் நன்மையைச் செய்வார். அதுவே நீச்சம், உச்சம் பெற்றிருந்தால் சிறுவயது முதல் நோய்கள் வந்து கொண்டே இருக்கும்.

மிதுன லக்னத்திற்கும், கடக லக்னத்திற்கும் சனியே எட்டாம் இடத்தின் அதிபதி. இவர் நீச்சம் பெறாமல் இருக்க வேண்டும். அப்படி நீச்சம் பெற்றால் அந்த ஜாதகரின் மனம் ஒரு நிலையில் இருக்காது. தவிர மூட்டு வலி, வயிற்றுக் கோளாறு, மூல நோய் வரக்கூடும். முதுமை காலத்தில் தொற்று நோய் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

விருச்சிகம், கும்பம் லக்னத்திற்கு புதன் எட்டாம் இடத்தின் அதிபதி. எனவே புதன் ஆட்சி, உச்சம் பெற்றால் ஜாதகருக்கு யோகம். அதுவே நீச்சம் பெற்றால், ஜாதகரின் ஆயுள் பலம் குறையும். குடல் புண், ரத்த அழுத்தம் வரும், நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

கன்னி லக்னத்திற்கு செவ்வாய் எட்டாம் இட அதிபதியாக இருக்கிறார். இவர் மகரத்தில் உச்சம் பெறுவது நல்ல யோக பலன் தரும். நீண்ட ஆயுள் இருக்கும். மாறாக நீச்சம் பெற்றால் ஜாதகருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், எலும்பு தேய்மானம், மூட்டு வலிகள் தொல்லை தரும். தனுசு லக்னத்திற்கு எட்டாம் பாவாதிபதி சந்திரன். அவர் 6-ம் பாவத்தில் உச்சம் பெறுவது யோகம். என்றாலும் ஜாதகர் மனநோயாளி போல் சில சமயம் நடந்து கொள்வார். சந்திரன் நீச்சம் பெற்றால் ஜாதகருக்கு முடக்குவாதம் வரும்.

மகர லக்னத்திற்கு சூரியனே எட்டாம் இடத்தின் அதிபதி. சூரியன் 4-ம் இடமான மேஷ ராசியில் உச்சம் பெறலாம். ஆனால் 10-ம் இடமான துலாம் ராசியில் நீச்சம் பெற்று விடக்கூடாது. அவ்வாறு நீச்சம் பெற்றால் ஜாதகருக்கு தலைவலி, ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் போவது, உடல் சோர்வு, நரம்பு தளர்வு, சரியான உறக்கம் இல்லாமை போன்றவற்றால் தவிப்பார்கள்.

மீன லக்னத்திற்கு 8-ம் இடத்தின் அதிபதி சுக்ரன். இவர் 7-ம் இடமான கன்னியில் நீச்சம் பெறுவது நன்மையை வழங்கும். மாறாக உச்சம் பெற்றால் அந்த ஜாதகருக்கு சர்க்கரை நோய், உடல் பருமன், தசைப்பிடிப்பு, தொற்று நோய்கள் வரக்கூடும். சிறுவயதில் முதல் நெஞ்சில் சளித் தொல்லை இருக்கும்.

ஜாதகத்தில் சனியின் நிலையே மரணத்தின் வகையை நிர்ணயிக்கும். ஒருவருக்கு நீண்ட சிறப்பான ஆயுளைத் தரும் கிரகம் சனி பகவான் ஆவார்

சத்ரு வீட்டில் இருக்கும் கிரகம், நீச்ச வீட்டில் இருக்கும் கிரகம், சூரியனுடன் சேர்க்கை பெற்ற கிரகம்.. இவர்களால் ஆயுள் குறையும். வக்ரம் பெற்ற கிரகம், வர்கோத்தமம் அடைந்த கிரகம், உச்சம் பெற்ற கிரகம் போன்றவை ஆயுளைக் கூட்டும். லக்னேசனுக்கு விரோதியான கிரகம், லக்னேசனது திசையில் தனது ஆட்சி காலத்தில் ஜாதகருக்கு மரணத்தைக் கொடுக்கலாம்.
ஒருவர் ஜாதகத்தில் லக்னத்துக்கு 3, 6, 11 ஆகிய இடங்களில் 8-ம் வீட்டோன் (ஆயுள்காரகன்) இருந்தால் அந்த ஜாதகரின் ஆயுள் கூடும். 8-ம் வீட்டோன் இருக்கின்ற ராசி, அம்சம், நட்சத்திரம் ஆகியவற்றின் அதிபதிக்குள்ள பலத்தைக் கொண்டு ஆயுளை நிர்ணயிக்க வேண்டும். 8-க்குரியவன் (அஷ்டமாதிபதி) ஆயுள் ஸ்தானாதிபதி, 12-ம் வீட்டில் மறைய ஆயுள் குறையும்.

லக்னாதிபதியும் எட்டாமதிபதி, சந்திரன், சனி ஆகிய அனைவரும் சர ராசியில் இருந்தால் பூர்ண ஆயுள். மாறாக இவை அனைத்தும் ஸ்திர ராசியில் இருந்தால் அற்ப ஆயுள். ஆனால் இவை அனைத்தும் உபய ராசியில் நின்றால் மத்திம ஆயுள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது

லக்னேசன், பூர்வ புண்ணிய ஸ்தானம் என்னும் 5-ம் வீட்டோன், பாக்கியாதிபதி என்னும் 9-ம் வீட்டோன் ஆகிய மூவரும் பலம் பெற அந்த ஜாதகர் தீர்க்காயுள் உள்ளவராக திகழ்வார். அவர்கள் நிச்சயம் நோய் தாக்கானாலும் மீண்டு வருவார்கள்.

