ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Wednesday, May 21, 2014

யோகங்கள் - பகுதி 4


யோகங்கள் பகுதி 3ன் தொடர்ச்சி
யோகங்கள் என்ற வார்த்தை ஒரு கிரகத்திற்கும் இன்னொரு கிரகத்திற்கும் தொடர்பை குறிக்கும். 
குறிப்பு: ஜாதகங்களிலே நல்ல யோகங்கள் இருப்பது மட்டும் போதாது. அக்கிரகங்களின் தசைகள் வயது காலத்தில் வந்தால்தான் யோகங்களுக்கும் பலன் உண்டு மற்றும் யோகக்கிரகங்கள் துர்ஸ்தானங்களில் இல்லாமல் நல்ல இடங்களில் அமர வேண்டும். அசுபக்கிரகங்களின் சேர்க்கையோ பார்வையோ உண்டானால் யோகபங்கமாகும்.


100) அசுர யோகம்
லக்னத்தில் குருவும் சந்திரனும் கூடி இருந்து லக்னாதிபதி சுபருடன் கூடி இருக்க பெறின் அசுர யோகம் உண்டாகிறது.
பலன்
அரசியல் ஈடுபாடும் உயர்பதவியும் பெறுகின்றனர். இந்த யோகம் 4௦ வயதுக்கு மேல் உண்டாகும்.

101) சுமத்திர யோகம்
லக்னத்தில் கேது இருந்து 7ல் சந்திரன் இருந்து சந்திரனுக்கு 8ல் சூரியன் இருக்க பெறின் சுமத்திர யோகம் உண்டாகிறது.
பலன்
முன் வயதில் யோகமுடையவர். கிராமத்திற்கோ அல்லது சிருபகுதிக்கோ அதிகாரியாக திகழ்வார்கள்.

102) பாதாள யோகம்
லக்னத்திற்கு 12ல் சுக்கிரன் இருந்து 12க்கு உரியவன் உச்சம் பெற்று குருவுடன் சேர்ந்திருக்க பாதாள யோகம் அமைகிறது.
பலன்
பிற்கால வாழ்கையில்  செல்வம், சிறப்பு பெற்று வளமுடன் வாழ்வர்.

103) வசுமதி யோகம்
லக்னதிற்கோ அல்லது சந்திரனுக்கோ 3, 6, 1, 11 ல் சுப கிரகங்கள் இருந்தால் வசுமதி யோகம் உண்டாகிறது.
பலன்
சகல செல்வங்களும் பெற்று வசதியுடன் வாழ்வார்.

104) தனயோகம்
லக்னத்திற்கு 2,9,1௦ அதிபதிகள் இணைவது
லக்னத்திற்கு 2,5,6 அதிபதிகள் இணைவது
லக்னத்திற்கு 6,7 ஆம் அதிபதிகள் பலம் பெற்று 2 ஆம் அதிபதியுடன் சம்பந்தம் பெறுவது ஆகியன தனயோகம் ஆகும்.
பலன்
தொழில் முறையில் செல்வம் சேர்கின்றனர்.

105) சந்திர யோகம்
குருவும், சனியும், சந்திரனுக்கு 2ல் அமையப்பெறின் சந்திரயோகம் உண்டாகிறது.
பலன்
சுயநலமிக்கவர்கள்

106) கவுரி யோகம்
சந்திரன் உச்சம் பெற்று குருவால் பார்க்கப்பட்டால் கவுரியோகம் உண்டாகிறது.
பலன்
தெய்வீக வழிபாடு, நல்ல குடும்ப வாழ்க்கை உண்டாகிறது.

106) இந்திர யோகம்
5ல் சந்திரன் அமையப்பெற்று 5,11 அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றால் இந்திரயோகம் உண்டாகிறது.
பலன்
தைரியம் மிக்கவர், புகழ் மிகுந்த வாழ்க்கை வாழ்கின்றனர்.

107) பிரபை யோகம்
லாபாதிபதி சுக்ரனுடன் சேர்ந்து 1,4,7,1௦ ஆகிய இடங்களில் இருக்க பிரபை யோகம் உண்டாகிறது.
பலன்
முன் பகுதி யோகம் உடையவர். அரசியல் ஈடுபாடு இருக்கும். செல்வாக்கு பெற்றவர். தீயாக உள்ளம் கொண்டவர்.

108) பாரிஜாத யோகம்
11 ஆம் அதிபதி ஆட்சி/உச்சம் பெறின் பாரிஜாத யோகம் உண்டாகிறது.
பலன்
நற்குணம் மிக்கவர், செல்வம் செல்வாக்கு பெற்று விளங்குபவர்.

