ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Tuesday, May 13, 2014

காலசர்ப்ப தோஷம் /யோகம்

காலசர்ப்ப தோஷம்-யோகம்

இராகு கேது பிடியில் மற்ற ஏழு கிரஹங்கள் அடைபட்டுக் காணப்பட்டால் அது கால சர்ப்பயோகமாகக் கருதப்படுகிறது. இராகு கேது பிடியில் இருந்து ஒரு கிரஹம் வேறுபட்டு இருந்தாலும் காலசர்ப்பயோகத்தின் பலன்கள் 80 சதவீதம் கண்டிப்பாக உண்டாகிறது.    சில ஜாதகங்களில் இராகு-கேது பிடியில் இல்லாமல் பரவலாகக் கிரகஹங்கள் காணப்படும். ஆனால் அந்த ஜாதகத்தில் பெரும்பாலான கிரஹங்கள் இராகு கேது நட்சத்திரமாகிய திருவாதிரை சுவாதி சதயம் அசுவினி மகம் மூலம் ஆகிய நட்சத்திர பாதாசாரங்களில் கிரஹங்கள் காணப்பட்டால் காலசர்ப்ப தோஷம் உண்டாகிறது.
  காலசர்ப்பயோகம் ஒருவருக்கு அமையப் பெற்றால் 32 வயது முடிய அவர் வாழ்வு போராட்டமாக இருக்கிறது. தொழில் இல்வாழ்வு புத்திர பலன்கள் யாவும் 32 வயதிற்குள் உண்டாவதில்லை. ஆனால் 32 வயதிற்குப் பிறகு அவருடைய வாழ்வு அசுரவேகத்தில் முன்னேற்றம் ஏற்படுகின்றது.   இராகு கேது இருக்கும் இடத்தைப் பொறுத்து காலசர்ப்பயோகத்தின் பலன்கள் உண்டாகின்றன.
   சாதாரணமாக இராகு கேது வீற்றிருக்கும் இடம் சுபர் வீடாக இருந்தால் காலசர்ப்பயோகத்தின் சுபபலனும் அசுபர்கள் வீடாக இருந்தால் அசுப பலனும் உண்டாகிறது.
   பெரிய அரசியல் தலைவர்களுக்கெல்லாம் கால சர்ப்பதோஷம் அமையப்பெற்றுள்ளது. இவர்கள் வாழ்வின் பிற்பகுதியில் வரலாற்றில் இடம் பெற்றார்கள்.