சமூக வலைதளங்களில் இடம்பெற்ற உரையாடல்



தொடர்ச்சி

கொரோனாவில் இருந்து பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய விரிவான அலசல் அடுத்த பதிவில்

Tuesday, November 5, 2019

உணவில் உள்ள கலப்படங்கள்

கலப்படத்துக்கு, அடிப்படை காரணம், மனிதனின் பேராசை தான். குறுக்கு வழியில் சம்பாதிக்க வேண்டும்; கொள்ளை லாபம் பெற வேண்டும் என, வியாபாரிகள்  ஆசைப்படுவது தான், கலப்படத்துக்கு பாதை அமைக்கிறது.

 2019ல் இதைப்பற்றி அரவம் திரைப்படத்தில் இடம்பெற்ற வீடியோ உங்கள் பார்வைக்கு.



மக்களின் விழிப்புணர்வுக்காக.

நன்றி youtube


பால்
முன்னர் எல்லாம் பாலோடு தண்ணீரைத்தான் கலப்பதை கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் இப்போது பால் கெட்டுப்போகாமல் இருக்கவும், வெண்மை நிறம், கெட்டிதன்மை, தடிமன் போன்ற பல காரணங்களுக்காக சிலரால் யூரியா, சோடியம் கார்போனேட், சோடியம் ஹைடிராக்ஸைட், பார்மால்டிஹைட், ஹைடிரோஜன் பெராக்ஸைட் போன்றவை சேர்க்கப்படுகிறது. இதனால் குடலில் அரிப்பு மற்றும் பல  பாதிப்புகள் உண்டாகும்.

தமிழகத்தில் வினியோகிக்கப்படும் பாலில், அனுமதிக்கப்பட்ட அளவை விட, நஞ்சு அதிகமிருப்பதாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு ஆணையம்(FSSAI), November 2019ல் தெரிவித்திருந்த நிலையில், தற்போது, பாதுகாப்பற்ற உணவுகள் தமிழகத்தில் தான் அதிகம் விற்படுவதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.


தரமில்லா உணவகங்கள்.
உணவு வண்ணங்கள் , நறுமணங்கள், பதனப் பொருட்கள், ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் போன்றவை அதிக அளவில் சேர்க்கப்பட்டாலும் அல்லது அவை அனுமதிக்கப் படாதவையாக இருந்தாலும் உடல் நலம் பாதிப்படையும்.



காய்கறிகள் மற்றும் பழங்கள்

செயற்கையான முறையில் காய்கறிகள் மற்றும் பழங்களை பழுக்க வைப்பதற்கு கால்சியம் கார்பைட் , எதிபான் மற்றும் ஆக்ஸிடோஸின் பயன் படுத்தப்படுகிறது. கால்சியம் கார்பைட், கேன்ஸர் உருவாக காரணமாகிறது

மற்ற குறிப்பிடத்தக்க கலப்படங்கள்

தேன் உடன்  சர்க்கரைப்பாகு

மிளகு உடன் கலக்கப்படும் பப்பாளி விதை

மிளகாய் அல்லது மஞ்சள் தூள்  உடன் கலக்கப்படும் நிறமிகள்


நெய் மற்றும் வெண்ணெயில் பிசைந்த உருளைக்கிழங்கு அல்லது ஸ்டார்ச் மாவு

ராகி அல்லது கேழ்வரகில் ரோடமைன் பி என்ற ரசாயனப் பொருள்

காபித்தூளில் தேவைக்கு அதிகமாக சிக்கரித்தூள்



கலப்படத்தால் ஏற்படும் கேடுகள்:


சில கலப்பட உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் நம் உடல்நலம் பாதிப்படையும். வெள்ளை சர்க்கரை, கலப்பட மற்றும் ரசாயன உணவுகளை பல வருடங்கள் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, உடல் பருமன், புற்றுநோய் உள்ளிட்ட பலவிதமான நோய்கள் நம்மை தாக்கக்கூடும்.

இதைப்பற்றிய ஆவணப் படம்
உங்கள் பார்வைக்கு.




இந்தியாவில் 2018-19ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 3ல் ஒரு பங்கு உணவு கலப்படம் செய்யப்பட்டவை என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

காற்று மாசில் தலைநகர் டில்லியும், உணவுக் கலப்படத்தில் தமிழகமும் முன்னிலை வகிப்பது வருத்தமான நிகழ்வு.






‘பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் ’ என்பது ஒரு பழமொழி . ஆனால் இந்த பசியை போக்குவதற்காக மனிதர்கள் உண்ணும் உணவுப் பொருட்கள், இன்றைய காலகட்டத்தில் பல நேரங்களில் உடல்நலத்திற்கும், சில நேரங்களில் உயிருக்கும் கூட உலை வைத்து விடுகிறது. இதற்கு காரணம் அசுர வேகத்தில் அரக்கனாய் மாறும் ரசாயனங்கள். பளிச்சென்று இருந்தால் அது தரமான உணவு என்ற எண்ணம், பாமரர்கள் மட்டுமன்றி, படித்தவர்களிடமும் பரவியிருப்பது விந்தையான வேதனை. கோடிகளில் புரள்வோரையும், தெருக்கோடிகளில் தவிப்போரையும் இணைக்கும் ஒரே புள்ளி பசி என்றால் அது மிகையல்ல. எனவே, ருசி பார்த்து அந்த பசியை போக்காமல், உணவின் தரம் பார்த்து  உட்கொண்டால் மட்டுமே, ஆரோக்கிய வாழ்வின் அடிபற்றி நடக்கும் நாளைய தலைமுறை.




