ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Monday, July 29, 2013

மச்ச சாஸ்திரம்– அரிய தகவல்கள்


அறிவியல் அறிஞர்கள், இறந்து போன சிவப்பணுக்களின் வெளிப்பாடு என்று
மச்சத்தைப் பற்றிச் சொல்கிறார்கள். ஆனால் ஜோதிடத்தைப் பொறுத்தவரை மச்சங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. மேல் உதடு மற்றும் கீழ் உதடுகளில் இருக்கும் மச்சங்கள் சர்வ சாதாரணமாகப் பொய் பேச வைக்கும்.

மச்சங்களில் உள்ளங்கையில் இருக்கும் மச்சம் மிக முக்கியமானதாகும். எல்லா நல்ல கெட்ட பலன்களையும் உடனடியாக அளிக்கக் கூடியது இந்த உள்ளங்கை மச்சம். சில ஆபத்துக்களையும் உருவாக்கும்.

சுண்டு விரலில் புதன் மேட்டில் மச்சம் இருந்தால் கல்வித் தடைபடும். கூடா நட்பு உண்டாகும். கூட்டு சேர்வது சரியாக இருக்காது.

மோதிர விரலுக்கு கீழே இருக்கும் சூரிய மேட்டில் மச்சம் இருந்தால் அரசால் கண்டம் ஏற்படும். அதாவது ஜெயிலுக்குப் போவது போன்ற நிலை உண்டாகும்.

நடு விரலில் மச்சம் இருந்தால் திடீர் மரணம், கடத்தப்படுதல், தீரா நோய், கோர மரணம், ஊரை விட்டு ஒதுக்கப்படுவது, உண்ணா நோன்பு இருந்து இறப்பது போன்றவை ஏற்படும்.

ஆட்காட்டி விரலுக்கு கீழே குரு மேட்டில் மச்சம் இருந்தால் சர்வ சாதரணமாக நீதி நெறியை மீறுதல், குரு பத்னியை தொட்டுவிடுதல் போன்றவற்றில் ஈடுபடுவார்கள். மனசாட்சிக்கு அப்பார்பட்ட செயல்களை செய்வார்கள்.

குரு மேட்டில் மச்சம் இருந்தால் பெரிய பதவிகளில் இருப்பார்கள், திடீரென தூக்கி எறியப்படுவார்கள்.

சுண்டு விரலுக்குக் கீழே இருப்பது புதன் மேடு.
அதற்குக் கீழே இருப்பது செவ்வாய் மேடு. செவ்வாய் மேட்டில், உள் செவ்வாய்
மேடு, வெளிச் செவ்வாய் மேடு என்று இரண்டு வகைப்படும்.

உள்செவ்வாய் மேட்டில் கரும்புள்ளி இருந்தால் திடீர் யோகம் உண்டாகும். ஆனால் அதனை அனுபவிக்க துணைவியர் இல்லை என்று புலம்ப வைக்கும்.

வெளிச் செவ்வாயில் கரும்புள்ளி இருந்தால் அரசு
வழியிலோ அல்லது வழக்குகளிலோ நமது சொத்துகள் பறிபோகும். அதாவது சாலை அமைக்க
நிலத்தை அரசு எடுத்துக் கொள்ளுதல், வழக்கில் எதிராளிக்குச் சாதகமாக
தீர்ப்பு அமைந்து சொத்து கைவிட்டுப் போதல் போன்றவை ஏற்படும்.

கட்டை விரலுக்குக் கீழே இருக்கும் மேடு
சுக்கிரன் மேடு. ரொம்ப முக்கியமான மேடு. சுக்கிர மேட்டில் மெல்லிய கோடுகள்
இருந்தால் ரொம்ப நன்றாக இருக்கும். புள்ளிகள் இல்லாமல் இருப்பதுதான்
நல்லது.

புள்ளி இருந்தால் அது ஒழுக்கக் கேடு. பலருடன்
செல்வது, பல பெண்களிடம் செல்வது போன்றவை ஏற்படும். உடலுறவில் பல்வேறு தவறான
உணர்ச்சிகளைக் கொண்டிருப்பார்கள்.

சுக்கிரன் மேட்டிற்கும், வெளிச் செவ்வாய்
மேட்டிற்கும் கீழே நடுவே இருப்பது சந்திரன் மேடு. அதாவது உள்ளங்கையின்
சுண்டு விரலுக்குக் கீழே கடைசியான மூலைப் பகுதிதான் சந்திரன் மேடு.