109) மாலா யோகம்
சந்திரனுக்கு 1௦ல் குரு இருக்க மாலா யோகம் உண்டாகிறது.
பலன்
அரசு தொடர்புடைய பணியில் அமர்வர். செல்வ செழிப்புடன் வாழ்வர்.

110) மகாலட்சுமி யோகம்
ஒன்பதாம் அதிபதியும் சுக்கிரனும் 1,5,9,4,7,10 ல் அமர மகாலட்சுமி யோகம் உண்டாகிறது.
பலன்
மனைவி வழியில் லாபம் உண்டாகும். அதிகாரம் செய்யும் பதவி அடைவர். வாகன வசதி உண்டு.

111) சதா சஞ்சார யோகம்
லக்னாதிபதி சரராசியில் இருப்பது சதா சஞ்சார யோகமாகும்.
பலன்
அதிக அலைச்சல், அதிகப்படியான பயணங்கள் மேற்கொள்ளும் நிலை உண்டாகிறது.

112) மாதுரு மூலதன யோகம்
இரண்டாம் வீட்டு அதிபதி நான்காம் வீட்டு அதிபதி உடன் சேர்ந்திருக்க மாதுரு மூலதன யோகம் உண்டாகிறது.
பலன்
தாயாருடைய உதவியால் அதிக லாபம் கிட்டும்.

113) களத்திர மூலதன யோகம்
இரண்டாம் வீட்டு அதிபதியை ஏழாம் வீட்டு அதிபதி பார்த்தால் களத்திர மூலதன யோகம் அமைகிறது.
பலன்
மனைவி வழியில் அதிக லாபங்கள் உண்டாகிறது.

114) அங்கிஸ யோகம்
குருபகவான் உச்சம் பெற்று சந்திரன் லக்னத்திற்கு 5,7,9 ல் இருக்க அங்கிஸ யோகம் உண்டாகிறது.
பலன்
எல்லா வகை செல்வங்களும் பெற்று வசதியுடன் வாழ்வர். நீண்ட வயது வாழ்வர்
115) சௌரிய யோகம்
லக்னதிலோ அல்லது லக்னத்திற்கு 3ல் சுப கிரகம் இருப்பது சௌரிய யோகம் ஆகும். தனாதிபதி வலுவாக இருபினும். இந்த யோகம் உண்டாகிறது.
பலன்
சகல வசதிகளுடன் பலரும் போற்றும் வாழ்க்கை உண்டாகிறது.

116) உதாந்திரி யோகம்
லக்னத்திற்கு 2,5,9 ஆம் அதிபதிகள் லக்னத்தில் நிற்க உதாந்திரி யோகம் உண்டாகிறது.
பலன்
சட்டத்துறையில் வல்லவராக விளங்குவர். குடும்பம் மகிழ்ச்சியாக விளங்கும்.
 117) ஆன்மீக யோகம்
குருவும், சனியும் எவ்விதத்திலாவது சம்பந்தம் பெறுவது (பார்வை / சேர்கை / பரிவர்த்தனை) ஆன்மீக யோகம் ஆகும்.
பலன்
தெய்வபக்தி மிக்கவர். ஆன்மிக வாழ்க்கை வாழ்பவர்.

118) இல்லற சந்நியாசி யோகம்
சனியின் வீட்டில் சந்திரன் இருப்பது, சனி தன் இரு வீடுகளில் ஒரு வீட்டை பார்பது இல்லற சந்நியாசி யோகம் ஆகும்.
பலன்
பற்றற்ற வாழ்க்கை நடத்துவர். இல்லறத்தில் ஈடுபாடு குறைந்து இருக்கும். இதனால் இவர்கள் இல்லற சந்நியாசி ஆகின்றனர்.

119) பூமி லாப யோகம்
4 க்கு உரியவன் லக்னதிலோ அல்லது லக்னாதிபதி 4 ல் இருப்பின் அல்லது 4 க்கு உரியவன் பலம் பெற்று இருப்பின் பூமி லாப யோகம் உண்டாகிறது.
பலன்
தனது பெயரில் நிலம், மனை, வீடு அமையப் பெறுகின்றனர்.

