ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Tuesday, December 13, 2011

அதிர்ஷ்டம் உண்டாகும் ராசிக்கல்


மேஷம் - பவளம்:
மேஷராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிவதால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.

ரிஷபம் - வைரம் (Diamond):
ரிஷப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம் இதை அணிந்தால் மகிழ்ச்சியையும் யோகத்தையும் வசீகரத்தையும் கொடுக்கும்.

மிதுனம் - மரகதம்:
மிதுன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இது செய்யும் தொழிலில் விருத்தியும், அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது.

கடகம் - முத்து:
கடக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது முத்து. இது அமைதியும் மகிழ்ச்சியும் செல்வ விருத்தியும் அளிக்க வல்லது.

சிம்மம் - மாணிக்கம் (Ruby):
சிம்ம ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மாணிக்கம். இதை அணிந்தால் மிகுந்த அதிர்ஷ்டசாலியாகலாம்.

கன்னி - மரகதம்:
கன்னி ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இது செய்யும் தொழிலில் விருத்தியும் அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது

துலாம் - வைரம் (Diamond):
துலாம் - வைரம் (Diamond) துலாம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம். இதை அணிந்தால் மகிழ்ச்சியையும், யோகத்தையும், வசீகரத்தையும் கொடுக்கும்.

விருச்சிகம் - பவளம்:
விருச்சிக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிந்தால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.

தனுசு - கனக புஷ்பராகம். (Yellow Shappire):
தனுசு ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும் செல்வ விருத்தியையும் கொடுக்கும்.

மகரம் - நீலக்கல் (Blue Shappire):
மகர ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல். செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் கொடுக்க வல்லது

கும்பம் - நீலக்கல் (Blue Shappire):
கும்ப ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல். செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் கொடுக்க வல்லது

மீனம் - கனக புஷ்பராகம். (Yellow Shappire) :
மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும், செல்வ விருத்தியையும் கொடுக்கும்.

நவரத்தினங்களால் விளையும் நன்மைகள்வாழ்க்கை வண்டியானது நம்பிக்கை சக்கரத்தில்தான் சுழன்று கொண்டிருக்கின்றது. என்னால் இது முடியும், நான் இதைச் சாதிப்பேன், வாழ்க்கையில் நானும் உயர்வடைவேன் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லட்சியங்கள். லட்சியங்கள் இல்லாத வாழ்க்கை தண்ணீர் இல்லாத ஓடையைப் போன்றது. வறண்ட வாழ்க்கையை யாரும் விரும்புவதில்லை. எதையாவது சாதிக்க வேண்டுமென்பதே ஒவ்வொருவரின் கனவாகும். பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் வாழும் நாட்களானது லட்சியங்கள் நிறைந்ததாக இருக்கு வேண்டும்.
ஆனால் நினைத்தவுடன் நம் லட்சியங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றிட முடியாது. கேட்டவுடன் எதுவும் கிடைத்து விடாது. விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும்தான் வாழ்க்கையின் தரத்தை உயர்த்தும். இறைவன் இருக்கின்றானா? இல்லையா என்பதை ஆராய்ச்சி செய்வதைவிட, நமக்கும் மேல் ஒரு சக்தி இருக்கிறது என்பதை நம்பினால் போதும். அது எந்த உருவத்தில் இருந்தாலும் சரி.

மழை பெய்வதும், குழந்தை பிறப்பதும் நம் கையில் இல்லை என்பார்கள். ஒரு குழந்தை பூமியில் பிறந்தவுடன் அந்த தேதி, மாதம், வருடம், நேரம், பிறந்த ஊர் ஆகியவற்றை வைத்து ஜனன ஜாதகம் என்ற ஒன்றைக் கணிக்கிறோம். அந்த குழந்தை பிறந்த நேரத்தில் என்ன நட்சத்திரம் உள்ளதோ அதுவே அக்குழந்தையின் ஜனன நட்சத்திரம் ஆகும். நவக்கிரகங்களில் அந்த நட்சத்திரம் எந்த கிரகத்திற்குரியதோ,அந்த கிரகத்தின் திசைதான் அக்குழந்தைக்கு முதலில் நடைபெறும். இது தொன்று தொட்டு நடைமுறையில் உள்ளது. ஒரு மனிதனுக்கு எவ்வளவு திறமைகள் இருந்தாலும், அவனது வாழ்வில் கிடைக்கும் வெற்றிகளை வைத்தே அவனுடைய பெயரையும் புகழையும் உயர்த்தும் நல்வாழ்வு கிடைக்கும்.

அதுவே தொட்டதெல்லாம் தோல்வியாகும் போது மனம் உடைந்து போகிறான். ஏனிந்த அவலநிலை என யோசிக்கிறான். உடல் நிலை சரியில்லாதபோது டாக்டரைத் தேடி ஓடுவதைப் போல வாழ்க்கை நிலை சரியில்லாதபோது அவனுடைய ஜனன ஜாதகம் என ஒன்றிருப்பது அவனின் நினைவுக்கு வரும்.

அப்பொழுது ஜனன ஜாதகம் கிரக நிலைகள் என்ன திசையில் நடைபெறுகிறது, அத்திசையில் விளையும் நன்மை தீமைகள் என்னென்ன? என்பதை அறிந்து கொள்வதுடன் நவரத்தினங்களைப் பற்றியும் கேள்விப்படுகிறோம். நடைபெறும் திசை பலமற்று இருந்தால், அத்திசையை பலப்படுத்துவதற்காக அத்திசைக்குரிய நவரத்தினக் கல்லை அணிந்து கொண்டால் வாழ்வில் உள்ள பிரச்சினைகள் குறையும் என்பதையும் உணர்கிறோம்.

நவரத்தினங்கள் அணிவதிலும் நிறைய விதிமுறைகள் உள்ளன. பலர் நவரத்தினங்களை ஒன்றாக சேர்த்து அணிகிறார்கள். இது முற்றிலும் தவறானதாகும். எல்லா நவரத்தினங்களும் ஒரே நேரத்தில் நல்லதைத் செய்யும் எனக்கூறமுடியாது. சில ரத்தினங்கள் அந்த ஜாதகருக்கு தோஷத்தை தருவதாக இருந்தால் நற்பலன்கள் ஏற்படுவதற்கு பதில் எதிர்மறையான பலன்களை உண்டாக்கிவிடும். அதாவது எலி வலைக்கு பயந்து புலி வலையில் தலை வைத்ததைப் போல ஆகும். சாதாரணமாக ஒரு இரத்தினத்தை ஒரு கேரட்டிற்கு மேல்தான் அணிய வேண்டும்.

