ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Friday, November 1, 2019

சொந்த தொழில் பலன் தருமா?


எல்லோரும் "நீங்களும் அம்பானி ஆகலாம் என்று நினைக்க கூடாது". அவரவர் பூர்வபுண்ணிய யோகப்படிதான் இந்த தொழில் யோகம் அமைகிறது

சொந்த தொழில் யோகம் இருந்தாலும் சரியான திசாபுத்திகள் வராவிட்டால் தொழில் செய்தும் பயன் இருக்காது.
எந்த திசையிலும் சுய புத்தியில் தொழில் ஆரம்பிப்பது நல்லதல்ல. 7 1/2 சனி,  அஷ்டம சனி காலங்களில் புதிய முதலீடுகளை செய்யகூடாது.

லக்னத்துக்கு பத்தாம் இடமே இந்த தொழிலுக்குரிய பலனை தெரிந்து கொள்ளும் இடமாகும்.

லக்கினாதிபதி வலுப்பெறவில்லை என்றால் தொழிலில் அலைச்சலும் சிரமங்களும் இருந்து கொண்டே இருக்கும். 2, 9, 11 ம் அதிபதிகளில் யாரேனும் ஒருவர் வலுப்பெற்றால் தொழிலில் லாபம் தரும்.  ஜாதகத்தில் 6-ம் அதிபதி பலம் இழந்து 10-ம் அதிபதி ஆட்சி அல்லது உச்சம் பெற்று வலுப்பெற்று அமர்ந்தால் ஜாதகர் எந்த தொழிலை செய்தாலும் வெற்றி பெறுவார்.10-ம் அதிபதி கேந்திர ஸ்தானங்களில் சுபர் சேர்கை பெற்று இருந்தால் நற்பலன்.

தொழில் ஸ்தானத்தில் 8, 12-ம் அதிபதி இருந்தாலும், குரு அல்லது கேது கெட்டு இருந்தாலும் தொழிலை அடிக்கடி மாற்றம் செய்வார்.

பத்தில் ஒரு கிரகமாவது இருந்தால்தான் நல்லது என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அப்படி 10ல் இல்லா விட்டாலும் 4ம் விட்டில் இருந்தால் அவை கண்டிப்பாக 10ம் வீட்டை பார்க்கும். இந்த மாதிரி இருந்தாலும் நலலதுதான்.

எந்த லக்கினக்காரர்களுக்கும் பாதகாதிபதி 10-ல் 8 அல்லது 12ம் அதிபதி உடன் அமர்வது அடிக்கடி தொழில் மாற்றத்தையும் இடம் மாற்றத்தையும் அலைச்சல்களையும், நஷ்டத்தையும் தரும்.

10-ம் அதிபதி பலம் குன்றி 6-ம் அதிபதியும் செவ்வாயும் வலுப்பெற்று அமர்ந்தால் அதன் திசாகாலங்களில்  நல்ல உத்யோகம் அமையும்.
6-ம் அதிபதி, செவ்வாய், 10-ம் அதிபதி, சனி ஆகிய கிரகங்கள் வலுவிழந்தால் தொழில் உத்யோகம் இரண்டும் சரிவர அமையாது. தொழில் ஸ்தானாதிபதி அல்லது சனி  நீசம், பெற்றால் சொந்த தொழில் கூடாது.

ஒருத்தரின் ஜீவன அமைப்பு பற்றி ஜோதிட ரீதியாக ஆராயும் போது பத்தாம் வீடு, பத்தாம் வீட்டின் அதிபதி, 10ம் வீட்டில் இருக்கும் கிரகங்கள், 10ம் வீட்டின் அதிபதியோடு சேர்ந்த கிரகங்கள், பத்தாம் வீட்டின் அதிபதியை பார்க்கும் கிரகங்கள், 10ம்வீட்டின் அதிபதி நவாம்சத்தில் இருக்கம் இடங்கள் என பல விசயங்களும் தீர்மானிக்கின்றன.