Friday, November 1, 2019

சொந்த தொழில் பலன் தருமா?


எல்லோரும் "நீங்களும் அம்பானி ஆகலாம் என்று நினைக்க கூடாது". அவரவர் பூர்வபுண்ணிய யோகப்படிதான் இந்த தொழில் யோகம் அமைகிறது

சொந்த தொழில் யோகம் இருந்தாலும் சரியான திசாபுத்திகள் வராவிட்டால் தொழில் செய்தும் பயன் இருக்காது.
எந்த திசையிலும் சுய புத்தியில் தொழில் ஆரம்பிப்பது நல்லதல்ல. 7 1/2 சனி,  அஷ்டம சனி காலங்களில் புதிய முதலீடுகளை செய்யகூடாது.

லக்னத்துக்கு பத்தாம் இடமே இந்த தொழிலுக்குரிய பலனை தெரிந்து கொள்ளும் இடமாகும்.

லக்கினாதிபதி வலுப்பெறவில்லை என்றால் தொழிலில் அலைச்சலும் சிரமங்களும் இருந்து கொண்டே இருக்கும். 2, 9, 11 ம் அதிபதிகளில் யாரேனும் ஒருவர் வலுப்பெற்றால் தொழிலில் லாபம் தரும்.  ஜாதகத்தில் 6-ம் அதிபதி பலம் இழந்து 10-ம் அதிபதி ஆட்சி அல்லது உச்சம் பெற்று வலுப்பெற்று அமர்ந்தால் ஜாதகர் எந்த தொழிலை செய்தாலும் வெற்றி பெறுவார்.10-ம் அதிபதி கேந்திர ஸ்தானங்களில் சுபர் சேர்கை பெற்று இருந்தால் நற்பலன்.

தொழில் ஸ்தானத்தில் 8, 12-ம் அதிபதி இருந்தாலும், குரு அல்லது கேது கெட்டு இருந்தாலும் தொழிலை அடிக்கடி மாற்றம் செய்வார்.

பத்தில் ஒரு கிரகமாவது இருந்தால்தான் நல்லது என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அப்படி 10ல் இல்லா விட்டாலும் 4ம் விட்டில் இருந்தால் அவை கண்டிப்பாக 10ம் வீட்டை பார்க்கும். இந்த மாதிரி இருந்தாலும் நலலதுதான்.

எந்த லக்கினக்காரர்களுக்கும் பாதகாதிபதி 10-ல் 8 அல்லது 12ம் அதிபதி உடன் அமர்வது அடிக்கடி தொழில் மாற்றத்தையும் இடம் மாற்றத்தையும் அலைச்சல்களையும், நஷ்டத்தையும் தரும்.

10-ம் அதிபதி பலம் குன்றி 6-ம் அதிபதியும் செவ்வாயும் வலுப்பெற்று அமர்ந்தால் அதன் திசாகாலங்களில்  நல்ல உத்யோகம் அமையும்.
6-ம் அதிபதி, செவ்வாய், 10-ம் அதிபதி, சனி ஆகிய கிரகங்கள் வலுவிழந்தால் தொழில் உத்யோகம் இரண்டும் சரிவர அமையாது. தொழில் ஸ்தானாதிபதி அல்லது சனி  நீசம், பெற்றால் சொந்த தொழில் கூடாது.

ஒருத்தரின் ஜீவன அமைப்பு பற்றி ஜோதிட ரீதியாக ஆராயும் போது பத்தாம் வீடு, பத்தாம் வீட்டின் அதிபதி, 10ம் வீட்டில் இருக்கும் கிரகங்கள், 10ம் வீட்டின் அதிபதியோடு சேர்ந்த கிரகங்கள், பத்தாம் வீட்டின் அதிபதியை பார்க்கும் கிரகங்கள், 10ம்வீட்டின் அதிபதி நவாம்சத்தில் இருக்கம் இடங்கள் என பல விசயங்களும் தீர்மானிக்கின்றன.

சூரியன் லக்னத்திற்கு பத்தில் இருந்தால் பத்தாம் வீட்டில் சூரியன் பலமாக இருந்தால் பல சாதனை படைக்கும் அமைப்பு , அதிகம் சம்பாதிக்கூடிய யோகம் அமையப்பெறும். அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் கௌவமான பதவி பெறும் யோகம், பாங் வேலை, வருமான வரி துறையில் வேலை, தந்தை மூலம் தொழில், நீதித்துறைகளில் வேலை, என இவற்றில் உயர் பதவிகளை பெறும் யோகம் அமையும். நல்ல நிர்வாக திறனம் அமையப்பெறும். முக்கியமாக மூளை சூப்பரா வேலை செய்யும். சூரியனுடன் ராகு கேது சனி கிரகங்கள் சம்பந்தம் பெறுவது வேலைக்காரர்களால் சிக்கல் மறைமுக எதிர்ப்புகள், தேவையற்ற தடை தாமதம் இன்னல்கள், சட்ட பிரச்சனைகள் மற்றம் சிக்கல்கள் போன்றவைகளை சந்திக்க நேரிடும்.

