ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Tuesday, March 4, 2014

கைரேகை ஜோசியம்


மனிதனின் எதிர்காலம் மற்றும் அவ னை பற்றிய தகவல்களை உள்ளங் கையின் அமைப்பு மற்றும் அதன் வரி களை கொண்டு கணிக்க முடியும் என் பது கைரேகை சாஸ்திரம் கூறும் நிரூபணம்.

 
கைகளில் உள்ள ரேகைகள் மட்டுமல்ல, கால்கள் மற்றும் நெற்றியில் இருக்கும் ரேகை அமைப்பையும் கொ ண்டு பலன் சொல்லுவது இந்த சாஸ் திரத்தின் கட்டமைப்பு. அதனால் தான் இதை கைரேகை சாஸ்திரம் என கூறா மல் முன்னோர்கள் ரேகை சாஸ்திரம் என அழைத்தார்கள். ரேகை சாஸ்திரம் என்பதுவிஞ்ஞானம் அல்ல.
ரேகை சாஸ்திரம் ஒரு கலை வடிவம். இங்கே நாம் கலைக்கும்விஞ்ஞானத்திற்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ள வேண்டும். விஞ்ஞானம் என்பது கட்டமைக்கப்பட்ட விதிகளும், அத னை நிரூபணம் செய்யும் சோதனைகளும் கொண்டது. கலை என்பது அடிப்படை அம்ச ங்களை கொண்டது ஆனால் அதை பயன் படுத்துவோர் பொருட்டு மாறுபடும். உதார ணமாக சோடியம் குளோரைடு என்ற உப்பை நீரில் அமிழ்த்தினால் கரையும் என் பது விஞ்ஞானம் கூறும் விதி. இதை உலகின் எந்த மூலையில் யார் செய்து பார்த்தாலும் நடைபெறும். காரணம் விஞ்ஞானம் மாறாதது.
ஓவியம் என்பது கலை அடிப்படையில் இப்படி ஓவியம் வரைய லாம் என்றாலும் உலகில் ஒரே போல ஓவியங்கள் இல்லை. கலாச்சாரம், சூழலுக்கு ஏற்ப அது பெரும் கலைவடிவமாக திகழுகிறது.

ரேகை சாஸ்திரம் என்பதும் ஒரு கலைவடிவம் தான். அடிப்படை விதி களை உணர்ந்துகொண்டு பயன்படு த்த துவங்கினால் ஓவி யம் போல பல வண்ணக் கலவையான மனிதர் களையும் அவர்களின் வாழ்க்கை நிலையையும் வெளிப்படுத்தும்.
மனித இனத்தின் தனித்துவமான அடையாளம் உடலில் உள்ள ரேகைகள். கைரேகைகள் ஒருவ ருக்கு இருப்பது போல மற்றொரு வருக்கு அச்சு வார்த்தால் போல இருக்காது..! இதனால் தான் மனி த அடையாள குறி யாக ரேகைகள் எடுத்தாளப்படுகிறது. வாகனம் தயா ரிக்கும் நிறுவ னம் எப்படி ஓவ்வொரு வாகனத் திற்கும் தனித்துவமான என்ஜின் எண் தருகிறார்களோ அதுபோல இயற்க்கை ஒவ்வொரு உயிரு க்கும் தனித்துவமான அடையாளம் தருகிறது. அவ்வகையில்மனிதனின் தனித்துவமான அடையாளம் ரேகைகள்.
ஒவ்வொரு மனிதனின் மனோநிலை, செயல் நிலை க்கு ஏற்ப ரேகைகள் மாறுபடுகிறது. இதை உணர்ந்து ரேகை சாஸ்திரம் உருவாகியது. வேடிக்கையான விஷயம் என்னவென்றால் ரேகை சாஸ்திரத்தை உண்டாக்கியவர்களும் அதன் மூல வேராக இருந்த வர்களும் தமிழர்கள்.
குறிஞ்சி நில மக்களின் ஆதார தொழிலாக ரேகை சாஸ்திரம் இருந் ததாக இலக்கியங்கள் கூறுகிறது. முருகப்பெருமானிடம் வள்ளியும், வள்ளியிடம் இருந்து பிற மனிதர்களும் கற்றார்கள் என்கிறது தமிழ் செவிவழி கதைகள்.கைரேகை பலன்கள்:
பொதுவாக கைரேகை பலன் அறிய ஆண்களுக்கு வலக் கை ரேகையையும் பெண்களுக்கு இடக் கை ரேகையையும் பார்க்க வேண்டும் என கைரேகை நிபுணர்கள் கூறி வருகின்றனர்ஆண்களுக்கு வலக் கை ரேகையையும், பெண்களுக்கு இடக் கை ரேகையையும் அதிக சக்தி வாய்ந்தது. இனி சாதரணமாக ஒரு கைரேகை பார்க்கும் போது வெறும் ரேகைகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்ப்பதில்லை கையில் இருக்கும் ரேகை, விரலில் வளைவு கையில் உள் பாகத்தில் இருக்கும் மேடு பள்ளம், நகம், விரலின் நீளம் என பலதரப்பட்ட விஷயங்களை ஆராய்ந்து பார்க்கின்றனர்.

