ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Monday, October 15, 2012

12ம் இடம் - விதியை வெல்ல, பரிகாரங்கள்




விதியை வெல்ல முடியாது. ஜோதிடத்தில் கூறப்பட்டவை கண்டிப்பாக நடந்தே தீரும். மாற்று கிடையாது.
ஆனால் அதை எவ்வாறு நாம் அனுபவிக்கப் போகிறோம் என்பது தான் ஜோதிடம் கூறும் சூட்சுமம். ஜோதிடத்தில் 12 பாவங்கள் ஆனால் அனைவருக்கும் 337 பரல்கள் (மதிப்பெண்கள்) தான். அப்படியிருக்க ஒரு பாவம் பலவீனமானால் கண்டிப்பாக மற்றொரு பாவம் பலமாகத்தான் இருக்கும் அப்படி இருக்கும் பாவ பலத்தை நாம் எப்படி நம் விதிகளுக்கு பயன் படுத்தப் போகிறோம் என்பது தான் இந்த சூட்சுமம். இது ஜோதிடத்தை உணர்பவர்களுக்கு மட்டுமே தெரிய வரும்.
உதாரணமாக
12ம் இடம் சம்பந்தப்பட்ட திசா புத்தி அந்தர சூட்சும காலங்களில் விரயம் நட்டம் செலவுகள் நடக்கும் என்பது ஜோதிட விதி. இந்த விதியை எப்படி மதியால் வெல்லலாம் என்று பார்ப்போம்.
செலவு என்பது என்ன? எதிர்காலத்திற்கு பயன்படாத ஆனால் நிகழ்காலத்தில் பயன்படக்கூடிய ஒன்று. விரயம் என்பது நம்மையறியாமலே நடக்கக்கூடிய செலவு. நட்டம் என்பது எதிர்பார்த்த அளவு பயன் கொடுக்காமல் இருப்பது.
மொத்தத்தில் கையில் உள்ள பணம் வெளியே போய்விடுவது.
  1. நீங்கள் செலவு செய்யாமல் சொத்தாக மாற்றி விடுவதன் மூலம் இந்த செலவு நாளைய சொத்தாக மாறிவிடும்  அதற்கு உங்கள் ஜாதகத்தில் சொத்தது வாங்கும் யோகம் இருப்பின்.
  2. இல்லையென்றால். புண்ணிய காரியத்திற்கு செலவு செய்தால் அந்த புண்ணியம் உங்களுக்கு நல்ல திசா காலங்களில் பயன் படும்.
  3. தொழில் உள்ளவர்கள் விற்காத சரக்கை மிகக் குறைந்த விலைக்கு விற்பதன் மூலம் இலாபம் அடையலாம்.
பணம் மட்டுமே விரயம் என்பதில்லை. நோய்கள் விபத்துகள் வீண் அலைச்சலகள் மூலம் கூட நமக்கு 12ம் இடம் பாதிப்பைத் தரலாம். அதற்கு என்ன செய்வது.
1. வாகனங்களை முறையாக பராமரிப்பது. அதுவும் செலவுதான் விபத்தைத் தவிர்க்க உதவும்.
2. ரத்த தானம் செய்வது ரத்தம் வெளியேறுவதற்குச் சமம் தான்.
3. அடிக்கடி மருத்துவமனைகள் சென்று நோயாளிகளுக்கு உதவுவது. உங்கள் பணம் நோய்க்கு செலவிடப்படுகிறது.
4. அடிக்கடி உடல் பரிசோதனை செய்து கொள்வதும் மருத்துவம் எடுத்துக் கொள்வதற்குச் சமம் தான்.
மொத்தத்தில் நீங்கள் உங்களுக்கு விதிக்கப்பட்டதை அனுபவிக்கிறீர்கள் ஆனால் அது உங்கள் விருப்படி அமைகிறது. உங்களின் தேவைகளை நிறைவேற்றுகிறது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் முடிவு தான் மதி. அந்த மதி உங்களின் விதியை மாற்றுகிறது எனக் கூறலாம். உண்மையில் உங்களுக்கு விதிக்கப்பட்டதை நீங்கள் உணரும் போது அதற்கான விடைகளைத் தேடும் போது அது நடைபெறுகிறது.
இப்படி எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு நம்மிடம் உண்டு. ஆனால் நம் ஜாதகத்தில் எந்த பாவம் பலம் எது நல்ல கிரகம் எந்த செயலை எப்பொழுது செய்ய வேண்டும் என்று தெரிந்திருந்தால் மட்டுமே இது சாத்தியம்.
ஆனால் எல்லாராலும் ஏன் இது சாத்தியப்படவில்லை. ஏன் ? அவர்களுக்கு மனோகாரகன் சரியில்லை அதாவது மதி வேலை செய்யவில்லை. அவர்கள் ஜோதிடத்தை உணரவில்லை என்பது தான்.


