ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Tuesday, March 17, 2020

கொரானாவும் ஆயுள் பாவமும்

உலகையே இன்று அச்சுருத்தும் பெரிய விஷயம் கொரானா வைரஸ் தொற்று நோய் என்றால் அது மிகையாகாது.

டிசம்பர் 2019 மாதம் முதல் சீனாவில் பரவிப் பல உயிர்களைப் பலி வாங்கிய கொரோனா வைரஸ் இப்போது வரை உலகில் நூற்றுக்கும் மேர்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவிலும் பலருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு புறம் நோய் பரவும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் மறுபுறம் கொரோனா குறித்த வதந்திகளும் வலம் வந்து கொண்டே இருக்கின்றன. இதனால் கொரோனா வைரஸ் மற்றும் அது ஏற்படுத்தும் கோவிட்-19 (COVID-19) நோய் குறித்த கேள்விகளுக்கு உலக சுகாதார மையம் (WHO) விளக்கமளித்துள்ளது. அவற்றில் சிலவற்றை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

ஒரு ஆய்வில், இந்த நோயை சரியாக கையாளாவிட்டால் ஒன்றரை கோடிக்கும் அதிகமான மக்கள் மரணிக்க அல்லது கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

கொரோனா ஒரு தொற்றுநோய் என்பதால் இதனால் பாதிக்கப்படுபவர்கள் படும் வேதனை மிகவும் அதிகம். இவர்களை யாரும் கவனிப்பதில்லை, சில சமயங்களில் இவர்களின் குடும்ப உறுப்பினர்களே அல்லது நண்பர்களே கைவிட்டு விடுகின்றனர். இறப்பு ஏற்படும்பட்சத்தில் யாரும் உதவ முன்வருவதில்லை. சில இடங்களில் அனாதைப் பிணங்களாக குப்பைகளில் வீசி எறியப்படுகின்றனர்.

இந்த நோயைப் பற்றியும், பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றியும்,
ஜோதிடரீதியாக யாரெல்லாம் மீண்டு வருவார்கள் என்பதையும் பார்ப்போம்.

ஜோதிடரீதியாக இதை ஆராய்வோம்.
இதுகுறித்து பஞ்சாங்கத்தில் டிசம்பர் மாதம் 2019 (மார்கழி) மேற்கு திக்கில் இருந்து புதிய வைரஸ் நோய் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் ஆறு கிரக கூட்டணி தனுசில் இருந்து ராகு பார்வை பெற்றது. அதன்படியே சீனாவில் கொரோனா உருவாகி உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருவது குறிப்பிடத்தக்கது. ராகு கிருமிகளுக்கு காரகன் என்பதாலும் காற்று ராசியில் இருந்து பார்வையிட்டதாலும் இந்நோய் காற்றைப்போல வேகமாக பரவுகிறது. இந்த கிரக கூட்டணி ராசி மாரும்போது  இந்த வைரஸ் நோய் ஏப்ரல் 14ம் தேதி முதல் படிப்படியாக குறைந்து ஜுன் 30க்குள் கட்டுக்குள் வரும் என்று கணிக்கப்படுகிறது. ஆனாலும் ஒழிப்பது 
 கடினம். மீண்டும் கடினமாக தாக்கும் அபாயம் உண்டு.

எந்த ஒரு நோய் வந்தாலும் நம் கர்மவினை முடியாமல் நாம் இந்த உலகத்தை விட்டு நீங்க மாட்டோம்.
அந்த கர்ம பதிவை காட்டும் கண்ணாடியே நமது ஜாதகம். 

எட்டாம் பாவம் என்பது ஜாதகரின் ஆயுள் பற்றி கூறுகிறது. ஆயுள் காரகன் சனி, ஜாதகரின் லக்னத்திற்கு பாதகம் செய்யும் பாப கிரகங்களின் நிலையை வைத்துதான் ஒருவரின் ஆயுள் பற்றி கூற முடியும். ஒருவரின் ஆயுள் முடிவு பல விதமாக இருக்கலாம் என்றாலும், நோயால் ஏற்படும் மரணம் பற்றிதான் நாம் இங்கே பார்க்கப் போகிறோம்.