120) சுக யோகம்
12 க்கு உரியவன் சுபர் சம்பந்தம் பெற்றிருக்க படுக்கை சுக யோகம் அமைகிறது.
பலன்
கட்டில் சுகம் உண்டு

121) பந்து பூஜ்ய யோகம்
4 ஆம் அதிபதி உச்சம் பெற்று அல்லது நட்பு பெற்று குரு பார்வை பெற்றிருக்க பந்து பூஜ்ய யோகம் உண்டாகிறது.
பலன்
பந்துகளால் புகழப்படுவான்.

122) வாகன லாப யோகம்
4க்கு உரியவன் சுப கிரகத்துடன் கூடி 9 ல் இருப்பினும், 9 க்கு உரியவனுடன் கூடியிருபினும் வாகன லாப யோகம் உண்டாகிறது.
பலன்
வீடு, வாகனம் நன்கு அமைகிறது.

123) ஸ்வீகார புத்திர யோகம்
மிதுனம் அல்லது கன்னி லக்னமாகி 5ல் செவ்வாய் சனி இருந்து, புதன் பார்வை அல்லது சேர்கை இருப்பின் ஸ்வீகார புத்திர யோகம் அமைகிறது.
பலன்
தனக்கு பிள்ளைகள் பிரப்பதில்லை. ஸ்வீகார புத்திர ப்ராப்தி உண்டாகிறது.

124) சர்ப்ப கண்ட யோகம்
2ல் ராகு மாந்தியுடன் கூடி இருப்பின் சர்ப்ப கண்ட யோகம் உண்டாகும்.
பலன்
பாம்பு கடியால் மரணம் உண்டாகும்.

125) பூமி விருத்தி யோகம்
4க்கு உடையவன் தனது உச்ச வீட்டிலோ சொந்த வீட்டிலோ நட்பு வீட்டிலோ இருந்து அவனை சுபர் பர்ர்க்க பூமி விருத்தி யோகம் உண்டாகிறது.
பலன்
சொந்த வீடு அமைகிறது. வீட்டின் மூலம் வருமானம் அமைகிறது.

126) சகோதர லாப யோகம்
3 ஆம் இடம் வலுத்து மூன்றுக்கு உரியவன் பலம் பெற்று 3ல் சுபர் அமையப் பெறின் சகோதர யோகம் அமைகிறது.
பலன்
சகோதர்களுடன் உறவு நீடிக்கிறது. சகோதர்களால் உதவிகள் கிட்டும்.

127) மஹா பாக்கியயோகம்
ஆணாக பிறந்தவர்களுக்கு சூரியன், சந்திரன் ஆண் ராசியிலும் பெண்ணாக பிறந்தவர்களுக்கு சூரியன் சந்திரன் பெண் ராசியிலும் அமர்ந்தால் மஹா பாக்கியயோகம் உண்டாகிறது.
பலன்
ஒரு நாட்டையோ அல்லது ஒரு பகுதியையோ அல்லது ஒரு நிவாகத்தையோ நடத்தும் யோகம் உண்டாகிறது.

128) சன்யாச யோகம்
கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 1௦ ல் சூரியன், புதன், சுக்கிரன் இருப்பின் சன்யாச யோகம் உண்டாகிறது.
பலன்
ஒரு மதத்தின் தலைவராகவோ அல்லது ஆன்மீக தலைவராகவோ ஆகும் அமைப்பு உண்டாகிறது. புத்தர் ஜாதகம், சங்கராச்சாரியார் சுவாமிகள், ராமானுஜர் ஜாதகத்தில் இந்த யோகம் அமைந்துள்ளதை காணலாம்.

129) தீர்க்க தேக யோகம்
புதனுக்கு 7 ல் செவ்வாய் இருக்க தீர்க்க தேக யோகம் உண்டாகிறது.
பலன்
நல்ல உடல் கட்டு உடையவர் ஆவார்.

130) மாதுரு சாப புத்ர தோசம்
மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 5 ல்பாபர் இருக்க சந்திரன் பாபர் நடுவிலோ அல்லது நீசம் பெற்றோ இருக்க, மாதுரு சாபத்தால் புத்திர தோஷம் உண்டாகிறது.
பலன்
மாதுரு சாபத்தால் புத்திர தோஷம் உண்டாகிறது.