பரிகாரங்கள்

பரிகாரங்கள், நேர்த்திக் கடன்கள் போன்றவை  எந்தக் காலத்திலும் வீண்போகாது. பகவானுக்காக செலவழிக்கும் பணமும் நேரமும் நிச்சயம் பலன்  தரும். ஒரு சிலருக்கு உடனே பலன் கிடைக்கிறது. சிலருக்கு சிறிது தாமதமாகிறது. இதற்குக் காரணம் அவர்களின் பூர்வகர்ம வினைப்படி அமைந்த  ஜாதக அம்சம்தான்.


ஜோதிடத்தில் பரிகாரங்கள் என்பவற்றிற்கு இடமுண்டு என்றாலும் எல்லோருக்கும் பரிகாரங்களால் நன்மை விளையாது. நம்மால் ஓரளவிற்குத் தான் கர்ம வினைகளின் செயலாற்றலைக் குறைக்க முடியும். முற்றிலுமாகக் கர்மாவை மாற்றி அமைக்க இயலாது. கர்மவினைகளை அனுபவித்துக் கழித்து அதனை 0 ஆக்குவதே சிறந்தது. அது மிகக் கடுமையானதாக இருந்தபோதும் கூட. ஆனால் எல்லோராலும் கர்மவினைகளை அப்படி அனுபவித்திட இயலுமா என்ற கேள்வி எழும் போது, அங்கே விதி என்பதும், விதியை மதியால் வெல்லலாம் என்ற கோட்பாடும் உதவிக்கு வருகிறது. விதியை மதியால் வெல்லலாம்தான் ஆனால் அதற்கும் விதி இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். அதாவது கர்ம வினைகளைக் குறைத்துக் கொள்ள, அல்லது மாற்ற ஜாதகத்தில் இடமிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அது பலனளிக்காது. அதற்குத் தேவை குருவருள்.



பரிகாரம் என்றதும் நிறைய பணம் செலவு செய்து செய்வது என்று பொருள் அல்ல. இறைவனை மனதால் நினைத்து வணங்குவது, மற்றவர்களுக்கு உதவுவது, பிறர் துன்பம் போகும் வகையில் நற்ச்செயல்களை செய்வது தான்.
 
குறிப்பாக இந்த பூஜை, வழிபாடுகள், நேர்த்திக் கடன்கள், பரிகாரங்கள் பலன் தர வேண்டும் என்றால், நாம் பரிகாரம் செய்ய ஆரம்பிக்கின்ற நாள்  நல்ல சுப நாளாக இருக்க வேண்டும். எந்த கிரகத்திற்கு பரிகாரம் செய்கிறோமோ அந்த கிரகம் நீசம், வக்ரம் அடையாமல் இருக்க வேண்டும். நம்  ஜாதகப்படி நல்ல தசா புக்திகள் நடைபெற வேண்டும். ஹோமம், யாகம் செய்யும் நாளில் நல்ல லக்னத்தில், நல்ல சுபகிரக பார்வை உள்ள நேரத் தில் ஆரம்பித்து செய்ய வேண்டும்.

ஒருவருக்கு ஜாதகத்தில் லக்கினத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ அல்லது தற்போது நடக்கும் தசா, புக்தி நாதனுக்கோ குருவின் பார்வை, அல்லது தர்மஸ்தானமான 9 - ம் அதிபதியின் பார்வையோ இருந்தால்தான் அவர்களுக்குப் பரிகாரத்தினால் பலன் உடனடியாகக் கிடைக்கும். இல்லையெனில் பலன் கிடைக்க தாமதம் ஆகும்

குறிப்பிட்ட தோஷ நிவாரணத்திற்காகச் செய்யப்படும். பரிகாரம் காலச்சூழலில் பலன் தருவதை வைத்து தான் உணர்ந்து கொள்ள முடியும்.  ஆனால் உடனடியாகப் பலன்கள் ஏற்பட்டு விடும்.  என்று பலர் நம்புகிறார்கள்.  இது தவறான எதிர்பார்ப்பாகும்.  எனவே கிரக பரிகாரங்கள் பலன் தருவதற்குக் குறைந்த பட்சம் 3 மாதங்களாவது ஆகலாம்.  3லிருந்து 6 மாதத்திற்குள் பிரச்சினையின் வேகம் குறைய அரம்பிக்கவில்லை என்றால் பரிகாரம் பலன் தரவில்லை அல்லது சரியான பரிகாரம் செய்யப்படவில்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.