சந்திரன் லக்னத்திற்கு பத்தில் இருக்குமானால் நீர் சாந்த, பயனம் சார்ந்த கடல் சார்ந்த துறைகளில் வருமானம் பெறும் நிலை, ஹோட்டல் தொழில் , பால் பண்ணை தொழில் ஏற்றுமதி இறக்குமதி தொழில், பட்டு ஆடைகள் மற்றம் முத்து , அழகு ஆபரணங்கள் , உப்பு சார்ந்த தொழில்கள், மலை சார்ந்த தொழில்கள் பால் சாக்லேட் சார்ந்த தொழில்கள் அடிக்கடி பயணம் செய்யக்௯டிய தொழில்கள் ஆகியவற்றில் மூலம் நிறைய லாபம் சம்பாதிக்கக்கூடிய வகையில் யோகம் அமையும். சந்திரன் கெட்டு போய் இருந்தால் தேவையற்ற மனகுழப்பம், பீதி, டென்சன், எரிச்சல், தவறான எண்ணம், கெட்ட சிந்தனை, சரியான முடிவு எடுக்க திணறல் எடுத்த காரியத்தில் தோல்வி, செய்யும் தொழிலில் இடையூறு போன்ற சூழ்நிலையை சந்திக்கும் யோக நிலை உருவாகும். சந்திரன் பத்தாமிடத்தில் இருந்தால் தாய்வழிச் சொத்துக்கள் கிடைக்கலாம்.

செவ்வாய் லக்னத்திற்கு 10ல் பலம் பெற்று இருந்தால் செவ்வாய் வீரத்துக்குரியோன் நிலத்துக்குரியோன் கோபத்துக்குரியோன்.  இந்த கிரகம் 10ல் பலம் பெற்று இருந்தால் போலீஸ், ரவுடி, மிலிட்டரி, நிலம் வீடு மனைகள் வாங்கி விற்கும் தொழில், பாதுகாப்பு துறை, தீயணைக்கும் படையில் வேலை, வீரதீர சாகஸ வேலை, சிங்கம் புலி யானை போன்ற மிருகங்களை வைத்து சர்க்கஸ் செய்யும் வேலை, தீப்பெட்டி, பட்டாச தொழில், போன்ற தொழில்களில் ஈடுபட்டு அதிகமான லாபம் பெறக்கூடிய யோகம் அமையம். இந்த கிரகம் பலமாக இருந்தால்தான் மேற்கூறியபடி இருக்கும். நல்ல நிர்வாக திறமையம் இருக்கும். அதுவெ பலமிலந்து இருந்தால் சரியான பயந்தான் கொள்ளியாக தொடைநடுங்கியாக பகைவர்களின் தொல்லைக்கு ஆளாபவர்களாக, தொழிலில் நஷ்டத்தை ச்ந்திப்பவர்களாக யோக நிலையை தந்துவிடும்

லக்கினத்திற்கு பத்தில் புதன் கிரகம் பலம் பெற்று அமைந்தால் ஸ்கூல் மற்றும் காலேஜ் ஆகியவற்றில் டீச்சர்களாக புரபசர்களாக வேலை,  கவிஞர்களாக, கணக்கர்களாக, எழுத்தாளர்களாக, பேச்சாளர்களாக, உபதேசம் செய்பர்களாக, ஆலோசனை கூறுபவர்களாக கணித துறை வங்கி தறை இன்சூரன்ஸ் துறை பத்திரிக்கை டிவி, செய்தி, சார்நத துறைகளில் ஈடுபட்டு நிறைய லாபம் சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும். வலு குறைந்தால் சமயோசித புத்தியின்மை, மறதி, விவேகமின்மை சாதுரியமின்மை ஆகிய தொல்லைகள் உருவாகும். புதன் பத்தாமிடத்தில் இருக்கும் போது நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து செய்யும் தொழில்களில் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு அதிகம்.

குரு கிரகம் லக்னத்துக்கு பத்தில் இருக்கக்கூடிய அமைப்பாக இருந்தால்
குரு நேர்மைக்க சொந்தக்காரர். நியாயமாக நடக்க வைப்பவர். ஒழுக்கமான வேலைகளை தருபவர். வலுவான குரு பல்கலை கழகத்தில் புரபசராகவும், மருத்துவராகவும் வரி, கல்விதுறை, அரசியல் துறை ஆலய துறை,ஆராய்ச்சி துறை, வர்த்தகத்துறை, சட்டம் ஒழுங்க துறை, வங்கி துறை,ஆகிய துறைகளில் உத்தியோகம் மற்றும் தொழில்களில் ஈடுபட்டு கை நிறைய சம்பாதிக்க கூடிய யோகம் அமையம். இந்த குருவே கெட்டுபோய் இருந்தால் பொய் லஞ்சம்  துரோகம் செய்தல் காட்டி கொடுத்தல், குழிபறித்தல் வீண பழி சொல். அதிகாரிகளின் கெடுபிடி அகிய சுபமற்ற பலன்கள் கிடைக்க ஆரம்பிக்கும்.

சுக்கிரன் லக்கினத்திற்கு 10ல் இருந்துவிட்டால். இயல் இசை நாடகம் டிவி சினிமா சீரியல் நடிப்பு நாட்டியம் சங்கீதம் ஆடம்பரம் அழகு அணிகலன்கள் தங்கம் வைரம்  அழகு ஜவுளி கடைகள் பட்டு மால்கள் மாட மாளிகைகள் வாசனை துறைகள் குதிரை பந்தயம் மருந்து விற்பனை மால்கள், என ஈடுபட்டு கை நிறைய பணம் சம்பாதிக்கும் யோகம் அமையும். அப்படி கிரகம் வலுவற்று இருந்தால் விபச்சாரம், அடிமை தொழில், தீய பழக்கங்கள் பெண்பித்து நிலை என தீய யோகங்கள் கிடைக்கம் அல்லது சிலருக்கு பணம் இருந்தும் நல்ல சுகமாக சொகுசாக இல்லாமல் மிகவும் சாதரணமாக எந்த ஒரு சந்தோசத்தையும் அனுபவிக்காமல் இருக்கக்கூடிய யோகத்தை இந்த பலமற்ற சுக்கிரன் தரும்.

