ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Wednesday, March 12, 2014

முற்பிறவி – மறுபிறவிமுற்பிறவி மறுபிறவிகள் உண்மைதானா?
இது நீண்ட நெடுங்காலமாகவே மக்களிடம் இருக்கும் கேள்வி. வெகு காலமாகவே விவாதிக்கப்பட்டு வரும் விஷயமும் கூட. உண்மைதான் என்பது ஒரு சிலரது கருத்து. அதெல்லாம் பொய். அப்படி உண்மை என்றால் எனக்கு ஏன் முற்பிறவி ஞாபகங்கள் வருவதில்லை, ஒரு சிலருக்கு மட்டும் வருவது ஏன்? ஆகவே, அந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்பது சிலரது கருத்து.
சிலம்பு, மணிமேகலை போன்ற இலக்கியங்களிலும், திருக்குறளிலும் முற்பிறவி, மறுபிறவி பற்றிய கருத்துக்கள் காணக்கிடைக்கின்றன. பல்வேறு புராண வரலாறுகளும் அதுபற்றிக் கூறுகின்றன. இன்றளவும் உலகளாவிய அளவில் அதுபற்றிய ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
மனிதன் இறக்கிறான். இறந்த பின் ஆவி நிலை அடைகின்றான். அவன் செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்ப சொர்க்கத்தையோ, நரகத்தையோ அடைகிறான். அவற்றில் சிலகாலம் வசித்த பின் எஞ்சிய தனது கர்மாவைக் கழிக்க மீண்டும் பிறப்பெடுக்கிறான் என்கிறது கருடபுராணம்.
கர்மாக்கள் சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா என்ற மூன்று வகையாக இருக்கின்றன என்றும் அவற்றை முற்றிலுமாக அனுபவித்து விட்டு, இனி அனுபவிக்க ஏதுமில்லை என்ற நிலையை அடைபவர்களுக்கு பூமியில் மறுபிறவி வாய்ப்பதில்லை என்கிறது கடோபநிஷத்.
உன்னையே நீ அறிவாய் என்ற தத்துவத்தை வலியுறுத்திய சாக்ரடீஸ் மறுபிறவியில் நம்பிக்கை கொண்டிருந்தார்.
மரணத்திற்குப் பின் ஆன்மா ஹேடஸ் என்ற சூட்சும உலகிற்குச் சென்று பல நதிகளைக் கடக்கும். பின் பல்வேறு அனுபவங்களைப் பெற்று மறுபிறவி எடுக்கும் என்கிறார் அவர். இந்நதி இந்து மதத்தில் கருட புராணம் கூறும் வைதஸ்வரணி நதிக்கரையை ஒத்துள்ளது.
ஒருவர் மரணமடையும்போது அவர் பருஉடல் மட்டுமே மரணமடைகின்றது. அவர் நுண்ணுடல் அல்லது ஆவி மரணமடைவது இல்லை. அது குறிபிட்ட கால இடைவெளியில் மீண்டும் பிறக்கிறது. இடைபட்ட காலத்தில் அதன் நிலைப்பாடு என்ன? அதன் உணர்வுகள் என்ன? அது எங்கே, என்னவாக இருந்தது என்பதுபற்றியெல்லாம் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். குறிப்பாக CONVERSATIONS WITH A SPIRIT என்னும் நூலில் ஆய்வாளர் DOLORES CANNON இறந்து போன ஆவிகளுடன் பேசி பல அதிசய சம்பவங்களைத் தெரிவித்துள்ளார்.
முற்பிறவிச் செயல்களும் வாசனைகளும் எண்ணங்களாக நமது மூளையில் பதிவு பெற்று, அந்த வாசனை உணர்வுகளோடுதான் நாம் பிறக்கிறோம். அந்த வாசனைகளை நம்மையும் அறியாமல் சிந்தனைகளாக, செயல்களாக உருப்பெற்று நல்ல வினைகளையோ அல்லது தீய வினைகளையோ உருவாக்குகின்றன. அந்தாவது மனிதரின் மனம் கட்டுப்படுத்தப்பட்டு, சில நேரங்களில் அவனது உண்மையான விருப்பமின்றியே சிந்தனைகளாலும் உணர்வுகளாலும் இயங்குகிறது. மனிதர்களின் விருப்பு, வெறுப்புகளும், சமூக நம்பிக்கைகளும் இத்தகைய செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கின்றது. அவற்றிற்கேற்பவே அவன் வினையாற்றுகிறான். அந்த வினைகளினாலேயே அவனுக்கு கர்மாஏற்படுகிறது இது முற்பிறவி பற்றி ஆராய்ச்சி செய்யும் ஆய்வாளர்கள் கூறும் தகவலாக உள்ளது.