வரலாறு
பாற்கடலை கடைந்தபோது அமிர்தம் வெளிப்பட்டது என்ற நிகழ்ச்சிகள் உங்களுக்கு தெரியும். அமிர்தம் கிடைத்தவுடன் அதனை தேவர்களும் அசுரர்களும் சரிபாதியாக பங்கிட்டுக் கொள்ளுவது என்பதே ஒப்பந்தம். இந்த நேரத்தில் விஷ்ணு மோகினி வடிவம் எடுத்தார். அசுரர்களை மயக்கினார். அமிர்தகலசம் தன்வந்திரியின் கையில் இருந்தது. அதனை மோகினி வாங்கிக் கொண்டாள். அவளது அழகில் மயங்கிய அசுரர்கள் மோகினியே அனைவருக்கும் பரிமாரட்டும் என கூறிவிட்டனர். தேவர்களும் ஒப்புக் கொண்டனர். யாருக்கு முதலில் அமிர்தத்தை தருவது என்ற பிரச்சனை எழுந்தது. மேலே தெளிவாக உள்ள நீரை தேவர்களுக்கும் அடியில் கலங்கி இருக்கும் திரவத்தை அசுரர்களுக்கும் கொடுப்பது என்று முடிவாயிற்று. முதலில் தேவர்களுக்கு அமிர்தம் வழங்கப்பட்டது. இதில் ஏதோ குளறுபடி உள்ளது என புரிந்துக் கொண்ட கஸ்யப மஹரிஷியின் மகனான ஸ்வர்பானு எங்கே தனக்கு அமிர்தம் கிடைக்காமல் போய் விடுமோ என அஞ்சி அசுரவடிவம் மாற்றி தேவர் வடிவம் பூண்டு தேவர்கள் வரிசையில் அமர்ந்தான். இதனை சூரியனும் சந்திரனும் பார்த்து விட்டனர். இதற்குள் மோகினி தேவன் என்று நினைத்து ஸ்வர்பானுவுக்கு அமிர்தம் அளித்து விட்டார். அவனும் அவசர அவசரமாக பருகி விட்டான். சுந்திர சூரியர்கள் மோகினியிடம் சென்று நடந்தவற்றை கூறினர். மோகினி வடிவம் தாங்கிய விஷ்ணுவுக்கு கடுங்கோபம் உண்டாயிற்று. அவள் தன் கையில் இருந்த அகப்பையில் ஸ்வர்பானுவின் தலையில் ஓங்கி தட்டினார். தலை வேறு முண்டம் வேறு என இருகூறுகளாயிற்று அமிர்தம் உண்ட காரணத்தால் உயிர் நீங்கவில்லை ஒப்பந்தத்தை மீறியதால் அசுரர்களுக்கு அமிர்தம் வழங்க முடியாது என மோகினி கூறிவிட்டாள். அமிர்த கலசத்தை பிடுங்க அசுரர்கள் முயல மோகினி வேகவேகமாக அனைத்தையும் தேவர்களுக்கு அளித்துவிட்டார். ஏமாற்ற மடைந்த அசுரர்கள் சுவர்பானுவால்தான் தங்களுக்கு அமிர்தம் கிடைக்கவில்லை என வருந்தி சுவர்பானுவை தங்கள் குலத்திலிருந்து விலக்கி வைத்துவிட்டனர். இரு உடலாக கிடந்தாலும் உடல் இருந்தும் தலை இல்லாமலும் தலை இருந்தும் உடல் இல்லாமலும் இருந்த ஸ்வர்பானு பிரமனிடம் முறையிட்டான். பிரம்மனோ விஷ்ணுவால்தான் ஸ்வர்பானு வணங்கி பிராயச்சித்தம் செய்யும்படி கேட்டான். விஷ்ணு பகவான் அருள் சுரந்து பாம்பு உடலை கொடுத்து தலையுடன் பொருத்தினார். அதேபோல் பாம்புத்தலையை மனித உடலுடன் பொருத்தினார். இப்போது மனித தலையும் பாம்பு உடலும் கூடியவன் ராகு எனவும் பாம்பு தலையும் மனித உடலும் கூடியவன் கேது எனவும் அழைக்கப்பட்டனர். ஆனால் இருவருக்கும் உயிர் ஒன்றுதான். இருவரும் நேர் எதிர்திசையில் நட்சத்திர மண்டலத்தில் சஞ்சரிக்கும் படி கூறி அருள் பாலித்தார்.

