ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Monday, February 24, 2014

யோகா / ஆசனம் / சக்தி நிலை



யோகா கலையின் தோற்றம்.

                                                சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் உதயமானதாக உலகமெங்கும் போற்றப்படும் யோகா கலை, இன்று மேற்கத்தைய நாடுகளில், கீழ்த்திசை நாடுகளில், ஏன் சீனத்திலும்,ஆஸ்திரேலியாவிலும் கூட கடைகட்டி விற்கப்படுகிறது. லண்டனில் மட்டும் மொத்தம் முன்னூறு யோகா மையங்கள். சீனாவில் கிட்டத்தட்ட அறுநூறு யோகா மையங்கள். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மட்டும் இருநூறு யோகா மையங்கள்.ஆனால் இந்தக்கலையைக் கண்டறிந்த தாயகமான இந்தியத்திருநாட்டிலோ, உரிய மதிப்பின்றி இருந்த இந்தக்கலை, இப்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும், அதிகரித்துவரும் மனோதத்துவ ரீதியிலான பிரச்சினைகளாலும், மீண்டும் உரிய முக்கியத்துவத்தைப் பெறத் தொடங்கியுள்ளது.இன்றைக்கு கொரியர்கள் நடத்தும் எங்கள் நிறுவனம் யோகா பயிற்சியைக் கொடுக்கிறது. இதன் புனிதத்தையும், நோய் தீர்க்கும் தன்மையையும் உணர்ந்த கொரியர்களும் ஆர்வத்துடன் பங்குபெறுகிறார்கள். தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்கிறார்கள். இதன் பெருமையைச் சிலாகிக்கிறார்கள். இதன் மூலம் அடைந்த பலன்களை வெளிப்படையாகச் சொல்கிறார்கள்.இன்றைய நவீன யுகத்தில் ஆண்களும் பெண்களும் குறைந்தபட்சம் எட்டிலிருந்து பத்துமணிவரை பணிபுரிய வேண்டியுள்ளது. வீடு திரும்பும் நேரத்தையும் கணக்கில் கொண்டால் சராசரியாக பத்திலிருந்து பதினாலு மணிநேரம்செலவு செய்கிறார்கள். இந்த நேரத்தில் மூளைக்கு வேலை கொடுக்கவேண்டியுள்ளது. இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இலக்கு முடிவதற்குள் பணியை நிறைவு செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.பணி முடிந்து வீடு வந்தால் கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் திருப்தி செய்ய உணவு தயாரித்தல், குடும்ப வேலைகள், மாமியார், மாமனார், அத்தை மகன், பெரியம்மா பையன், நீண்டகால நண்பர், எதிர்த்த வீட்டுத் தோழர், வீட்டு வாடகை, பஞ்சர் ஆன பைக், பக்கத்து வீட்டில் இருந்து கழிவு நீர் வாசனை, டிக்கெட் புக்கிங், தெருவிளக்கு எரியாதது, சாலை சரியில்லாதது, காப்புறுதி, கடன் அட்டை காலக்கெடு தவறியது, வங்கி என்று சுற்றிலும் அம்புகளால் துளைபடுகிறார் நமது மனது என்னும் அபாக்கியசாலி.இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் அதற்கு சிறந்த வழி, ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது ஒதுக்கி யோகா போன்ற பயிற்சியில் ஈடுபடுவது.இதன் மூலம் கர்ப்பிணிப் பெண்களில் இருந்து, மன அழுத்த நோய்க்கு ஆளானவர்கள் வரை பயனடையலாம். நாட்பட்ட தலைவலி, முதுவலி நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நீரிழிவு உள்ளவர்கள், எப்போதும் வேலையைச் சிந்தித்து அதன் மூலம் உயர் இரத்த அழுத்தம், மைகிரேன், உடல் வலி, தூக்கமின்மை ஆகிய நோய்களுள்ள அனைவரும் பயன் அடையலாம். வியாதிகள் ஏதுமின்றி உடலையும் மனதையும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்பும் அனைவரும் பயனடையலாம்.உட்கார்ந்து எழுந்து, கையைக் காலை ஆட்டி, கண்ணை மூடித்திறந்து, இது மட்டும் அல்ல யோகா.

                           யோகம் பயில்வதற்கு ஆசனப்பயிற்சி இன்றியமையாது. யோகப் பயிற்சிகளில் யோகாசனம் முக்கியமானது. யோகம் ஒரு கலை. கல்வி பயில்வதற்கு எவ்வளவு இன்றியமையாததோ, அவ்வளவு இன்றியமையாதது யோகம் பயில்பவர்களுக்கு யோகாசனம் பயில்வது என்று கூறினால் அது மிகையாகாது. யோகம் என்றால் என்ன? யோகம் என்ற சொல் யுஜ் என்ற சமஸ்கிருத மொழியில் உள்ள சொல்லின் வழியே பிறந்ததாகும். யோகம் என்ற சொல்லுக்கு “ஒருங்கிணைத்தல்” அல்லது “எல்லாவற்றையும் எந்தவிதமான வேறுபாடுமின்றி முழுமைப்படுத்துதல்” என்றும் பொருள் கூறுகின்றனர். யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர். யோகம் தமிழில் தவம் அல்லது ஜெபம் எனப்படும். அறிவியல் கலை யோகம் என்பது மக்கள் தம் உடலையும் உள்ளத்தையும் அடக்கியாளக் கண்ட ஓர் அறிவியல் கலையாகும். யோகப் பயிற்சியில் சித்தி பெற்ற அறிஞர்கள் இயற்கையைத் தன்வயப்படுத்தும் ஆற்றலை அடைவார்கள். யோகக் கலை சாகாக் கலை என்று பல அறிஞர்கள் கூறுவர். யோகப் பயிற்சியால் நீண்ட நாள் வாழலாம். யோகம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிய கலையாகும். சிவயோகம் இந்த யோகம் என்னும் அரும்பெரும் ஆன்மீகக்கலை நம் முன்னோர் இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்ட அரும்பெரும் கலை. இக்கலை இன்று சைவ சமய சாத்திரங்களில் அழகுற மிக நுணுக்கமாக எடுத்துக் காட்டப் பெற்றுள்ளது. யோகத்தை சிவயோகம் என்பதும், இது சிவனார் மக்களுக்கு உபதேசித்துக் கொடுத்த கலை என்பதும் தெறிந்ததே. உலகிலே முதன் முதலாக யோகக் கலையைக் கண்டவர்கள் சிவனை வழிபடும் சிவனெறியாளர்களே. யோக முறை யோகாசன முறைகளை முறையோடு பின்பற்ற வேண்டும். உள்ளுறுப்புகள் தான் யோகாசனத்தில் முழுக்கப் பயன்படுகின்றன. உள்ளுறுப்புகள் தூய்மை பெறவும் வலிமை பெறவும் பயிற்சி செய்யும் நேரத்தில் மிகவும் நியமத்துடன் பயபக்தியுடன் நெறி பிறழாது செய்ய வேண்டும்.