சூரியன் லக்னத்திற்கு பத்தில் இருந்தால் பத்தாம் வீட்டில் சூரியன் பலமாக இருந்தால் பல சாதனை படைக்கும் அமைப்பு , அதிகம் சம்பாதிக்கூடிய யோகம் அமையப்பெறும். அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் கௌவமான பதவி பெறும் யோகம், பாங் வேலை, வருமான வரி துறையில் வேலை, தந்தை மூலம் தொழில், நீதித்துறைகளில் வேலை, என இவற்றில் உயர் பதவிகளை பெறும் யோகம் அமையும். நல்ல நிர்வாக திறனம் அமையப்பெறும். முக்கியமாக மூளை சூப்பரா வேலை செய்யும். சூரியனுடன் ராகு கேது சனி கிரகங்கள் சம்பந்தம் பெறுவது வேலைக்காரர்களால் சிக்கல் மறைமுக எதிர்ப்புகள், தேவையற்ற தடை தாமதம் இன்னல்கள், சட்ட பிரச்சனைகள் மற்றம் சிக்கல்கள் போன்றவைகளை சந்திக்க நேரிடும்.

சந்திரன் லக்னத்திற்கு பத்தில் இருக்குமானால் நீர் சாந்த, பயனம் சார்ந்த கடல் சார்ந்த துறைகளில் வருமானம் பெறும் நிலை, ஹோட்டல் தொழில் , பால் பண்ணை தொழில் ஏற்றுமதி இறக்குமதி தொழில், பட்டு ஆடைகள் மற்றம் முத்து , அழகு ஆபரணங்கள் , உப்பு சார்ந்த தொழில்கள், மலை சார்ந்த தொழில்கள் பால் சாக்லேட் சார்ந்த தொழில்கள் அடிக்கடி பயணம் செய்யக்௯டிய தொழில்கள் ஆகியவற்றில் மூலம் நிறைய லாபம் சம்பாதிக்கக்கூடிய வகையில் யோகம் அமையும். சந்திரன் கெட்டு போய் இருந்தால் தேவையற்ற மனகுழப்பம், பீதி, டென்சன், எரிச்சல், தவறான எண்ணம், கெட்ட சிந்தனை, சரியான முடிவு எடுக்க திணறல் எடுத்த காரியத்தில் தோல்வி, செய்யும் தொழிலில் இடையூறு போன்ற சூழ்நிலையை சந்திக்கும் யோக நிலை உருவாகும். சந்திரன் பத்தாமிடத்தில் இருந்தால் தாய்வழிச் சொத்துக்கள் கிடைக்கலாம்.

செவ்வாய் லக்னத்திற்கு 10ல் பலம் பெற்று இருந்தால் செவ்வாய் வீரத்துக்குரியோன் நிலத்துக்குரியோன் கோபத்துக்குரியோன்.  இந்த கிரகம் 10ல் பலம் பெற்று இருந்தால் போலீஸ், ரவுடி, மிலிட்டரி, நிலம் வீடு மனைகள் வாங்கி விற்கும் தொழில், பாதுகாப்பு துறை, தீயணைக்கும் படையில் வேலை, வீரதீர சாகஸ வேலை, சிங்கம் புலி யானை போன்ற மிருகங்களை வைத்து சர்க்கஸ் செய்யும் வேலை, தீப்பெட்டி, பட்டாச தொழில், போன்ற தொழில்களில் ஈடுபட்டு அதிகமான லாபம் பெறக்கூடிய யோகம் அமையம். இந்த கிரகம் பலமாக இருந்தால்தான் மேற்கூறியபடி இருக்கும். நல்ல நிர்வாக திறமையம் இருக்கும். அதுவெ பலமிலந்து இருந்தால் சரியான பயந்தான் கொள்ளியாக தொடைநடுங்கியாக பகைவர்களின் தொல்லைக்கு ஆளாபவர்களாக, தொழிலில் நஷ்டத்தை ச்ந்திப்பவர்களாக யோக நிலையை தந்துவிடும்

