ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Monday, November 25, 2013

பொதுவான ராசி பலன்கள்


எந்த ஜோதிடரும் பலன் சொல்வது - முதலில் அவர் லக்கினம் , மற்றும் பிறந்த ஜாதகம் வைத்து அங்கு இருக்கும் நவ கிரக நிலைகளை வைத்து - தற்போது கோசார ரீதியாக கிரகங்கள் எங்கு இருக்கின்றது என்பதைப் பொறுத்து மட்டுமே.

நாள் இதழ்களில் வரும் ராசி பலன்கள் - அனைத்தும் பொதுவான பலன்களே. 

நடப்பு தசா , புக்தி மோசமாக இருந்து - 
 TVல், பேப்பரில் நல்ல விதமாக போட்டு இருக்கிறார்களே....என்று உடனடியாக எந்த ஒரு முடிவுக்கும் வந்து விடாதீர்கள். பிறந்த ஜாதகப்படி நல்ல தசை ஓடிக்கொண்டு இருந்தால் - கோச்சார ரீதியாக மோசமாக இருந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம். 

அதைப் போலவே மோசமான தசை நடந்தாலும் - கோச்சார ரீதியாக நல்ல விதமாக இருந்தால் , ஓரளவுக்கு அந்த காலம் சமாளிக்க கூடிய அளவில் இருக்கும். 

ஒரு கிரகம் ஒரு வீட்டில் இருக்கிறதென்றால் அது அந்த கிரகத்தின் நட்பு வீடா, பகை வீடா, உச்ச வீடா, நீச வீடா, ஆட்சி வீடா, சம சப்தம வீடா, கோணமா, கேந்திரமா, மறைவு ஸ்தானமா என்று பல விஷயங்களைப் பார்த்துத் தான் அந்த கிரகத்தின் வலிமையைக் கணிக்க முடியும். அதுவும் நவாம்சத்தில் அந்த கிரகம் என்ன வலிமை பெற்றிருக்கிறது என்பதைப் பொறுத்து பலன்கள் மாறும். மேலும் அந்த கிரகம் எந்த நட்சத்திரத்தின் சாரத்தில் உள்ளது, அந்த நட்சத்திரத்தின் அதிபதி யார், அவன் சுபனா, அசுபனா என்பதைப் பொறுத்தும் பலன்கள் மாறுபடும்.

எந்த பெரிய முடிவுகளும் எடுக்கும் முன்பு , ஜோதிடத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் - உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தை , நல்லதொரு ஜோதிடரிடம் காண்பித்து அதன் படி நடந்து கொள்ளவும். ராசி பலன்கள் என்று கூறப்படும் அனைத்தும் பொதுவான பலன்களே. அதை மட்டுமே முழுக்க நம்பி , எந்த பெரிய காரியத்திலும் இறங்க வேண்டாம்