யோகப் பயிற்சியின் சிறப்புகள்
1. தேகத்திற்கு வந்த நோய்களைப் போக்கியும் இனி நோய்கள் வராமல் காத்தும் ஒருவருக்கு உகந்த உன்னத உடலை உருவாக்குகிறது.
2.உள்ளுறுப்புகளையும் வெளியுறுப்புகளையும் தூய்மைப்படுத்தி அது தன் பணிகளை அருமையாகவும் திறமையாகவும் அயராமல் செயல்படுத்தத் தூண்டுகிறது.
3. சாதாரணமாகச் செயல்படும் ஒருவனுடைய செயலாற்றலை மிகுதிப் படுத்துவதுடன் உடல் நலமும், மனவளமும் பெற்று வாழ உற்சாகப்படுத்துகிறது.
4. அன்றாடம் உடலில் உண்டாகும் கழிவுப் பொருட்களை வெகு விரைவாக வெளிப்படுத்தவும், உடலைக் கசடற்ற முறையில் வைத்துக் காக்கின்ற சக்தியினையும் உடலுக்குத் தருகின்றது. அதாவது நரம்புகள், மூளை, நுரையீரல், இதயம், ஜீரண உறுப்புகள் மற்றும் குண்டிக்காய் போன்ற அவயவங்களுக்கு திறமையுடன் வேலை செய்கின்ற ஆற்றலை அளிக்கிறது.
5. நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்குத் துணை புரிகிறது. மனதாலும், செயலாலும், உயர்ந்த வாழ்வு வாழத் தூண்டுகிறது. இவ்வாறு தேகநலனைப் பற்றியும், சிறந்த ஆரோக்கிய வாழ்வு முறையைப் பற்றியும் யோகமுறை உடற்பயிற்சி முறைகள் நிறைந்து செயல்படுகின்றன.



ஆசனம் செய்வதால் உண்டாகும் பயன்கள்:
1. ஆசனங்களை முறையோடு செய்து வந்தால் உடல்வளம் பெறுவதுடன், மிகவும் சுறுசுறுப்போடும் விரைவாகவும் அன்றாட வாழ்வில் இயங்க முடியும்.
2. முதுகெலும்பு எளிதில் வளைந்து இயங்கும் ஆற்றலைப் பெறுவதால், எதனையும் சிறப்பாகப் பணியாற்றும் வகையில் உடலில் ஒத்துழைப்பு உயர்ந்த அளவில் கிடைக்கிறது.
3. பசி நன்றாக எடுக்கிறது. உடலில் பற்றிக் கொள்கின்ற நோய்கள் தொடக்க நிலையிலேயே முறியடிக்கப்படுகின்றன.
 4. மிகவும் முக்கிய உறுப்புகளான இதயம், நுரையீரல்கள் மற்றும் மூளைப்பகுதிகள் செழிப்படைந்து சிறப்புடன் பணியாற்ற முடிகிறது.
5. தங்கு தடை இல்லா இரத்த ஓட்டம் உடலெங்கும் இயல்பாக ஓடி, உடலைப் பூரணப் பொலிவு பெற வைக்கிறது.
6. உடல் அவயங்கள் எல்லாம் விறைப்பாக இருக்காமல், எளிதில் செயலுக்கு இணங்கும் தன்மையில் இருந்திட வழி அமைகிறது.

                                  வேத சம்கிதைகளில் தவத்தைப் பற்றிய குறிப்புகள் அடங்கியுள்ளன, தவப் பயிற்சிகளான தவங்கள்[Brāhmaṇas](900 முதல் 500 BCE) இல் முந்தைய வேத வர்ணனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.பாகிஸ்தானில் உள்ள சில இடங்களில் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தில் (c. 3300- 1700 B.C.E) இருந்த சில கண்டெடுக்கப்பட்ட உருவங்களின் அமர்ந்திருப்பது போன்ற நிலைகள் சாதாரண யோகா அல்லது தியான நிலைகளைக் காட்டுவது போல் உள்ளன மேலும் இது ஒரு வகையான சடங்கு முறையை, யோகாவின் ஆரம்பமாகக் காட்டுகிறது. இது க்ரெகொரி போஷ்செல் என்ற தொல் பொருள் ஆய்வாளரின் கூற்று. இந்து பள்ளத்தாக்கு சின்னங்களுக்கும், பின்னாளில் வந்த யோகா மற்றும் தியானப் பயிற்சிகளுக்கும் இடையில் ஏதோ ஒரு வகை சம்பந்தம் உள்ளதை முடிவான சாட்சிகள் இல்லாவிட்டாலும் , அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.நமது முன்னோர்களாகிய யோகிகளும், ஞானிகளும் ஏறக்குறைய பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, உடல், உள வளத்தையும், நலத்தையும் கொடுக்கின்ற வழிமுறைகளைத் தெளிவாகக் கூறிச் சென்றுள்ளனர். இவற்றுள் முக்கியமானவையாக யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி தாவரஉணவுமுறை, ஆயுர்வேத வைத்தியமுறை என்பவற்றைக் கருதமுடியும். நம் முன்னோர்களால் 84 இலட்சம் வரையிலான யோகாசனங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக கற்றறிந்தோர் கூறியுள்ளனர்.யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி என்பன ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவையாக விளங்குகின்றன.

                              பதஞ்சலி யோகம் என்றும் அஷ்டாங்க யோகம் என்றும் அழைக்கப்படும் யோக முறைகள் பதஞ்சலி என்ற முனிவரால் உருவாக்கப்பட்டவை. பழங்காலத்தில் பதஞ்சலி முனிவரின் தரிசனமாக (மதமாக) இவை கடைபிடிக்கப் பட்டிருக்கலாம். இந்த அஷ்டாங்க யோகம் என்பது எட்டு அங்கங்களை கொண்டது.அஷ்டாங்க யோகத்தில் முதலாவது யமம் – அஹிம்சை, சத்தியம், திருடாமல் பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருத்தல், ப்ரம்மசர்யம், போகப்பொருள்களை தவிர்த்த நிலை ஆகியவை கொண்ட வாழ்வே “யமா” அல்லது யமம் எனப்படும். அடுத்தது நியமம்,தூய்மையாக இருத்தல், சுகம் துக்கம், பிடித்தது பிடிக்காதது என்று நேரும்போது அமைதியாய் நடுநிலையாய் இருத்தல், தவம், கற்றல், எல்லாவற்றையும் ஈஸ்வரனுக்கு அர்ப்பணித்து தன் கடமைகளை செய்தல் ஆகியவை நியமத்தில் அடங்கும்.இதுவரை சொன்னவை வாழ்க்கைமுறை. இனி உள்ளத்துக்காக செய்யக்கூடிய த்யான முறையாவன,அசைவின்றி சுகமான வகையில் கஷ்டப்படுத்திக்கொள்ளாமல் அமரவேண்டும். ஆசனம் அமைந்தபிறகு, ப்ராணாயாமம் என்ற முறையில் சுவாசத்தை கட்டுப்படுத்துவது. சுவாசங்கள் பலவகைப்படும். அத்தகைய சுவாசங்களுக்கு கால அளவுகளும் உண்டு.புலன்களை அடக்குதல், மனதை பழக்கி ஒருநிலை கொண்டு அதிலேயே அடங்கிவிடும் நிலை ப்ரத்யாஹாரம் எனப்படும்.ஒரு நேரத்தில் ஒரே பொருளில் மனதை லயிக்கவிடுவது, மற்ற எல்லா இடையூறுகளையும் விலக்கி ஏகாக்ர சிந்தை என்பதைப்போல் ஒன்றையே தொடர்ந்து சிந்தித்து மனதை நிலை நிறுத்தி வைத்தல் தாரணா எனப்படும்.தாரணா நிலையில் மனதை ஒருமைப்படுத்தி, பக்தியுடன் “தைலதாரை” என்ற எண்ணை கொட்டுவதைப்போல் இடைவிடாமல் தொடர்ந்து மனம் லயிப்பதே த்யானம் எனப்படும்.இந்த அஷ்டாங்க யோகத்தின் கடைசி நிலை, சமாதி எனப்படும்.எதை தாரணா மற்றும் த்யான நிலைகளில் மனதில் லயிக்க விடுகிறோமோ அதாகவே ஆகி இரண்டர கலந்து ஒன்றாகிவிடுதலே சமாதி எனப்படும் எட்டவது நிலையாகும். இதற்கு முந்தைய நிலைகளில் செய்பவர், செயல், அதன் விளைவு என்பது இருக்கிறது. ஆனால் சமாதி நிலையில் இவையெல்லாம் ஒன்றாக கலந்து விடுகின்றன.
யாமா (விதிகள் / வரையறைகள்)
நிர்யாமா (தனிமனித ஒழுக்கம்)
ஆசனா (யோகா செய்யும் முறைகள்)
ப்ராணாயமா (மூச்சுப்பயிற்சி)
ப்ரத்யஹாரா (விடுபடுதல்)
தாரணா (குறிப்பிட்டவைகள் மீது ஒருநிலைப்படுத்துதல்)
 தியானா (தியானம்)
 சாமாதி (தீர்வு) இதில் குறிப்பிட்ட யோகாவை எடுத்துக்கொண்டால் அதில்
பக்தி யோகா
கர்ம யோகா
பதஞ்சலி யோகா முறை
ஜனன யோகா
ஹத்த யோகா
குண்டலினி யோகா என்று பிரிவுகள் உண்டு... யோகா சிறந்ததொரு முறை என்பதும், அதில் நம் முன்னோரின் ஆழ்ந்த அறிவு - மனத்துக்கு பயனளிக்கும் வகையில் செறிந்துள்ளது.