டாக்டர் இயான் ஸ்டீவன்சன்
டாக்டர் இயான் ஸ்டீவன்சன், கனடாவில் பிறந்தவர். அடிப்படையில் ஒரு உளவியல் நிபுணரான இவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். முற்பிறவி-மறுபிறவி பற்றிய விஷயங்களில் இவருக்கு ஆர்வம் ஏற்பட அதுபற்றி தீவிரமாக ஆராய்ந்தார். உலகெங்கும் பயணம் மேற்கொண்டார். முற்பிறவி ஞாபகங்கள் வந்ததாகக் கூறப்படுபவர்களைச் சந்தித்தார். அவர்கள் கூறும் முற்பிறவிகள் பற்றியும், அதனுடன் தொடர்புடைய சம்பவங்கள், மனிதர்கள் குறித்தும் ஆராய்ந்தார். பல்வேறு பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டார். முடிவில் சிலருக்கு மட்டும் முற்பிறவி நினைவுகள் ஏற்படுவது உண்மையே என்றும் அதற்கான காரணங்கள் பல இருக்கின்றன என்றும் கூறி அது பற்றிய பட்டியல்களையும் வெளியிட்டார்.

முற்பிறவி, மறுபிறவி பற்றி பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் ஸ்டீவன்சன் எழுதியிருக்கிறார். அதில் குறிப்பிடத் தகுந்தது, ’Twenty Cases Suggestive of Reincarnation’ என்பதாகும். அமெரிக்காவின் புகழ்பெற்ற பேராசிரியர்களும், மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் டாக்டர் ஸ்டீவன்சனின் ஆய்வு முடிவுகளை ஏற்றுக் கொண்டதுடன், அவர் முறைப்படி ஆய்வு செய்து அவற்றை நீருபித்திருப்பதாகவும், இதில் ஐயப்பட ஏதுமே இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

வாழும் உதாரணம்
மனிதனுக்கு மறுபிறவி உண்டு என்று ஆன்மீகவாதிகள் சொல்லி வந்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களும் ஏராளமாக உள்ளனர். ஆனால், ராஜஸ்தானைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி தனது முன்பிறவியின் நினைவுகளை புட்டு, புட்டு வைப்பதால் மறுபிறவி என்ற எண்ணம் ராஜஸ்தான் மக்களிடம் தோன்றத் தொடங்கிவிட்டது.

டில்லியின் தெற்கு பகுதியில் உள்ள ஜாம்ருத்புர் என்ற இடத்தை சேர்ந்தவர் சவுத்ரி கமல் சிங். இவரது 15 வயது மகள் சுமன் 2000ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி மஞ்சள்காமாலை நோய் ஏற்பட்டு இறந்து விட்டார். அது முதல் கமல்சிங் வீட்டில் எப்போதும் சோகம் தான். மகளின் நினைவுகளில் இருந்து வெளியே வரமுடியாமல் கமல் சிங்கும் அவரது மனைவி சந்தோசும் தவித்து வருகின்றனர்.

ராஜஸ்தானில் உள்ள மிலாக்பூர் என்ற இடத்தை சேர்ந்தவர் ராம்பால். இவரது மனைவி கிள்ளி தேவி. இவர்களது ஐந்து வயது மகள் தான் மனிஷா. இந்த பெண்ணுக்குத் தான் முற்பிறவியின் நினைவுகள் தோற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மனிஷா இரண்டு வயதாக இருக்கும்போதே தனது பெயர் மனிஷா அல்ல சுமன் என்று பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். வயது கூடக்கூட அவளது முற்பிறவியின் நினைவுகளும் அதிகரித்து வருகின்றன. தனது தந்தை கமல் சிங், தாய் சந்தோஷ் என திரும்பத் திரும்ப, மனிஷா கூறி வந்தாள்.

சுமனின் திவசத்தன்று மனிஷா பொங்கி வெடித்து விட்டாள். தான் சுமன் தான், மனிஷா அல்ல என்று ஆணித்தரமாக கூறி விட்டாள். மேலும், சுமனின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை புட்டுப் புட்டு வைக்கத் தொடங்கினாள்.