ராகுபகவானின் ஆட்சிக்கு உட்பட்ட பொறுப்புகள்
தகப்பன் வழி, சூதாட்டம், விதவையின் தொடர்பு, உடலில் ஏற்படும் வலி, களவு, கபடம், அடிமைத் தொழில், சிறைவாசம், மது, செல்வ இழப்பு, அளவுக்கு மீறிய லாபம் / நஷ்டம், அளவுக்கு மீறிய துன்பம், துறவரம், புதையல், தையல் கலை, சுவீகார புத்ரன், அன்னிய மதத்தினரின் தொடர்பு, முத்து எடுத்தல், கள்ளக்கடத்தல், குறுக்குவழியில் சம்பாதித்தல், வெளிநாட்டில் வேலை, குழந்தைகள் தரும் மகிழ்ச்சி, விஷபயம், வயிற்றில் புண், கர்பம் கலைதல், கெட்ட கனவு, திருமண வாழ்வில் மகிழ்ச்சி, அறிவியல் அறிஞர் திருடர் கலைஞர் எலக்ட்ரானிக் தொழில், கலாட்டா- குழப்பம், சூதாடுதல், லஞ்சம், திடீர் விபத்து, அரசியல் குழப்பம், ஏமாற்று வேலை, தோல்வியாதி, அயல்நாட்டு மொழிகள் அறிவது, சக்தி வழிபாடு, அனைத்து ரிப்பேர் தொழில்கள், தற்கொலை முயற்சி, விபத்துக்கள், இதயகோளாறு, விஷம். ராகு சூரியனது ஆட்சி வீடான சிம்மத்திலும் உச்ச வீடான மேஷத்திலும் சந்திரன் ஆட்சிவீடான கடகத்திலும் உச்ச வீடான ரிஷபத்திலும் இருப்பின் நற்பலன்களே தருவார். சனி பகவானின் வீடான மகர கும்பங்களிலும் நற்பலன் தருவார்.
கேது பகவானின் ஆட்சிக்கு உட்பட்ட பொறுப்புகள்
மணி-மந்திரம்-ஒளஷதம். மோட்சம் அளிப்பவர். ஊலக இன்பங்களை அளித்து அதனால் துன்பங்களை அனுபவித்து வேதனைபடுதல் பசி-பட்டினி-பிச்சை எடுத்தல் அரசு பயம் வெற்றி- தோல்வி கமிஷன் வியாபாரம் பாட்டன் வழி உறவுகள் குஷ்டரோகம் அம்மைநோய் புகைபிடித்தல் திடீர் பொருள் வரவு பகை வெல்லும் சக்தி துறவறம் கொள்ளும் நிலை நெருப்பினால் ஆபத்து மந்திர சக்தி பெற்று மக்களால் பாராட்டப்படுதல் கண்நோய் மருந்துகள் உடல்வலி நண்பர்கள் விஷம் மீன் பிடித்தல் முத்து எடுத்தல் மருத்துவம் சம்பந்தப் பட்ட தொழில் விஷ மருந்து அழுக்குத்துணி வியாபாரம் நகை தரகு வியாபாரம் மாந்திரீகம் பேயோட்டும் தொழில் தையல் கலை மட்பாண்டம் செய்தல் கூலிவேலை மூலிகை வியாபாரம் ஞான உபதேசம் ஓடு செங்கல் தயாரித்தல் விற்றல்.
   கேது பகவான் செவ்வாய் வீடான மேஷத்திலும் சூரியன் வீடான தனுசு ராசியிலும் நற்பலன் தருவார். கடகம்- மீனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பொதுவாக கேது திசை நன்மை செய்யும்.
ராகு / கேது தரும் இன்னல்கள்
சிறை தண்டனை பெறுதல் ஏமாற்றிப் பிழைக்கும் எத்தன் சித்திரவதைக்கு உள்ளாகுதல் பெரும் விபத்தில் உயிரிழத்தல் ஒழுக்கமில்லாத வாழ்க்கை சொந்தபந்தங்களின் உறவு இல்லாமல் போதல் கடவுள் பக்தி அற்றவனாதல் பழிவாங்கும் குணம் கொண்டு இருத்தல் தகாத செயல்களில் ஈடுபடுதல் அரசு தண்டனை பெறுதல் கொடிய விபத்தில் மரணமடைதல் அனைத்தும் ராகு / கேது தரும் இன்னல்களே.