யோகாசனம்
யோகேன சித்தஸ்ய பதேன வாசாம்
மலம் சரீரஸ்ய து வைத்ய கேன !
யோபாகரோத்தம் ப்ரவரம் முனீனாம்
பதஞ்சலீம் ப்ராஞ்ஜலி ராநதோஸ்மீ !!

 யோகத்தின் எட்டு அங்கங்கள் என வர்ணிக்கப்படும்.
1.இயமம்:பிறரை கொல்லாதிரு மனதாலும், உடலாலும்.பிரம்மசரித்திரு, தூய்மையாய் இரு-மனதாலும், உடலாலும்.இது இயமம்
2.நியமம்:மெய் வாய்யில் இறைமை, வாய்யில் எப்பொழுதும் மெய்,கலவாதிரு, களவாதிரு.இதுநியமம்.
3.ஆசனம்: ஆசான் இல்லாத ஆசனம் ஆதாரம் இல்லாத ஆசனம்.எங்கும் ஆசனம் எதிலும் ஆசனம்.உன்னை ஆக்கு ஆசனம். அதுவே இறையின் அரியாசனம்.
4.பிராணாயாமம்:உனது உயிர் சக்தியை வசமாக்கு- அதுவே பிராணனின் யாமம்.உனது நவ துவாரத்தில் பயணிக்கும் சக்தியை திறந்து மூடு.உன் உடல் எனும் புல்லாங்குழலின் துவாரங்கள் வழியே ஓடும் இசையாக மாறும் உனது உயிர்சக்தி.:(பிராணாயாமம்)
5.ப்ரதியாகாரம்:அஞ்சும் சிங்கங்களாக இருக்கும் ஞானேந்திரியத்தை ஐந்தும் சிங்கங்களாக்குபிற உலகில் நில்லாமல் அக உலகில் இருப்பதேப்ரதியாகாரம்.
6.தாரணை: நீரில் உள்ள சலனம் எண்ணெயில் இல்லை.நீர் இல்லா உலகில் எண்ணமில்லா நிலையே தாரணை.
7.தியானம்:செயல் கடந்து செயல் மறந்து அகம் அகழ்ந்து நின்று,தானே செய்யாமல் தானே செயல்படுவது தியானம்.
8.சமாதி:ஆதியானவனுடன் சமமாவதே சமாதி.நீயே பிரம்மனாம் அது அகம் பிரம்மாஸ்மி-யாம்.நீயே சத்தியம் அது தத்வமஸி.நீயே அனைத்துமாம் அதுவே சமாதி.
பொதுவாக யோகாசனம் என்றாலே உடலை வளைத்து செய்யும் பயிற்சி என்று பெண்களும் , வயதானவர்களில் பெரும்பாலனோர் கருதுகின்றனர்.யோகத்தின் எட்டு அங்கங்கள் பகுதிதான் ஆசனம்.நீண்ட நேர தியானத்திற்கு புலக்கட்டுபாடு, மன ஒருமைப்பாடு தேவைப்படுகிறது. உடலும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். எனவே சில ஆசன பயிற்சிகளை செய்வதன் மூலம் உடலை நன்றாக வைத்துக்கொள்ள முடியும். நீண்ட நேர தியான பயிற்சிக்கு ஆசனம் உதவுகிறது.

