ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Saturday, June 14, 2014

பெயர் கூட்டு எண்: 1 பலன்கள் - Numerologyபெயர் எண்:   1

பெயர் எண் கூட்டுத்தொகை :  10  

10ஐ பெயர் கூட்டு எண்ணாகக் கொண்டவர்கள் கண்ணியமும், கீர்த்தியும் உடையவர்கள். வாழ்க்கையில் அடிக்கடி அதிர்ஷ்ட மாற்றங்கள் ஏற்படும். எளிதாகப் பிரபலம் அடைவர். எனவே, இவர்களுடைய நடவடிக்கைகள் நேர்மையாக இருக்க வேண்டியது அவசியம். மகிழ்ச்சியான வாழ்க்கை உண்டு. ஒருநாளும் பணத் தட்டுப்பாடு ஏற்படாது. பெயர் எண் கூட்டுத்தொகை :  19 

19ஐ பெயர் கூட்டு எண்ணாகக் கொண்டவர்களுடைய வாழ்க்கை தொடர்ந்து மேன்மை அடைந்துகொண்டே இருக்கும். பதவி, கௌரவம், மகிழ்ச்சி, வெற்றி, செல்வம் எல்லாம் அதிகரித்துக்கொண்டே போகும். நல்ல வாழ்க்கைத் துணை அமையும். வயோதிகத்திலும் இளைஞர்களைப் போலச் சுறுசுறுப்பாக இருப்பர். இவர்களுடைய நேர்மையே இவர்களுக்கு வெற்றி அளிக்கும். 

பெயர் எண் கூட்டுத்தொகை :  28 

28ஐ பெயர் கூட்டு எண்ணாகக் கொண்டவர்கள் எந்தக் காரியத்தைச் செய்தாலும் போட்டியும் சிரமமும் அதிகரிக்கும். வாழ்க்கையைத் திரும்பத் திரும்பத் தொடங்க நேரும். பலர் மிக வேகமாக முன்னேறுவர்; ஆனால், கடைசியில் எல்லாவற்றையும் இழக்க நேரும். நண்பர்களாலும், உறவினர்களாலும் எதிர்பாராத நஷ்டங்கள் வரும். கொடுத்த கடனை வசூலிப்பது கடினம். கஷ்டப்பட்டுச் சேர்த்த பொருள்களையெல்லாம் எதிர்பாராமல் இழக்கநேரும். 

பெயர் எண் கூட்டுத்தொகை :  37

37ஐ பெயர் கூட்டு எண்ணாகக் கொண்டவர்கள் வசீகரத்தையும், காதலில் வெற்றியையும் பெறுவர். தங்களுடைய அந்தஸ்திற்கு மேற்பட்டவர்களால் விரும்பப்படுவர். ஆண்களுக்குப் பெண்களாலும், பெண்களுக்கு ஆண்களாலும் அதிக உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் முன்னேற்றம், வியாபாரத்தில் அதிர்ஷ்டம். பலவித முயற்சிகளால் பொருள் சேர்க்கை. கலைகளில் ஆர்வமும், ஈடுபாடும் ஏற்படும். கவர்ச்சியான நடை, உடை, பாவனைகளும், வாக்குச் சாதுர்யமும் உண்டாக்கும். 

பெயர் எண் கூட்டுத்தொகை : 46

46ஐ பெயர் கூட்டு எண்ணாகக் கொண்டவர்கள் எத்தொழில் புரியினும் அத்தொழிலில் சிகரத்தை அடைவர். சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர்களும் அரசாளும் பதவிக்கு உயர வாய்ப்பு உண்டு. வயது ஏற, ஏற செல்வமும், அந்தஸ்தும் அதிகரிக்கும். இவர்களுடைய நடவடிக்கைகளில் நேர்மை இருக்க வேண்டியது அவசியம்.

 பெயர் எண் கூட்டுத்தொகை : 55

பெயர் கூட்டு எண் 55 ஆனால் ஒருவர் அறிவினால் பிரமிக்கச் செய்து எல்லோரையும் வெற்றி கொள்ளுவார். இவர்கள் அறிஞர்கள் என்று ஒப்புக்கொள்ளப்படுவர். மேதா விலாசம் உண்டாகும். அறிவு மின்னல்போல ஒளிவீசும். சரியான வழியில் பயன்படுத்தப்படாவிட்டால், இவர்களுடைய அறிவு இவர்களுக்கே எதிரியாகிவிடக்கூடும். 

 பெயர் எண் கூட்டுத்தொகை : 64

64 என்னும் எண் சம அளவில் நண்பர்களையும், எதிரிகளையும் உண்டு பண்ணக்கூடியது. வாழ்க்கையில் எதிர்ப்பு இருக்கும். அதிக மனவலிமையையும், சாமர்த்தியத்தையும், அறிவையும் தரும். செயற்கரிய செயல்கள் புரியச் செய்து கீர்த்தியை உண்டாக்கும். பெரிய அரசாங்கப் பதவிகள் தரும். அனைவரும் பிரமித்து வணங்கும் படியான பதவியையும் தரும். இந்த எண்காரர்களுக்கு வலிமைமிக்க வாக்கு உண்டாகும். 

பெயர் எண் கூட்டுத்தொகை : 73

பெயர் கூட்டு எண் 73 ஆனால் மனோசக்திகள் பலமடையும். புகழும், செல்வமும், அதிகாரமும் படிப்படியாக உயரும். சுக வாழ்க்கையே குறிக்கோளாக இருக்கும். ரகசியமாகக் காரியங்களைச் சாதித்துக்கொள்வதில் சமர்த்தர்களாக இருப்பர். அரசு ஆதரவு உண்டு. போகவஸ்துகள் நிறைய உண்டாகும். நேர்மை இல்லாவிட்டால் புகழ்மங்கும். தெய்வ பக்தியுடன் சுத்தமான இதயமும், மேன்மையான எண்ணங்களும் இருந்தால் சாந்தியுடன் பிரபுவாக வாழ்வர்.

பெயர் எண் கூட்டுத்தொகை : 82

82 என்னும் எண் சக்தி வாய்ந்தது. சாதாரண மனிதனையும் சக்ரவர்த்தி ஆக்கக்கூடியது. இந்த எண்ணுக்குரியவர்கள் கடுமையான உழைப்பாலும், கடமை தவறாத பண்பாலும் மேன்மை அடைவர். பெரும் புகழை அடைவர். காதலில் சிக்கல் ஏற்படும். பிடிவாதம் அதிகமாக இருக்கும். கண்களில் காந்த சக்தி உண்டாகும். 

பெயர் எண் கூட்டுத்தொகை : 91

91 என்றும் என் வைராக்கியத்தையும், அதிக சஞ்சாரத்தையும் குறிக்கிறது. இவர்கள் அதிகமாகப் பயணம் செய்வர். படகு மற்றும் கப்பல் மூலம் செய்யும் வியாபாரங்களால் பெரும் செல்வம் சேரும். சுகமான வாழ்க்கை அமையும்.

பெயர் எண் கூட்டுத்தொகை : 100

100 என்னும் எண் முயற்சிகளில் வெற்றியைத் தரக்கூடியது. ஆனால், வாழ்க்கையில் அதிக சந்தர்ப்பங்கள் ஏற்படாது. பணம் நிறைய இருக்கும். முக்கியமான சம்பவங்கள் இல்லாத நீண்ட சுக வாழ்க்கை அமையும்.


மேலும் Numerology பற்றிய தகவல்கள் அறிய கீழே உள்ள சுட்டியை பார்கவும்