131)  கோடீஸ்வர யோகங்கள்‍
|
1) ஒரு ஜாதகத்தில் 4,7,12க்கு உடையவர்கள் வலுவுடன் சுபர் பார்வை பெற்று நின்றால் கோடீஸ்வர யோகம் அமையும்.
மேஷ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு 4,9 ஒன்றில் குரு நின்று, 2ல் சுக்கிரன், 7ல் சந்திரன் எனும் அமைப்பு ஏற்ப்பட்டாலே கோடீஸ்வர யோகம் ஏற்ப்படும்.
2) ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெற்று அவர்கள் லக்கினாதிபதிக்கும், ராசிநாதனுக்கும் வேண்டியவர்களாக அமைந்தால் கோடீஸ்வரயோகம் ஏற்படும்.
3) லக்கினாதிபதி, ராசிநாதன், யோகாதிபதி கெடாது ஜாதகத்தில் நல்ல விதமாக இவர்கள் சம்பந்தம் பெற்றால் கோடீஸ்வரர் ஆகலாம். இவர்கள் கெடாது சாதாரண நிலையில் அமர்ந்து சுபர் பார்வை பெற்றாலும் சுய முயற்ச்சியால் ஜாதகர் கோடீஸ்வரர் ஆகமுடியும்.

132) இயற்கையாகவே நன்மை பயக்கக்கூடிய
சில கிரக சேர்க்கைகள்:

 
1. குருவும் சந்திரனும் சேர்ந்திருந்தால்
அதைக் குருச்சந்திர யோகம் என்பார்கள்

2. சந்திரனும், செவ்வாயும் சேர்ந்திருந்தால்
சசிமங்கள யோகம் என்பார்கள்

3. புதனும், சூரியனும் சேர்ந்திருந்தால்
புத-ஆதித்ய யோகம் என்பார்கள்

4. புதனும் சுக்கிரனும் சேர்ந்திருந்தால்
நிபுனத்துவ யோகம் என்பார்கள்

5. ஒரு நீசம் பெற்ற கிரகத்துடன் ஒரு
உச்சம் பெற்ற கிரகம் சேர்ந்திருந்தால்
அது நீசபங்க ராஜயோகம் எனப்படும்ஒரு இடத்தில் அடி வாங்கினாலும் மற்றொரு இடத்தில் புகழ் பெறுவதுதான் நீசபங்க ராஜயோகம்.

கல்விக்கு அதிபதி புதன். அவர் நீச்சமாகி இருந்தால் எவ்வளவு படித்தாலும் மதிப்பெண் குறைவாகவே கிடைக்கும். புதன் மீனத்தில் நீச்சமாகிறது. மீனம் குரு பகவானின் வீடு. குரு கடகத்தில் உச்சமடைந்தால் அது நீசபங்க ராஜயோகம் எனக் கொள்ளப்படும்.
நீசன் நின்ற ராசிநாதன் ஆட்சி உச்சமாகினும் நீசபங்க ராஜயோகம்...என்பது பாடல். புதன் நீச்சமாக இருந்தால் அவர்களின் இளமைக்காலக் கல்வி சுமாராகவே இருக்கும். ஒரு சிலருக்கு கல்வி தடைபடலாம். எனினும், மீண்டும் படிப்பைத் தொடருவதுடன், முதல் மதிப்பெண் வாங்க வைப்பதுதான் நீசபங்க ராஜயோகம்.
உதாரணமாக 10ம் வகுப்பில் திக்கித் திணறி தேர்ச்சி பெற்றவர் கல்லூரியில் முதல் மதிப்பெண் பெறுவதும், குறைந்த மதிப்பெண் பெற்றதால் பட்டயப்படிப்பில் சேருபவர் பின்னர் அதில் சிறப்பான மதிப்பெண் பெற்று பொறியியல் படிப்பில் சேருவதும் நீசபங்க ராஜயோகம் காரணமாக ஏற்படுவதுதான்.
மேற்கூறிய பலன்கள் புதனுக்கு உரியது. இதுபோல் சூரியன், சந்திரன், செவ்வாய் போன்ற கிரகங்களுக்கும் நீசபங்க ராஜயோகம் ஏற்படும். உதாரணமாக செவ்வாய் நீசபங்க ராஜயோகம் அடைந்திருந்தால் சகோதரர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படும். சொத்துத் தகராறு போன்றவை வரலாம்.எனினும், இறுதியில் ஒருவரைக் கேட்காமல் மற்றொருவர் முடிவு செய்யமாட்டார் என்பது போல் வாழ்வார்கள்.

எனவே, எந்த கிரகம் நீச்சமாகிறதோ அந்த கிரகத்தின் காரகத்துவங்களை அடைவதற்கு தடைகளும், அது கிடைக்கவில்லையே என்ற ஏக்கமும், தோல்விகளையும் நீசம் கொடுக்கும். அதுவே ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்கும் பின்னர் இழந்த எல்லாவற்றையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக வழங்கி விட்டு போய்விடும் -
 

___________________________________________________________