சந்திரன் மேட்டில் புள்ளிகள் இருந்தால் மனநலம் குன்றியக் குழந்தைகள், நரம்புக் கோளாறு போன்றவை ஏற்படும்.

கரும்புள்ளிகள் அவ்வப்போது ஏற்படுமா?
ஆம். சிலருக்கு பிறக்கும்போதே மச்சங்கள் ஏற்படுவதில்லை. புள்ளிகள் இயற்கையின் விதிமுறைகளை முன்கூட்டியே எடுத்துக் கூறுவதாகும்.

இங்கு வந்தால் இது நடக்கும், இங்கு மச்சம் வந்தால் இந்த யோகம் கிட்டும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

சிலருக்கு பிறக்கும்போதே மச்சம் இருக்கும்.
சிலருக்கு ஒரு சில காலக்கட்டத்தில் மச்சம் தோன்றும். சனி, ராகு
சேர்ந்திருந்து, சனி திசையில் ராகு புத்தி வந்தால் கரும் புள்ளிகள்
தோன்றும்.

அதை நாம் தெரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் சிலதை கூட்டி, சிலதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

உடலின் பிறப்பகுதியைக் காட்டிலும்
உள்ளங்கையில் ஏற்படக் கூடிய கரும்புள்ளிகள் பொரும்பாலும் வாழ்க்கையில்
பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

கருப்பு புள்ளிகள் முதலில் கருப்பாகத் தோன்றாது. பழுப்பு நிறுத்தில்தான் தோன்றும். அப்போது அது நல்ல பலன்களைத் தரும்.

அதேப்போல உள்ளங்கையில் இருக்கும் வெண்
புள்ளிகள் அதிக பணப் புழக்கம், அறிவுக் கூர்மை, எதையும் திட்டமிட்டுச்
செய்யும் திறனைத் தெளிவுப்படுத்தும்.

பழுப்பு, வெண் புள்ளிகள் மற்றும் ஆரஞ்சு
நிறத்தில் தோன்றும் புள்ளிகள் நல்லது. ஆரஞ்சு புள்ளிகளால் திடீர் சொத்து
வாங்குவது போன்றவை ஏற்படும்.

சிவப்பாக இருப்பவர்களின் கைகளில்தான் ஆரஞ்சு
நிற புள்ளிகள் தெரியும். நமக்கு இருந்தாலும் அது பழுப்பு நிறத்திற்கும்
ஆரஞ்சுக்கும் வித்தியாசம் தெரியாததால் கண்டுபிடிக்க முடியாது.

கை ரேகையில் பெண்களுக்கு இடது கை, ஆண்களுக்கு வலது கை என்பது போல மச்சங்களிலும் உண்டா?
ஆம்,
மச்சங்களுக்கும் இது பொருந்தும். பெண்களுக்கு இடது கையில் இருக்கும்
மச்சத்தினால் அதிக பாதிப்பும், ஆண்களுக்கு வலது கையில் இருக்கும்
மச்சத்தினால் அதிக பாதிப்பும் ஏற்படும்.

முகத்தில் பொதுவாக மச்சம் இல்லாமல் இருப்பது
நல்லது என்று மச்ச சாஸ்திரம் கூறுகிறது. பொதுவாக உதடு, கண், புருவம்,
இமைகளுக்கு மேலே மச்சம் இருக்கக் கூடாது என்று கூறுகிறது.

நெற்றிக்கு மேலே தலையில் எல்லாம் மச்சம் இருக்கலாம். ஆனால் முன் தலையில் இருப்பதை விட, பின் தலையில் இருக்கலாம்.

சிலருக்கு கருப்பையும், பச்சையையும் கலந்த
மச்சங்கள் இருக்கும். அது பொதுவாக உடல் பகுதியில் உண்டாகும். அதுபோன்ற
மச்சங்கள் உடலின் பின்பகுதியில் ஏற்படுவது நல்லது.

என் தாத்தா சில ஜாதகங்களைப் பார்த்ததும் இந்த
பெண்ணுக்கு நாக தோஷம் இருக்கிறது என்பார். அந்த பெற்றோர்கள் இல்லையே, எந்த
தோஷமும் இல்லை என்று சொன்னார்களே என்று கூறுவார்கள். அதற்கு, முட்டியில்
இருந்து தொடைக்கு இடைப்பட்ட பகுதியில் பச்சையும், கருப்பும் கலந்த
நிறத்தில் பாம்பு படம் எடுத்தது போன்ற ஒரு மச்சம் இருக்குமே என்று
சொல்வார்கள். அவர்களிடம் கேட்டால் அது உண்மையாக இருக்கும்.