லக்னத்துக்கு 10ல் சனி இருந்துவிட்டால் அதவும் பலமாக இருந்துவிட்டால்
விவசாய துறை, மருத்துவ துறை இன்சூரன்ஸ், ஏஜென்ஸி, இரும்பு ஈயம், எண்ணெய் வியாபாரம், அரிசி மண்டிகள் பருப்பு பயறு புண்ணாக்கு மண்டிகள். தொழிற்சாலை அமைத்தல், பணணை தொழில் அமைத்தல், போன்றவற்றில் ஈடுபட்டு கை நிறைய பணம் சம்பாதிக்கக்கூடிய நிலையை உருவாக்கும். இதுவே பலமற்ற சனியாக இருந்தால் அடிமை வேலை, அழுக்கு வேலை, திருட்டு வேலை, மாட்டு தொழுவத்தில் சாணி அள்ளும் வேலை, காவல் வேலை, தோட்ட வேலை, மரம் வெட்டும் வேலை கூட்டுறவு சங்கம் வேலை கூட்டுறவு பண்ணை வேலை போன்ற கீழ்நிலை வேலைகளில் ஈடுபடும் நிலை உருவாகும்.

லக்னத்திற்கு பத்தில் ராகு இருந்துவிட்டால் விண்வெளி பயணம், ஆராய்ச்சி, வானொலி, சர்க்கஸ், தெய்வீக பணி மருத்துவ பணி கெமிக்கல் பணி மாந்திரீக பணி என பணிகளை தரும். ராகு எந்த கட்டத்தில் உள்ளதோ அந்த கிரகம் சார்ந்த பணிகளை செய்ய வைக்கும். பலமற்ற ராகு சந்தேக புத்தியையும் எதையும் நம்ப இயலாத தன்மையையும் உருவாக்கும். செய்யும் செயல்களில் ஏடாகூட நிலையை, மனக்குழப்பத்தை உருவாக்கும்.

10ல் கேது பலம் பெற்று இருக்குமானால்
தெய்வீகம் சம்பந்தப்பட்ட துறைகள் வெளிநாட்டு வர்த்தகம் ஏற்றுமதி இறக்குமதி,  விஞ்ஞானம் அறிவியல் சார்ந்த துறைகள் மெஸ்மரிசம் வசீகரம் கட்ட பஞ்சாயத்து ஆன்மீகம் சம்பந்தப்பட்ட துறைகள்
போன்றவற்றில் ஈடுபட்டு  கைநிறைய பணம் சம்பாதிக்கக் கூடிய யோகம் கிடைக்கும்.

Tuesday, October 29, 2019

பாலாரிஷ்டம் − சுஜித் / குழந்தைகளின் மரணம்


கொடுமை.. கையை அசைத்து, பேசிக்கொண்டிருந்த குழந்தை.. கண் முன்னே நழுவி இப்போ எதுவுமே தெரியல

ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுவன் சுஜித் விழுந்த சம்பவம் நாட்டையே பதை பதைக்க வைத்துள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுஜித் கடந்த வெள்ளிக்கிழமை 25.10.2019 மாலை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தார்.

கண்முன்னாலேயே தன்னுடைய குழந்தை படிப்படியாக பூமியின் ஆழத்திற்குச் சென்று கொண்டே இருப்பதை பார்க்க கூடிய மிகப்பெரும் பரிதாபம்  ஆரோக்கியதாஸ் மற்றும் மேரி தம்பதிக்கு நிகழ்ந்துள்ளது.

2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் 25.10.2019 மாலை விழுந்தபோது, 26 அடி ஆழத்தில் தான் இருந்தார். அவரை எப்படியும் மீட்டு விடலாம் என்று நம்பிக்கை அதிகமாக காணப்பட்டது. ஏனெனில் ஆழ்துளை கிணற்றுக்குள் அனுப்பப்பட்ட கேமரா, குழந்தையின் உருவத்தை படம்பிடித்தது. ஆக்சிஜன் அனுப்புவதும், எளிதாக இருந்தது. அவ்வளவு ஏன்? குழந்தை அழுவது கூட வெளியே கேட்டது. குழந்தையின் தாய் பேசியதற்கு குழந்தை 'உம்' என்று பதிலும் சொன்னது.

 குழந்தை விழுந்த முதல் நாள் மாலை 6.30 மணியளவில் குழந்தையின் கையசைவு தெரியும் போது எடுக்கப்பட்ட video.



சுறுசுறுப்பு, துடுக்கு மற்றும் துறுதுறுப்பு கொண்ட குழந்தையாம் சுஜித். அவர் உறவினர்கள் சொல்கிறார்கள். எனவே ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கி கொண்டிருந்தாலும் கூட தைரியமாகவே காணப்பட்டது அந்த குழந்தை. ஆரம்பத்தில் எல்லாம் தைரியத்தோடு தான் குழந்தை பதில் சொன்னது. ஆனால் நீண்ட நேரமாக ஈரமான மணலுக்குள் இருந்ததாலும், தண்ணீர் மற்றும் உணவு உண்ணாததாலும் போகப்போக குழந்தையின் குரலில் நடுக்கம் தென்பட்டது. இது தவிர குழந்தை ஓரளவுக்கு பக்கத்தில் தான் இருக்கிறது என்று நம்பிக்கை எல்லோருக்கும் இருந்தது.