லக்கினத்திற்கு பத்தில் புதன் கிரகம் பலம் பெற்று அமைந்தால் ஸ்கூல் மற்றும் காலேஜ் ஆகியவற்றில் டீச்சர்களாக புரபசர்களாக வேலை,  கவிஞர்களாக, கணக்கர்களாக, எழுத்தாளர்களாக, பேச்சாளர்களாக, உபதேசம் செய்பர்களாக, ஆலோசனை கூறுபவர்களாக கணித துறை வங்கி தறை இன்சூரன்ஸ் துறை பத்திரிக்கை டிவி, செய்தி, சார்நத துறைகளில் ஈடுபட்டு நிறைய லாபம் சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும். வலு குறைந்தால் சமயோசித புத்தியின்மை, மறதி, விவேகமின்மை சாதுரியமின்மை ஆகிய தொல்லைகள் உருவாகும். புதன் பத்தாமிடத்தில் இருக்கும் போது நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து செய்யும் தொழில்களில் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு அதிகம்.

குரு கிரகம் லக்னத்துக்கு பத்தில் இருக்கக்கூடிய அமைப்பாக இருந்தால்
குரு நேர்மைக்க சொந்தக்காரர். நியாயமாக நடக்க வைப்பவர். ஒழுக்கமான வேலைகளை தருபவர். வலுவான குரு பல்கலை கழகத்தில் புரபசராகவும், மருத்துவராகவும் வரி, கல்விதுறை, அரசியல் துறை ஆலய துறை,ஆராய்ச்சி துறை, வர்த்தகத்துறை, சட்டம் ஒழுங்க துறை, வங்கி துறை,ஆகிய துறைகளில் உத்தியோகம் மற்றும் தொழில்களில் ஈடுபட்டு கை நிறைய சம்பாதிக்க கூடிய யோகம் அமையம். இந்த குருவே கெட்டுபோய் இருந்தால் பொய் லஞ்சம்  துரோகம் செய்தல் காட்டி கொடுத்தல், குழிபறித்தல் வீண பழி சொல். அதிகாரிகளின் கெடுபிடி அகிய சுபமற்ற பலன்கள் கிடைக்க ஆரம்பிக்கும்.

சுக்கிரன் லக்கினத்திற்கு 10ல் இருந்துவிட்டால். இயல் இசை நாடகம் டிவி சினிமா சீரியல் நடிப்பு நாட்டியம் சங்கீதம் ஆடம்பரம் அழகு அணிகலன்கள் தங்கம் வைரம்  அழகு ஜவுளி கடைகள் பட்டு மால்கள் மாட மாளிகைகள் வாசனை துறைகள் குதிரை பந்தயம் மருந்து விற்பனை மால்கள், என ஈடுபட்டு கை நிறைய பணம் சம்பாதிக்கும் யோகம் அமையும். அப்படி கிரகம் வலுவற்று இருந்தால் விபச்சாரம், அடிமை தொழில், தீய பழக்கங்கள் பெண்பித்து நிலை என தீய யோகங்கள் கிடைக்கம் அல்லது சிலருக்கு பணம் இருந்தும் நல்ல சுகமாக சொகுசாக இல்லாமல் மிகவும் சாதரணமாக எந்த ஒரு சந்தோசத்தையும் அனுபவிக்காமல் இருக்கக்கூடிய யோகத்தை இந்த பலமற்ற சுக்கிரன் தரும்.