ராகுஃகேது தரும் ஜாதகப் பலன்கள்:-

குரு கேது சேர்க்கை பெற்றவர்கள் என்றாவது ஒருநாள் சரித்திரம் படைக்கிறார்கள்.
   புத்திரஸ்தானத்தில் (ஐந்தில்) இராகு கேது இருப்பது கடுமையான புத்திரதோஷம் ஆகும். பிள்ளைகள் இவர்களுக்குப் பிறக்காது. மீறிப் பிறந்தாலும் அந்தப் பிள்ளைகளை ஏன் பெற்றோம் என்று சொல்லும் அளவுக்கு இருப்பார்
  கிரகணம் தோன்றும் நாளில் உடலுறவு கொள்வது கடுமையான தோஷத்தை உண்டாக்கும். மேலும் குழந்தை ஊனமுற்றதாகப் பிறக்கும்.
  இராகு கேதுவால் புத்திரதோஷம் உண்டால் சர்ப்பசாந்தி நாகப்பிரதிஷ்டை செய்ய வேண்டும். ஸ்ரீகாளஹஸ்தி சென்று தோஷப் பரிகாரம் செய்தாலும் புத்திரதோஷம் நிவர்த்தி ஆகும்.
   5ம் இடத்தை இராகு பார்த்தால் கருச்சிதைவு உண்டாகும் அல்லது குறைப்பிரசவம் ஏற்படும்.
   7ம் அசுபதி இராகு (அ) கேது இவர்களுடன் கூடி 6 8 12ல் நிற்க தன் குலத்திற்கு முற்றிலும் மாறுபட்ட மாதரை மணப்பர்.
   சுக்கிரன் நீசம் பெற்று ராகு (அ)கேது இவர்களுடன் சேர்ந்தால் திருமணம் தாமதமாகும்.
   எல்லா கிரகங்களும் இராகு கேதுக்குள் அமைந்திருக்கும் அமைப்பு உள்ளவர்களுக்கும் திருமணம் தாமதமாகிறது. இதனை (காலசர்ப்ப தோஷம் என்கிறோம்)
   பெண் ஜாதகத்தில் 8ல் சனி செவ்வாய் ராகு இருக்க எளிதில் திருமணம் நடைnறுவதில்லை.
   7ம் இடம் ராகுவால் பார்க்கப்பட்டால் மனைவி- கணவன் சொல் பேச்சு கேட்பவளாக இருக்கமாட்டாள்.
   மேஷம் மிதுனம் சிம்மம் கன்னி ஆகிய ராசிகள் மலட்டு ராசிகள் இந்த இடங்களில் ராகு இருந்தால் எவ்வளவுதான் பரிகாரம் செய்தாலும் புத்திரபலன் உண்டாவது இல்லை.
   ஒருவர் ஜாதகத்தில் 5ல் ராகு இருந்து குரு பார்வை பெற்றால் புத்திரதோஷம் பரிகாரம் ஏற்படுகிறது. புத்ரபாக்கியம் உண்டாகிறது.
   ராகு பகவான் புத்திரஸ்தானத்தில் இருந்தாலும் குரு சாரமாகிய புனர்பூசம் விசாகம் பூரட்டாதி ஆகிய நட்சத்திர சாரங்களில் அமையப் பெற்றாலும் புத்திர தோஷத்திற்கு பரிகாரம் உண்டாகிறது.
  ராகுவும் சனியும் இணைந்து லக்கனத்தில் காணப்பட்டால் கணவன் மனைவிக்குள் கண்டிப்பாக பிரிவு உண்டாகிறது.
   7ஆம் வீட்டில் ராகுவும் செவ்வாயும் காணப்படின் கலப்புத் திருமணம் நடைபெறுகிறது.
   ராகு பகவான் சனியைப் போலவும் கேது பகவான் செவ்வாயைப் போன்றும் பலன் தருவார்.
   பெண் ஜாதகத்தில் 4ல் ராகு அமையப் பெற்றால் விதிவசத்தால் கற்பிழக்கின்றனர்.
   2ல் (அ) 7ல் ராகு கேது அமையப் பெற்றவர்கள் விவாகரத்து கோரி வழக்கு மன்றம் செல்கின்றனர் அல்லது திருமணமே செய்து கொள்வதில்லை. (அ) மணவாழ்க்கையில் சிறிது கூட சந்தோஷம் உண்டாவதில்லை. இருதார யோகம் உண்டாகிறது.
   12ல் கேது அமையப் பெற்றவர்கள் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்யும் பாக்கியம் உண்டாகிறது. மறுபிறவி அடைவதில்லை.
  10ம் வீட்டில் ராகு அமைப்பும் 10ம் அதிபதி ராகு சாரம் பெற்றாலும் கெமிக்கல் மருந்து தெய்வீகத் தொழில் போன்றவை அமையப் பெறும்.
  இராகு பகவான் கொடுப்பதில் வல்லவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவரே மேஷம் ரிஷபம் கடகம் கன்னி மகரம் ஆகிய இடத்தில் வீற்றிருக்கும் போது யோகப் பலனை அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்.