                        யோகம்+ஆசனம்(யோகாசனம்).அது நமது ரிஷிகள் நமக்கு அளித்த கொடை.பதஞ்சலி மகரிஷி யோகத்தை நமக்கு தொகுத்தளித்தார். அது இந்தியாவின் பெரும் செல்வம். பொதுவாக இன்றைய சூழ்நிலையில் மக்கள் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதைப் போல நோயுற்று இறப்பவர்களின்  எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.  நோயற்ற வாழ்க்கை குறைவற்ற செல்வம் என்று யாராலும் இன்று மகிழ்வாக சொல்ல முடியவில்லை.யோகத்தின் அடிப்படை கொள்கைகளை பின்பற்றுவர்கள் யாராக இருந்தாலும் இறைக் கலப்பு என்பது அவர்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஒன்று.உள்ளமும், உடலும் தூய்மையாக, ஆற்றலாக திகழ யோகாசனம் அவசியம். இதில் யோகம் என்பது உள்ளத் திற்காகவும், ஆசனம் என்பது உடலுக்காகவும் செய்யப்படுகிறது. இந்த யோகாசனத்தால் தான் மனித வாழ்க்கை வெற்றிகரமானதாக அமையும்.யோகசனத்தைப் பற்றி ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்கிறார்கள். சிலர் உடலுக்குரிய ஆசனங்களை பயிலுவது தான் யோகாசனம் என்றும், ஒரு சிலர் தியானம் பயிலுவது யோகாசனம் என் றும், வேறுசிலர் மூச் சுப்பயிற்சி (பிராணாயமம்) செய்வதுதான் யோகாசனம் என்றும், இன்னும் சிலர் உண்ணாவிரதம் போன்ற விரதங்கள் இருப்பதே யோகாசனம் என்றும் கூறுகிறார்கள்.ஆனால் பதஞ்சலி ஒருவர் மட்டுமே உள்ளத்தின் ஆற்றலை பெருக்க யோகப்பயிற்சி, உடலின் ஆற்றலைப் பெருக்க ஆசனப் பயிற்சி என இரண்டையும் ஒன்று சேர்ப்பதே யோகாசனம் என தெளிவாக்கியவர்.பதஞ்சலி முனிவர் துவாபரா யுகத்தில் வாழ்ந்தவர். இவர் ஆதிசேஷன், லட்சுமணன், பலராமன், ராமானுஜர் என பல அவதாரங்கள் எடுத்தவர். இவர் இந்த உலக மக்களின் நலன் கருதி மனதுக்கு யோக சூத்திரமும், உடலுக்கு சரகம் என்ற வைத்திய நூலும், வாக்கிற்கு வியாகரண பாஷ்யம் போன்ற நூல்களை தந்தவர்.யோகம் என்றால் .கால்களை , கைகளை நீட்டி மடக்கி செய்யும் ஆசனப் பயிற்சிகள் என்பது யோகப்பயிற்சியின்   ஒரு அங்கம் . மனிதர்களின் வயது மற்றும் தன்மைகளுக்கு ஏற்ப சிறிது ஆசனப் பயிற்சி செய்தால் போதுமானது.யோகப் பயிற்சியின் நோக்கம் மனிதன் தன் சுயத்தை உணர்ந்து இறைவன் என்பதை அறிந்து முடிவில் இறைக் கலப்பு அடைவதே.ஆனால் அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும் கூட சிறிதளவு யோகப் பயிற்சியினை கையாண்டாலும் அது  மனிதனின் உடல் மற்றும் மன நலத்தை சீர்ப்படுத்தும் ஒரு மருந்தாய் அமைகின்றது என்பதில் வியப்பில்லை.ஒரு நிமிடம் இந்த யோகப் பயிற்சியனை நமக்களித்த உண்மைக் குருமார்களின் தூய நோக்கத்தினை அவர்கள் நினைத்து தங்கள் வாழ்க்கையினை அதற்காக அவர்கள் அர்ப்பணித்து அதற்காக அவர்கள் சிறு புகழுக்கு கூட ஆசைப் படாமல் உலக உயிர்களின் மீது உள்ள கருணையினால் பயிற்சிகளை நெறிப்படுத்தி மனிதர்களின் தன்மைக்கு ஏற்றார்போல பயிற்சிகளை பயிற்றுவித்தவர்கள் ரிஷிகள், குருமார்கள். உடல் , மன சக்திகாகவும் மற்றும் ஜீவ முக்திக்காகவும் இன்று யோகத்தை ஆர்வத்துடன் பயில்பவர்கள் ஏராளம், ஏராளம். ஆரம்பத்தில் யோகம் பயில விரும்பும் , முயலும் அன்பர்கள் மிக்க மன விழிப்புடன் சரியான பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை சென்றடைந்து பயிற்சியினை அடிப்படை ஒழுக்கத்துடனும் , உயர்ந்த நோக்குடனும் பயில்வார்களேயானால் அவர்களுக்கு சத்குரு பதஞ்சலி மகரிஷியும், சித்த புருஷர்களும் அவர்களின் யோக வெற்றிக்கு துணை நிற்பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.

                  உலகில் 84 இலட்சம் உயிர்வகைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.ஒரு உயிருக்கு ஒரு ஆசனம் வீதம் 84 லட்சம் ஆசனங்கள் உள்ளன என்று யோகிகள் கூறுகின்றனர். இதில 250 ஆசனங்கள் வரை பழக்கத்தில் உள்ளன.எனினும் இவைகளில்18 வகை ஆசனங்கள் தான் மிகமுக்கியமானவை. இவற்றைப் பயில்வதன் மூலம் ஏனைய ஆசனங்கள் தானாக வந்து விடும். உடல் சிறப்புற சூரிய நமஸ்காரம் என்ற ஆசனத்தில் 10 வகையில் உடல் நிலைகளை வைக்கும் ஆசனங்கள் உள்ளன . மஹரிஷி ஸ்ரீ பதஞ்சலி யோக கேந்திரத்தால் வெளியிடப்பட்ட இந்த வலைப்பதிவில் பொதுவாக யோக விஷயங்களையும் உடல் ஆசனங்களை பற்றியும் விளக்கப்டும். மேலும் ஏற்கனவே ஆசனங்கள் பயின்று தொடர முடியாமல் பாதியில் பயிற்சியினை நிறுத்தியவர்களுக்கு இந்த வலைப்பதிவு ஓரளவு நிவாரணம் தரும் என எண்ணுகிறோம் . யோகம்+ஆசனம் இந்த இரு பயிற்சிகளும் பரந்த கடலுக்கு ஒப்பாகும். இதில் முத்தெடுக்க முனைவோர்தக்க ஆசிரியர் ஒருவரிடம் முறையாக கற்பதனால் உடல் வளமும். மன நலனும் பெற்று இறையருளை அடைவது நிச்சயமே. சாதகர்களுக்கு ஏற்படும் ஐயப்பாடுகளை நீக்கிட கேந்திரந்திரத்தினை அணுகலாம். மனம் என்பது ஆத்ம ஸ்வரூபத்தின் ஒரு சக்தி. எல்லா நினைவுகளையும் தோற்றுவிக்கிறது. அன்நினைவுகளை எல்லாம் நீக்கிப் பார்க்கும்போது மனம் அங்கு தனியாக இருப்பதில்லை. நினைவுதான் மனதின் உருவம்.எண்ணம்.உலகின் எல்லா நிலைகளையும் உருவாக்குவது எண்ணங்களேயாகும்.வாழலும் சூழலும் எண்ணத்தை உற்பத்தி செய்கின்றன.உடம்பு உணர்வு.உடம்பு உயிர்த் தொகுதியில் சேர்ந்தாலும் அது ஒரு ஜடப் பொருளே. ஆனால்மூன்றாவதாக உணர்வுப் பொருள் அதனுடன் சேரும்போது வாழ்கை நடைபெறத்துவங்குகிறது.