லக்னத்துக்கு 10ல் சனி இருந்துவிட்டால் அதவும் பலமாக இருந்துவிட்டால்
விவசாய துறை, மருத்துவ துறை இன்சூரன்ஸ், ஏஜென்ஸி, இரும்பு ஈயம், எண்ணெய் வியாபாரம், அரிசி மண்டிகள் பருப்பு பயறு புண்ணாக்கு மண்டிகள். தொழிற்சாலை அமைத்தல், பணணை தொழில் அமைத்தல், போன்றவற்றில் ஈடுபட்டு கை நிறைய பணம் சம்பாதிக்கக்கூடிய நிலையை உருவாக்கும். இதுவே பலமற்ற சனியாக இருந்தால் அடிமை வேலை, அழுக்கு வேலை, திருட்டு வேலை, மாட்டு தொழுவத்தில் சாணி அள்ளும் வேலை, காவல் வேலை, தோட்ட வேலை, மரம் வெட்டும் வேலை கூட்டுறவு சங்கம் வேலை கூட்டுறவு பண்ணை வேலை போன்ற கீழ்நிலை வேலைகளில் ஈடுபடும் நிலை உருவாகும்.

லக்னத்திற்கு பத்தில் ராகு இருந்துவிட்டால் விண்வெளி பயணம், ஆராய்ச்சி, வானொலி, சர்க்கஸ், தெய்வீக பணி மருத்துவ பணி கெமிக்கல் பணி மாந்திரீக பணி என பணிகளை தரும். ராகு எந்த கட்டத்தில் உள்ளதோ அந்த கிரகம் சார்ந்த பணிகளை செய்ய வைக்கும். பலமற்ற ராகு சந்தேக புத்தியையும் எதையும் நம்ப இயலாத தன்மையையும் உருவாக்கும். செய்யும் செயல்களில் ஏடாகூட நிலையை, மனக்குழப்பத்தை உருவாக்கும்.

10ல் கேது பலம் பெற்று இருக்குமானால்
தெய்வீகம் சம்பந்தப்பட்ட துறைகள் வெளிநாட்டு வர்த்தகம் ஏற்றுமதி இறக்குமதி,  விஞ்ஞானம் அறிவியல் சார்ந்த துறைகள் மெஸ்மரிசம் வசீகரம் கட்ட பஞ்சாயத்து ஆன்மீகம் சம்பந்தப்பட்ட துறைகள்
போன்றவற்றில் ஈடுபட்டு  கைநிறைய பணம் சம்பாதிக்கக் கூடிய யோகம் கிடைக்கும்.

Tuesday, October 29, 2019

பாலாரிஷ்டம் − சுஜித் / குழந்தைகளின் மரணம்


கொடுமை.. கையை அசைத்து, பேசிக்கொண்டிருந்த குழந்தை.. கண் முன்னே நழுவி இப்போ எதுவுமே தெரியல

ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுவன் சுஜித் விழுந்த சம்பவம் நாட்டையே பதை பதைக்க வைத்துள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுஜித் கடந்த வெள்ளிக்கிழமை 25.10.2019 மாலை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தார்.

கண்முன்னாலேயே தன்னுடைய குழந்தை படிப்படியாக பூமியின் ஆழத்திற்குச் சென்று கொண்டே இருப்பதை பார்க்க கூடிய மிகப்பெரும் பரிதாபம்  ஆரோக்கியதாஸ் மற்றும் மேரி தம்பதிக்கு நிகழ்ந்துள்ளது.

2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் 25.10.2019 மாலை விழுந்தபோது, 26 அடி ஆழத்தில் தான் இருந்தார். அவரை எப்படியும் மீட்டு விடலாம் என்று நம்பிக்கை அதிகமாக காணப்பட்டது. ஏனெனில் ஆழ்துளை கிணற்றுக்குள் அனுப்பப்பட்ட கேமரா, குழந்தையின் உருவத்தை படம்பிடித்தது. ஆக்சிஜன் அனுப்புவதும், எளிதாக இருந்தது. அவ்வளவு ஏன்? குழந்தை அழுவது கூட வெளியே கேட்டது. குழந்தையின் தாய் பேசியதற்கு குழந்தை 'உம்' என்று பதிலும் சொன்னது.