ஒரு கட்டத்தில் இரண்டு குடும்பத்தினரும் சந்தித்துக் கொண்டனர். துõரத்தில் இருந்தே கமல் சிங்கை அடையாளம் கண்டு கொண்ட மனிஷா ஓடி போய் அவரை கட்டிப்பிடித்து கொண்டார். யார் உதவியும் இல்லாமல் சந்தோஷையும் அடையாளம் கண்டு கொண்டு அவர் தான் தனது தாய் என்று கூறினாள். இரு குடும்பத்தினரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

முற்பிறவி நினைவுகள் குறித்து, மனிஷா பேச்சு மூலம் தெரிவிக்க விரும்பவில்லை. பென்சில், பேப்பர் இருந்தால் போதும் எழுதித் தள்ளிவிடுகிறாள்.

பிளஸ் 1 மாணவியான சுமன் படிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். எப்போதும் படிப்பு தான். பென்சில், பேப்பர் கொண்டு எப்போதும் எழுதிக் கொண்டே இருப்பார். அந்த பாதிப்பு மனிஷாவுக்கும் உள்ளது என்று அவளது முற்பிறவி மற்றும் தற்போதைய பெற்றோர்கள் கூறுகின்றனர்.

டில்லியில் புஷ்ப் விகார் பகுதியில் ஆந்திரா கல்வி நிலையத்தில் தான் சுமன் படித்தார். அதை கூட மனிஷா தெளிவாக எடுத்து கூறுகிறார். டில்லியில் உள்ள கமல் சிங் வீட்டுக்குச் சென்று சுமனின் பள்ளி சீருடையை மனிஷா சரியாக அடையாளம் காட்டினாள்.

சுமனின் பள்ளித்தோழிகள் பூஜா, பாப்டி ஆகியோர் குறித்தும், சுமன் வழக்கமாக செல்லும் மளிகைக்கடை, அந்தக் கடையின் தோற்றம் ஆகியவை குறித்தும் மனிஷா அடுக்கிக் கொண்டே போகிறாள். சுமனுக்கு சுகாதாரமான சூழல் தான் பிடிக்கும். அதே போன்ற கொள்கையே மனிஷாவிடம் உள்ளது. எப்போதும் தனிமையில் இருப்பது தான் சுமனுக்கு பிடிக்கும். மனிஷாவும் அப்படியே. இருவருக்கும் ஒரே விதமான இனிப்பு வகைகள் தான் பிடித்தவையாக உள்ளன.

இரு குடும்பத்தினருக்கும் இது ஆச்சரியமான விஷயமாக உள்ளது. என்ன சொல்வது என்று புரியாமல் ராம்பால் குடும்பத்தினரும், மகள் மறுபிறவி எடுத்து விட்டாள் என்ற சந்தோஷத்தில் கமல் சிங் குடும்பத்தினரும் உள்ளனர். மகளின் போட்டோவுக்கு போடப்பட்டிருந்த மாலையை கூட கமல்சிங் கழற்றி விட்டார். அந்த அளவுக்கு ஐந்து வயது சிறுமி மனிஷா அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டாள்.

ராஜஸ்தானில் மனிஷாவின் புகழ் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ராம்பால் வீட்டுக்கு ஏராளமான மக்கள் சென்று, மனிஷாவின் நடவடிக்கைகளை கவனித்து ஆச்சரியப்பட்டு வருகின்றனர். மறுபிறவி உண்டு என்று அவர்கள் நம்பத் தொடங்கிவிட்டனர்.
இந்து முறைப்படி பார்க்கும் போது உடல் என்பது ஒவ்வரு காலகட்டத்திலும் நிலை மாறி பின் மீண்டும் பிறப்பெடுக்கிறது இப்படியாக பிறவி என்பது நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கிடைக்கவேண்டியது கிடைத்தே தீரும், எடுக்கவேண்டிய பிறவியை எடுத்தே தீருவோம். அப்படியாக எடுக்கப்படும் பிரவியானது நமது முற்பிறவியின் பாவ, புண்ணியங்களை அடக்கியதாக இருக்கும். உயிர் ஒரு உடலை அடைவது என்பது அவரவர் "கர்மா" என்று பொருள்படுகிறதுபூர்வஜென்ம சிகிச்சை

