ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Thursday, June 12, 2014

குளிகன் / மாந்தி - புலிப்பாணி மாந்தியை குளிகன் என்றும் அழைக்கபடுகிறது. சனிபகவானின் புத்திரன் என்றும் அழைக்கபடுகிறது. இது துணை கிரகமாக செயல்படுகிறது. பகலில் ஒரு குழந்தை பிறந்தால் குளிகன் என்றும் இரவில் ஒரு குழந்தை பிறந்தால் மாந்தி என்றும் சொல்ல படுகிறது

சனியின் மைந்தனும் மாந்தி என்றும் குளிகன் என்றும் கூறப்படும் கிரகமானது லக்கினத்தில் அமைந்தால் அச்சாதகனுக்கு நல்ல மனை வாய்த்தலும் நிறைதனமும், நிலம் முதலியன அமைதலோடு அவனது விதியும் தீர்க்கமானதாக அமையும் என்று கூறுக.

தனஸ்தானமான இரண்டாமிடத்தில் அமைய அவன் கலகன் எனவும் நேத்திர ஊனம் உறுவோன் என்றும் அதாவது கண்களில் ரோகம் பெறுபவன் என்றும், தனவிரயம் செய்வன் என்பது மட்டுமல்லாமல் தரணியில் துஷ்டன் எனவும் பெயர் வாங்குவன் என நீ துணிந்து கூறுவாயாக.

இக்குளிகன் திருதிய ஸ்தானத்தில் அதாவது மூன்றாமிடத்தில் அமையப் பெற்ற சாதகன் தன் தம்பியரோடும், நண்பர்களோடும் போர் செய்பவன் என்பதையும் நீ உணர்ந்து கூறுவதோடு இவன் வாய்ச் சமர்த்தன், நல்ல விரத ஒழுக்கமுள்ளவன் என்பதையும் உணருக.

குளிகன் நான்கில் அமையப் பெற்ற சாதகன் தன் பிறப்பிடத்தை விட்டு வேற்றிடம் சென்று, மலைப் பகுதிகளிலும் சில காலம் வாழ்ந்திருப்பன். அதனால் குற்ற மொன்றுமில்லை

இலக்கனத்திற்கு ஐந்தாம் இடத்தில் சனியின் குமாரனான குளிகனானவன் நிற்கப்பிறந்தவன் குணவானாக வாழ்வான் எனினும் புத்திர தோடம் உடையவனேயாவான். மிகச் சிறந்த வீரனாக இவன் விளங்குவதோடு பகையை ஒழித்தழிக்கும் பாங்கறிந்தவன்; திடமாக வாழ்பவன். வெகுதன தான்ய சம்பத்துடைவன்,

இக்குளிகன் ஆறாமிடத்தில் நிற்கப் பிறந்தவன் நிறைந்த ஆயுள் உள்ளோன். பரோபகாரி, இவனும் வீரனே என்பதனை நன்கு கிரக பலம் அறிந்து கூறுவாயாக.

இலக்கினத்திற்கு ஏழாம் இடத்தில் குளிகன் நிற்கப் பிறந்த சாதகனுக்குக் கண்டம் நேரும். இவனுக்கு விவாதத்தாலே வெகுதன விரயம் சிவனருளாலே சித்திக்கும்.

எட்டாமிடத்தில் குளிகன் நிற்கப் பிறந்த ஜாதகன் மகா அழும்பன் என்பதோடு நீரால் கண்டம் ஏற்படும் என்பதையும், அறிவித்துக் கொள்ளலாம்.

இலக்கினத்திற்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் குளிகன் நிற்கப் பிறந்த ஜாதகன் முகவசியமுடையவன் என்றாலும் அழும்பனாய் பிதுர் துரோகியாய் விளங்குவான். எனினும் இப்பூமியின் கண் நிறை தனம் பெற்று மகிழ்வோனே யாவான். அதனால் குற்றமில்லை எனக் கூறுக.

பத்தாம் இடமான கர்ம ஸ்தானத்தில் குளிகன் நிற்கப் பிறந்த சாதகன் கருமியாகவும், துரோகம் செய்பவனாகவும் இருப்பான். கிரக நிலையை நன்கு ஆய்ந்தறிந்து தீட்டு நிகழ்ந்த வீட்டில் உஞ்சை விருத்தி ஜீவனம் செய்பவனாக இருப்பன். கிரக பலம் அறிந்து சிறப்பாகவும் திண்ணமாகவும் பலன் கூறுக.