8-ம் இடத்திற்கான அதிபதி, எட்டில் இருப்பது அந்த ஜாதகருக்கு நீண்ட ஆயுளைத் தரக்கூடும். 8-ம் இடத்திற்கான அதிபதி 6-ல் மறைவதை விட, 12-ல் மறைவது, நல்ல ஆரோக்கியத்தையும், தீர்க்க ஆயுளையும் வழங்கும். எட்டாம் இட அதிபதி இரண்டாம் இடத்தில் இருந்தால், அவர் 7-ம் பார்வையாக எட்டாம் இடத்தைப் பார்ப்பார். அதன் மூலம் ஜாதகருக்கு தீர்க்க ஆயுள் கிடைக்கும். எட்டாம் இடத்தின் அதிபதி லக்னத்தில் இருந்தால் சில சங்கடங்கள் தோன்றும் என்றாலும், நல்ல ஆயுள் பலன் இருக்கும்.

மேஷ லக்னத்திற்கு செவ்வாய் லக்னாதிபதியாகவும், எட்டாம் இட அதிபதியாகவும் உள்ளார். எனவே செவ்வாய் நீச்சம் பெற்றால் உடல் ஆரோக்கியம் கெடும். மனக் கஷ்டம் இருக்கும். எந்நேரமும் நோய் இருந்து கொண்டே இருக்கும். துலாம் லக்னத்திற்கு, சுக்ரன் தான் லக்னாதிபதியாகவும், எட்டாம் இட அதிபதியாகவும் இருக்கிறார். இவர் உச்சம் பெறுவது ஆறாம் இடம் என்பதால் நோய் தாக்கம் அதிகரிக்கும்.

ரிஷபம் மற்றும் சிம்ம லக்னத்திற்கு குரு தான் எட்டாம் இடத்தின் அதிபதி. இந்த ஜாதகர்களைப் பொறுத்தவரை குரு நீச்சம் பெறாமல் இருப்பது நல்லது. உச்சம் பெறாமலும் இருக்க வேண்டும். குரு உச்சம் பெறாமல் எந்த இடத்தில் இருந்தாலும் நன்மையைச் செய்வார். அதுவே நீச்சம், உச்சம் பெற்றிருந்தால் சிறுவயது முதல் நோய்கள் வந்து கொண்டே இருக்கும்.

மிதுன லக்னத்திற்கும், கடக லக்னத்திற்கும் சனியே எட்டாம் இடத்தின் அதிபதி. இவர் நீச்சம் பெறாமல் இருக்க வேண்டும். அப்படி நீச்சம் பெற்றால் அந்த ஜாதகரின் மனம் ஒரு நிலையில் இருக்காது. தவிர மூட்டு வலி, வயிற்றுக் கோளாறு, மூல நோய் வரக்கூடும். முதுமை காலத்தில் தொற்று நோய் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

விருச்சிகம், கும்பம் லக்னத்திற்கு புதன் எட்டாம் இடத்தின் அதிபதி. எனவே புதன் ஆட்சி, உச்சம் பெற்றால் ஜாதகருக்கு யோகம். அதுவே நீச்சம் பெற்றால், ஜாதகரின் ஆயுள் பலம் குறையும். குடல் புண், ரத்த அழுத்தம் வரும், நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

கன்னி லக்னத்திற்கு செவ்வாய் எட்டாம் இட அதிபதியாக இருக்கிறார். இவர் மகரத்தில் உச்சம் பெறுவது நல்ல யோக பலன் தரும். நீண்ட ஆயுள் இருக்கும். மாறாக நீச்சம் பெற்றால் ஜாதகருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், எலும்பு தேய்மானம், மூட்டு வலிகள் தொல்லை தரும். தனுசு லக்னத்திற்கு எட்டாம் பாவாதிபதி சந்திரன். அவர் 6-ம் பாவத்தில் உச்சம் பெறுவது யோகம். என்றாலும் ஜாதகர் மனநோயாளி போல் சில சமயம் நடந்து கொள்வார். சந்திரன் நீச்சம் பெற்றால் ஜாதகருக்கு முடக்குவாதம் வரும்.