ஆனால் 26.10.2019 அதிகாலை மீட்பு பணிகளில் ஏற்பட்ட சில குளறுபடிகள் காரணமாக அந்த குழந்தை 70 அடி ஆழத்துக்கு கீழே சென்றுவிட்டது. இவ்வாறு சுஜித் சென்றபோது அவரது தலைக்கு மேல் ஆள்துளை கிணற்றில் இருந்த மணல் விழுந்துவிட்டது. அதுவரை சிறுவன் கையை அசைத்து அதை கேமராவில் பார்த்து வந்த அதிகாரிகளால் அதற்கு மேல் அதை பார்க்க முடியவில்லை.

சுஜித் அழுகுரலும் வெளியே கேட்கவில்லை. இந்த நிலையில் அருகாமையில் நடக்கக்கூடிய பள்ளம் தோண்டும் பணிகள் காரணமாக சுஜித் மேலும் கீழே சென்று கொண்டே இருக்கிறார். இரவு 7 மணி அளவில் கிடைத்த தகவல்படி 100 அடி ஆழத்துக்கு கீழே சென்று விட்டார். ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்ற தகவலும் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை.

மணல் மேலே மூடியிருப்பதால் குழந்தையை கேமராவாலும் படம்பிடிக்க முடியவில்லை, கையை அசைத்து தாய் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்த குழந்தை படிப்படியாக இப்படி அத்தனை பேர் கண் முன்னாலும் அடி ஆழத்துக்குச் சென்றது எவ்வளவு பெரிய கொடுமை


தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர், வருவாய் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் இரவு, பகல் பாராமல் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். சிறுவன் சுஜித்திற்காக தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் ஏராளமானோர் சாதி, மத பேதமின்றி பிரார்த்தனை செய்து வந்தனர்.

கடுமையான பாறைகள், இயந்திரத்தில் பழுது, குறுக்கிடும் மழை என அவ்வப்போது மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டாலும் விடா முயற்சியுடன் சிறுவனை மீட்கும் பணிகள் கடந்த 5 நாட்களாக 80 மணி நேரத்தை தாண்டி நடைபெற்று வந்த நிலையில், 29.10.2019 அதிகாலை 4.30 மணியளவில் சிறுவனின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, சிறுவன் சுஜித்தின் உடல் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்தனர்

சந்திரனுக்கு ராக்கெட் விடத்தெரிந்த நமக்கு, 100 அடி ஆழத்திற்குள் இருந்த குழந்தையை உயிருடன் மீட்கும் அறிவியல் தொழில்நுட்பம் இல்லாதது மிகுந்த வேதனையான மற்றும் சிந்திக்க வேண்டிய விஷயம்.

இனி வருங்காலங்களில் இது போன்ற துயரச் சம்பவங்கள் நிகழாமல் இருக்க பொது மக்களும் தங்களுடைய நிலங்களில் ஆழ்துளை கிணற்றை மூடும்போது உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்
ஆழ்துளைக் கிணற்றுக்குள் இதுவரை எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கிறது. இனியொரு உயிர் பலியாகிவிடக்கூடாது. அதுதான் நாம் சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி.


பாலாரிஷ்டம்

இனி ஜோதிட ரீதியாக குழந்தைகளின் இறப்பிற்கு காரணங்களைப் பார்ப்போம்

பாலாரிஷ்டம் என்ற சொல்லிற்கு சிறுவயதில் இறப்பது அல்லது சிறு வயதில் உடல் ரீதியாகத் துன்பம்
அடைவது என்று பொருள்.

தேய்பிறை அல்லது சுபத்தன்மையற்ற  சந்திரன் பாபக் கிரகங்களுடன் இணைந்தோ , கிரகண அமைப்பிலோ 6,8,12ம் இடத்திலோ, மாரக ஸ்தானத்திலோ அல்லது அதன் அதிபதிகளுடனோ இணைந்து பிறக்கும் குழந்தைகளுக்கு பாலாரிஷ்ட தோஷம் உண்டாகும்.

பிறந்த ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 6,8,12-ம் இடங்களில் அல்லது மாரக ஸ்தானத்தில் இன்னும் சில சேர்கைகளினால் பாலாரிஷ்ட தோஷம் ஏற்படும். இந்த குழந்தைகளுக்கு நோய் நொடிகள் பிறந்த காலத்திலிருந்து 1 முதல் 12 ஆண்டுகள் வரை வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

பிறந்த உடனே அல்லது பிறந்த சில ஆண்டுகளில்(12 வருடங்களில்) இறப்பதும் பாலாரிஷ்ட தோஷம் எனப்படும்.

30 வயதுவரை அற்பாயுள் என்றும், 60 வயது வரை மத்திம ஆயுள் என்றும், 90 வயதுவரை  மற்றும் அதற்கு மேலும்  இதை தீர்க்காயுள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

பொதுவாக சர லக்னத்திற்கு இரண்டாம் இடமும் ஏழாம் இடமும் மாரக ஸ்தானமாக வரும் அதன் அதிபதிகள் மாரக ஸ்தானாதிபதிகளாக வருவர்.

ஸ்திர லக்னத்திற்கு மூன்றாம் இடமும் எட்டாம் இடமும் மாரக ஸ்தானமாக வரும் அதன் அதிபதிகள் மாரக ஸ்தானாதிபதிகளை வருவர்.