இலக்கினத்திற்கு பதினொன்றாம் இடத்தில் குளிகன் நிற்கப் பிறந்த சாதகன் பூமியில் நல்ல புகழ் உடையவனேயாவான். சிறந்த தனலாபம் உடையவனே. இவனது ஆயுள் பலத்தை அறிந்து கிரக நிலைமை தெரிந்து நீ சொல்லுக. இவன் வசியன் [தேவதை வசியன்] ஜாலக்காரன்.

பன்னிரண்டாம் இடத்தில் குளிகன் நிற்கப் பிறந்தவன் வீண்விரயம் செய்பவன். ரசவாதம் தேர்ந்தவன். குடும்ப நாசம் செய்பவன்.மாந்தி புராணகதை


இராவணன் மகன் மேகநாதன் (எ) இந்திரஜித் பிறந்த நேரத்திலேயே மாந்தி அவதரித்தார். சர்வ வல்லமையும், அரிய அற்புதமான வரங்களையும் பெற்ற இந்திரஜித் தின் இறப்பின் பொருட்டே, அவன் பிறக்கும்போதே பிறந்தவர்தான் மாந்தி
.
ராமாயணத்தில் ஒரு கிளைக் கதையில், மாந்தியைப் பற்றிய செய்தி உள்ளது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். படித்தவர்கள் அறியத்தரலாம். தன் தவவலிமையால் சிவனிடம் வரம் பெற்ற ராவணன், கிரகங்களையே தன்னிடத்திற்கு அழைக்கும் பேறுபெற்று விளங்கினானாம். தன் மகன் இந்திரஜித் பிறக்க இருந்த சமயத்தில், சனியை வரவழைத்த ராவணன். என்னுடைய மகனின் ஜாதகத்தில் நீ பதினொன்றாம் இடத்தில்தான் இருக்க வேண்டும் என்று பணித்தானாம். ஜாதகத்தில், சனிக்கு 11ஆம் வீடு சிறந்த இடம். 12ஆம் வீடுதான் மோசமான இடம். வேறு வழியில்லாமல் சரி என்று ஒப்புக்கொண்ட சனி, அலட்சியத்தாலும், தவறுதலாலும், கவனக்குறைவாலும், அப்படி 11ல் நிற்கும் போது, சனியின் ஒரு கால் 12ஆம் வீட்டின் மேல் இருந்ததாம். கோபமுற்ற ராவணன், தன் நீண்ட வாளால், சனியின் அந்தக் காலை வெட்டிவீழ்த்த, அது ஒன்றாம் வீட்டில் போய் விழுந்ததாம். விழுந்த அந்தக் காலும், அதனுடன் இருந்த சதைப் பகுதியும் சேர்ந்துதான் மாந்தியாக உருவெடுத்ததாம். அதோடு லக்கினத்தில் உயிர் பெற்று எழுந்ததால், ராவணனின் மகன் இந்திரஜித்தின் வாழ்க்கையை, அற்ப ஆயுளிலேயே முடித்ததாம்.

ஸ்ரீசனீஸ்வரரைப்போல் வல்லமை பெற்றவர்தான் மாந்தி. சனிக்கு நிகரானவர் எனலாம். அதனால் ஜாதகத்தில் மாந்தியின் பலன்களையும் நிர்ணயித்து அறிய வேண்டும். மாந்தி கடிகாரச் சுற்று முறையில் வலம் வரும் கிரகமாகும். மாந்தி /  குளிகன்  சேர்க்கை பலன்கள்

ஸ்ரீசனீஸ்வரரைப்போல் வல்லமை பெற்றவர்தான் மாந்தி. சனிக்கு நிகரானவர் எனலாம். அதனால் ஜாதகத்தில் மாந்தியின் பலன்களையும் நிர்ணயித்து அறிய வேண்டும். மாந்தி கடிகாரச் சுற்று முறையில் வலம் வரும் கிரகமாகும்.

மகரம், கும்பம் ஆகிய ராசிகளை ஆட்சி வீடாகப் பெற்ற ஸ்ரீசனீஸ்வரரிடமிருந்து கும்ப ராசியை ஆட்சி வீடாகப் பெற்றவர்தான் மாந்தி. இவருக்கு உச்ச வீடு, நீச வீடு இல்லை. மாந்தி தான் அமர்ந்திருக்கும் இடத்தி-ருந்து 2, 7, 12 ஆகிய இல்லங்களைப் பார்ப்பார் என நூல்கüல் கூறப்பட்டுள்ளது.

லக்னத்திற்கு 6, 8, 12-ல் சந்திரன் அமர்ந்து ஆவியுலகத் தலைவன் மாந்தி சேர்க்கை பெற்றால், ஜாதகர் துர்ஆவிகüனால் பீடிக்கப்பட்டு மரண வேதனை அடைவார். ஸ்ரீஆஞ்சனேயரை வழிபட்டால் துர்ஆவிகள் விலகும். மாந்தியினால் ஏற்பட்ட தோஷம் விலகும்.