கைரேகை பலன்கள் ஜோதிடம் வலதுகைகைரேகை சாத்திரத்தின்படி கையில் இருக்கும் சில ரேகைகள் 

1: ஆயுள் ரேகை – 

2: தலை ரேகை – 

3: இதய ரேகை – 

4: வெள்ளியின் சுற்றுவட்டம் – 

5: சூரிய ரேகை – 

6: புதன் ரேகை – 

7: விதி ரேகை

இப்போது ஒவ்வொரு ரேகையாக விரிவாக பார்ப்போம்

இதய் ரேகை கைரேகை பலன்
  • இதய ரேகை என்பது தான் கைரேகை பார்ப்பவரால் பார்க்கப்படும் முக்கிய ரேகைகளில் முதன்மையானதாக இருக்கிறது. இது விரல்களுக்கு அடியில் உள்ளங்கையின் மேற்புறம் காணப்படுகிறது. சில கைரேகை சாத்திரத்தில், இது நுனிவிரலுக்கு அடியில் உள்ளங்கையின் ஓரத்தில் இருந்து தொடங்கி கட்டை விரலை நோக்கி ஓடும் ரேகையாக இருக்கிறது; வேறு சில சாத்திரங்கள், விரல்களுக்கு அடியில் தொடங்கி உள்ளங்கையின் விளிம்பிற்கு வெளியே ஓடுவதை இதய ரேகையாக குறிப்பிடுகின்றன. உள்ளங்கையில் காணப்படும் முக்கியமான ரேகைகளில் இதுவும் ஒன்றாகும். இந்த ரேகை புதன் மேட்டில் உற்பத்தியாகிச் சூரிய மேடுகளைத் தாண்டி குரு மேட்டில் முடியும். சிலருக்கு இந்த இருதய ரேகை சனி மேட்டில் முடியும்; (அ) கிரக மேடுகளுக்கு வெகுவாக கீழே தள்ளிப் புத்திரேகையை ஒட்டியும் முடியலாம். சிலர் கைகளில் புத்தி ரேகை, இருதய ரேகை ஆகிய இரண்டும் சேர்ந்து, உள்ளங்கையில் குறுக்கே ஒரே ரேகையாகவும் காணப்படலாம். இந்த இருதய ரேகை மூலம் நமது இருதயம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதையும், இருதயத் துடிப்பு இரத்த ஓட்டம் போன்றவற்றையும் தெரிந்துகொள்ளலாம். அத்துடன் இருதயத்தில் ஏற்படக் கூடிய கோளாறுகளையும் தெரிந்து கொள்ளலாம். மேலும் இதயத்தின் ஆரோக்கியம் தொடர்பான பல்வேறு விஷயங்களுக்கும் அப்பாற்பட்டு, உணர்ச்சியைத் தாங்கும் திறன், காதல் உணர்வுகள், மன அழுத்தம், மற்றும் இன்பதுன்ப நிலைப்பாடு ஆகியவற்றையும் இது குறிப்பதாக நம்பப்படுகிறது. இந்த ரேகை மூலம் அன்பு, பாசம், தயை, காருண்யம், காதல் போன்ற உணர்வுகள் எந்த அளவில் உள்ளன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