உபய லக்னத்திற்கு ஏழாம் இடமும் பதினொன்றாம் இடமும் மாரக ஸ்தானமாக வரும் அதன் அதிபதி மாரகாதிபதியாவார்கள்.

மாரக ஸ்தானத்தில் இருக்கும் ராகு கேதுக்கள் அந்த வீட்டு அதிபதியின் பலனை எடுத்து செய்வதால் அவர்கள் சுப நிலையில் இல்லாத போது மரணம் அல்லது அதற்கு ஈடான கண்டஙகளை தருவார்கள்.

ஒரு ஜாதகத்தில் ஆயுளின் வலுவைத் தீர்மானிப்பதற்கு லக்னாதிபதி , எட்டாம் அதிபதி, சனி, பாதகாதிபதி, மாரக ஸ்தானாதிபதி நிச்சயமாக ஆராயப்பட வேண்டும்.

மேலும் மாரக திசைகள் ஒருவருக்கு நடக்கும் போது ஏழரை சனி, அட்டமச் சனி குறிக்கிட்டால் கண்டிப்பாக மாரகம் மற்றும் அதற்கு சமமான கண்டம் உண்டு.

அது போல் ஒரு ஜாதகத்தில் சனி அம்சத்தில் நீசம் பெற்று ராகுவுடன் இணைவது நல்லதல்ல.

கிரகண அமைப்பில் இருக்கும் போது லக்னாதிபதி ராகுவுடன் நெருக்கமாக இருப்பதும் நல்லதல்ல.

ஆயுள் ஸ்தானாதிபதி,சனி, லக்னாதிபதி போன்றவை நீ்சம் ஆவதும் நல்ல நிலை அல்ல.

செவ்வாய் தசையில் ராகு அல்லது கேது புக்தி, சனி தசையில் ராகு அல்லது கேது புக்தி, ராகு, கேது தசையில் புதன் புக்தி போன்ற காலங்களில் பாலாரிஷ்ட பாதிப்புக்கு உள்ளான குழந்தைகள் கடுமையான சோதனைகளை சந்திக்க நேரிடும்.

புத்திரகாரகனான குரு, பெற்றோர்களது ஜனன ஜாதகத்தில் பலவீனமாக அமைந்தாலும், புத்திர ஸ்தானாதிபதி ராகு கேதுக்களோடு சுபத்தன்மை  அற்று பெற்றோர்களது ஜனன ஜாதகத்தில் இணையும் போதும், 5ம் இடத்தில்  பாவிகள் பெற்றோர்களது ஜனன ஜாதகத்தில் அமையும்போதும் அவர்களது குழந்தைகளுக்கு பாலாரிஷ்டம் மேலும் தீவிரமாக தாக்கக்கூடும் என்கின்றன ஜோதிட விதிகள்.





Monday, September 22, 2014

கிழமை, கரண, யோக, திதிகளில் பிறந்தவன் பலன்




இவை அனைத்தும் பொது பலன்களே. ஜாதக கிரக அமைப்பை பொருத்து இவை மாறுபடும், 

கிழமைகளில் பிறந்தவர் பலன்

1)
ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவன்.செல்வம் உடையவனாய் இருப்பான்
2)
திங்கள்கிழமையில் பிறந்தவன்,புகழ் உடையவனாய் இருப்பான்
3)
செவ்வாய்க்கிழமையில் பிறந்தவன். தந்திரக்காரனாய் இருப்பான்
4)
புதன் கிழமை பிறந்தவன், கல்வி உடையவனாய் இருப்பான்.
5)
வியாழக்கிழமை பிறந்தவன்,அறநெறியில் விருப்பம் உடையவனாய் இருப்பான்
6)
வெள்ளிக்கிழமை பிறந்தவன், உயர்ந்த காரியங்களைச் செய்பவனாய் இருப்பான்
7)
சனிக்கிழமை பிறந்தவன், பிறரை ஏமாற்றுவதில் திறமைசாலியாக இருப்பான்

பிறந்த கரணங்களில் பலன்

1)
பவ கரணத்தில் பிறந்தவன்.அச்சம் இல்லாதவனாய் இருப்பான் 
2)
பாலவ கரணத்தில் பிறந்தவன், பல நற்குணங்களை உடையவனாய் இருப்பான். 
3)
கௌலவ கரணத்தில் பிறந்தவன், நல்ல ஓழுக்கங்களை உடையவனாய் இருப்பான் 
4)
தைதுலை கரணத்தில் பிறந்தவன்,உத்தியோகத்தில் ஆர்வம் உள்ளவனாய் இருப்பான் 
5)
கரசைக் கரணத்தில் பிறந்தவன்,பிற மாதரிடம் பிரியம் உள்ளவனாய் இருப்பான்
6)
வணிசைக் கரணத்தில் பிறந்தவன்.இனிக்கப் பேசும் இயல்பு உடையவனாய் இருப்பான்
7)
பத்திரைக் கரணத்தில் பிறந்தவன், எதிலும் விரைவில் சலிப்பு அடைபவனாய் இருப்பான்,
8)
சகுனிக் கரணத்தில் பிறந்தவன், நல்ல அறிவாளியாக விளங்குவான்,
9)
சதுஷ்பாத கரணத்தில் பிறந்தவன்.தத்துவ நூல்களில் விருப்பம் உடையவனாய் இருப்பான்.
10)
நாகவ கரணத்தில் பிறந்தவன், மிக்க மானம் உள்ளவனாய் இருப்பான்