அது போல எண்கணிதப்படி இரத்தினங்ள் அணிவதும் நற்பலனைத் தரும். எண்கணிதப்படி இரத்தினங்கள் அணிவதால் வாழ்வில் முன்னேற்றங்கள் ஏற்படும். நட்சத்திரத்ரரின் அடிப்படையிலும் நவரத்தினங்களை தேர்வு செய்யமுடியும். அதிலும் குறிப்பாக நமக்கு என்ன திசை நடக்கிறதோ, அந்த திசை எந்த கிரகத்தின் ஆதிக்கத்திற்குரியதோ, அதற்கேற்ற ரத்தினங்களை அணிந்து கொள்வதே நல்லது. அப்ஙபொழுதுதான் அந்த கிரகத்திற்குரிய பலனானது திருப்பி விடப்பட்டு செய்யப்பட்டு வாழ்வில் பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றப் பலன்களை அடைய முடிகிறது.

சிலர் தவைலிக்கு கடையில் மருந்து மாத்திரை வாங்கி சாப்பிட்டேன். சரியாகி விட்டது. ஆனால் மீண்டும் வந்து விட்டது என கூறுவார்கள். அதுபோல நாமே ஒன்றை முடிவு செய்து ஏதாவது ஒரு கல்லை வாங்கி அணிந்து கொண்டு இது இப்படி, அது அப்படி என புலம்புவதை விட நல்ல ஜோதிடராக பார்த்து கலந்தாலோசித்து அதற்கேற்றவாறு நவரத்தினங்களை அணிவது சிறப்பு.

நவரத்தினங்கள் பல ஆண்டுகளுக்கு முன் பிருந்தே புழக்கத்தில் உள்ளதாக பல ஆராய்ச்சி நூல்கள் கூறுகின்றன. நமது ரிஷிகளும், பல கணித வல்லுனர்களும் ஜோதிட கலையை மேம்படுத்தி உள்ளனர். அவர்கள் ஜோதிடத்தைப் பல பிரிவுகளாக பிரித்துள்ளனர். அவற்றுள் ரத்தினக் கற்கள் பற்றிய குறிப்புகளும் முக்கியமானதாகும். மனித தோற்றம் எவ்வளவு பழமையானதோ, ரத்தினக் கல்லும் அவ்வளவு பழமையானதாகும்.

எப்படி அணிவது?


நவரத்தினங்களைச் சரியான ஜோதிடர்களை பார்த்து வாங்கும்போது அவர்களே நவரத்தினங்களை பூஜையில் வைத்து அதற்கேற்ற சக்திகளை ஏற்றி நல்லபடியாக வாழ்க்கை வளம்பெற செய்து தருவார்கள். நாமே கடையில் சென்று வாங்கும் போது வீட்டிற்குக் கொண்டு வந்து பூஜையறையில் வைத்து இறைவனை வழிபட்டு சுத்தமான பசும்பாலில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் சுப ஓரையில் அந்த ரத்தினத்திற்குரிய விரலில் அணிந்து கொள்வது நல்லது. எந்தக்கை, மற்றும் எந்த விரலில் ரத்தினக்கல் மோதிரங்களை அணிய வேண்டும் என்பதிலும் சில விதிமுறைகள் உள்ளன. அதாவது வலது கை குருவாலும், இடது கை சுக்கிரனாலும் ஆளப்படுகின்றது. உடலின் உயிர் சக்தியானது அதிகமாவது அல்லது குறைவதை வலது மற்றும் இடது கைகள் குறிக்கின்றன.

தீய கிரகத்தின் திசை நடைபெற்று அந்த தீய விளைவைக் குறைக்க ஒரு ரத்தினம் அணிய வேண்டியிருந்தால் அதனை இடது கையில் அணிய வேண்டும்.

பலம் பெற்ற கிரகத்தின் திசை நடைபெற்று அதன் பலத்தை மேலும் அதிகரிக்க அத்திசைக்குரிய கிரகத்தின் ரத்தினத்தை வலது கையில் அணிய வேண்டும்.

அதேபோல அசுபத் தன்மையுடைய கிரகத்தின் அசுபத் தன்மையைக் குறைக்க அந்த கிரகத்திற்கு எதிரான இரத்தினத்தை அணிவதும் நற்பலனை ஏற்படுத்துவதாக பண்டைய நூல்கள் கூறுகின்றன.

உதாரணமாக, ராகு திசை நடந்து ராகு அந்த ஜாதகருக்கு அசுபராக இருந்தால் கனக புஷ்ப ராகம் அல்லது புஷ்பராக கல்லை வலது கை மோதிர விரலில் அணிய வேண்டும். ஏனென்றால் புஷ்பராகவும் குருவின் ரத்தினமாகும். குருவும், ராகுவும் பகைவர்கள். இதனால் சுபகிரகமாகிய குருவின் ரத்தினத்தை அணிவதால் ராகுவால் உண்டாகக்கூடிய அசுப தன்மைகள் குறையும்.
மாணிக்கம் (RUBY) சூரியன்


மாணிக்கத்திற்கு ஆங்கிலத்தில் ரூபி (RUBY) என்று பெயர். மாணிக்கம் சிவப்பு நிறமுடைய, பூமியில் விளையக்கூடிய ஒரு கல்லாகும். ரோஸ் கலந்த சிப்பு நிறமுடையதாகவும் அல்லது சுத்த சிவப்பு நிறமுடையதாகவும் விளங்கும் இக்கற்கள் ஒளி ஊடுருவக்கூடியதாகவும், ஒளி ஊடுருவ இயலாத கல்லாகவும் இரு வகையாக கிடைகிறது. வெல்வெட் போன்ற தன்மையும் வைரத்திற்கு அடுத்த கடினத் தன்மையையும் கொண்டது மாணிக்கக் கல்லாகும்.

மாணிக்கம் மிகுந்த உயர்தரமானது. தற்போது கிடைப்பது அரிதாக இருப்பதால் இதற்கு இது தான் விலை என்று நிர்ணயிக்க முடிவதில்லை. அதனால் தான் மாணிக்கத்தை விலையில்லா மாணிக்கம் என்கிறார்கள். மாணிக்கத்தை கேரட் முறையில்தான் மதிப்பீடு செய்கிறார்கள். உண்மையான உயர்ந்த வகை மாணிக்கக் கற்கள் வைரத்தை விடவும் விலை உயர்ந்ததாகும். மாணிக்கம் பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் கிடைக்கின்றன.