பெங்களுரில் ஒரு மழைகால மாலைப்பொழுது உளவியல் டாக்டரின் பயிற்சி மையத்தில் காத்திருந்தோம்.ஒரு நடுத்தர வயது மனிதர் அவர், தோற்றத்தைப்பார்க்கும் பெரும் பணக்காரர் என்று தெரிகிறது, என்ன பிரச்சனை என்று கேட்கிறார் உளவியல் டாக்டர். உடல்முழுவதும் இனம்காணமுடியாத வலி என்கிறார் அவர்.
எப்போதில் இருந்து
எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து
முன்பு ஏதேனும் சிகிச்சை எடுதிருக்கிறீர்களா..?”
வந்தவர் ஒரு பெரிய பைலைக் காண்பிக்கிறார்.அவரின் சொத்தில் பாதி கரைந்து மருத்துவ அறிக்கைகளாக இருக்கிறது.
இவ்வளவு சிகிச்சை பண்ணியும் குணமாகலையா ?” ஆச்சர்யமுடன் கேட்கிறார் டாக்டர்.
வலி இன்னும் இருக்கிறதுகுறையவில்லை…!” வந்தவர் கண்களில் வேதனை தெரிகிறது.
சரி நாம முயற்சி பண்ணி பார்க்கலாம்..என்ற டாக்டர் அவரை வசதியாகப் படுக்கச் சொல்கிறார்.கண்களை மூடிக்கொண்டே மூச்சை மட்டும் கவனிக்கச் சொல்கிறார்.சில நிமிடங்கள் பேச்சுக்கொடுத்துக் கொண்டே அவரை ஆழ்நிலைக்கு கொண்டு செல்கிறார்.
இயல்பாக பேசிக்கொண்டிருந்த அந்த நபரின் குரலும் உடல் பாவனைகளும் திடீரென மாறுகிறது. அவர் உச்சரிக்கும் வார்த்தைகளும் முகமாற்றங்களும் நம்மை ஒரு ஆச்சர்யமான நம்புவதற்கு கடினமான உலகிற்கு அழைத்துச் செல்கிறது.
அந்த நபர் ஒரு போர்களத்தில் நிற்கிறார்.
காலம் அவரால் சொல்லமுடியவில்லை.
இடையிடையே புரியாத மொழியில் கட்டளையிடுகிறார்.
அவரிடம் பேச்சிக்கொடுக்கும் டாக்டர் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்என்று கேட்க அவர் நான் போரில் சண்டையிட்டு கொண்டிருக்கிறேன்என்கிறார்.
மனிதர் தூக்கத்தில் இருந்தாலும் உடல்மொழி ஒரு போர்வீரன் மும்முரமாக சண்டையிடும் அசைவுகளைத் தருகிறது.அவரிடன் பேச்சுக்கொடுத்துக்கொண்டே மேலும் ஆழமாக பின்னொக்கி செல்ல அவரின் ஆழ்மனதுக்கு கட்டளையிடுகிறார் டாக்டர்.
மேலும் மேலும் ஆழமாக செல்லும் நபர் மிகுந்த வலியை மனதில் காண்பித்தவராக ……….!” என்ற அலறுலுடன் கைககளை தூக்கி நெஞ்சிற்கு நேராக நீட்டி எதையோ பிடுங்குவது போல பாவனை செய்கிறார்.
அவரின் முகத்தில் மரணவேதனை தெரிகிறது.கொஞ்சம் மூச்சு திணறலுடன் மீண்டும் மீண்டும் எதையோ பிடுங்வது போல முயற்சி செய்கிறார். அவரின் பாவனையைப் பார்க்கும் டாக்டர் என்ன நடக்கிறது..!என்று கேட்கிறார்.
என் நெஞ்சில் ஈட்டி பாய்ந்துவிட்டது..என்கிறார்.
நீங்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்கள் ?”
நான் இறந்துகொண்டு இருக்கிறேன்..அந்த நபர்.
எப்படி இறக்கிறீர்கள்…!”
ஈட்டியால் குத்தப்பட்டு..
இப்போது எங்கு இருக்கிறீர்கள்
கீழே என் உடல் இருக்கிறது….நான் உடலின் மேல் மிதந்துக்கொண்டிருக்கிறேன்…”
உடல் எப்படி இருக்கிறது
அது ஈட்டிக் குத்தப்பட்டு உயிரற்று கிடக்கிறது
இதைக்கேட்டவுடன் ஏதோ புரிந்து போல் முகமாற்றம் அடைகிறார். நம்மிடன் கிசுகிசுப்பாக, இவரின் ஒரு பிறவியில் ஏற்பட்ட இந்த நிகழ்வுதான் இன்றைய இப்போதைய  உடல்வலியாக தொடர்கிறது. இந்த மனிதருக்கு உளவியல் ரீதியாக ஒரு சிகிச்சைத் தருவோம் என்கிறார்.
பின்னர் அவருக்கு நம்பிக்கையூட்டும் சில  ஆழ் மனக்கட்டளைகளை பிறப்பிக்கிறார்,பின்னர் அவர் மனதிற்கு வலிவூட்டி, அவரே அந்த ஈட்டியை பிடுங்கி எறியுமாறு உத்தரவு தருகிறார். அவர் ஈட்டி பிடுங்கும் பாவனைகள் நம்மை மிரட்டுகின்றன, டாக்டர் அலட்டிக்கொள்ளாமல் அவருக்கு கட்டளைத் தருகிறார். ஈட்டியை பிடுங்கி எறிந்த நிம்மதியுடன் அவரின் உடலும்,மனமும் சீரான நிலைக்கு வருகிறது.
சிறிது நேரத்தில் பழையபடியே கண்விழிக்கிறார் அந்த நபர்.இப்போது அவர் முகத்தில் ஏதோ ஒரு தெளிவு தெரிகிறது.
சிகிச்சை முடிந்து நம்மை பார்த்து சிரிக்கிறார் உளவியல் டாக்டர்.நாம் நம்பிக்கையில்லாமல் நோயாளியைப் பார்க்க,அவர் நிம்மதியான மகிழ்ச்சியுடன் இருக்கிறார். தான் ஆழ்நிலைத்தூக்கத்தில் பார்த்ததை இன்னொருமுறை விளக்குகிறார். சிகிச்சையின் பலனை முழுவதும் நம்புகிறார் என்று அவரின் பேச்சு உணர்த்துகிறது.