விதி ரேகை கை ரேகை பலன்
  • விதி ரேகையானது, மணிக்கட்டிற்கு அருகில் உள்ளங்கையின் அடியிலிருந்து, நடுவிரலை நோக்கி உள்ளங்கையின் மையம் வழியாக மேலே ஓடும். உள்ளங்கையில் மணிக்கட்டு பகுதியில் இருந்து ஒரு ரேகை சனி மேட்டை நோக்கிச் செல்லும். இதுவே விதி ரேகை ( அ) தொழில் ரேகை என்று அழைக்கப்படும். இந்த ரேகை நமது உழைப்புக்குத் தகுந்த பலனைக் கொடுக்கக் கூடியது எனலாம். சிலர் கைகளில் இந்த ரேகையே இருக்காது! இவர்கள் எவ்வளவு தான் கஷ்டப்பட்டுப் பாடுபட்டாலும், அதற்குத் தகுந்த பலன் கிடைக்காது. விதி ரேகை தெளிவாக அமைந்து வெட்டுக்குறி, தீவு ஏதும் இல்லாது மணிக்கட்டிலிருந்து சனி மேடு வரை செல்வது நல்ல அமைப்பாகும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் தொழில் விஷயத்தில் பிரச்சனை ஏதும் இல்லாது நிம்மதியாக வாழ்வர். விதி ரேகையுடன் ஆயுள், புத்தி, இருதயரேகைகளும் நன்றாக அமைந்திருந்தால், இவர்களுக்கு நல்ல தேக ஆரோக்கியமும் , புத்திசாலித்தனமும் , நல்ல தொழில் விருத்தியும் ஏற்பட இடமுண்டு. இவர்களது எதிர்காலம் சந்தோசமாக அமையும்.கல்வி மற்றும் தொழில் சார்ந்த வெற்றிகள் மற்றும் தடைகள் உட்பட, இது ஒருவரின் வாழ்க்கையோடு மிகவும் தொடர்புபட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

தலை ரேகை கைரேகை ஜோதிட பலன்
  • கைரேகை பார்ப்பவர்களால் கூறப்படும் அடுத்த ரேகை, தலை ரேகையாகும். இந்த ரேகை, சுட்டுவிரலின்கீழ் உள்ளங்கையின் ஓரத்தில் தொடங்கி, உள்ளங்கையின் வெளிப்புற விளிம்பிற்கு ஓடும். பொதுவாக, தொடக்கத்தில் தலை ரேகையானது ஆயுள் ரேகையுடன் இணையும். கல்வி, மற்றவர்களுடனான உறவுமுறை, புத்திசாலித்தனம் மற்றும் அறிவு தேடல் ஆகியவை உட்பட இது ஒருவரின் மனதையும், அது வேலை செய்யும் முறையையும் கணிப்பதாக பொதுவாக கைரேகை பார்ப்பவர்கள் குறிப்பிடுகிறார்கள்.