உயர்தர மாணிக்கங்கள் சாதார வெளிச்சத்தில் ஒரு சிப்பு நிறத்தையும், அதிக வெளிச்சத்தில் நல்ல ஜொலிக்கும் சிகப்பையும் காட்டும். இந்தியாவில் தரம் குறைந்த ரூபிகளும், மற்றும் நல்ல அரிய வகையுள்ள ரூபிகளும் கிடைக்கின்றது. தரம் குறைந்த ரூபிகளுக்கு மைசூர் ரூபி என்று பெயர். இதில் ஒளியோ கவர்ச்சியோ இருக்காது. நேராக பூமியிலிருந்து கிடைக்கும் எந்தவொரு ரத்தினமும் ஒழுங்கற்றதாகத்தான் இருக்கும். அவற்றை சரியான முறையில் பட்டை தீட்டி பாலிஷ் செய்தால் மட்டுமே கற்களுக்கு அழகும் கவர்ச்சியும் உண்டாகும்.

மாணிக்கம் அலுமியம் டிரை ஆக்ஸைடு என்ற வேதிப்பொருளால் ஆனது. கெராண்டம் என்கிற வகையைச் சேர்ந்த மாணிக்கக் கற்கள் புறா இரத்த நிறத்தில் கிடைப்பது முதன்மை தரம் ஆகும். கரும்புள்ளிகள் உடைய மாணிக்கத்தை அணிந்தால் நிறைய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பலவாறு பழுதடைந்த மாணிக்கம் இறப்பைக்கூட தந்து விடும். மாணிக்கத்தை கையில் அணிந்திருக்கும் போது அதன் நிறம் மங்கினால் அவருக்கு துன்பங்கள் ஏற்படும். அந்த துன்பம் நீங்கிவிட்டால் மாணிக்கக்கல் மீண்டும் தன்னுடைய பழைய நிறத்தை அடைந்து விடும்.
யார் மாணிக்கக்கல் அணியலாம்?

சூரியனுடைய பிரதிநிதி கல்லாக மாணிக்கம் உபயோகப்படுகிறது. சூரியனின் வீடான சிம்ம ராசியில் பிறந்தவர்களும் சூரிய திசை நடப்பில் உள்ளவர்களும், எண் கணிதப்படி 1,10,19, 28 ம் எண்ணில் பிறந்தவர்களும் மாணிக்க கல்லை அணிந்து கொள்வது நல்லது. இதனால் சூரியனுடைய கதிர்கள் ஒழுங்கு செய்யப்பட்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்குகின்றது.

மாணிக்கக் கல்லின் நன்மைகள்

மருத்துவ ரீதியாக உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள், காய்ச்சல், வயிற்றுக் கோளாறு, மூலம் இருதய நோய், தோல் வியாதி, கண் நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாணிக்கக் கல்லை அணிந்தால் நோய்களின் பிடியிலிருந்து ஓரளவுக்குத் தப்பித்துக் கொள்ளலாம்.

மாணிக்கக் கல்லை தங்கத்தில் பதித்து உடலில் படும்படி அணிந்து கொண்டால் நல்ல உடல் நலம், உள்ள உறுதி நட்பு, காதல் பாசம் போன்றயாவும் சிறப்பாக அமையும். இருதயத்தையும், ரத்த ஓட்டத்தையும் வலுவடையச் செய்கிறது. மன அழுத்தம், சோகம், தேவையற்ற புலனின்ப நாட்டம் போன்றவற்றைக் குறைத்து தைரியத்தையும் வீரத்தையும் தருகிறது. மாணிக்கம் சூரியனின் ஆதிக்கம் என்பதால் பெயரையும் புகழையும் உயரத்த்துவதுடன் சமுதாயத்தில் கௌரவமிக்க பதவிகளை வகிக்கும் ஆற்றலையும் கொடுக்கிறது. மழலைச் செல்வமும் சிறப்பாக அமையும்.

ஒரு சில மாணிக்கங்களை வெட்டிப் பார்த்தால் ஆறு கீற்றுகள் உடைய நட்சத்திரத்தை பார்க்கலாம். இந்த வகை மாணிக்கக் கல்லை நட்சத்திர மாணிக்கம் என்று அழைக்கிறார்கள். மாணிக்கம் ஒரு பிரகாசமான, கடினமான, காலமெல்லாம் நிலைத் திருக்கக்கூடிய, அணியத்தகுந்த ஓர் அபூர்வ ரத்தினமாகும்.

மாணிக்கத்தை தங்கத்தில் பதித்து உடலில் படும் படியாக மோதிர விரலில் அணிந்து கொள்ள வேண்டும். அதன் எடை 3 அல்லது 5 ரத்திகள் இருப்பதே நல்லது. மிக விலை உயர்ந்த மாணிக்கக் கல்லை வாங்க இயலாதவர்கள் அதற்குப் பதிலாக கார்னட் என்ற கல்லை வாங்கி அணியலாம். இந்த கல் சிவப்பு நிறத்தில் பவழத்தினைப் போன்று சற்று கூடுதலாக கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். குற்றமில்லாத கார்னட் கற்கள் மாணிக்கத்தை போலவே நற்பலனை அளிக்கும் தன்மை வாய்ந்த தாகும். மாணிக்கக் கல்லை அணியும்போது சூரியனுக்கு உரிய ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய ஓரையில் அணிந்துகொள்வது நல்லது.

நவரத்தினங்களில் முத்து


வெண்மை நிறத்துடன் ஒளி பொருந்திய உருண்டை வடிவத்தில் சிப்பிக்குள் உருவாவது முத்தாகும். சிப்பிக்குள் நுழையும் அந்நிய பொருள் சிப்பியின் உட்புறம் உறுத்துவதால் சிப்பிக்குள் சுரக்கும் திரவமே முத்தாக உருவாகிறது. கடல்நீரில் உள்ள சிப்பிகள் முத்தை உருவாக்கும் தன்மை கொண்டவை. இந்தியாவில் அதிகமாக தூத்துக்குடியில் தான் முத்து குளித்தல் நடைபெறுகிறது. சிப்பியில் உருவாகும் முத்துக்களில் உருண்டை வடிவமுள்ள முத்துக்களே சிறப்பானவை. மிகவும் உயர்ந்தவகை முத்துக்களை, ஆணிமுத்து என்று அழைக்கின்றனர். இந்த ஆணி முத்து அளவில் சற்-று பெரியதாகவும், மிகுந்த அழுத்தம் உடையதாகவும், ஒளிரும் தன்மையுடனும், பளபளப்பாகவும் காணப்படும். முத்துக்களைப் பொதுவாக மணி, துளி என்ற பெயர்களில் அவற்றின் வடிவ அமைப்பைக் கொண்டு அழைக்கிறார்கள். அரை வட்டம் உள்ள முத்தை பட்டன் முத்து என்பார்கள். ஒழுங்கான வடிவம் இல்லாத முத்தை ஙிணீக்ஷீஷீரீuமீ ஜீமீணீக்ஷீறீ என்று கூறுகிறார்கள். சில முத்துக்கள் கருமை, பால் நிறம், இளம் சிவப்பு போன்ற நிறங்களில் கிடைக்கிறது. நல்ல முத்தை மேல் நோக்கி உற்று பார்க்கும் போத வானவில்லைப் போல ஏழு நிறங்கள் தெரியும். இதற்கு ஆராய்ச்சியாளர்கள் ஷீன் என்று பெயரிட்டுள்ளனர்.