லக்னாதிபதியுடன் ராகு சேர்ந்தாலோ சந்திரனுடன் ராகு சேர்ந்தாலோ, பூர்வ புண்ணியாதிபதியுடன் ராகு சேர்ந்தாலோ இதெல்லாம் ஏற்படும்.

பொதுவாக கிரகங்களில் பார்த்தால் ராகு,
கேதுதான் மச்சங்களை வெளிப்படுத்தும் கிரகங்கள். அடுத்ததாக செவ்வாயை
சொல்லலாம். செவ்வாய் ரத்தத்தை வெளிப்படுத்தும் கிரகம்.

செவ்வாய் நீச்சமாகி, ராகு கேதுவுடன் சேர்ந்து
சனியின் பார்வை பெற்றாலே உடல் எங்கும் மச்சமாக - அகோரமாக காட்சி
அளிப்பார்கள் என்று ஜோதிட அலங்கார நூல் சொல்கிறது. ஒரு உயரிய பதவியில்
வகிப்பவருக்கு அதுபோன்ற நிலை உள்ளது.

பெண், ஆண் உறுப்புகளில் மச்சங்கள் இல்லாமல்
இருப்பது நல்லது. அப்படி இருந்தால், விரும்பி விபச்சாரத்தில் ஈடுபடுவது,
விபச்சார விடுதிகளுக்குச் செல்வது போன்ற குணங்கள் இருக்கும்.

வாழ வந்த பெண்ணிற்கு வலது பக்கம் மச்சம், ஏறு பிடிக்கிற மச்சானுக்கு இடது பக்கம் மச்சம் என்று ஒரு பழமொழி இருக்கிறது.

பொதுவாக ஆண்களுக்கு இடது பக்கம் மச்சம்
இருப்பது அதிர்ஷ்டத்தின் வெளிப்பாடு என்று நூல்கள் சொல்கின்றன. பெண்களுக்கு
வலது பக்கம் மச்சம் இருப்பதும் நல்லது.

அதேபோல நெஞ்சுப் பகுதியில் மச்சம் இருந்தால்
கொஞ்சம் சுகவாசியாக இருப்பார்கள் என்று சொல்லலாம். பொதுவாக பின்புறம்
இருக்கும் மச்சத்தால் திடீர் பணப்புழக்கம், அதிர்ஷ்மாகவும் இருப்பார்கள்
என்று சொல்வார்கள்.

பொதுவாக கால்களில் மச்சம் இருப்பவர்களுக்கு
காலில் சக்கரம் என்று சொல்வார்கள். ஒரு சிலர் உட்கார்ந்து கொண்டே காலை
ஆட்டிக் கொண்டே இருப்பார்கள். அது உள்ளங்காலில் இருக்கும் மச்சத்தின்
காரணமாகத்தான் இருக்கும். ஏனெனில் உள்ளங்காலில் இருக்கும் மச்சம் ஒரு
அசைவைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். ஓடிக் கொண்டே இருப்பார்கள்.

மான் போன்று மச்சம், மீன் போன்று மச்சம் என்பதெல்லாம் உண்மையா?

உண்மைதான். எந்த நட்சத்திரக் கூறில் ராகு,
கேது, செவ்வாய் எல்லாம் அமைந்திருக்கிறதோ அதன் அடிப்படையில் மச்சத்தின்
வடிவம் வேறுபடும். மச்சம் என்றால் மீன் என்றும் ஒரு அர்த்தம் உண்டு.

மீனைப் போன்று இருக்கும் மச்சம் எல்லாம் விசேஷம். உள்ளங்க¨யில் எல்லாம் மச்ச ரேகை கூட உருவாகும். மச்ச ரேகை உண்டானால் மன்னனாகக் கூட ஆவார்கள்.

மீனைப் போன்ற மச்சம் அதிர்ஷ்டத்தின் வெளிப்பாடு. இப்போதெல்லாம் அது அரிதாகிவிட்டது.

நெல்லிக்காய் போல, மாவடு போல எல்லாம் மச்சம் உண்டு. உலகத்தில் எங்கோ ஒருவர் இதுபோன்ற மச்சங்கள் கொண்டிருப்பர்.