              ஐம்பூதங்கள் எனப்படுபவை நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பன. இப்பிரபஞ்சத்திலுள்ள பல சூரிய மண்டலங்களில் ஒன்றான நாம் வாழும் இப்பூமியில் இவற்றின் உதவியின்றி எந்தவொரு ஜீவராசியாலும் உயிர் வாழமுடியாது. உதாரணத்திற்கு நம் உடலை எடுத்துக்கொள்வோம்: இரத்தச் சுற்றோட்டத்திற்கும் கலங்கள் இயங்குவதற்கும் நீரும், தாது உப்புக்களுக்கு நிலமும், உடல் வெப்பத்தைப் பாதுகாக்க நெருப்பும், சுவாசிப்பதற்கு வசதியாகக் காற்றும், காந்தகதிருக்கு ஆகாயமும் உறுதுணையாய் நிற்கின்றன.நெல் வளர இவ்வைந்து பூதங்களும் உதவுகின்றன. நெல்லைக் குற்றி அரிசியும் தவிடும் எடுக்கிறோம். இவற்றை நாம் உண்ணும்போது அவற்றிலுள்ள தாது உப்புக்களும், அரிய பூதியங்களும் மற்றும் ஜீவசத்துக்களும் எமதுடலை சென்றடைகின்றன. இதே போன்றே ஐம்பூதங்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் நாமுயிர் வாழ்வதற்கு ஏற்ற துணையாய் நிற்கின்றன.தமிழிலும் ஐம்பூதங்கள் என்று சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலன்களின் அடிப்படையில் திருவள்ளுவர் பகுத்திருக்கின்றார். நிலம், நீர், நெருப்பு, வளி, விசும்பு என்று இப்புவியை ஐம்பெரும் ஆற்றல்கள் கட்டுப்படுத்துகின்றன என்பது தமிழர்களின் நம்பிக்கை. சீனப் பண்பாட்டின்படி ஐந்து பூதங்களும் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருக்கும் சக்தியின் உருவகங்களாகத் திகழ்கின்றன. இவற்றிலே நீர் பள்ளம் நோக்கிப் பாய்ந்து நிலத்தை ஈரப்படுத்துகிறது. நிலத்தில் ஈரம்பட்டு முளைக்கும் மரத்தின் விறகுகள் ஒன்றோடு ஒன்று உரசி நெருப்பு மூள்கிறது. நெருப்பின் சாம்பல் மண்ணுக்குள் புதைந்து உலோகமாக மாறுகிறது. பள்ளம் நோக்கிப் பாயும் நீர்
ஓங்கி உயர்ந்து எரிந்து வெப்பத்தை உண்டாக்கும் தீ வளைந்தும் நிமிர்ந்தும் வளரும் மரம் பலவடிவங்களில் அடித்தும், வார்த்தும் உருவாக்கப்படும் உலோகம் வளமான மண் இந்த ஐந்து மூலகங்களும் படைக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பது மட்டுமல்ல, இவை ஒன்றை ஒன்று அழிக்கும் ஆற்றலையும் பெற்றுள்ளன. எப்படி என்கிறீர்களா மரம் நெருப்பை உண்டாக்குகிறது. நெருப்பின் சாம்பல் மண்ணுக்கு உரமாகி, உலோகமாக மாறுகிறது உலோகக் கருவி கொண்டு பூமியைத் தோண்டி தண்ணீர் எடுக்க முடிகிறது. தண்ணீரால் புதிய மரங்கள் முளைக்கின்றன. இவற்றின் இந்த படைப்பாற்றலுக்கு எதிரான அழிவாற்றலைப் பார்க்கலாமா தண்ணீர் நெருப்பை அணைக்கிறது. நெருப்பு உலோகத்தை உருக்குகிறது. உலோகம் மரத்தை வெட்டுகிறது. மரம் மண்ணைக்கீறி முளைக்கிறது. மண் தண்ணீரில் கரைகிறது.

                    பல நூற்றாண்டு காலமாக சீன மக்கள் இந்தப் புவியை நான்கு பகுதிகளாக-கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று நான்கு திசைகளாகவும், வசந்தம், இலையுதிர்காலம், கோடை, குளிர் என்று நான்கு பருவங்களாகவும், டிராகன், வெள்ளைப்புலி, சிவப்புப் பறவை, கருப்பு ஆமை என்று நான்கு விலங்குளாகவும் பிரித்தே பார்த்துவந்தனர். காலப் போக்கிலே, இவற்றுடன் மையப் பண்பு கொண்ட ஐந்தாவது அம்சம் ஒன்றும் சேர்ந்து கொண்டது. இறுதியில் மரம், நெருப்பு, மண், உலோகம், தண்ணீர் ஆகிய ஐம்பெரும் பூதங்கள் இந்தப் புவியை ஆட்டிப் படைக்கத் தொடங்கின. இவை இடைவிடாமல் உருவாகிக் கொண்டே இருக்கும் சக்தியின் உருவகங்களாகக் கருதப்படுகின்றன.சீன மக்களின் கருத்துப்படி வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் இந்த ஐந்து மூலகங்களுடன் தொடர்பு கொண்டுள்ளன. ஓராண்டின் ஐந்து பருவங்களும். ஐந்து நிறங்களும், ஐம்புலன்களும், ஐந்து சுவைகளும், எண்களும், உடல் உறுப்புக்களும் இந்த மூலகங்களுடன் இணைத்தே விளக்கப்பட்டன. வசந்த காலத்தில் மரங்கள் வளர்ந்து கோடை காலத்தின் மூலகமான நெருப்பை உண்டாக்குகின்றன. நெருப்பின் சாம்பல் மணணுக்குள் புதைந்து, இலையுதிர் பருவத்தில் கிணறு தோண்டுவதற்குத் தேவையான உலோகமாக மாறுகிறது. கிணறுகளில் இருந்து குளிர் பருவத்தின் மூலகமான தண்ணீர் கிடைக்கிறது.


மனிதனின் சக்தி நிலை



                  மனிதனின் சக்தி நிலை பற்றிப் பேசும்போது ஏழு சக்கரங்கள் குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவை மனிதனின் உடலில் உள்ளவை.எல்லா இயந்திரங்களும் சக்கரங்கள் வழியாகவே நகர்கின்றன. சக்கரங்கள் இல்லாமல் ஒரு மாட்டு வண்டியோ காரோ நகர முடியாது. எனவே, சக்கரங்கள் இயக்கத்துக்கானவை. மனிதனை ஒரு பரிணாமத்திலிருந்து மற்றொரு பரிணாமத்திற்கு நகர்த்திச் செல்பவைதான் சக்கரங்கள்.மனித உடலில நூற்றுக்கணக்கான சக்கரங்கள் உள்ளன.மனிதனின் உணர்வு நிலையிலேயே உச்சகட்டமானது அன்புதான். அன்பு என்பது ஆழமான அழகான வலி. அன்பு சக உயிர்கள் மீதான, பரிவாக வெளிப்படும்.ஆனால் நாடிகள் சந்திக்கும் மையங்களாக ஏழு சக்கரங்களுக்கென்று தனித்தனி இடங்கள் குறிக்கப்பட்டிருந்தாலும் அவை ஒரே இடத்தில் இருக்குமென்று சொல்ல முடியாது.சக்தி நிலையில் ஏற்படும் வளர்ச்சிகளுக்கேற்ப அவை நகரக்கூடும். இந்த ஏழும் சக்கரங்கள் என்று அழைக்கப்பட்டாலும் அவை வட்ட வடிவத்தில் இராது. முக்கோணங்களாகவே இருக்கும். மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞை, சஹஸ்ரஹாரம் ஆகிய சக்கரங்களே அவை.
 

1.மூலாதாரம்: உடலின் அடிப்படையான சக்கரம், இந்த சக்கரம் தூண்டப்படிருந்தால் உணவு, உறக்கும் ஆகியவற்றிலேயே அதிக நாட்டம் இருக்கும்.
 

2.சுவாதிஷ்டானம்: உலகின் பொருள் தன்மை சார்ந்து நுகர்ச்சிகளில் இருகி ஈடுபடாட்டிற்குக் காரணமானது.
 

3.மணிப்பூரகம்:  உடலின் உறுதி மற்றும் நல மேம்பாட்டுக்கானது. இந்த சக்கரம் தூண்டப்பட்டவர்கள் கடும் உழைப்பாளிகளாக எறும்பைப் போல் சுறுசுறுப்பானவர்களாக இருப்பார்கள்.
 