உலகிலேயே பட்டை தீட்டப்படாத பட்டை தீட்ட வேண்டிய அவசியமே இல்லாத ஒரு ரத்தினம் உண்டு என்றால் அது முத்தே ஆகும். எல்லா ரத்தினங்களும் பட்டை தீட்டப்படும் பொழுதுதான் நல்ல பொலிவினைப் பெறும். ஆனால் இயற்கையிலேயே நல்ல பொலிவுடன் கிடைப்பது முத்து ஒன்றுதான்.

இயற்கையாக முத்து கிடைக்க அதிக காலம் காத்திருப்பதைவிட செயற்கை முறையில் முத்து சிப்பியைத் துளையிட்டு அந்நிய பொருளை உட்புக வைத்து, அவற்றை முத்தாக மாற்றி செயற்கை முறையில் இயற்கை முத்தைப் பெறக்கூடிய வழியாகும். இப்படிப்பட்ட செயற்கை முத்துக்களை 1920 ம் வருடம் முதலே தயார் செய்கிறார்கள். சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் செயற்கை முத்துக்கள் அதிகமாக உற்பத்தி செய்கிறார்கள்.

இங்கு தயாரிக்கப்படும் செய்ற்கை முத்துக்களை நெடுங்காலமாகவே ஹைதராபாத்தில் பிரித்தெடுத்து விற்பனை செய்வதால், இதற்கு ஹைதராபாத் முத்துக்கள் என்றே பெயர் வந்து விட்டது. இந்த செயற்கை முத்துக்களும் இறக்கை முத்தைப்போலவே விலை உயர்ந்ததாகவும் இருக்கின்றன. சில முத்துக்கள் குறைந்த விலையிலும் கிடைக்கின்றன.

ஹைதராபாத் முத்துக்களை மோதிரமாகவும், கழுத்தில் அணியும் மாலைகளாகவும், காதில் அணியும் கம்மல்களாகவும் தங்கம் அல்லது வெள்ளியில் பதித்தும் அணியலாம். முத்தை மோதிரமாக அணிவதென்றால், மோதிரவிரல் அல்லது நடுவிரலில் அணியலாம். இவற்றின் எடை 2,4,6,9 ரட்டிஸ்களாக இருப்பது நல்லது. நவரத்தினங்களில் சந்திரனுடைய ஆதிக்கத்திற்குரிய ரத்தினம் முத்தாகும்.

முத்தின் நன்மைகள்


முத்தை அணியும்போது சந்திரனுடைய ஒளிக்கதிர்கள் திருப்பி விடப்பட்டு உடல் நலமானது சிறப்பாக இருக்கும். மனக்குழப்பங்கள் மறையும். பெண்களுக்கு கர்ப்பை பிரச்சினைகள் இருந்தால் அதிலிருக்கும் குறைகள் விலகி குழந்தைப் பேறும் உண்டாகும்.

முத்து உடலுக்குக் குளிர்ச்சியையும் உள்ளத்திற்கு அமைதியையும் முகத்திற்கு வசீகரத்தையும் உடலழகையும் கொடுக்கிறது.

யாரெல்லாம் முத்து அணியலாம்?

முத்துக்களை சந்திரனுடைய வீடான கடக ராசியில் பிறந்தவர்களும், சந்திரனுடைய திசை நடப்பில் உள்ளவர்களும், சந்திரனால் பாதிக்கப்பட்டவர்களும் அணிவது மிகவும் நல்லது. அதுபோல எண்கணிதப்படி 2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் அணிய வேண்டிய ரத்தினம் முத்தே ஆகும்.

முத்துக்கள் சீக்கிரத்தில் நிறம் மங்குவதில்லை. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தான் அதன் நிறம் மங்கும் எடை குறையும். முத்தை பயன் படுத்தாத போது ஒரு பஞ்சிலோ, துணியிலோ சுற்றி வைத்தால் இயற்கை தன்மை மாறாமல் அப்படியே இருக்கும். சோப்பு நீரோ ஏனைய கெமிக்கல் பொருட்களோ முத்தை பாதிக்கும் தன்மை கொண்டவையாகும்.

முத்திற்கு பதிலாக சந்திரகாந்த கல்லையும் பயன்படுத்தலாம். ஆங்கிலத்தில் மூன்ஸ்டோன் என அழைக்கப்படும் இக்கல் நிறத்தில் சற்று மங்கலாக இருந்தாலும் சந்திரன் போன்றே அழகுடையதாக இருக்கிறது.


நவரத்தினங்களில் கனக புஷ்ப ராகம்கனகம் என்ற சொல்லுக்குத் தங்கம் என்று பொருள். தங்கம் மஞ்சள் நிறமுடையது. இதனால் தான் தங்க நிறமுடைய புஷ்ப ராகத்தை கனக புஷ்பராகம் சுமாரான எடை கொண்டதாகவும், ஒளி ஊடுருவும் ரத்தின கல்லாகவும் பயன்படுகிறது. கொரண்டம் என்ற குடும்பத்தைச் சார்ந்ததுதான் மாணிக்கம், நீலம், வெள்ளை புஷ்ப ராகம், சாதாரண புஷ்ப ராகம் நிறமில்லாமல்தான் கிடைக்கும் ஆனால் அதனுடன் சேரும் தாதுப் பொருளே கல்லுக்கு நிறத்தைக் கொடுக்கிறது. சிவப்பு நிறம் தரும் தாதுப் பொருள் சேர்ந்தால் அது மாணிக்கமாகவும், நீலநிறம் சேர்ந்தால் நீலக் கல்லாகவும், மஞ்சள் நிற தாதுப் பொருள்கள் சேர்ந்தால் கனக புஷ்பராகம் எனவும், நிறம் எதுவுமே சேராமலிருந்தால் வெண்புஷ்பராகம் எனவும் அழைக்கப்படுகிறது. வெள்ளை புஷ்பராகம் மிகவும் ஜொலி ஜொலிப்புடன் அழகாக காணப்படும்.