மச்ச சாஸ்திரம் சாஸ்திர, சம்பிரதாயங்கள் என்பது நம்
பாரத நாட்டில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருக்கும் விஷயம். அன்றாடம்
செய்யும் ஒவ்வொரு செயலுக்கு ஒரு வழிமுறை வைத்திருக்கிறார்கள். இதை
இப்படித்தான் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து அதற்கு சாஸ்திர,
சம்பிரதாயம் என்று வைத்திருக்கின்றனர். ஆய கலைகள் 64&ல் ஜோதிட
சாஸ்திரம் முக்கியமானது. ஜோதிடக் கலை ஒரு மரம் போன்றது. அதில் இருந்து பல
சாஸ்திரங்கள் பல்வேறு கிளைகளாக பிரிந்துள்ளன. அதன் ஒரு கிளையாக
விளங்குவது அங்க லட்சண சாஸ்திரம்.

நம் அங்கம், அதாவது உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில்
பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம்காலமாக நடைமுறையில் இருக்கும்
சாஸ்திரம். பெரும்பாலான பலன்கள் ஒத்துப்போவதை நடைமுறையில் காண்கிறோம்.
சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை
வரும்போது ‘அவன் மச்சக்காரன்’ என்பார்கள். பிறக்கும்போதே மச்சம் இருக்கும்.
நடுவே தோன்றுவதும் உண்டு. ஆனால் இது அபூர்வமான அமைப்பாகும்.
பிறக்கும்போது தோன்றும் மச்சங்கள் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு மற்றும்
அதைவிட பெரிதாகக்கூட இருக்கும். இவை மறையாது என்பதால் அங்க அடையாளமாக
குறிப்பிடப்படுகிறது. இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே
நற்பலன்களை கொடுக்கும். இந்த பலன்கள் ஆண், பெண் என்று தனித்தனியாக வெவ்வேறு
யோகங்கள் தரவல்லது.

ஆண்களுக்கான மச்ச பலன்
· இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள்.


· நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும்.


· வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார்.


· வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும்.


· வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும்.


· வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார்.


· இரு கண்களில் ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பல பிரச்சனை சந்திப்பார்கள்.


· இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை
சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் அவர் ஏதேனும் ஒரு வன்முறை
சம்பவத்தை சந்திப்பார்.


· இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும்.


· இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும் இருப்பினும் அதை சமாளிக்கும் பக்குவமும் இருக்கும்.


· இடது கண்ணின் வலப்புறத்தில் சொத்து விஷயங்களில் சங்கடங்களை சந்திப்பார்கள். இருப்பினும் ஓரளவுக்கு சொத்தை சேகரித்து விடுவார்கள்.


· இடது கண்ணின் இடப்புறத்தில் மச்சம் இருந்தால் உறவினர்களுடன் பிரச்சனை ஏற்பட்டு
தனிநபர் ஆவார்கள். இருப்பினும் அவர்களது வாழ்நாளின் பிற்பகுதியில்
அதிர்ஷ்டத்தை அடைவார்கள்.


· மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா சௌகரியமும் பெற்றிடுவார்கள்.


· மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.


· மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதை நம்பாதவர்களாக இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பு_சிநேகமும் இவர்களுக்கு இருக்கும்.


· மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள்,
சற்றே கர்வமும், சற்றே பாதுகாப்பு உணர்வும் இவர்களிடம் மிகுந்திருக்கும்.


· மூக்கின் கீழே மச்சமுள்ளவர்கள் கேடான வழிகளில் பணத்தை செலவிடுபவர்களாக இருப்பார்கள்.


· நாசித்துவாரங்களுக்கு மேலே மச்சம் உள்ளவர்கள நவநாகரீக மோகமுள்ளவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கையை கொண்டிருப்பார்கள்.


· மேல் உதட்டிலோ அல்லது கீழ் உதட்டிலோ மச்சம் இருந்தால் அவர்கள் காதல் உணர்வு மிகுந்திருப்பார்கள்.


· மோவாயில் மச்சம் இருந்தால் செல்வாக்கு, புகழ் இவற்றோடு சமூகத்தில் நல்ல மதிப்பு பெற்றிருப்பார்கள்.


· மோவாயின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மேடு, பள்ளமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள், கல்வியறிவும் குறைவாக இருக்கும்.


· மோவாய்க்கு அடியில் மச்சம் இருந்தால் அவர்கள் இசையில் வல்லுநர்களாக இருப்பார்கள்.


· வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும்.
உறவினர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன்
மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.


· இடப்புறக் கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் வறுமை, உயர்வு என இரண்டு விதமான வாழ்க்கையை மாறி, மாறி அனுபவிப்பார்.


· வலது காதில் மேல் நுனியில் மச்சம் இருந்தால் தண்ணீரில் கண்டம் இருக்கக்கூடும்.


· இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும்.


· இரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால் அவர் அதிர்ஷ்டக்காரர். பேச்சுதிறன், பிறரை
வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் எல்லாமும் அவரை வந்தடையும்.


· தொண்டையில் மச்சம் இருந்தால் திருமணத்தின் மூலம் அவர்களுக்குச் சொத்து கிடைக்கும்.


· கழுத்தின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் பங்காளிகளின் மூலம் பெயரும், புகழும், சொத்தும் கிடைக்கும்.


· கழுத்தின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர் மிதமான நலன்களுடன் வாழ்வார்.


· இடது மார்ப்பில் மச்சம் இருந்தால் ஆண் குழந்தைகள் நிறைய பிறக்கும். பெண்களிடம் மிகுந்த பாசமாக பழகுவார்.


· வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண்கள் குழந்தைகள் நிறைய பெற்றிடுவார்.


· மார்பின் மேல் புறத்தில் மச்சம் இருந்தால் பிறர் விஷயங்களில் தேவையில்லாம தலையிடும்
குணத்துடன் இருப்பார். அமைதியான சுபாவமும் கடுமையான உழைப்பாளியாகவும்
இருப்பார்.


· வயிற்றின் மீது மச்சம் உள்ளவர்கள் பொதுவாக பெறாமை குணம் நிறைந்தவராக இருப்பார்கள்.


· வயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால் நல்ல குணங்களையும் உழைத்து வாழ விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.


· வயிற்றில் கீழ்பக்கத்தில் மச்சம் இருந்தால் பலவீனமானவனாக இருப்பான்.


· தொப்புள் மீது மச்சம் இருந்தால் அவன் வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக இருப்பான்.
· வலது தோளில் மச்சம் இருப்பவர் சின்ன சின்ன விஷயக்களுக்கு கூட மனதை அலட்டிக் கொள்வார்.
· வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்ல நண்பர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள்.
· இடது உள்ளங்கையில் மச்சம் உள்ளவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டு கஷ்டப்படுவார்கள்
· முதுகில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவும், பக்திமான்களாகவும் இருப்பார்கள்.
· முதுகின் வலப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் பயந்த சுபாவம் உள்ளவராக இருப்பார்.
· முதுகின்
இடப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் சிறப்பான வாழ்க்கையை
பெற்றிருப்பார். தீவிரமாக ஆலோசித்து பிறகு எந்த காரியத்தையும் செய்யும்
மனநிலை அவருக்கு இருக்கும்.புருவங்களுக்கு மத்தியில் & நீண்ட ஆயுள்

நெற்றியின் வலது புறம் & தனயோகம்

வலது புருவம் & மனைவியால் யோகம்

வலது பொட்டு (நெற்றி) & திடீர் அதிர்ஷ்டம்

வலது கண் & நண்பர்களால் உயர்வு

வலது கண் வெண்படலம் & புகழ், ஆன்மீக நாட்டம்

இடது புருவம் & ஏற்ற, இறக்கம், செலவாளி

மூக்கின் மேல் & சுகபோக வாழ்க்கை

மூக்கின் வலதுபுறம் & நினைத்ததை அடையும் அம்சம்

மூக்கின் இடதுபுறம் & கூடா நட்பு, பெண்களால் அவமானம்

மூக்கின் நுனி & ஆவணம், கர்வம், பொறாமை

மேல், கீழ் உதடுகள் & அலட்சியம், காதல் வயப்படுதல்

மேவாய் (உதடுகளுக்கு மேல்) & செல்வாக்கு, இசை, கலைத்துறையில் நாட்டம்

வலது கன்னம் & வசீகரம், தயாள குணம்

இடது கன்னம் & ஏற்றத்தாழ்வு

வலது காது நுனி & சில கண்டங்கள் வரலாம்

இடது காது நுனி & தகாத சேர்க்கை, அவமானம்

காதுகளின் உள்ளே & பேச்சாற்றல், திடீர் யோகம்

தொண்டை & திருமணத்துக்கு பிறகு யோகம்

கழுத்தின் வலதுபுறம் & சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை

இடது மார்பு & ஆண் குழந்தைகள் அதிகம், பெண்களால் விரும்பப்படுவார்

வலது மார்பு & பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர்

வயிறு & பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை

அடிவயிறு & திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார, ஆடம்பர வாழ்க்கை

புட்டம் & அந்தஸ்து உயரும், செல்வச் செழிப்பு

பெண்களுக்கான மச்ச பலன்


ஒரு பெண்ணின் நெற்றியில்
குங்குமம் வைத்துக் கொள்கிற இடத்தில் மச்சம் இருந்தால் அவளுக்கு உயர்
பதவியிலும் பெரிய அந்தஸ்திலும் உள்ள லட்சாதிபதியான கணவன் அமைவான். அவனுக்கு
வாழ்க்கையில் எல்லா வசதி, வாய்ப்புகளும் கிடைக்கும்.