ஜோதிடத்தில்
ஜோதிடத்தில் முக்கியமான மூன்று வீடுகள் உள்ளன. அவை ஒன்று ஐந்து  மற்றும் ஒன்பதாம் வீடுகள். இவற்றை திரிகோணம் என்பர். இவற்றை லட்சுமி வீடுகள் என்றும் சொல்வர் சிலர்.  என்னைப்பொருத்த வரை இந்த மூன்று வீடுகளும் ஒருவனுக்கு நன்றாக அமைந்தாலே அவனது வாழ்வும் சிறப்பாக அமையும்.

இந்த மூன்று வீட்டின் அதிபதிகள் தான் ஒருவனுக்கு நன்மைகளை வாரி வழங்குபவர்கள். இவர்களை யோகாதிபதி என்பர். அதாவது ஒரு லக்னத்து யார் சுபர் என்றால் அவர்கள் இந்த மூன்று வீட்டின் அதிபதிகளாகத்தன் இருப்பார். 

ஜோதிடத்தில் லக்னம் எனபது இப்பிறவியை காட்டுகின்றது. ஐந்தாம் இடம் இதற்க்கு முன்பு எடுத்த பிறவியை காட்டுகின்றது. அப்ப அந்த ஒன்பதாம் இடம்? அது ஒருவனின்  மூன்றாவது பிறவியை காட்டுகின்றது. அதாவது சென்ற பிறவிக்கு முந்தைய பிறவி. சொல்ல முடியாது அது ஒருவனின் அனைத்து பிறவிகளையும் கூட சொல்லலாம்.
முற் பிறவியில் செய்த புண்ணியம் தான் இப்பிறவியில் நமக்கு ஏற்ப்படும் இன்ப துன்பங்களுக்கு காரணம் என்று கூறுவர். ஐந்து   ஒன்பதாம் வீடுகள் கெட்டிருந்தால் நீங்கள் முற்பிறவிகளில் பாவம் செய்துள்ளீர்கள் என்று பொருள். 


இதற்க்கு முந்தைய ஜென்மத்தில் ஒருவன் செய்த பாவம் புண்ணியத்தை பொறுத்தே அவனுக்கு குழந்தை பிறக்கும் என்று ஜோதிடம் சொல்கிறது. ஆதலால் தான் குழந்தை பாக்கியத்திற்கு ஐந்தாம் இடத்தை சொல்கின்றனர்.ஜோதிடத்தில் கேது 12ல் இருந்தால் மறுபிறவி இல்லை. 12 என்பது மோட்சத்தை குறிக்கும் வீடு.