தங்கம் கலந்தாற்போல் மஞ்சள் நிறத்துடன் காணப்படுவது கனக புஷ்பராகமாகும். இது மிகவும் ஜொலிப்பு தன்மையுடையதாக காணப்படுகிறது. எனவே வெள்ளை புஷ்பராகத்தைவிட மஞசள் புஷ்ப ராகம் சற்று விலை கூடுதலானது. இதை கேரட் கணக்கில்தான் விலை நிர்ணயம் செய்கிறார்கள்.

புஷ்ப ராகக் கற்கள் இந்தியாவில் தமிழ்நாடு, ஒரிஸா ஆகிய இடங்களிலும், இலங்கை, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் கிடைக்கின்றன. ஆறுகளில் அடித்து வரப்படும் கூழாங்கல் போன்ற தோற்றத்துடன் ஆற்று ஓரங்களில் கிடைக்கின்றது. புஷ்ப ராகக் கல் கடினத்தன்மை அதிகமுள்ளதால் நெடுநாள் உபயோகத்தாலும் பளபளப்பு குன்றாது.

யார் கனக புஷ்பராகம் அணியலாம்?

இந்த புஷ்பராகக் கல்லை 3,12, 21, 30 போன்ற எண்களில் பிறந்தவர்கள் தங்கத்தில் பதித்து ஆள்காட்டிவிரல் அல்லது மோதிர விரலில் உடலில் படும்படி அணிந்து கொள்வது நல்லது. மற்றும் தனசு, மீன ராசிகளில் பிறந்தவர்களும், குரு திசை நடப்பில் உள்ளவர்களும் இந்த புஷ்பராகக் கல்லை அணியலாம். இதனால் தொழிலில் தடை, திருமணத்தடை, குழந்தைப் பேரின்மை போன்றவை விலகும். அசுரபரான செவ்வாயை அடக்கி செவ்வாய் தோஷத்தை விலக்கும், மஞ்சள் காமாலை போன்ற ஈரல் தொடர்பான நோய்களை போக்கும். மற்ற இயற்கை கற்களை போலவே கனக புஷ்ப ராகத்திற்கும் ஓர் அதிர்வு உண்டு. இந்த அதிர்வானது போலி கற்களுக்கு இருக்காது. குருவின் ஆதிக்கத்திலிருந்து வரும் கதிர்களை உறிஞ்சி குருவின் திருவருளை கனக புஷ்ப ராகம் பெற்று தருகிறது.

கனகபுஷ்ப ராக கல்லுக்குப் பதில் ஏமிதிஸ்ட் என்ற கல்லையும் அணியலாம். இது இந்தியாவில் இருந்தே கிடைக்கிறது. வெண் பவளத்தையும் ஓயிட் கோரல் 3ம் எண்ணின் ஆதிக்கத்தை உடையவர்கள் அணியலாம்.

ஸ்படிக வகையைச் சேர்ந்த கோல்டன் டோபஸ்ட் என்ற கல்லையும் அணியலாம்.ஆனால் இது எடைகுறைவாகவும், நாளடைவில் பளபளப்பு குன்றியும் காட்சியளிக்கும்.
புஷ்பராகக் கல்லை அணியும்போது வியாழக்கிழமைகளில் குரு ஓரையில் 7 அல்லது 13 ரத்திகல் எடையில் உடலில் படும்படி அணிந்து கொள்வது நல்லது. கனக புஷ்பராக கல்லானது இயற்கை அளித்த அற்புதமான பரிசாகும்.


நவரத்தினங்களில் கோமேதகம்

கோமேதகம் காப்பி நிறத்துடன் சற்று மஞ்சள் கலந்து காணப்படும். மற்றும் சில வகை, தேனின் நிறமுடையதாகவும் இருக்கும். புகை படிந்த சிவப்பு ஒளி வீசும் நிறங்கொண்ட கோமேதகம் நல்ல நிறமும், ஒளி ஊடுவருவக்கூடிய தன்மையும் கொண்டதாகும். மென்மை, பிரகாசம் மற்றும் ஒளி தரும் கல்லே உயந்த சுபமான கோமேதகம் ஆகும். கோமேதகம் கார்னெட் வகையைச் சார்ந்தது. பழங்கால நூல்களில் கோமேதகம் கோமூத்திரம் என்று கூறப்பட்டுள்ளது. பசுவின் சிறுநீர் நிறத்தில் உள்ள கல் என்பதாலேயே இதற்கு கோமேதகம் என்று பெயரிட்டனர். கல்லின் உள்ளே பார்க்கும் போது தேனில் காணப்படும் குமிழ்களைப் போல காணப்படுவது கோமேதகத்தின் சிறப்பு அம்சமாகும்.

தோஷமற்ற கோமேதகம் அணிவதால், அது பயங்கரமான எதிரிகளைக்கூட வெல்லக்கூடிய ஆற்றலைக் கொடுக்கும். உடல் ஆரோக்கியமும், நல்ல செல்வச் செழிப்பும் உண்டாகும்.

சாயாகிரகமான ராகுவுக்கு சொந்த வீடு கிடையாது. ராகு எந்த வீட்டில் உள்ளாரோ அந்த வீட்டின் அதிபதியின் காரகத்துவத்திற்கேற்றவாறு செயல்படுவார். ராகு நின்ற வீட்டின் அதிபதி சுபர் வீட்டில் இருந்து அவரும் சுபராக இருந்தால் கோமேதகக் கல்லை அணியலாம். அதுபோல் ராகுவின் திசை நடப்பில் உள்ளவர்களும் திருவாதிரை, சுவாதி, சதயம் போன்ற நட்சத்திரக்காரர்களும் 4,13,22,31 ஆகிய எண்ணுக்குரியவர்களும் கோமேதகக் கல்லை அணியலாம். கோமேதகக் கல்லை வெள்ளி அல்லது தங்கத்தில் பதித்து மோதிர விரலில் உடலில் படும் படி அணிவது உத்தமம்.

கோமேதகக் கல்லானது இந்தியா, பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் கிடைக்கிறது. இந்தியாவில் எடுக்கப்படும் கற்கள் இங்கேயே பட்டை தீட்டி விற்பனை செய்யப்படுகிறது.

கோமேதகத்தின் பயன்கள்

கோமேதகக் கல்லை அணிவதால் தோலில் உண்டாகக்கூடிய நோய்கள், உடலில் உண்டாகக்கூடிய வலிகள், கட்டிகள், வண்டி, வாகனங்களில் செல்வதால் ஏற்படக்கூடிய விபத்துக்கள் போன்றவற்றிலிருந்து தப்பிக்க முடியும். மற்றும் தேவையற்ற பழக்க வழக்கங்கள் விலகும். பேச்சில் நிதானமும் உண்டாகும்.
தேன் நிறத்தில் காணப்படும் ஜிர்க்கான் கற்கள் கோமேதகம் என்ற பெயரில் விற்பனைக்கு வருகின்றன. மெல்லிய கருப்பு நிற, ஒளியற்ற தன்மை, கடினமான தட்டையான மஞ்சள் நிற கண்ணாடிக்கல் போல் தோற்றம் தருவது சராசரியான தன்மை கொண்டவைகளே. இவை சுபமானதாய கருதப்படுவதில்லை.
கோமேதகம் விலை குறைவுடையது என்பதாலும், எளிதில் கிடைக்கப்பெறுவது என்பதாலும் இதற்கு மாற்றுக் கல் தேவையில்லை. என்றாலும் ஒன்றாம் எண்ணுக்குரிய கார்னெட் கற்களை கோமேதககத்திற்கு மாற்றாக அணியலாம்.