மகர லக்னத்திற்கு சூரியனே எட்டாம் இடத்தின் அதிபதி. சூரியன் 4-ம் இடமான மேஷ ராசியில் உச்சம் பெறலாம். ஆனால் 10-ம் இடமான துலாம் ராசியில் நீச்சம் பெற்று விடக்கூடாது. அவ்வாறு நீச்சம் பெற்றால் ஜாதகருக்கு தலைவலி, ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் போவது, உடல் சோர்வு, நரம்பு தளர்வு, சரியான உறக்கம் இல்லாமை போன்றவற்றால் தவிப்பார்கள்.

மீன லக்னத்திற்கு 8-ம் இடத்தின் அதிபதி சுக்ரன். இவர் 7-ம் இடமான கன்னியில் நீச்சம் பெறுவது நன்மையை வழங்கும். மாறாக உச்சம் பெற்றால் அந்த ஜாதகருக்கு சர்க்கரை நோய், உடல் பருமன், தசைப்பிடிப்பு, தொற்று நோய்கள் வரக்கூடும். சிறுவயதில் முதல் நெஞ்சில் சளித் தொல்லை இருக்கும்.

ஜாதகத்தில் சனியின் நிலையே மரணத்தின் வகையை நிர்ணயிக்கும். ஒருவருக்கு நீண்ட சிறப்பான ஆயுளைத் தரும் கிரகம் சனி பகவான் ஆவார்

சத்ரு வீட்டில் இருக்கும் கிரகம், நீச்ச வீட்டில் இருக்கும் கிரகம், சூரியனுடன் சேர்க்கை பெற்ற கிரகம்.. இவர்களால் ஆயுள் குறையும். வக்ரம் பெற்ற கிரகம், வர்கோத்தமம் அடைந்த கிரகம், உச்சம் பெற்ற கிரகம் போன்றவை ஆயுளைக் கூட்டும். லக்னேசனுக்கு விரோதியான கிரகம், லக்னேசனது திசையில் தனது ஆட்சி காலத்தில் ஜாதகருக்கு மரணத்தைக் கொடுக்கலாம்.
ஒருவர் ஜாதகத்தில் லக்னத்துக்கு 3, 6, 11 ஆகிய இடங்களில் 8-ம் வீட்டோன் (ஆயுள்காரகன்) இருந்தால் அந்த ஜாதகரின் ஆயுள் கூடும். 8-ம் வீட்டோன் இருக்கின்ற ராசி, அம்சம், நட்சத்திரம் ஆகியவற்றின் அதிபதிக்குள்ள பலத்தைக் கொண்டு ஆயுளை நிர்ணயிக்க வேண்டும். 8-க்குரியவன் (அஷ்டமாதிபதி) ஆயுள் ஸ்தானாதிபதி, 12-ம் வீட்டில் மறைய ஆயுள் குறையும்.

லக்னாதிபதியும் எட்டாமதிபதி, சந்திரன், சனி ஆகிய அனைவரும் சர ராசியில் இருந்தால் பூர்ண ஆயுள். மாறாக இவை அனைத்தும் ஸ்திர ராசியில் இருந்தால் அற்ப ஆயுள். ஆனால் இவை அனைத்தும் உபய ராசியில் நின்றால் மத்திம ஆயுள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது

லக்னேசன், பூர்வ புண்ணிய ஸ்தானம் என்னும் 5-ம் வீட்டோன், பாக்கியாதிபதி என்னும் 9-ம் வீட்டோன் ஆகிய மூவரும் பலம் பெற அந்த ஜாதகர் தீர்க்காயுள் உள்ளவராக திகழ்வார். அவர்கள் நிச்சயம் நோய் தாக்கானாலும் மீண்டு வருவார்கள்.

சமூக வலைதளங்களில் இடம்பெற்ற உரையாடல்



தொடர்ச்சி

கொரோனாவில் இருந்து பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய விரிவான அலசல் அடுத்த பதிவில்