ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Wednesday, January 11, 2012

கீதாசாரமும் ஜோதிடமும்

எது நடந்ததோ, அது நன்றாகவே, நடந்தது

எது நடக்கிறதோ, அது நன்றாகவே, நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்

உன்னுடையதை எதை நீ இழந்தாய்? எதற்காக நீ அழுகிறாய்?எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?

எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு ?எதை நீ எடுத்து கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்


ஜோதிடம் ஓர் அறிமுகம்:
ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜனன சுகதுக்கத்தை அறிய ஒரு ஜாதகம் எழுத ஆரம்பிக்கும் போது
ஜெனனி ஜென்ம சௌக்கியானாம்
வர்ததினி குல ஸம்பதாம்
பதவி பூர்வ புண்ணியானாம்
லிக்கியதே ஜன்ம பத்திரிகா.
முன் வினைப் பயனில் தான் பிறப்பு ஏற்படுகிறது. முன்வினைப் பயனில் தான் பிழைப்பு ஏற்படுகிறது. நம்முடைய பூர்வ புன்னியம் தான் இப்பிறவியல் நாம் அனுபவிக்கிற சுக துக்கங்களுக்கு காரணமாய் அமைகிறது. நாம் செய்கின்ற வினைகளே நமக்கு அடுத்தப் பிறவியைத் தோற்றவிக்கிறது என்பதனை இதன் மூலம் அறிகிறோம்.ஜோதிடம் பொதுவானது. யாருக்கும் சொந்தமானதில்லை
. ஒவ்வொருவரும் ஜோதிட நூல்களைப் படித்து, எழுதினால் தவறில்லை.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவானது இந்த ஜோதிடக்கலை. இன்று அண்ணாமலை பல்கலைகழகம்,மதுரை காமராஜர் பலகலைகழகம் போன்றவையும் ஜோதிடத்துக்கு என்று பட்டயம் வழங்கி பாடம் சொல்லி தருகின்றன.இவர்கள் நடத்தும் பாடங்கள் மிக நுணுக்கமாகவும் ,பழம்பெருமையும் ,கிரக கணக்கீடுகள் துல்லியமாகவும் இருக்கின்றன.ஜோதிடம் என்பதே கணக்குதான்.அறிவுகிரகம் புதன் வலுத்தவர்களும்,ஆன்மீக உணர்வை தருகிற ,பிறருக்கு நல்ல வழிகாட்டியாக திகழ வைக்கும் குருவும் ,வலுத்தவர்களும் தான் இக்கலையில் பிரகாசிக்க முடியும்.அதே போல மன திடம் தருகிற சந்திரனும் நன்கு அமைய வேண்டும்.இவை லக்னத்தில் இருந்து வாக்கு ஸ்தானம்,பத்தாமிடம் எனும் தொழில் ஸ்தானம் போன்றவற்றில் சிறப்பாக அமைய வேண்டும்.அவர்கள்தான் இதை படிக்க முடியும்.தொழிலாக செய்ய முடியும்


1,4,7,10 போன்ற கேந்திர ஸ்தானத்திலோ அல்லது வாக்கு ஸ்தானம் என்று சொல்லப்படும் இரண்டாம் வீட்டிலோ புதன் இருந்து ,புதன் கெட்டு போகாமல் இருந்து குருவின் பார்வையும் கிட்டிவிட்டால் அவன் மிக சிறந்த ஜோதிடனாக உருவெடுப்பான்


ஜோதிடத்தில் புலமை பெரும் ஜாதக அமைப்புகள் ;

தஸாம்ஸத்தில், நவாம்சத்தில், அல்லது இராசியில் ;

1)
எந்த லக்கினத்திற்கு 1,5,9,அதிபதிகள் .அல்லது 10,11,அதிபதிகள் சம்பந்தம் பெற்று ரிஷப இராசியில் இருப்பது .

2)
லக்கினத்திற்கு இரண்டாம் அதிபதியும் புதன்பகவானும் பலம் பெற்று கேந்திரத்தில் இருப்பது அல்லது 3,6,10,11. இருப்பது.

3)
லக்கினாதிபதியுடன் சுக்கிரபகவான் பலம் பெற்று சம்பந்தம் பெறுவது.
அல்லது சுக்கிரன்பகவான... இரண்டாம் பாவத்தில் பலம் பெற்று இருப்பது.
ஐந்தாம் ஆறாம் அதிபதிகள் இணைந்து இருப்பது .

பத்தாம் அதிபதியும் பதின்னொனம் அதிபதியும் இணைந்து இருப்பது.

சூரியபகவானுக்கும் , சந்திரபகவானுக்கும் , லக்கினத்திற்கும் இதில் ஒன்று மேலே குரிப்பிட்டதுப்போல் அமையுமானால் ஜோதிடத்தில் புலமை தரும் .

4)
அந்தணன் எனும் குருபகவானும் சேய் எனும் செவ்வாய்பகவானும் கூடி வலிமையான இடங்களில் அமர்ந்திருந்தால் ஜாதகன் எந்த லக்கினத்தில் பிறந்திருந்தாலும் ஜாதகன் நற் குணங்கள் உடையவன் கவித் திறமையுடையவன் ஜோதிடத்தில் கணிதத்தில் திறமையுடையவன் .

5)
சேய் எனும் செவ்வாய்பகவானும் மதிமகன் எனும் புதன்பகவானும் கூடி வலிமையுடன் சுபஸ்தானங்களில் அமையுப் பெற்ற ஜாதகன் செல்வந்தர்களால் மதிக்கப்படுவான் பண்டிதன் செல்வமுடையவன் புகழ் பெறுபவன் பிறர்மதிக்கும் அறிவாற்றலும் உடையவன் .