நவரத்தினங்களில் மரகதம்மரகதக் கல்லின் ஆங்கிலப் பெயர் எமரால்ட். ஒளி புகக்கூடிய அருகம்புல்லின் நிறமுடைய இக்கல் பெரில் எனப்படும் வகையைச் சேர்ந்தது. வெளிர் பச்சை நிறத்திலிருந்து அடர்பச்சை நிறம் வரை கிடைக்கும். இந்த மரகதம் பெரில்லீயம் அலுமினியம் சிலிகேட் என்ற மூலப் பொருளாளல் ஆனது.
மரகதம் அடர்த்தி குறைவானதாகவும் எடை இலேசானதாகவும் இருப்பதால் ஒரு காரட் எடையுள்ள மரகதம் சற்று பெரியதாக இருக்கும் இது நொருங்கும் தன்மை கொண்டது என்பதால் இதை உபயோகிப்பதில் கவனம் தேவை. குரோமியம் என்ற பொருள் கல்லில் இருந்தால்தான் அது மரகத் கல்லாகும். இல்லையெனில் அது பச்சை நிற பெரில் என்றே அழைக்கப்படுகிறது. பச்சை நிற பெரில்லை தகுந்த சூழ்நிலையில் உஷ்ணம் செய்தால் அக்குவாமெரின் எனப்படும் நீலபச்சை நிறக் கல்லாக மாறுகிறது. இந்த நிறமாற்றம் நிரந்தரமாக இருக்கும் பட்சத்தில் அது உலக அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. சாம்பிராணி வாசம் வந்தால் தான் மரகதம் என்ற தவறான கருத்து ஒன்று மக்களிடையே உள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் திருவுருவச் சிலையானது மரகதத்தில் ஆனது என்பதால் பெரிய அளவில் அதிர்வுகளை யாரும் கோவிலின் மேல் தளத்தில் ஏற்படுத்த விடுவதில்லை.

பச்சை நிறம் உடைய ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட ரத்தினத்தை மிதுனம், கன்னி ராசி உடையவர்களும், புதன் திசை நடப்பவர்களும், 5,14,23 ம் எண்களில் பிறந்தவர்களும் அணியலாம். தங்கம் அல்லது வெள்ளியில் பதித்து மோதிர விரல் அல்லது சுண்டு விரலில்அணிந்து கொள்ளுதல் நல்லத. புதன் கிழமைகளில் காலை 6 மணி முதல் 7 மணியில் அணிவது மிகவும் சிறப்பு.
மரகதம் அணிவதன் பயன்கள்

மரகதக் கல்லை அணிந்து கொள்வதால் நல்ல மனோபலமும், எதையும் திட்டமிட்டு செய்யும் ஆற்றலும், அறிவாற்றலும், ஞாபக சக்தியும் பெருகும். கல்வியிலும் தகவல் தொடர்பிலும் மேம்மை கொடுக்கும்.
மருத்துவ ரீதியாக வாய்ப்புண், கண், மூக்கு, தொண்டையில் பாதிப்பு, மன நிலை பாதிப்பு, தோல் வியாதி, வாத நோய், சீதளம், ஆண்மைக்குறைவு போன்ற நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். முதல் தரமான மரகதம் கொலம்பியா நாட்டில் கிடைக்ன்றது. இங்கு கிடைக்கும் கல்லானது குரோமியம் அதிகமாக உள்ளதால் தரத்தில் உயர்ந்ததாகவும், தகுந்த நிறம் உள்ளதாகவும் இருக்கின்றது. பிரேசில், எகிப்து, இந்தியா ஆகிய இடங்களிலும் கிடைக்கின்றது என்றாலும், இவை உயர்வானதாக இருப்பதில்லை.
பூமியிலிருந்து வெட்டி எடுக்கும் போது மங்கலான கல்லாகவே காணப்படும். மரகதம் பளபளப்பேற்றப்பட்டு அழகுபடுத்தப்படும் போது தரமானதாகவும் நற்பலன் அளிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது.

ஆனெக்ஸ் (ளிஸீமீஜ்):

 ஆழ்ந்த நிறம் கொண்ட இந்த ஆனெக்ஸ் கற்களை மரகதத்திற்கு பதிலாக அணியலாம். ஆனால் மரகதக் கல்லுக்கு இருக்கின்ற வலிமை ஆனெக்ஸ் கல்லுக்கு இல்லை என்றே கூறுவேண்டும்.


நவரத்தினங்களில் வைரம்
சுக்கிரன் வைரத்தின் ஆங்கிலப் பெயர் டைமண்ட் ஆகும். வைரத்தைப் பற்றி அறியாதவர்களே இருக்க முடியாது. வைரம் அதிக கடினத்தன்மை வாய்ந்தது என்பதால், வைரத்தை வைரத்தால் மட்டுமே அறுக்க முடியும்.

நிறமற்ற, நீலம் அல்லது சிவப்பு நீல ஒளியைக் கொண்ட, கரும்புள்ளிகள் இல்லாத வைரமே மிகவும் சுபமான வைரமாகும். மஞ்சள், சிவப்பு ஒளி தரும் வைரம், அரசியலில் உயர் பதவிகளை வகிக்கும் ஆற்றலைத் தருகிறது. வெண்மையான வைரம் மதம் மற்றும் ஆன்மிக, தெய்வீக காரியங்களுக்கு ஏற்றது. மஞ்சள் நிறம் மட்டும் கொண்ட வைரம் வெற்றியையும் செல்வ செழிப்பினையும் தரும். சிற்றின்ப நோய்கள், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள், கண் நோய் போன்ற நோய்களும் வைரத்தை அணிவதால் குணமாகும். ஆண் குழந்தையை விரும்புபவர்கள் சிறு கருமை கலந்த வைரங்களை அணிவது நன்மையளிக்கும். வைரம் அணிபவர்களை விஷ ஜந்துக்கள் மற்றும் தீய ஆவிகள் தீண்டாது.