   ராகு ஒருவர் ஜாதகத்தில் உச்சம் பெற்றுக் காணப்படின் அரசியல் வாழ்க்கை ஏற்படுகின்றது.
   ஒருவர் ஜாதகத்தில் 6-ம் வீட்டில் ராகு வீற்றிருக்கும் போது, குரு லக்ன கேந்திரம் பெற்றால் அஷ்டலெட்சுமி யோகம்ஏற்படுகின்றது. இதனால் புகழ் பெருமை செல்வம் செல்வாக்கு உண்டாகிறது.
   ராகு 7-ல் வீற்றிருந்து அசுபரால் பார்க்கப்படும் போது மணவாழ்வில் சிறிது கூட சந்தோஷம் இருப்பதில்லை.
   ராகு 7-ல் வீற்றிருந்து 12-ம் வீட்டில் இரண்டு பாவிகள் அமையப் பெற்றிருந்தால் கணவன் - மனைவி உறவில் சிறிது கூட சந்தோஷம் உண்டாவதில்லை. கட்டில் சுகத்தில் சிறிது கூட திருப்தி ஏற்படுவது இல்லை.
   ராகு 12-ம் வீட்டில் அமையப் பெற்று 2 7 ஆகிய வீடுகளில் பாவிகள் அமையப் பெற்றால் அந்த ஜாதகருக்கு தார தோஷம் ஏற்படுகிறது.
   ராகு செவ்வாய் சனி ஆகிய கிரகங்கள் சேர்க்கை பெற்று 7-ம் வீட்டில் அமைய பெற்றால் அவன் மனைவி எப்பொழுதும் நோயாளியாகவே திகழ்வாள்.
   ராகு சுக்கிரன் 7-ம் வீட்டில் அமையப் பெற்றாலோ அல்லது லக்ணத்தில் காணப்பட்டாலோ அவனுடைய மணவாழ்வு சிறிது கூட சந்தோஷம் இருக்காது.
   ராகுவும் சனியும் இணைந்து 7-ம் வீட்டில் காணப்பட்டால் அவன் விதவையுடன் உடல் உறவு கொள்வான். களத்ரதோஷம் உண்டாகும்.
   சனியும் கேதுவும் சேர்ந்து இருக்கப் பெற்றவர்கள் வாழ்வில் பற்று இல்லாதவர்களாக வாழ்கின்றனர்.
   காலசர்ப்பயோகம் இருந்தால் ராகு அல்லது கேது திசையில் உச்ச புகழ் அடைந்தால் அந்த திசை முடியும் போது திடீர் மரணம் ஏற்படலாம். சந்திரனுக்கு 3 6 11 ராகு அமையப்பெரின் மிகப்பெரிய ராஜயோகம் ஆகும்.
   ராகு பகவான் சுபர்கள் வீட்டில் இருந்தால் சுப பலனும் அசுபர் வீட்டில் இருந்தால் அசுப பலனும் உண்டாகும். 4 7 10-ல் காணப்படின் செல்வம் செல்வாக்கு உண்டாகும்.
   ராகு பகவான் செவ்வாய் சனி இவர்களுடன் சேர்க்கை பெற்று தசாபுத்தி நடைபெறும் போது திடீர் மரணம் உண்டாகும்.
   ராகுவோடு குருபகவான் சேர்ந்து காணப்பட்டால் குரு சண்டாள யோகம் ஏற்படுகிறது. இந்த யோகம் அமையப்பெற்று ராகுதிசை நடைபெறும் போது பெரும் செல்வமும் செல்வாக்கும் உண்டாகிய படி இருக்கிறது.
   3 6-ல் ராகு (அ) கேது இருக்க வெற்றிகளை அள்ளித்தருவார். 2-ல் ராகு (அ) கேது இருக்க விஷக்கடியால் (அ) விபரீத மரணம் உண்டாகிறது


  உதாரணம்1) இந்தியா - (Date of Birth - 15.08.1947)


2) ரஜினி - (D.O.B - 12.12.1950)

3) திருபாய் அம்பானி
Late Dhirubhai ambani - Reliance Founder, Industrialist, India (D.O.B - 28.12.1932)
4) சிதம்பரம்
Chidambaram -Ex - Finance Minister (Till May 2014), Congress, India (D.O.B - 16.09.1945)


மற்ற உதாரணம்

Jamsetji Tata - TATA Group Ex M.D

Sivakarthikeyan - Tamil Cinema Actor , Tamilnadu

George w bush - Ex US President, U.S.A

Ajantha Mendis - Cricket Bowler, Srilanka

Ilayaraja - Tamil Cinema Music Director

Source of Date & Time of Birth of Celebrities : Reference sites on the Internet.