 குழந்தை விழுந்த முதல் நாள் மாலை 6.30 மணியளவில் குழந்தையின் கையசைவு தெரியும் போது எடுக்கப்பட்ட video.



சுறுசுறுப்பு, துடுக்கு மற்றும் துறுதுறுப்பு கொண்ட குழந்தையாம் சுஜித். அவர் உறவினர்கள் சொல்கிறார்கள். எனவே ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கி கொண்டிருந்தாலும் கூட தைரியமாகவே காணப்பட்டது அந்த குழந்தை. ஆரம்பத்தில் எல்லாம் தைரியத்தோடு தான் குழந்தை பதில் சொன்னது. ஆனால் நீண்ட நேரமாக ஈரமான மணலுக்குள் இருந்ததாலும், தண்ணீர் மற்றும் உணவு உண்ணாததாலும் போகப்போக குழந்தையின் குரலில் நடுக்கம் தென்பட்டது. இது தவிர குழந்தை ஓரளவுக்கு பக்கத்தில் தான் இருக்கிறது என்று நம்பிக்கை எல்லோருக்கும் இருந்தது.

ஆனால் 26.10.2019 அதிகாலை மீட்பு பணிகளில் ஏற்பட்ட சில குளறுபடிகள் காரணமாக அந்த குழந்தை 70 அடி ஆழத்துக்கு கீழே சென்றுவிட்டது. இவ்வாறு சுஜித் சென்றபோது அவரது தலைக்கு மேல் ஆள்துளை கிணற்றில் இருந்த மணல் விழுந்துவிட்டது. அதுவரை சிறுவன் கையை அசைத்து அதை கேமராவில் பார்த்து வந்த அதிகாரிகளால் அதற்கு மேல் அதை பார்க்க முடியவில்லை.

சுஜித் அழுகுரலும் வெளியே கேட்கவில்லை. இந்த நிலையில் அருகாமையில் நடக்கக்கூடிய பள்ளம் தோண்டும் பணிகள் காரணமாக சுஜித் மேலும் கீழே சென்று கொண்டே இருக்கிறார். இரவு 7 மணி அளவில் கிடைத்த தகவல்படி 100 அடி ஆழத்துக்கு கீழே சென்று விட்டார். ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்ற தகவலும் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை.

மணல் மேலே மூடியிருப்பதால் குழந்தையை கேமராவாலும் படம்பிடிக்க முடியவில்லை, கையை அசைத்து தாய் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்த குழந்தை படிப்படியாக இப்படி அத்தனை பேர் கண் முன்னாலும் அடி ஆழத்துக்குச் சென்றது எவ்வளவு பெரிய கொடுமை


தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர், வருவாய் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் இரவு, பகல் பாராமல் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். சிறுவன் சுஜித்திற்காக தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் ஏராளமானோர் சாதி, மத பேதமின்றி பிரார்த்தனை செய்து வந்தனர்.

கடுமையான பாறைகள், இயந்திரத்தில் பழுது, குறுக்கிடும் மழை என அவ்வப்போது மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டாலும் விடா முயற்சியுடன் சிறுவனை மீட்கும் பணிகள் கடந்த 5 நாட்களாக 80 மணி நேரத்தை தாண்டி நடைபெற்று வந்த நிலையில், 29.10.2019 அதிகாலை 4.30 மணியளவில் சிறுவனின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, சிறுவன் சுஜித்தின் உடல் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்தனர்

சந்திரனுக்கு ராக்கெட் விடத்தெரிந்த நமக்கு, 100 அடி ஆழத்திற்குள் இருந்த குழந்தையை உயிருடன் மீட்கும் அறிவியல் தொழில்நுட்பம் இல்லாதது மிகுந்த வேதனையான மற்றும் சிந்திக்க வேண்டிய விஷயம்.