பிறந்த யோகங்களில் பலன்

விஷ்கம்ப யோகத்தில் பிறந்தவன், உறவினர்களிடம் அன்பு உள்ளவனாய் இருப்பான்
பிரீதி யோகத்தில் பிறந்தவன், துணிவு உடையவனாய் இருப்பான்,
ஆயுஷ்மான் யோகத்தில் பிறந்தவன், ஓழுக்கம் உடையவனாய் இருப்பான்
சௌபாக்கிய யோகத்தில் பிறந்தவன், தெய்வபக்தி உடையவனாய் இருப்பான்.
சோபன யோகத்தில் பிறந்தவன்,மானம் உள்ளவனாய் இருப்பான்.
அதிகண்ட யோகத்தில் பிறந்தவன்,புகழ் உடையவனாய் இருப்பான்.
சுகர்ம யோகத்தில் பிறந்தவன், புண்ணியங்களைச் செய்வதில் விருப்பம் உடையவனாய் இரு
திருதி யோகத்தில் பிறந்தவன், இனிய சொற்களைப் பேசுபவனாய் இருப்பான்.
சூல யோகத்தில் பிறந்தவன், கருணை உடையவனாய் இருப்பான்.
கண்ட யோகத்தில் பிறந்தவன், கர்வம் உடையவனாய் இருப்பான்.
விருத்தி யோகத்தில் பிறந்தவன், செல்வந்தர்களிடத்தில் நட்பு உடையவனாய் இருப்பான்.
துருவ யோகத்தில் பிறந்தவன், பெரியோரிடம் பக்தி உடையவனாய் இருப்பான்.
வியாகாத யோகத்தில் பிறந்தவன், அடிக்கடி வெளியூர் செல்வதில் விருப்பம் உடையவனாய் இருப்பான்.
ஹர்ஷண யோகத்தில் பிறந்தவன்,அறிவாளியாக இருப்பான்.
வஜ்ரயோகத்தில் பிறந்தவன், வேளாண்மையில் விருப்பம் உடையவனாய் இருப்பான்.
சித்தியோகத்தில் பிறந்தவன், எல்லாருக்கும் நல்லவனாக விளங்குவான்.
வரீயான் யோகத்தில் பிறந்தவன்,பகைவரை ஒடுக்குவதிலேயே ஆர்வம் உள்ளவனாய் இருப்பான்.
வாரீயன் யோகத்தில் பிறந்தவன்,உண்மையை மறைப்பதில் திறமை உள்ளவனாய் இருப்பான்.
பரிக யோகத்தில் பிறந்தவன், பிறரை ஏமாற்றுவதில் கெட்டிக்காரனாய் இருப்பான்
சிவயோகத்தில் பிறந்தவன், பெற்றோர்களைப் பேணுவதில் பிரியம் உள்ளவனாய் இருப்பான்.
சித்தி யோகத்தில் பிறந்தவர், செல்வ செல்வாக்கு உள்ளவர்
சாத்திய யோகத்தில் பிறந்தவர், கலைகளில் வல்லுநனாய் இருப்பான்.
சுபயோகத்தில் பிறந்தவன், பெண்களிடம் பிரியம் உள்ளவனாய் இருப்பான்.
சுப்ரயோகத்தில் பிறந்தவன், முன்கோபக்காரனாய் இருப்பான்
பிராம்ய யோகத்தில் பிறந்தவன், பிறருக்கு உதவுவதிலேயே நாட்டம் உடையவனாய் இருப்பான்.

பிறந்த திதிகளில் பலன்

பிரதமையில் பிறந்தவன்,எதையும் ஆழமாகச் சிந்தித்துப் பார்ப்பான்.
துவிதியையில் பிறந்தவன், பொய் பேச வெட்கப்படுவான்.
திருதியையில் பிறந்தவன், நினைத்த காரியத்தை முடிப்பான்.
சதுர்த்தியில் பிறந்தவன், மந்திர சித்தியில் விருப்பம் உடையவனாய் இருப்பான்.
பஞ்சமியில் பிறந்தவன், பெண்களிடத்தில் ஆசை உடையவனாய் இருப்பான்.
சஷ்டியில் பிறந்தவன், செல்வர்களால் விரும்பப்படுவான்.
சப்தமியில் பிறந்தவன், இரக்கம் உடையவனாய் இருப்பான்.
அஷ்டமியில் பிறந்தவன்,குழந்தைகளிடத்தில் பிரியம் உள்ளவனாய் இருப்பான்.
நவமியில் பிறந்தவன்,புகழில் நாட்டம் உடையவனாய் இருப்பான்.
தசமியில் பிறந்தவன், ஒழுக்கம் மிக்கவனாய் இருப்பான்.
ஏகாதசியில் பிறந்தவன், பொருள் ஈட்டுவதில் நாட்டம்
உள்ளவனாய் இருப்பான்.
துவாதசியில் பிறந்தவன்,புதுமையான தொழில்களில் ஈடுபடுவான்.
திரயோதசியில் பிறந்தவன்,உறவினர்களோடு ஓட்டி வாழமாட்டான்.
சதுர்த்தசியில் பிறந்தவன்,பிறர் செய்த சிறு தவறுகளையும் மன்னிக்கமாட்டான்
பௌர்ணமியில் பிறந்தவன்,மிகவும் தெளிவான சிந்தனா சத்தி உடையவனாய் இருப்பான்.
அமாவாசையில் பிறந்தவன், தன் அறிவையும், ஆற்றலையும் மேலும் பெருக்கிக்கொள்வதிலேயே ஆர்வம் உடையவனாய் இருப்பான்.