ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Tuesday, November 5, 2019

உணவில் உள்ள கலப்படங்கள்

கலப்படத்துக்கு, அடிப்படை காரணம், மனிதனின் பேராசை தான். குறுக்கு வழியில் சம்பாதிக்க வேண்டும்; கொள்ளை லாபம் பெற வேண்டும் என, வியாபாரிகள்  ஆசைப்படுவது தான், கலப்படத்துக்கு பாதை அமைக்கிறது.

 2019ல் இதைப்பற்றி அரவம் திரைப்படத்தில் இடம்பெற்ற வீடியோ உங்கள் பார்வைக்கு.



மக்களின் விழிப்புணர்வுக்காக.

நன்றி youtube


பால்
முன்னர் எல்லாம் பாலோடு தண்ணீரைத்தான் கலப்பதை கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் இப்போது பால் கெட்டுப்போகாமல் இருக்கவும், வெண்மை நிறம், கெட்டிதன்மை, தடிமன் போன்ற பல காரணங்களுக்காக சிலரால் யூரியா, சோடியம் கார்போனேட், சோடியம் ஹைடிராக்ஸைட், பார்மால்டிஹைட், ஹைடிரோஜன் பெராக்ஸைட் போன்றவை சேர்க்கப்படுகிறது. இதனால் குடலில் அரிப்பு மற்றும் பல  பாதிப்புகள் உண்டாகும்.

தமிழகத்தில் வினியோகிக்கப்படும் பாலில், அனுமதிக்கப்பட்ட அளவை விட, நஞ்சு அதிகமிருப்பதாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு ஆணையம்(FSSAI), November 2019ல் தெரிவித்திருந்த நிலையில், தற்போது, பாதுகாப்பற்ற உணவுகள் தமிழகத்தில் தான் அதிகம் விற்படுவதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.


தரமில்லா உணவகங்கள்.
உணவு வண்ணங்கள் , நறுமணங்கள், பதனப் பொருட்கள், ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் போன்றவை அதிக அளவில் சேர்க்கப்பட்டாலும் அல்லது அவை அனுமதிக்கப் படாதவையாக இருந்தாலும் உடல் நலம் பாதிப்படையும்.



காய்கறிகள் மற்றும் பழங்கள்

செயற்கையான முறையில் காய்கறிகள் மற்றும் பழங்களை பழுக்க வைப்பதற்கு கால்சியம் கார்பைட் , எதிபான் மற்றும் ஆக்ஸிடோஸின் பயன் படுத்தப்படுகிறது. கால்சியம் கார்பைட், கேன்ஸர் உருவாக காரணமாகிறது

மற்ற குறிப்பிடத்தக்க கலப்படங்கள்

தேன் உடன்  சர்க்கரைப்பாகு

மிளகு உடன் கலக்கப்படும் பப்பாளி விதை

மிளகாய் அல்லது மஞ்சள் தூள்  உடன் கலக்கப்படும் நிறமிகள்


நெய் மற்றும் வெண்ணெயில் பிசைந்த உருளைக்கிழங்கு அல்லது ஸ்டார்ச் மாவு

ராகி அல்லது கேழ்வரகில் ரோடமைன் பி என்ற ரசாயனப் பொருள்

காபித்தூளில் தேவைக்கு அதிகமாக சிக்கரித்தூள்



கலப்படத்தால் ஏற்படும் கேடுகள்:


சில கலப்பட உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் நம் உடல்நலம் பாதிப்படையும். வெள்ளை சர்க்கரை, கலப்பட மற்றும் ரசாயன உணவுகளை பல வருடங்கள் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, உடல் பருமன், புற்றுநோய் உள்ளிட்ட பலவிதமான நோய்கள் நம்மை தாக்கக்கூடும்.

இதைப்பற்றிய ஆவணப் படம்
உங்கள் பார்வைக்கு.




இந்தியாவில் 2018-19ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 3ல் ஒரு பங்கு உணவு கலப்படம் செய்யப்பட்டவை என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

காற்று மாசில் தலைநகர் டில்லியும், உணவுக் கலப்படத்தில் தமிழகமும் முன்னிலை வகிப்பது வருத்தமான நிகழ்வு.






‘பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் ’ என்பது ஒரு பழமொழி . ஆனால் இந்த பசியை போக்குவதற்காக மனிதர்கள் உண்ணும் உணவுப் பொருட்கள், இன்றைய காலகட்டத்தில் பல நேரங்களில் உடல்நலத்திற்கும், சில நேரங்களில் உயிருக்கும் கூட உலை வைத்து விடுகிறது. இதற்கு காரணம் அசுர வேகத்தில் அரக்கனாய் மாறும் ரசாயனங்கள். பளிச்சென்று இருந்தால் அது தரமான உணவு என்ற எண்ணம், பாமரர்கள் மட்டுமன்றி, படித்தவர்களிடமும் பரவியிருப்பது விந்தையான வேதனை. கோடிகளில் புரள்வோரையும், தெருக்கோடிகளில் தவிப்போரையும் இணைக்கும் ஒரே புள்ளி பசி என்றால் அது மிகையல்ல. எனவே, ருசி பார்த்து அந்த பசியை போக்காமல், உணவின் தரம் பார்த்து  உட்கொண்டால் மட்டுமே, ஆரோக்கிய வாழ்வின் அடிபற்றி நடக்கும் நாளைய தலைமுறை.