4.அநாகதம்:  இந்த சக்கரத்துகென்று சில முக்கியத்துவங்கள் உண்டு. படைப்பாற்றல், அன்பு போன்றவற்றின் ஆதார சக்கரம் இது. முந்தைய மூன்று சக்கரங்களான மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம் ஆகியவை உலகியல் இன்பங்களுக்கும், வாழ்க்கைக்கும் உரியவை. அநாகத்த்தை அடுத்து வருகிற விசுக்தி, ஆக்ஞை, சகஸ்ரஹாரம் ஆகியவை அருள் நிலை, ஆன்மீக வளர்ச்சி போன்றவற்றிற்கு உரியவை.இந்த இருவேறு நிலைகளுக்கும் மத்தியில் ஒரு சம நிலையான தன்மை அநாகதத்திற்கு உண்டு. இரண்டு இயல்புகளும் கலந்ததாக இது அமைந்துள்ளது. அதனால் தான், மேல் நோக்கிய ஒரு முக்கோணமும், கீழ் நோக்கிய ஒரு முக்கோணமும் பின்னிப் பிணைந்து ஒரு நட்சத்திரத்தை உருவாக்கும் தோற்றமே அநாகத வடிவம்.மேல் நோக்கியமுக்கோணம் அருளியல் வாவுக்கும் கீழ்நோக்கிய முக்கோணம் உலகியல் வாழ்வுக்கும் அடையாளம். ஸ்ரீ சக்கரம் போன்ற எந்திரங்கள் முக்கோணங்கள் நிரம்பியதாய் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அவை அநாகதத்தில் இருந்து உருவானவைதான்.
 

 5.விசுக்தி:  என்பது தீயவற்றை வடிகட்டும் ஆற்றல் சிவபெருமானுக்கு ‘விசுவகண்டன்”; “நீலகண்டன்” என்று பெயர்கள் உண்டு.  இதன் பொருள், விஷத்தை வெளியே நிறுத்தியவர் என்பது. விசுக்தி சக்கரம் தூண்டப்பட்டிருந்தால் விஷத்தன்மை உடலுக்குள் நுழையாமல் தடுக்க முடியும். விஷம் என்றால் உணவு மட்டுமல்ல, தீய உணர்வுகள், எண்ணங்கள், சக்திகள் என்று விஷத்தன்மை கொண்டவற்றிலிருந்து விடுபட முடியும்.
 

6.ஆக்ஞை:  இது ஞானம், தெளிவு, போன்றவற்றுக்கான சக்கரம். விசுக்தியைப் பொறுத்தவரை, அந்தச் சக்கரம் தூண்டப்பட்டால் ஆற்றலோடு நிகழமுடியுமே தவிர சமூகத்தில் நிறைய எதிர்ப்புகள் இருக்கும். சமூக வாழ்க்கையோடு உடன்பட இயலாது. மக்களிடமிருந்து விலகி வாழ்கிற நிலையிலேயே இருப்பார்கள். ஆனால் ஆக்ஞா முழுவதுமாகத் தூண்டப்பட்டவர்கள் சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற ஞானவான்களாகத் திகழ்கிறார்கள்.
 

7.சஹஸ்ரஹாரம்:  இந்த சக்கரம்,பரவச நிலையைத் தரத்தக்கது. எப்போதும் ஒருவிதமான பரவச நிலையிலேயே இருக்கிற தன்மை, சஹஸ்ரஹாரா முழுமையாகத் தூண்டப்பட்டவர்களுக்கு உரியது. இவர்களுக்கு உணவு ஊட்டுதல், தூய்மை செய்தல், உடை உடுத்துதல் போன்றவற்றை மற்றவர்கள்தான் செய்ய வேண்டும். இதனால் இவர்கள் “அவதூதர்கள்” என்று அழைக்கப்படுகின்றனர். இந்த ஏழு சக்கரங்களும், வாழ்வின் ஏழு விதமான தீவிரத்தன்மைகள், பெரும்பான்மையான மக்கள் மூலாதாரத்திற்கும் மணிபூரகத்திற்கும் நடுஇல் சக்தி நிலைதூண்டப்பட்டு வாழ்ந்து முடிக்கிறார்கள். சிலருக்கு மட்டுமே அநாகதம் வரையில் அந்த ஆற்றல் துண்டப்படுகிறது.வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு விதமாய் சக்தி நிலை உயரும். ஆக்ஞாவிலிருந்து சஹஸ்ரஹாரா நோக்கி சக்தி நகர்வதற்கென்று மறு மையத்திற்கு குதிக்கிற சூழ்நிலைதான் அங்கே. அதற்குத்தான் ஒரு குருவின் பூரணமான அருளும் துணையும் தேவைப்படுகிறது. அதற்கு அளப்பரிய நம்பிக்கை வேண்டும். பல்வேறு பிறவிகளுக்குப் பிறகும் நம்பிக்கை வைக்காதாலேயே இந்த வாய்ப்பை பலரும் இழக்கின்றனர்.ஆக்ஞாவைத் தொட்டவர்கள் அந்த எல்லையிலேயே நின்று விடுகின்றனர். அடுத்த சக்கரம் நோக்கித் தூண்டிச் செல்வதற்கு மிகுந்த நம்பிக்கையும் அர்ப்பணிப்புணர்வும் தேவை. இராமகிருஷ்ணரின் வாழ்வில் அது நிகழ்ந்தது. காளியிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த அவர், அவ்வப்போதுசில சமாதி நிலைகளை அடைவார். அப்போதெல்லாம் காளியிடம் பேசுவதாக, காளிக்கு உணவு தருவதாக உணர்வார்.சமாதி நிலை கடந்து வெளிவந்ததும், காளியைத்தேடி சிறு குழந்தை போல் அழுவார். ஆக்ஞாவை எட்டியிருந்த அவர் அதைத்தாண்டிச் செல்ல விரும்பவில்லை. சக்கரங்களைத் தூண்டுவதென்பது மிகவும் நுட்பமான ஒன்று. ஞானிகளாலேயே அது சாத்தியம். அடிப்படை சக்தி நிலையோடு விளையாடுவதால் அதனை எல்லோரும் செய்து விட இயலாது.ஆத்ம சாதனைகளை, ஆன்மீகப் பயிற்சிகளை இடையறாமல் செய்து வந்தாலே சக்தி நிலை இயல்பாக மேலெழும்பும். ஆன்மீகப் பயிற்சிகள் உரிய முதிர்ச்சி அடையும்போது சக்தி நிலை மேலெழும்புமே தவிர சக்கரங்களைத் தனித் தனியாகத் தூண்டுதும் நல்லதல்ல.ஏழு நிலையிலும் தீவிரத்தன்மை கொண்ட நமது சக்தி நிலை தூண்டப்படும் பொது மனிதன் தன் அளப்பரிய ஆற்றலை உணர்கிறான். அதற்கு பிராணாயாமம் போன்ற முறையான பயிற்சிகளே வழி.மனித சக்தி என்பது, தனக்குள் இருக்கும் அருட்பேராற்றல், அதனை உணர்வதன் மூலம் ஒரு மனிதனால் தன்னையே உணர இயலும்.