6)
ஜனன ஜாதகத்தில் சேய் எனும் செவ்வாய்பகவானும் வெள்ளி எனும் சுக்கிரபகவானும் சேர்ந்து சுப ஸ்தானங்களில் இருந்தால் ஜாதகன் அசட்டுத்தனமான பிடிவாதமுடையவன் முட்டாள்தனமான வாதம் செய்து துன்பப்படுபவன் .

7)
கதிர் எனும் சூரியபகவானும் மதிமகன் எனும் புதன்பகவானும் சேர்ந்து சுப ஸ்தானங்களில் அமைந்துள்ள ஜாதகன் பிறந்த லக்கினம் எதுவாக இருந்தாலும் சொந்த வீடுஉடையவன் செல்வ வசதிபெறுபவன் பலவித பாக்கியங்களை அடைவான்


அடிப்படை ஜோதிட நூல்கள் 

தமிழில் ஜோதிட நூல்களை பொறுத்தவரை மொத்தம் 66 உள்ளன,அவற்றில் சாதக அலங்காரம் முக்கியமானது.இதை கீரனூர்நடராஜன் எழுதினார். மங்களேஸ்வரியம், வீமகவி ஜோதிடம்,சாதகசூடாமணி, சினேந்திரமாலை, தாண்டவமாலை,சாதக சிந்தாமணி,சந்திர காவியம்,ஆனந்த களிப்பு , புலிப்பாணி ஜோதிடம்,அவசியம் படிக்க வேண்டிய நூல்கள்.

தனிப்பட்ட முறையில்  யாரும் ஜோதிடத்தை உரிமை கோரக் கூடாது என்பது தான் கீதையின் உபதேசம் ஒரு நல்ல சோதிடருக்கு பின்வரும் ஐந்து அம்சங்கள் இருக்கவேண்டும்.

1.
குரு பாரம்பரியம் வேண்டும்.

இப்போது ஓய்வு பெற்ற பலர் ஒருவாறு பஞ்சாங்கம் பார்க்கத் தெரிந்து ஒன்றிரண்டு சோதிடப் புத்தகங்களைவாசித்து அறிந்துவிட்டு சோதிடராக உலா வருகின்றார்கள். இது பணம் சம்பாதிக்கமட்டுமல்... மற்றவர்களுடைய கவனத்தை ஈர்க்கவும் ஒரு சுலபமான வழி. அடுத்தமுறை ஒரு குடும்ப ஒன்றுகூடலிலோ அல்லது விழாவிலோ நீங்கள் ஒருவருக்கு கை ரேகை சோதிடம் அல்லது எண் சோதிடம் சொல்லிப் பாருங்கள்; கொஞ்ச நேரத்தில் எத்தனை பேர் உங்களைச் சூழ்ந்து கொள்வார்கள் என்று. நீங்கள் புறப்படும்போது பலருக்கு உங்கள் தொலைபேசி இலக்கம் வேறு கொடுத்துவிட்டு வரவேண்டியிருக்கும். இதற்கு எந்தவித சோதிடமும் தெரிந்திருக்கத் தேவையில்லை.

2.
வாக்கு சித்தி வேண்டும்.

இதற்கு சோதிடருடைய சாதகத்தில் இரண்டாமிடமாகிய வாக்குத்தானம், அதன் அதிபதி என்பன பலம் பெற்றிருக்க வேண்டும். இது சோதிடத்துக்கு மட்டுமல்ல வைத்தியம், வர்த்தகம், அரசியல் போன்ற எல்லா துறைகளுக்கும் பொருந்தும்.

3.
சோதிடருடைய சாதகத்தில் அவருக்கு சோதிடம் கை வருவதற்குரிய பலன் இருக்க வேண்டும்.

குறிப்பாக புதன் பலம் பெற்று நன்னிலையில் இருக்க வேண்டும். குரு நன்னிலையில் இருந்தாலும் சோதிடக்கலை கை வரும்.பத்தில் கேது தனித்து இருத்தல் சிறப்பு

4.
தெய்வ வழிபாடு இருக்க வேண்டும்.

சோதிடம் வேதங்களின் ஆறு அங்கங்களில் ஒன்று. இது ஒரு தெய்வீகக் கலை. ( எக்கலை தெய்வீகம் இல்லை என்று கேட்காதீர்கள்) இதை பாவித்து பலன் சொல்லுபவர்கள் தினமும் தவறாது தமது தனிப்பட்ட ஆத்மார்த்த பூசை வழிபாடுகள் செய்து ஒழுகி வர வேண்டும். ஏனென்றால் சோதிடம் ஒரு வழிகாட்டலே தவிர முடிந்த முடிபல்ல. தெய்வ சித்தம் என்பது எல்லாவற்றையும் மாற்றி அமைக்கும் வல்லமை வாய்ந்தது. இதில் பல அனுபவங்கள் உள்ளன.

5.
ஆதரவாக ஆலோசனை சொல்லும் பாங்கு வேண்டும்.

சில சோதிடர்கள் உனது குடும்பம் இந்த வருட இறுதிக்குள் பிரியும் என்றும்; உனது தாயார் இந்த மாத இறுதிக்குள் காலமாவார் என்றும்; உனது துணைவி உன்னை விட்டு நீங்குவார் என்றும் சோதிடம் சொல்லி அனுப்புவதை பார்க்கிறோம். அவர்கள் கணிப்பில் தவறில்லை. ஆனால் அதை சொல்லும் விதம் தவறு.