ஆயுள்ரேகை
  • இறுதியாக, கைரேகை பார்ப்பவர்களால் ஒருவகையில் மிகவும் கருத்துவேறுபாடுகளைக் கொண்ட ரேகையான ஆயுள் ரேகை. இது கட்டைவிரலுக்கும் மேலே உள்ளங்கையின் விளிம்பில் இருந்து தொடங்கி, மணிக்கட்டை நோக்கி ஒரு வில்லைப் போல பயணிக்கிறது. இந்த ரேகை ஒருவரின் ஆயுளையும், உடல் ஆரோக்கியத்தையும் மற்றும் பொதுவான ஆரோக்கியத்தையும் குறிப்பதாக நம்பப்படுகிறது.  ரேகைகளில் மிகவும் முக்கியமானது ஆயுள் ரேகையாகும். முதலில் இதன் தன்மையைக் கவனிக்க வேண்டும். இந்த ரேகை சிலரது கைகளில் தடிமனாகவும். ஆழமாகவும் பதிந்திருக்கும்; சிலரது கைகளில் லேசாகவும் மெல்லியதாகவும் பதிந்திருக்கும். தடிமனான ஆயுள் ரேகை மிருகபலத்தையும், மெல்லிய ஆயுள் ரேகை ஆத்ம பலத்தையும் குறிப்பிடும். தெளிவாகவும், மெல்லியதாகவும், நீளமாகவும் அமைந்த ஆயுள் ரேகை, ஒருவருக்கு நல்ல தேக பலத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும். தடிமனான ஆயுள் ரேகை உடையோர் அடிக்கடி சிறு, சிறு உடல் உபாதையால் சிரமப்படுவர். அடுத்து, ஆயுள் ரேகை சுக்கிர மேட்டைச் சுற்றி எவ்வாறு அமைந்துள்ளது என்பதை ஆராய வேண்டும், ஆயுள் ரேகை சுக்கிர மேட்டைச் சுற்றி நன்கு விலகியிருந்தால், இவர்களது தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆயுள் ரேகை, சுக்கிர மேட்டைச் சுற்றி நெருங்கிக் காணப்பட்டால், இவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும் என்பதை இது குறிக்கும். ஆயுள் ரேகை குரு மேட்டுப் பக்கம் சற்று உயர்ந்து காணப்பட்டால், இவர்கள் தன்னடக்கம், கட்டுப்பாடு, லட்சிய உணர்வு, உயர்வெண்ணம் கொண்டவர்களாக இருப்பர். ஆயுள்ரேகை கீழ் செவ்வாய் மேட்டிலிருந்து ஆரம்பித்திருந்தால், இவர்கள் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாகவும், அடக்கமில்லாதவர்களாகவும், சண்டை சச்சரவுகளில் ஈடுபடக்கூடியவர்களாகவும் இருப்பர். ஆயுள் ரேகையிலிருந்து மேல் நோக்கி எழும் ரேகைகள் சிறியதாக இருந்தால், இவர்கள் நல்ல உழைப்பு, உற்சாகம், அதிர்ஷ்டம் உடையவர்களாக இருப்பர் என்பதைக் காட்டும். இந்த ஆயுள்ரேகையானது, பேரழிவு நிகழ்வுகள், உடல் காயங்கள் மற்றும் இடமாற்றங்கள் உட்பட, முக்கியமான வாழ்க்கை மாற்றங்களைப் பிரதிபலிப்பதாக நம்பப்படுகிறது. ஒருவரின் ஆயுள்ரேகையின் நீளம் அவரின் வாழும் காலத்தோடு தொடர்புபட்டிருப்பதாக பொதுவாக கூறப்படுவதை நவீன கைரேகை சாத்திர நிபுணர்கள் நம்புவதில்லை.
  • கல்யாண ரேகை:-
கல்யாண ரேகை என ஒரு ரேகை நம் கையில் உள்ளது
கல்யாண ரேகை
அதோ அந்த படத்தில் சுண்டு விரல்களின் கீழ் இரண்டு ரேகை தெரிகிறதல்லவா? அது தான் இந்த திருமண ரேகை. இந்த படத்தில் காட்டப்பட்டதைப் போல் ஒன்றிற்கு மேற்பட்ட கோடுகள் கூட சிலருக்கு இருக்கலாம்.
திருமண ரேகையில் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் :
1. எத்தனை ரேகைகள் உள்ளன?
2. திருமண ரேகையில் நீளம் எவ்வளவு ?
3. திருமண ரேகையின் அகலம் எவ்வளவு ?
4. திருமண ரேகை இதய ரேகையிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது ? அது இதய ரேகையை அப்படியே நேர்கோடிழுத்தால் சந்திக்கும் இடம் என்ன ?
5. திருமண ரேகையின் குறுக்கே வேறு கோடுகள் ஓடுகின்றனவா?
இந்த மூன்று விஷய்ங்களையும் கவனித்து விட்டு நாம் இந்த விஷயங்கள் பற்றிய கைரேகை பலன் எப்படி என தெரிந்து கொள்ளலாம். எந்த கை பார்க்க வேண்டும்? உங்கள் நேடுரல் ஹேண்ட் அதாவது நீங்கள் இயற்கையிலேயே எந்த கை பழக்கமுடியவரோ அந்த கையில் பார்க்க வேண்டும். பொதுவாக இந்தியாவில் பழக்க வழக்கம் காரணமாக அனைவரும் வலது கை பழக்கமுடையவர் போல தோற்றம் அளித்தாலும் பிறக்கும்போது இயல்பாய் இடது கை பழக்கமுடையவராய் கூட இருந்திருக்கலாம். ஆகவே எது நமது இயற்கையான டாமினென்ட் கையோ அந்த கையில் உள்ள ரேகைகளை பார்க்க வேண்டும் .
திருமண ரேகை கை ரேகை கைரேகை சாஸ்திரம்