நெற்றியின் வலது புறத்தில் சிவந்த மச்சம்
இருந்தால் அப்பெண் அதிர்ஷ்டம் நிறைந்தவளாக இருப்பாள். தன்னம்பிக்கை
மற்றும் தைரியம் மிக்கவளாக இருப்பாள். யார்க்கும், எதற்கும் அடங்கிப் போகாத
குணம் இருக்கும்.

நெற்றியின் இடது புறத்தில் சிவந்த மச்சம்
இருந்தால் அப்பெண் ஒழுக்கத்தில் சிறந்தவளாக இருப்பாள். அதே மச்சம்
கருப்பாக இருந்தால் அப்பெண் அற்பகுணம் உடையவளாகவும், வேண்டாத நபர்களின்
சகவாசம் உள்ளவளாகவும் இருப்பாள்.

மூக்கின் மீது எங்காவது மச்சம் இருந்தால் அப்பெண் எடுத்த காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் மிகுந்தவளாக இருப்பாள்.

மூக்கின் நுனிப்பகுதியில் மச்சம் இருந்தால் அப்பெண்ணுக்கு அமையும் கணவர் மிகப்பெரிய செல்வந்தராக இருப்பார்.

மேல் உதடு அல்லது கீழ் உதட்டில் மச்சம் இருந்தால் அவள் அதிர்ஷ்டம் மிகுந்தவளாக, நல்லொழுக்கம் உடையவளாக, வாசனை பொʊருட்களின் மீது பிரியம் உள்ளவளாக, சிறந்த கணவனை அடைந்தவளாக இருப்பாள்.

மோவாயில் மச்சம்
உள்ளவள் மிக உயர்ந்த எண்ணங்களைப் பெற்றிருப்பாள். பொறுமையும், அமைதியும்
அவளின் உடன் பிறந்ததாக இருக்கும். குணத்திலும், தோற்றத்திலும் அழகான ஆணை
கணவராக அடைந்திடுவாள்.

இடது கன்னத்தில் மச்சம் உள்ளவள் மற்றவர்களை வசீகரிக்கும் ஆற்றல் உள்ளவளாக இருப்பாள். அவள் விரும்பியதை செய்து முடிக்க பலர் காத்திருப்பார்கள்.

வலது கன்னத்தில் மச்சம் உள்ளவர்கள் கஷ்டங்கள் பலவற்றை சந்தித்து முன்னேற்றம் அடையும் திறனைப் பெற்றிருப்பாள். கஷ்டமும்_சந்தோஷமும் சமமாக அனுபவிப்பாள்.

கழுத்தில் வலப்புறத்தில் மச்சம் உள்ளவள் முதல் பிரசவத்தில் ஆண் குழந்தையை பெறுவாள். பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டிற்கும் அதிர்ஷ்டத்தை தேடித் தருவாள்.

தலையில் மச்சம்
தலையில் எங்கு மச்சம்
இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் பேராசையும், பொறாமை குணமும் நிறைய இருக்கும்.
வாழ்க்கையில் சந்தோசமோ, மன நிறைவோ இருக்காது.

ஆடம்பர வாழ்வு
நெற்றியின் நடுவில்
மச்சம் இருந்தால் அவள் அதிகார பதவியில் அமர் வாள். ஆடம்பர வாழ்வு
கிடைக்கும். செய்வது எல்லாம் வெற்றியாகும். இரு புருவத்துக்கிடையே மச்சம்
இருந்தா லும் மேற்சொன்ன பலனே. நெற்றியில் வலது பக்கம் மச்சம் இருந்தால்
வறுமை வாட்டும். ஆனாலும் நேர்மையுடன் வாழ்வாள்.

கன்னத்தில் மச்சம்
காதுக்கும்,
கண்ணுக்கும் இடையே உள்ள கன்னப் பகுதியில் இடது பக்கம் மச்சம் இருந்தால்
வாழ்க்கை வசதிகர மாக இருக்கும். சந்தோசம் குடிகொண்டு இருக்கும். இதுவே
வலதுபக்கம் என்றால் வறுமை வாட்டும்.