இந்தியாவில் கோகினூர் என்ற இடத்தில் எடுக்கப்படும் வைரம் மிகவும் தரம் வாய்ந்ததாகவும், விலை உயர்ந்ததாகவும் உள்ளது. தற்போது ஆப்பிரிக்காவில் உள்ள கிம்பர்லி என்ற இடத்திலிருந்தும் வைரம் வெட்டி எடுக்கப்படுகிறது. வைரத்தின் தெளிவு நிறம், எடை இவற்றை வைத்தே இதன் விலையும் நிர்ணயம் செய்யப்படுகிறது. வைரத்தை எவ்வளவு நாட்கள் உபயோகித்தாலும் அதன் ஓரங்கள் தேயாமலும் நுணுங்காமலும் காணப்படும். விலை உயர்ந்த வைர வியாபாரத்தை உலக அளவில் கட்டுப்படுத்தும் நிறுவனமாக லண்டனில் தலைமையகத்தை கொண்ட பீபர்ஸ் விளங்குகின்றது.

நம்நாட்டைப் பொறுத்தவரை கோடுகள், புள்ளிகள் ஏதும் இல்லாமலிருந்தால் அவை நல்ல வைரம் என்றும் அணியத் தகுந்தவை என்றும் எண்ணி வாங்கி அணிந் கொள்கிறோம். ஆனால் அயல் நாட்டினர் வைரத்தின் ஜொலிப்பிற்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர். வைரத்தை ரிஷபம், துலாம் ராசிகளில் பிறந்தவர்களும் சுக்கிரன் சுபராக இருந்து சுக்கிர திசை நடப்பில் உள்ளவர்களும் 6,15,24 ம் எண்ணில் பிறந்தவர்களும் அணிவது சிறப்பு. வைரத்தை தங்கம் அல்லது பிளாட்டினத்தில் பதித்து மோதிர விரல் அல்லது நடு விரலில் வெள்ளிக்கிழமைகளில், சுக்கிர ஓரையில் அணிந்து கொள்வது நல்லது.

வைரம் தன் மீது படும் ஒளியை முழு அக எதிரொலிப்பு செய்வதால் வைரத்தின் வழியே எந்தவொரு பொருளையும் பார்க்க இயலாது. புளு ஜாகர் எனப்படும் வைரம் தான் உலகிலேயே விலை உயர்ந்ததாகும். இது காலை நேர சூரிய ஒளியில் நீல நிற ஒளி உமிழும் தன்மையுடையதாகும. வைரத்தை 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாதான் ஏற்றுமதி செய்து வருகிறது. தற்போது அனைத்தும் தோண்டி எடுக்கப்பட்டு காலியாகிவிட்டதால் ஒரிஸாவில் மீண்டும் வைரங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதை கண்டு பிடித்துள்ளனர்.

ஒரு காரட் (0.2 கிராம்) பட்டை தீட்டப்பட்ட வைரத்தைப் பெறுவதற்கு 30 டன் எடையுள்ள பாறை மற்றும் மணலை பிரித்தெடுத்து பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அதன் பின்னர் பட்டை தீட்டி, பலர் கை மாறி மாறி விற்பனைக்கு வருவதால்தான் வைரத்தின் விலை பல மடங்காக் உள்ளது. சுத்தமான வைரங்களைக் கண்டு பிடிக்க டைமண்ட் டெஸ்டர்களும் தற்போது உபயோகத்திற்கு வந்து விட்டதால் அந்த கருவியைக் கொண்டு சுத்தமான ஒளி, ஒலி அமைப்பை கண்டுபிடித்து விடலாம். வைரத்திற்கு எளிதில் வெப்பத்தை கடத்தும் தன்மை உள்ளதாலேயே மேற்கண்ட பரிசோதனையைச் செய்து போலியா, ஒரிஜினலா என கண்டறிய முடிகிறது.

வெண்மையாகவும் தீவு போன்ற வடிவம் கொண்ட வைரம் தோஷமுள்ளதாகவும் இதை அணிவதால் பெரும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

ஜிர்கான், வைரத்தை வாங்க இந்த ஜிர்கான் கற்களை வாங்கி அணியலாம். ஜிர்கான் கற்களும் பளபளப்பும், கடினத் தன்மையும் கொண்டது. வைரத்தைப் போலவே நற்பலனை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

நவரத்தினங்களில் வைடூரியம்வைடூரியம் லேசான பச்சையும், பழுப்பு நிறமும் கொண்டதாகும். இந்த இரண்டு நிறமும் ஒரே கல்லில் காணப்படுவதோடு நடுவே ஒரு வெண்மை நிறத்தில் கோடு போன்ற அமைப்பும் காணப்படுகிறது. இதை மேலும் கீழும் அசைத்தால் பூனைக் கண் போலத் தெரியும். இதனாலேயே வைடூரியத்திற்கு கேட்ஸ்அய் என்ற ஆங்கிலப் பெயர் வந்தது. மஞ்சள் நிற பிரகாசமும் வெண்ணிற கற்றையும் உடையதே மிக உயர்ந்த வகை வைடூரியமாகும்.

வைடூரியமானது மிகவும் தெய்வீக தன்மை வாய்ந்ததாகும். வைடூரியம் மிகவும் வேகமாக செயல்படக்கூடிய ஆற்றல் கொண்டது என்பதால், இதனை பரிசோதனைக்குப் பின்னரே அணிய வேண்டும். பெரில்லியம் அலுமினேட் எனப்படும் வேதிப்பொருளாளல் ஆன வைடூரியம், கிரிஸோபெரில் வகையை சார்ந்ததாகும். விலையும் அதிகமாகும். வைடூரிய கல்லின் குறுக்கே ஒரு நூல் பட்டையாகவும் தெளிவில்லாமலும், கல்லின் நிறம் வெளிர் பச்சையாகவும் இருந்தால் விலை அதற்கேற்ப குறைய வாய்ப்புண்டு.

இதில் குறிப்பிடத்தக்கது குவார்ட்ஸ் வகை வைடூரியங்கள் ஆகும். ஆனால் இதன் பெயரில் தான் வைடூரியம் உள்ளதே தவிர சுத்தமான வைடூரியம் இல்லை. எடை குறைந்த குவார்ட்ஸ் வகை வைடுரியங்கள் ப்ரவுன் கலந்து பச்சையாக இருக்கும். இதில் பழுப்பு நிறம் உடைய நூல் போன்ற அமைப்பு கொண்ட கற்களை டைகர்ஸ் ஐ (ஜிவீரீமீக்ஷீs ணிஹ்மீ) என்றும், கருப்பு நிறமாக இருந்தால் புல்ஸ் ஐ (ஙிuறீறீs ணிஹ்மீ) என்றும் அழைக்கின்றனர்.
சுத்தமான வைடூரியத்தின் அழகானது, அதனுள் தெரியும் நூல் போன்ற அமைப்பு வெளிச்சத்தில் மின்னல் போல தெரிவதால் யாரையும் மயக்கிவிடும். மற்ற டைகர் ஐ, புல்ஸ் ஐ போன்றவற்றில் இது போன்ற கவர்ச்சியான அமைப்பு இருக்காது.