1. திருமண ரேகை முதலில் திருமண சம்பிரதாயத்தை குறிக்கவில்லை. அது நம் வாழ்க்கையின் ஏற்படும் காதல் உறவுகளை பற்றியது. ஆகவே இந்த ரேகையை காதல் ரேகை என அழைப்பதே பொறுத்தமானது. ஆக உங்கள் வாழ்க்கையின் காதல் உறவுகள் எத்தனை என்பதை இந்த காதல் ரேகை காட்டிவிடும். ஒன்றிற்கு மேற்பட்ட ரேகைகள் இருந்தால் அது ஒன்றிற்கும் மேற்பட்ட காதல் உறவுகளை காட்டும்.இதை வைத்தே உங்கள் காதல் வெற்றி பெறுமா இல்லையா எனவும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.திருமண ரேகையில் நீளம் எவ்வளவு ?
2. திருமண ரேகையின் நீளத்தை வைத்து உங்கள் உறவு எவ்வளவு காலம் நிலைக்கும் என தெரிந்து கொள்ளலாம். நீளம் கம்மியாக இருந்தால் அந்த உறவு அதிக காலம் நிலைத்திருக்காது.
திருமண ரேகையின் அகலம் எவ்வளவு ?
3. திருமண ரேகை அல்லது காதல் ரேகை த்டித்திருந்தால் அது உங்கள் காதல் உறவின் மேல் நீங்கள் கொண்ட அன்பின் ஆழத்தை காட்டும். மெலிதாக இருந்தால் அது அந்த உறவின் ஆழமின்மியை குறிக்கும்.
திருமண ரேகை இதய ரேகையிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது ? அது இதய ரேகையை அப்படியே நேர்கோடிழுத்தால் சந்திக்கும் இடம் என்ன ?
4. திருண ரேகை எந்த இடத்தில் இதய ரேகையை நோக்கி திரும்புகிறது என்பது முக்கியம். அந்த திரும்பலை அப்படியே நீட்டித்தால் அது இதய ரேகையை வந்து சந்திக்கும் இடத்தை வைத்து ஒருவருக்கு எப்போது திருமணம் நடக்கும் என கணிக்கலாம்.
திருமண ரேகையின் குறுக்கே வேறு கோடுகள் ஓடுகின்றனவா?
5. திருமண ரேகையின் குறுக்கே வேறு கோடுகள் ஓடினால் அது நிச்சயம் நல்லதறகல்ல. சில பிரச்சினைளையே குறிக்கும். அது இல்லற வாழ்க்கை ( இல்லற இன்பம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளாகவோ அல்லது மன ஒற்றுமை இல்லாமல் அடிக்கடி சண்டை போடும் பிரச்சினையாகவோ இருக்கலாம்.)


புத்தி ரேகை:
குரு மேட்டின் அடிப்பகுதியில் ஆயுள் ரேகையை ஒட்டி ஆரம்பமாகி, உள்ளங்கையில் குறுக்காக செவ்வாய் மேடு (அ) சந்திர மேட்டை நோக்கிச் செல்லும் ரேகை புத்தி ரேகை என்று அழைக்கப்படும். இந்த ரேகை ஓரளவு அழுத்தமாகவும், தெளிவாகவும் , மெல்லியதாகவும் இருந்து தீவு, புள்ளி, உடைதல், போன்ற குறைபாடுகள் இல்லாது அமைவது நல்ல அமைப்பாகும். இவர்கள் புத்திசாலியாகவும் , அதிக ஞாபக சக்தி உடையவர்களாகவும், நேர்மையாகவும் இருப்பர். புத்தி ரேகை நீளமாக அமைந்திருந்தால், இன்னும் விசேஷமான பலனைத் தரும். புத்தி ரேகை நமது மூளையின் அமைப்பையும், அது வேலை செய்யும் திறனையும், நமது மனோநிலையையும் எடுத்துக் காட்டுகிறது! உள்ளங்கையில் காணப்படும் முக்கியமான ரேகைகளில் இதுவும் ஒன்றாகும். இனி, புத்தி ரேகையின் பலவிதமான அமைப்புகளையும், அவை தரும் பலாபலன்களையும் பற்றி விரிவாகக் காண்போம்.

ஆரோக்கிய ரேகை:
ஆரோக்கிய ரேகையைப் புதன் ரேகை என்று கூறுவது உண்டு. இது விதி ரேகையின் அருகே ஆரம்பித்து புதன் மேடு வரை செல்லும். ஒருவரது உடல் நிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்த ரேகை எடுத்துக் காட்டும். உள்ளங்கையில் உள்ள மற்ற ரேகைகளான புத்திரேகை, ஆயுள் ரேகை, இருதய ரேகை ஆகியவற்றில் ஏதாவது குறைபாடு இருந்தாலும், இந்தப் புதன் ரேகை நன்றாக அமைந்திருந்தால், இவர்களது தேகத்தில் ஏதாவது பீடைகள் வந்தாலும், அவையெல்லாம் உடனடியாக நிவர்த்தியாவதற்கு இது உறுதுணையாக இருக்கும். மேலும், புதன் மேடு பலவீனமாக இருக்க, இந்த ரேகை பலமாக இருந்தால் புதன் மேட்டால் ஏற்படும் குறைபாடுகள் யாவும் விலகி விடும். இந்த ரேகை தெளிவாகவும், மெல்லியதாகவும், ஓரளவு அழுத்தமாகவும் இருப்பது நல்லது. தீவு, பிளவு, வெட்டுக்குறி, சங்கிலிக் குறி போன்ற குறைபாடுகள் ஏதும் இல்லாது இந்த ரேகை அமைந்திந்தால் இவர்கள் நல்ல பேச்சு சாதூர்யம், சொல்வன்மை கலை ë£னம், வியாபரத்திறமை ஆகியவற்றுடன் பெரும் பணம் சம்பாதித்து சிறப்பாக வாழ்வர்.