இடது தாடையில் மச்சம்
இருந்தால் ஆள் அழகாக இருப்பாள். ஆண்கள் இவளைத் துரத்தித் துரத்திக்
காதலிக்கத் துடிப்பார்கள். நற்குணமுடையவள். வலது தாடையில் மச்சம் என்றால்
பிறரால் வெறுக்கப்படுவாள்.

கண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்றமும், இறக்கமும் நிறைந்ததாக இருக்கும்.
அந்தஸ்து
மூக்கு மீது மச்சம்
இருந்தால் மிகப் பெரிய அதிர்ஷடம். நினைத்ததெல்லாம் நடக்கும். ஆடம்பர
வாழ்வு, அந்தஸ்து இருக்கும். சமூக மதிப்பு கிடைக்கும்.

காதுகளில் மச்சம்
இருந்தால் ஏகப்பட்ட செலவு செய்வார்கள். என்ன செலவு செய்தாலும் அதற்குத்
தக்கபடி பணமும் வரும். சமுதாயத்தில் இவர்களுக்கு தனி மதிப்பு இருக்கும்.

நாக்கில் மச்சம் இருந்தால் அவள் கலைஞானம் கொண்டவளாக இருப்பாள். ரசனை அதிகம் இருக்கும்.

கழுத்தில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் 7 முறை அதிர்ஷடம் அடிக்கும்.

இடதுபக்க தோளில் மச்சம் கொண்டவள் ஏகப்பட்ட சொத்துகளுக்கு அதிபதியாவாள். பரந்த மனப்பான்மையுடன் பிறருக்கு தான தர்மம் செய்யும் குணம் இவளிடம் இருக்கும்.

மார்பில் மச்சம்
பெண்ணின் இடதுபக்க
மார்பகத்தில் வலது பக்கமாக மச்சம் இருந்தால் வாழ்வில் படிப்படியாக
முன்னேறுவாள். அதுவே இடதுபுறமாக மச்சம் இருந்தால் உணர்ச்சிகள் அதிகம்
இருக்குமாம். வலது பக்க மார்பில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில்
போராட்டம் இருக்கும்.

நெஞ்சின் இடப்பகுதியில் மச்சம் இருந்தால் அவளுக்கு காலாகாலத்தில் திருமணம் நடக்கும். நல்ல கணவன் அமைவான்.

தொப்புளுக்கு மேலே, வயிற்றில் மச்சம் காணப்பட்டால் அமைதியும், இன்பமும் கலந்த வாழ்க்கை அமையும். பிறரால் போற்றப்படுபவளாக இருப்பாள்.

தொப்புளில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை. தொப்புளுக்கு கீழே மச்சம் இருந்தால் வறுமையும், செல்வமும் மாறி மாறி வரும்.

முதுகில் மச்சம்
கண்களுக்குத்
தெரியாமல் முதுகில் எங்கு மச்சம் இருந்தாலும் துணிச்சலான காரியங்கள் அந்தப்
பெண்ணிடத்தில் இருக்கும். வாழ்க்கை வசதிகரமானதாக இருக்கும். உடலில்
ஆரோக்கியம் திகழும்.

உள்ளங்கை, முழங்கை,
மணிக்கட்டு ஆகியவற்றில் எங்கு மச்சம் இருந்தாலும் அவளது குடும்பம் இனிமையாக
இருக்கும். கலாரசனை உடைய பெண் இவள். சிறந்த நிர்வாகியும்கூட.

பிறப்புறுப்பில் மச்சம் இருக்கும் பெண்ணைவிட வேறு ஒரு அதிர்ஷடசாலி பெண் இருக்க மாட்டாள். உயர்ந்த பதவிகள் தேடி வரும்.

தொடை
இடதுதொடையில் மச்சம்
இருந்தால் படிப்படியாக கஷடப்பட்டு வாழ்க்கையில் மிக உன்னத நிலைமை அடைவாள்.
வலது தொடையில் மச்சம் என்றால் தற்பெருமையும் அடங்காபிடாரித் தனமும்
இருக்கும்.

இடது முழங்காலில் மச்சம்
இருக்கும் பெண், புத்தி கூர்மையானவளாகவும், தன்னம்பிக்கை உடையவளாகவும்
இருப்பாள். அதுவே வலது முழங்காலில் என்றால் அவள் பிடிவாதக்காரி.

ஆதாரம்: சாமுத்ரிகா லட்சணம் நூல்.