உடலியலில் ஆசனங்கள்  ஆசனங்களும் உடற் பயிற்சிகளும் ஏனைய உடற்பயிற்சிகளில் எல்லாம்  சிறந்தவையாக  உடலாசனங்கள்  என்ற  யோகாசன  உடலாசன முறைகள் இன்று எண்ணிலடங்கா ஆசன வகைகளை கொண்டதாக பெருகி வருவது ஆராயப் பட வேண்டிய விஷயமாகும். இயல்பாக மனித ஆரோக்கிய வாழ்க்கைக்கு  ஆண்களானாலும், பெண்களானாலும் அமர்ந்து  , எழுந்து , நடந்து , கிடந்து, ஓடி , ஆடி, எந்த வித விஞ்ஞான கருவிகளையோ , வாகனங்களையோ உபயோகிக்க அவசியம் இன்றி இருக்க முடியுமானால், மனிதன் அல்லாத ஏனைய  உயிரிகளைப் போல நாமும் நலமுடன் வாழ்ந்திட முடியும்.  இந்த நவீன காலத்தில்  எவரும் அவ்வாறு வாழ்ந்திட இயலாத போது , உடலாசனம் ஒன்றே ( யோகாசனம்) போன்ற மனித உயிர்களுக்கு நீண்ட வாழ்நாளையும், நோயில்லா உடலையும் தரும் அரும் சஞ்சீவியாகும். தற்காலத்திய பல நூறு ஆசனங்களில் இருந்து தேவையற்ற ஆசனங்களை  நீக்கி ஆசன முறைகளை வரிசைப் படுத்தி உடல்வாகுக்கு ஏற்ற ஆசனங்களை தேர்வு செய்தும் எதிராசனம் போன்ற தவறான பழங் கொள்கைகளை தவிர்க்கும் மனித உடல் அமைப்புகளை   ஆசன யோக விஞ்ஞானத்தை நம் முன்னோர்கள் (ரிஷிகள்)  கூறியபடி வழி வழியாக வந்த குருமார்கள் உபதேச முறைப்படி அனுபவ பாடமாக இருக்கும் என்பதை தெளிவுப் படுத்துகிறோம். 

மனித உடல் உறுப்புகளை 9  மண்டலங்களாக பிரிக்கலாம். 

1.உடல் மண்டலம்
2. மூச்சு மண்டலம்
3. இரத்த மண்டலம் 
4. சீரண மண்டலம்
5. எலும்பு மண்டலம்
6. நரம்பு மண்டலம்
7. தசை மண்டலம் 
8. கழிவு மண்டலம்
9. நாளமில்லா சுரப்பி மண்டலம் ( Endocrine )  

மேற்குறித்த 9 மண்டலங்களும் சரியான தொகுக்கப் பட்ட சீரான ஆசனங்களால் கட்டுப் படுத்தப்படுவதோடு  அவைகளுடைய வளர்ச்சியினையும், செயல்பாடுகளையும் மனித  ஆயுட்காலம் வரை அவற்றின்  சோர்வில்லாத இயக்கத்தையும் உடலாசனங்கள் வழங்கக் கூடும். மனித உடலுக்கு  ஆதாரமாகவும் , அஸ்திவாரமாகவும், இருப்பவை  எலும்புகளே உடலில் உள்ள எல்லா எலும்புகளும் அதனை இணைக்கும் மூட்டுகளும் சேர்ந்ததே எலும்பு மண்டலம் . உடலுக்கு ஒரு ஒழுங்கான வடிவமைப்பிற்கு  காரணமாகவும் தன் சீரான செயல்பாட்டிற்கு  துணை புரிபவையும்  எலும்புகளே. உடலில் உள்ள 7  தாதுக்களிலும் மிகக் கெட்டியானதாகவும் , பலம் உடையதாக இருப்பவை எலும்புகளே.முன்கூட்டியே தீர்மானிக்கப் பட்ட மற்றும் அவ்வப் போது உருவாகும் தீர்மானங்களை செயல்பட வைப்பதற்கும் , ஒவ்வொரு அணு செயல்படுகாளையும் தன் கட்டுபாட்டில் வைத்து பராமரித்து வருவதோடு , உயிர் இயக்கம் (தன்னிச்சை செயல்பாடு, அனிச்சை செயல்பாடு) என இருவகை  கேந்திர செயல்பாட்டின் செயலக மையமாக விளங்கி வருவதற்கும் யாவற்றிற்கும் மேலாக அறிவு , புத்தி , சித்தம், என்ற  மன தளத்தின் அதிபதியாக நுட்ப செயல்பாடுகளின் அதிக பட்ச தலைமையமாக விளங்கிடும் மூளை என்ற மிக நேர்த்தியான உறுப்பினை பாதுகாக்கும் பெட்டகமாக விளங்குவது எழும்பினால் ஆன மண்டை ஓடே ஆகும் . (தலைஎலும்புகள் 8 ).