இனி வருங்காலங்களில் இது போன்ற துயரச் சம்பவங்கள் நிகழாமல் இருக்க பொது மக்களும் தங்களுடைய நிலங்களில் ஆழ்துளை கிணற்றை மூடும்போது உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்
ஆழ்துளைக் கிணற்றுக்குள் இதுவரை எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கிறது. இனியொரு உயிர் பலியாகிவிடக்கூடாது. அதுதான் நாம் சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி.


பாலாரிஷ்டம்

இனி ஜோதிட ரீதியாக குழந்தைகளின் இறப்பிற்கு காரணங்களைப் பார்ப்போம்

பாலாரிஷ்டம் என்ற சொல்லிற்கு சிறுவயதில் இறப்பது அல்லது சிறு வயதில் உடல் ரீதியாகத் துன்பம்
அடைவது என்று பொருள்.

தேய்பிறை அல்லது சுபத்தன்மையற்ற  சந்திரன் பாபக் கிரகங்களுடன் இணைந்தோ , கிரகண அமைப்பிலோ 6,8,12ம் இடத்திலோ, மாரக ஸ்தானத்திலோ அல்லது அதன் அதிபதிகளுடனோ இணைந்து பிறக்கும் குழந்தைகளுக்கு பாலாரிஷ்ட தோஷம் உண்டாகும்.

பிறந்த ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 6,8,12-ம் இடங்களில் அல்லது மாரக ஸ்தானத்தில் இன்னும் சில சேர்கைகளினால் பாலாரிஷ்ட தோஷம் ஏற்படும். இந்த குழந்தைகளுக்கு நோய் நொடிகள் பிறந்த காலத்திலிருந்து 1 முதல் 12 ஆண்டுகள் வரை வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

பிறந்த உடனே அல்லது பிறந்த சில ஆண்டுகளில்(12 வருடங்களில்) இறப்பதும் பாலாரிஷ்ட தோஷம் எனப்படும்.

30 வயதுவரை அற்பாயுள் என்றும், 60 வயது வரை மத்திம ஆயுள் என்றும், 90 வயதுவரை  மற்றும் அதற்கு மேலும்  இதை தீர்க்காயுள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

பொதுவாக சர லக்னத்திற்கு இரண்டாம் இடமும் ஏழாம் இடமும் மாரக ஸ்தானமாக வரும் அதன் அதிபதிகள் மாரக ஸ்தானாதிபதிகளாக வருவர்.

ஸ்திர லக்னத்திற்கு மூன்றாம் இடமும் எட்டாம் இடமும் மாரக ஸ்தானமாக வரும் அதன் அதிபதிகள் மாரக ஸ்தானாதிபதிகளை வருவர்.

உபய லக்னத்திற்கு ஏழாம் இடமும் பதினொன்றாம் இடமும் மாரக ஸ்தானமாக வரும் அதன் அதிபதி மாரகாதிபதியாவார்கள்.

மாரக ஸ்தானத்தில் இருக்கும் ராகு கேதுக்கள் அந்த வீட்டு அதிபதியின் பலனை எடுத்து செய்வதால் அவர்கள் சுப நிலையில் இல்லாத போது மரணம் அல்லது அதற்கு ஈடான கண்டஙகளை தருவார்கள்.

ஒரு ஜாதகத்தில் ஆயுளின் வலுவைத் தீர்மானிப்பதற்கு லக்னாதிபதி , எட்டாம் அதிபதி, சனி, பாதகாதிபதி, மாரக ஸ்தானாதிபதி நிச்சயமாக ஆராயப்பட வேண்டும்.

மேலும் மாரக திசைகள் ஒருவருக்கு நடக்கும் போது ஏழரை சனி, அட்டமச் சனி குறிக்கிட்டால் கண்டிப்பாக மாரகம் மற்றும் அதற்கு சமமான கண்டம் உண்டு.

அது போல் ஒரு ஜாதகத்தில் சனி அம்சத்தில் நீசம் பெற்று ராகுவுடன் இணைவது நல்லதல்ல.