நெற்றி நடுவே & புகழ், பதவி, அந்தஸ்து

நெற்றி வலதுபுறம் & தைரியம், பணிவு இல்லாத போக்கு

நெற்றி இடதுபுறம் & அற்ப குணம், டென்ஷன், முன்கோபி

மூக்கின் மேல் & செயல்திறன், பொறுமைசாலி

மூக்கின் இடதுபுறம் & கூடா நட்பு, பெண்களால் அவமானம்

மூக்கின் நுனி & வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள்

மேல், கீழ் உதடுகள் & ஒழுக்கம், உயர்ந்த குணம்

மேல் வாய் பகுதி & அமைதி, அன்பான கணவர்

இடது கன்னம் & வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு

வலது கன்னம் & படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை

வலது கழுத்து & பிள்ளைகளால் யோகம்


நாக்கு & வாக்கு பலிதம், கலைஞானம்
கண்கள் & கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்

இடது தோள் & சொத்து சேர்க்கை, தயாள குணம்

தலை & பேராசை, பொறாமை குணம்

தொப்புளுக்கு மேல் & யோகமான வாழ்க்கை

தொப்புளுக்கு கீழ் & மன அமைதியின்மை, பொருள் நஷ்டம்

தொப்புள் & ஆடம்பரம், படாடோபம்

வயிறு & நல்ல குணம், நிறைவான வாழ்க்கை

அடிவயிறு & ராஜயோக அம்சம், உயர்பதவிகள்

இடது தொடை & தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள்

வலது தொடை & ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை

புட்டங்கள் & சுகபோக வாழ்க்கை, எதையும் சாதிக்கும் வல்லமை 1. இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள்.
 2. நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும்.
 3. வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார்.
 4. வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும்.
 5. வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும்.
 6. வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார்.
 7. இரு கண்களில் ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பல பிரச்சனை சந்திப்பார்கள்.
 8. இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர்
  வாழ்க்கை சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் அவர் ஏதேனும் ஒரு
  வன்முறை சம்பவத்தை சந்திப்பார்.
 9. இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும்.
 10. இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும் இருப்பினும் அதை சமாளிக்கும் பக்குவமும் இருக்கும்.
 11. இடது கண்ணின் வலப்புறத்தில் சொத்து விஷயங்களில் சங்கடங்களை சந்திப்பார்கள். இருப்பினும் ஓரளவுக்கு சொத்தை சேகரித்து விடுவார்கள்.
 12. இடது கண்ணின் இடப்புறத்தில் மச்சம் இருந்தால் உறவினர்களுடன் பிரச்சனை
  ஏற்பட்டு தனிநபர் ஆவார்கள். இருப்பினும் அவர்களது வாழ்நாளின்
  பிற்பகுதியில் அதிர்ஷ்டத்தை அடைவார்கள்.
 13. மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா சௌகரியமும் பெற்றிடுவார்கள்.
 14. மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.
 15. மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதை நம்பாதவர்களாக
  இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பு_சிநேகமும் இவர்களுக்கு இருக்கும்.
 16. மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக
  இருப்பார்கள், சற்றே கர்வமும், சற்றே பாதுகாப்பு உணர்வும் இவர்களிடம்
  மிகுந்திருக்கும்.
 17. மூக்கின் கீழே மச்சமுள்ளவர்கள் கேடான வழிகளில் பணத்தை செலவிடுபவர்களாக இருப்பார்கள்.
 18. நாசித்துவாரங்களுக்கு மேலே மச்சம் உள்ளவர்கள நவநாகரீக மோகமுள்ளவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கையை கொண்டிருப்பார்கள்.
 19. மேல் உதட்டிலோ அல்லது கீழ் உதட்டிலோ மச்சம் இருந்தால் அவர்கள் காதல் உணர்வு மிகுந்திருப்பார்கள்.
 20. மோவாயில் மச்சம் இருந்தால் செல்வாக்கு, புகழ் இவற்றோடு சமூகத்தில் நல்ல மதிப்பு பெற்றிருப்பார்கள்.
 21. மோவாயின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மேடு, பள்ளமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள், கல்வியறிவும் குறைவாக இருக்கும்.
 22. மோவாய்க்கு அடியில் மச்சம் இருந்தால் அவர்கள் இசையில் வல்லுநர்களாக இருப்பார்கள்.
 23. வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி
  இருக்கும். உறவினர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள். எப்பொழுதும் சிரித்த
  முகத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
 24. இடப்புறக் கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் வறுமை, உயர்வு என இரண்டு விதமான வாழ்க்கையை மாறி, மாறி அனுபவிப்பார்.