                       மனிதன் மனிதனாக வாழவும் அதில் சிறந்ததோர் மாமனிதனாக வாழவும், அனுபவம் நிறைந்த ஆற்றல் மிகுந்த பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய மகான்கள் பலர் நிறைய வழி முறைகளை சொல்லியுள்ளனர்.அதன்படி வாழ்ந்த மனிதர்கள், வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள், வாழப் போகும் மனிதர்கள்  என முக்கால மக்களுக்கும் ஏற்ற வகையில் வாழ வழிகண்டுள்ளனர் மகான்கள்.  இவைதான் வாழ்க்கை நெறிமுறைகள் ஆகும்.இந்த நெறிமுறைகள் மத, இன, மொழிக்கு அப்பாற்பட்டு தத்துவ விளக்காக அமைந்திருக்கின்றன.  இவை பெரிய மகான்கள் வாழ்ந்து  அனுபவித்து புரிந்துகொண்ட  உண்மைகளாக இருக்கின்றன.இந்த வழிமுறைகளுக்கு அப்பாற்பட்டு வாழ்ந்தவர்கள் வாழ்க்கை நெறிமுறைகளை தவறவிட்டவர்கள்.  இவர்களின் வாழ்க்கை மனித வாழ்க்கையிலிருந்து மாறுபட்டு மிருக வாழ்க்கையாக மாறியுள்ளது.ஆனால் மேலான தத்தவங்களையும், சாஸ்திரங்களையும் படைத்து அதற்கு மேல் வாழ்ந்தவர்கள் தான் சித்தர்கள்.  இவர்கள் ஒரு மனிதன் செம்மையாக வாழ மனம், உடல், ஆன்மா இம்மூன்றும் சீரான நிலையில் இயங்கவேண்டும்.  அப்படி இயங்கினால்தான் மேற்சொன்ன வாழ்க்கை நெறிமுறைகளை கடைப்பிடிக்க முடியும், ஆத்மாவை உணர முடியும் என்கின்றனர் சித்தர்கள் (சித்தம் அடைந்தவர்கள்).  மனதையும் உடலையும் வலுப்பெறச் செய்ய பிரபஞ்ச சக்தியை ஆட்கொள்ள வேண்டும் என்று ஆணித்தரமாக கூறியுள்ளனர்.  பொதுவாக சூரியனை சுற்றி கோள்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.  இந்த கோள்களுக்கும் மனிதனுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.     அவற்றைத் தெளிவாக அறிந்து கொண்டு கோள்களின் இயக்கத்தினால் மனிதனுக்கு ஏற்படும் நன்மை தீமைகளை  பல சாஸ்திரங்களில் சித்தர்கள்  எழுதியுள்ளனர்.  இந்த வகையில் வந்ததுதான் வான சாஸ்திரம்.  கோள்கள் அதனதன்  நிலையிலிருந்து அனைத்து ஜீவராசிகளையும் இயக்குகிறது.  ஆகையால் தான் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு குணாதிசயங்களுடன் மாறுபட்டு காணப்படுகிறான்.மனம், புத்தி, உடல் மாறுபடாமல் சீராக இருக்க பிரபஞ்ச சக்தி அவசியம் தேவையாகும்.  உடலுக்கு நல்ல எண்ணங்கள்  நல்ல புத்தி கிடைக்க பிரபஞ்ச சக்தியை ஆக்க பலனாக  மாற்றினால் தான் முடியும்.  இத்தகைய சிறப்பு வாய்ந்த பிரபஞ்ச சக்தியைப் பெற தியானம், சரநிலை சுவாசம் மூலம் தான் முடியும் என்கின்றனர்.  சரநிலை சுவாசம் பற்றி கடந்த இதழ்களில் விரிவாக அறிந்துள்ளோம்.சரநிலை சுவாசத்தை நல்ல முறையில் கடைப்பிடித்தால் அது உடலுக்குத் தேவையான இரத்த ஓட்டத்தைக் கொடுத்து இதயத்தைப் பலப்படுத்தும்மேலும் நல்ல மன நிலையைக் கொடுத்து உடலுக்கு சக்தியை பெறச் செய்கிறது.  இதனால் தீய எண்ணங்களிலிருந்து விடுபட்டு நல்ல எண்ணங்களை ஏற்படுத்தி மனிதன் சிறப்பாக வாழ வழி செய்கிறது.  சரநிலை சுவாசத்தை பின்பற்றும் போது உடல் வலுப்பெற்று மனம் அமைதி அடைகிறது.  தெளிவுற்ற மனமே நோயற்ற உடலைத் தரமுடியும்.  இந்நிலை சரசுவாசத்தினால் முடியும்.சரசுவாசத்தின்  மூலம்  பிரபஞ்ச சக்தி பெற்றவர்களால் தான் கோள்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.  கோள்களின் ஆதிக்கம் மனிதனை ஆட்டிப் படைக்கிறது.  இதைத்தான் விதி என்கிறார்கள்.  மனிதன் பலமுயற்சி செய்தும் வெற்றிபெற முடியாத நிலைக்கு விதி என்கிறான். மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட சக்தியை விதி எனக் கூறுகிறான்.  ஆனால் சரசுவாசம் மூலம் கோள்களின் ஆதிக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை மாற்றி பல நன்மைகளை பெற முடியும் என்கின்றனர் சித்தர்கள். சரசுவாசம் மூலம் பிரபஞ்ச சக்தியை அடைந்து கோள்களின் ஆற்றலான விதியை மாற்றலாம்.இந்த கோள்களின் ஆதிக்கத்தை பற்றி கவலைப்படாமல் அதன் போக்கையே மாற்றிக் காட்டியவர்கள்  சித்தர்கள்.
                             “நாள் என்னசெய்யும் கோள் என்ன செய்யும்
                              நாதன் உள்ளிருக்கையிலே”   
 நாதன் என்பது சரநிலை சுவாசத்தின் மூலம் கிடைக்கும் பிரபஞ்ச சக்திதான் என்கின்றனர் சித்தர்கள். 

                மனிதனின் உடல் - மனம் - அறிவு - ஆன்மீகத் தேடல் அனைத்தையும் ஒரே புள்ளியில் சந்திக்க வைத்து, உள்நிலை வளர்ச்சிக்கு உறுதுணை புரிய ஈசா யோக மையம் ஏற்படுத்தியிருக்கும் வழியே “சஹஜ ஸ்திதி யோகா”.சஹஜ ஸ்திதி யோகா என்றால், “இயல்பாக வாழும் கலை” என்று பொருள்.தன் இயல்பு வாழ்க்கையில் இருந்தபடியே தன்னை மேம்படுத்திக் கொள்ள அனைவருக்கும் வழங்கப்படும் அரிய வாய்ப்பு இது.சஹஜ ஸ்திதி யோகா, எந்தவொரு பழக்கத்தயும் விடச்சொல்லி வற்புறுத்துவதில்லை. எந்தவொரு மனநிலையையும் மாற்ற சொல்லி வற்புறுத்தவதில்லை. அனுபவ ரீதியாக எதையும் உணர்ந்து, வேண்டாதவறை விலக்கிக் கொள்வதற்கான, விழிப்புணர்வைத் தருகிறது.இதுவரை உணராத பரிமாணத்தில் வாழ்கையை மனிதன் உணரத் தொடங்குகிறான். அன்பு, அமைதி, ஆனந்தம் ஆகியவை வெளியிலிருந்து பெருவதர்க்கல்ல. மனிதனிடம் ஏற்கனவே இருக்கும் இயல்புதான் என்பதை அனுபவ அடிப்படையில் உணரும்போது முற்றிலும் புதிய பார்வை கிடைக்கிறது.செயல்திறன் அதிகரித்தல், உடல் நலம், மன அமைதி இவையெல்லாம் சஹஜ ஸ்திதி யோகாவில் முக்கிய அம்சங்களல்ல. அவை பக்க விளைவுகள்தான்.மனிதன் தன்னை உணர்ந்து, தனக்குள் இருக்கும் பேராற்றலை உணர்ந்து, உயிர்களிடையே பேதமில்லை என்கிற அனுபத்தைப் பெறுவதே சஹஜ ஸ்திதி யோகாவின் முக்கிய நோக்கம்.நோய் வாய்ப்பட்டிருக்கும் மனிதன் சஹஜ ஸ்திதி யோகாவிற்குப் பிறகு, நோயின் தன்மையை உணர்கிறான். ஆனால், அதனால் துன்பமடைவதில்லை.சில அடிப்படை அணுகுமுறைகள் மாறும்போதே சில நோய்கள் அவனைவிட்டு விலகுவதை இங்கே காணமுடியும்.கோபம், பதட்டம், போன்றவை தங்கள் பிறவிக் குணங்கள் என்று கருதியவர்கள், வகுப்புகள் தொடங்கி சில நாட்களிலேயே அந்த குணங்கள் தங்களை விட்டு விலகுவதைக் காண்கிறார்கள்.சஹஜ ஸ்திதி யோகா, நீண்ட கால அனுபவத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள, ஆழ்ந்த யோக அறிவியலின் வெளிப்பாடு.எல்லா வயதினருக்கும் பொதுவான தன்மையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பயிற்சி, மனிதன் தனது அடிப்படை சக்தியை நன்கு உணரவும் அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பாக அமைந்துள்ளது.உலகின் பல பகுதிகளிலும் பரவியுள்ள சஹஜ ஸ்திதி யோகாவை “தன்னை உணர்வதற்கான அமைதிப்புரட்சி” என்று அழைக்கிறோம்.