கிரகண அமைப்பில் இருக்கும் போது லக்னாதிபதி ராகுவுடன் நெருக்கமாக இருப்பதும் நல்லதல்ல.

ஆயுள் ஸ்தானாதிபதி,சனி, லக்னாதிபதி போன்றவை நீ்சம் ஆவதும் நல்ல நிலை அல்ல.

செவ்வாய் தசையில் ராகு அல்லது கேது புக்தி, சனி தசையில் ராகு அல்லது கேது புக்தி, ராகு, கேது தசையில் புதன் புக்தி போன்ற காலங்களில் பாலாரிஷ்ட பாதிப்புக்கு உள்ளான குழந்தைகள் கடுமையான சோதனைகளை சந்திக்க நேரிடும்.

புத்திரகாரகனான குரு, பெற்றோர்களது ஜனன ஜாதகத்தில் பலவீனமாக அமைந்தாலும், புத்திர ஸ்தானாதிபதி ராகு கேதுக்களோடு சுபத்தன்மை  அற்று பெற்றோர்களது ஜனன ஜாதகத்தில் இணையும் போதும், 5ம் இடத்தில்  பாவிகள் பெற்றோர்களது ஜனன ஜாதகத்தில் அமையும்போதும் அவர்களது குழந்தைகளுக்கு பாலாரிஷ்டம் மேலும் தீவிரமாக தாக்கக்கூடும் என்கின்றன ஜோதிட விதிகள்.





Monday, September 22, 2014

கிழமை, கரண, யோக, திதிகளில் பிறந்தவன் பலன்




இவை அனைத்தும் பொது பலன்களே. ஜாதக கிரக அமைப்பை பொருத்து இவை மாறுபடும், 

கிழமைகளில் பிறந்தவர் பலன்

1)
ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவன்.செல்வம் உடையவனாய் இருப்பான்
2)
திங்கள்கிழமையில் பிறந்தவன்,புகழ் உடையவனாய் இருப்பான்
3)
செவ்வாய்க்கிழமையில் பிறந்தவன். தந்திரக்காரனாய் இருப்பான்
4)
புதன் கிழமை பிறந்தவன், கல்வி உடையவனாய் இருப்பான்.
5)
வியாழக்கிழமை பிறந்தவன்,அறநெறியில் விருப்பம் உடையவனாய் இருப்பான்
6)
வெள்ளிக்கிழமை பிறந்தவன், உயர்ந்த காரியங்களைச் செய்பவனாய் இருப்பான்
7)
சனிக்கிழமை பிறந்தவன், பிறரை ஏமாற்றுவதில் திறமைசாலியாக இருப்பான்

பிறந்த கரணங்களில் பலன்

1)
பவ கரணத்தில் பிறந்தவன்.அச்சம் இல்லாதவனாய் இருப்பான் 
2)
பாலவ கரணத்தில் பிறந்தவன், பல நற்குணங்களை உடையவனாய் இருப்பான். 
3)
கௌலவ கரணத்தில் பிறந்தவன், நல்ல ஓழுக்கங்களை உடையவனாய் இருப்பான் 
4)
தைதுலை கரணத்தில் பிறந்தவன்,உத்தியோகத்தில் ஆர்வம் உள்ளவனாய் இருப்பான் 
5)
கரசைக் கரணத்தில் பிறந்தவன்,பிற மாதரிடம் பிரியம் உள்ளவனாய் இருப்பான்
6)
வணிசைக் கரணத்தில் பிறந்தவன்.இனிக்கப் பேசும் இயல்பு உடையவனாய் இருப்பான்
7)
பத்திரைக் கரணத்தில் பிறந்தவன், எதிலும் விரைவில் சலிப்பு அடைபவனாய் இருப்பான்,
8)
சகுனிக் கரணத்தில் பிறந்தவன், நல்ல அறிவாளியாக விளங்குவான்,
9)
சதுஷ்பாத கரணத்தில் பிறந்தவன்.தத்துவ நூல்களில் விருப்பம் உடையவனாய் இருப்பான்.
10)
நாகவ கரணத்தில் பிறந்தவன், மிக்க மானம் உள்ளவனாய் இருப்பான்