மாந்திக்கு 7-ல் புதன் அமர்ந்து சுபர்களால் பார்க்கப்பட்டால், ஜாதகர் தந்தை செய்த தொழில் மூலம் நிரம்ப வருமானம் பெற்று எல்லா ஐஸ்வர்யங்களுட னும் வாழ்வார்.

ஆண் ஜாதகருக்கு, மாந்திக்கு 3-ல் சனி அமர்ந்தால், ஜாதகரின் சகோதரர் தீய பழக்கங்கள் மிகுந்தவராவார். குலப்பெருமை கெடும். அரச தண்டனைக்கு உள்ளாவார்.

பெண் ஜாதகத்தில், மாந்திக்கு 3-ல் சனி அமர்ந்து ஜென்ம நட்சத்திரம் ரோகிணி என்றால், ஜாதகிக்கு இல்லற வாழ்க்கையில் சிறிதும் நிம்மதியிராது. வாழ்க்கையில் பெரும் பகுதி போராட்டமாக இருக்கும். பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் துரதிர்ஷ்டமா கும். தோஷம் மிகுதி.

மாந்திக்கு 5-ல் ராகு அல்லது சனி இருந்தால், ஜாதகர் ஆண்மையில்லாதவரா வார். பெண் ஜாதகம் என்றால் பிரசவத்தில் துன்பம் ஏற்படும். பெண் ஜாதகத்தில் செவ்வாய், சூரியனோடு மாந்தி சேர்க்கை பெற்றால் நெறியற்ற வாழ்க்கை வாழ்வாள்.

லக்னத்திற்கு 5, 9-ஆம் இடங்கள் கன்னி, மிதுனம், மகரம், கும்பம் போன்ற ராசிகüல் ஒன்றாக அமைந்து, சனி- மாந்தி சேர்க்கையோ, பார்வையோ 5, 9-ஆம் இடங்களுக்கு ஏற்பட்டால் ஜாதகி மலடியாவாள்.

லக்னத்திற்கு 3-ல் சனி உச்சம் பெற்று மாந்தியின் சேர்க்கை பெற்று சுக்கிரன் பார்த்தால், ஜாதகர் பெண் பித்தனாவான். பெண் நோயால் அவதியுறுவான்.

லக்னத்திற்கு 4-ல் கேதுவும் மாந்தியும் சேர்க்கை பெற்றால் மிகுந்த துரதிர்ஷ்ட மாகும். வாழ்க்கையில் எல்லா விஷயங்கü லும் அதிருப்தி காணப்படும். ஒரு இடத்திலும் நிலையாக வாழ முடியாது. நாடோடி போல் வாழ்க்கை அமையும். தாய்க்கும் தோஷமாகும்.

பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு 4-ல் மாந்தி நின்றால் புத்திரதோஷம் மிகுதி. கணவன் நோயாü ஆவான். 4-ல் உள்ள மாந்தியுடன் சனி சேர்க்கை பெற்றாலோ பார்த்தாலோ ஜாதகி மிகுந்த துரதிர்ஷ்டசா-. லக்னத்திற்கு 2, 8-ல் சர்ப்ப கிரகங்கள் அமையப் பெற்று மாந்தி சேர்க்கை பெற்றால், நாக தோஷத்தால் மாங்கல்ய தோஷமாகும்.


குளிகை காலம் பலன்கள்

மாந்திக்கு
 குளிகன்  என்ற சிறப்பு பெயர் உண்டு. பொதுவாக குளிகன்  காலம் நல்ல காலம்- சுபகாலம் என நூல்கüல் கூறப்பட்டுள்ளது. சனியின் மைந்தனாகிய மாந்தி ஒவ்வொரு நாலும் தான் ஆட்சி செய்யும் குளிகன்  காலத்தில் செய்யப்படும் சுபகாரியங்களை- மகிழ்ச்சிக்குரிய காரியங்களை மேன்மேலும் பன்மடங்கு அபிவிருத்தி செய்து நம்மை மகிழச் செய்வார்.

அதேபோல் நமக்குத் துன்பம் தரக்கூடியக் காரியங்களை குளிகன்  காலத்தில் செய்தால் அவை பன்மடங்கு அபிவிருத்தியாகி துன்பங்கள் எல்லையில்லாமல் காணப்படும்.

பொதுவாக ஒரு மனிதர் இறந்துவிட்டால் பிரேதத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்ல குளிகன் காலம் தவிர்த்துதான் எடுத்துச் செல்வார்கள் என்பது அனைவரும் அறிய வேண்டும்