வைடூரியங்களில் நமது நாட்டில் கேரளாவில் கிடைப்பதே விலை உயர்ந்ததாகும். இது தவிர, ஒரிஸாவில் கிடைப்பது சற்று விலை குறைந்ததாக உள்ளது. பிரேசில், இலங்கை, அமெரிக்கா முதலிய இடங்களிலும் வைடூரியம் கிடைக்கின்றது. வைடூரியக் கல்லை அணிவதால் மிகுந்த செல்வம், செல்வாக்கு உயரும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாம். இழந்த செல்வத்தை மீட்டுத் தரும். ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்தும். ஆன்மிக, தெய்வீக காரியங்களில் ஈடுபாட்டை அதிகரிக்கும். தற்கொலை எண்ணங்கள் வராது. மன நிலை புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

வைடூரியக் கல்லைத் தங்கத்தில் பதித்து ஆள் காட்டி விரல் அல்லது மோதிர விரலில் அணிந்த கொள்வது நல்லது. வைடூரியத் கல்லை கால சர்பயோகம் உடையவர்களும், கேது திசை நடப்பில் உள்ளோரும், 7,16,25 ஆகிய எண்களில் பிறந்தோரும் அணிவது உத்தமம். அஸ்வினி, மகம், மூலம் போன்ற நட்சத்திரக்காரர்களும் அணியலாம்.

புள்ளிகள், பள்ளங்கள், மங்கலான நிறங்கள் உடைய வைடூரியங்கள் தீமையான பலன்களை அடைய நேரிடும். எனவே வைடூரியத்தை நன்கு பரிசோதித்து அணிவது உத்ததமம்.

ஒப்பல், வைடூரியத்திற்கு மாற்றுக் கல்லாக ஒப்பல் என்ற கல்லை அணியலாம். ஒப்பல் கற்கள் ஏழு எண்காரர்களுக்கு மிகவும் உகந்ததாகும். இது பல வண்ணங்களில் கிடைத்தாலும் வெண்மை நிறம் கொண்ட கல்லே சிறந்ததாகும்.

நவரத்தினங்களில் நீலம்நீலம் அலுமினியம் டிரை ஆக்ஸைடு என்ற மூலப்பொருளால் ஆனது. இக்கல்லுக்கு நீல நிறத்தைத் தருவதற்கு டைட்டானியம் என்ற வேதிப்பொருளும் உள்ளது. ஆழ்ந்த நீல நிறமுள்ள நீலக்கல்லில் டைட்டானியம் அதிகம் இருக்கும். இதன் நிறத்தின் பெயரே கல்லின் பெயரானது. முன்பெல்லாம் உயர்தரமான நீலம் இந்தியாவில் காஷ்மீரில் கிடைத்து வந்தது. தற்போது இந்தியாவில் கிடைப்பது அரிதாகிவிட்டாலும் தாய்லாந்து, இலங்கை, கென்யா, டான்சானியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து கிடைக்கப்பெறுகிறது
.
நீலம் கடினத்தன்மை அதிகமுடையதாக இருப்பதால் நீண்ட நாட்களுக்கு, பளபளப்பு குன்றாமல் இருக்கும். வெளிர் நீல கற்கள் பாங்காங்கில் அடர் நீலமாக மாற்றப்பட்டு பாங்காங் நீலம் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. அதிக எடையும், சுத்தமான தன்மையும் கொண்ட கல்லை கெட்டி நீலம் என்கிறார்கள்.

பர்மா மற்றும் காஷ்மீரில் அற்புதமான நீல கற்கள் கிடைக்கின்றன. இவை அழகான ஒளி கற்கள் கிடைக்கின்றன. இவை அழகான ஒளிமிகுந்த, கண்களைக் கவரக்கூடியவையாக இருக்கும். நீலக்கல்லை அணிவதால் போட்டி, பொறாமை மற்றும். கண் திருஷ்டிகள் விலகும். மன அமைதியையும், சுகமான, ஆபத்தில்லாத பயணங்களைத் தரும். இடமாறுதலையும், நாள்பட்ட துன்பங்க¬யும் போக்கும். நீலக் கல்லிலேயே தோஷமற்ற இந்திர கல் கிடைக்கப்பெற்று அதை அணிபவர்களுக்கு ஏழ்மை விலகி செல்வம், செல்வாக்கு, புகழ், பெருமை போன்ற யாவும் தேடி வரும். கஷ்டங்கள் அனைத்தும் விலகும்.

நீலக் கல்லை நீல நிற சனி கிரகத்தின் ஆதிக்கத்திற்குள்ளோரானான மகர, கும்ப ராசி உடையவர்களும், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, சனி திசை போன்றவை எண் கணிதப்படி 8,17, 26 எண்ணில் பிறந்தவர்களும் அணியலாம்.
மருத்துவ ரீதியாகவும் வாதநோய், பாரிச வாய்பு, எலும்பு வியாதி, பல் நோய், ஜலதோஷம், சித்த சுவாதீனம், உடல் சோர்பு, மந்த நிலை போன்ற நோய்களிலிருந்தும் ஓரளவுக்கு விடுதலை கிடைக்கும்.

நீலக்கல்லை வெள்ளியில் பதித்து உடலில் படும்படி நடுவிரல் அல்லது ஆள்காட்டி விரலில் அணிந்து கொள்ள வேண்டும். சனிக்கிழமைகளில் அணிவது உத்தமம். நீலக்கல் அணிவதால் நம்மை பிடித்துள்ள நீச குணங்கள் விலகி சனி கிரகத்தின் அருளை முழுமையாகப் பெறமுடியும்.

அக்கோமரின், நீலக்கல்லிற்குப் பதிலாக இந்த அக்கோமரின் ( கற்களையும் அணியலாம். இதுவும் பார்ப்பதற்கு அழகாகவும், வெளிர்நீல நிறமுடையதாகவும் விலையில் சற்று குறைவாகவும் கிடைக்கின்றது.

சனியால் ஏதாவது பாதிப்பு உடையவர்கள் அக்காலங்களில் மட்டும் இக்கற்களை அணிந்து கொள்ளலாம். மற்றோர் அணிவது கூடாது. அழகுக்காக சிலர் அணிகிறார்கள். இவற்றால் கெடுபலன்களையே அடைய நேரிடும்.