பிறந்த யோகங்களில் பலன்

விஷ்கம்ப யோகத்தில் பிறந்தவன், உறவினர்களிடம் அன்பு உள்ளவனாய் இருப்பான்
பிரீதி யோகத்தில் பிறந்தவன், துணிவு உடையவனாய் இருப்பான்,
ஆயுஷ்மான் யோகத்தில் பிறந்தவன், ஓழுக்கம் உடையவனாய் இருப்பான்
சௌபாக்கிய யோகத்தில் பிறந்தவன், தெய்வபக்தி உடையவனாய் இருப்பான்.
சோபன யோகத்தில் பிறந்தவன்,மானம் உள்ளவனாய் இருப்பான்.
அதிகண்ட யோகத்தில் பிறந்தவன்,புகழ் உடையவனாய் இருப்பான்.
சுகர்ம யோகத்தில் பிறந்தவன், புண்ணியங்களைச் செய்வதில் விருப்பம் உடையவனாய் இரு
திருதி யோகத்தில் பிறந்தவன், இனிய சொற்களைப் பேசுபவனாய் இருப்பான்.
சூல யோகத்தில் பிறந்தவன், கருணை உடையவனாய் இருப்பான்.
கண்ட யோகத்தில் பிறந்தவன், கர்வம் உடையவனாய் இருப்பான்.
விருத்தி யோகத்தில் பிறந்தவன், செல்வந்தர்களிடத்தில் நட்பு உடையவனாய் இருப்பான்.
துருவ யோகத்தில் பிறந்தவன், பெரியோரிடம் பக்தி உடையவனாய் இருப்பான்.
வியாகாத யோகத்தில் பிறந்தவன், அடிக்கடி வெளியூர் செல்வதில் விருப்பம் உடையவனாய் இருப்பான்.
ஹர்ஷண யோகத்தில் பிறந்தவன்,அறிவாளியாக இருப்பான்.
வஜ்ரயோகத்தில் பிறந்தவன், வேளாண்மையில் விருப்பம் உடையவனாய் இருப்பான்.
சித்தியோகத்தில் பிறந்தவன், எல்லாருக்கும் நல்லவனாக விளங்குவான்.
வரீயான் யோகத்தில் பிறந்தவன்,பகைவரை ஒடுக்குவதிலேயே ஆர்வம் உள்ளவனாய் இருப்பான்.
வாரீயன் யோகத்தில் பிறந்தவன்,உண்மையை மறைப்பதில் திறமை உள்ளவனாய் இருப்பான்.
பரிக யோகத்தில் பிறந்தவன், பிறரை ஏமாற்றுவதில் கெட்டிக்காரனாய் இருப்பான்
சிவயோகத்தில் பிறந்தவன், பெற்றோர்களைப் பேணுவதில் பிரியம் உள்ளவனாய் இருப்பான்.
சித்தி யோகத்தில் பிறந்தவர், செல்வ செல்வாக்கு உள்ளவர்
சாத்திய யோகத்தில் பிறந்தவர், கலைகளில் வல்லுநனாய் இருப்பான்.
சுபயோகத்தில் பிறந்தவன், பெண்களிடம் பிரியம் உள்ளவனாய் இருப்பான்.
சுப்ரயோகத்தில் பிறந்தவன், முன்கோபக்காரனாய் இருப்பான்
பிராம்ய யோகத்தில் பிறந்தவன், பிறருக்கு உதவுவதிலேயே நாட்டம் உடையவனாய் இருப்பான்.

பிறந்த திதிகளில் பலன்

பிரதமையில் பிறந்தவன்,எதையும் ஆழமாகச் சிந்தித்துப் பார்ப்பான்.
துவிதியையில் பிறந்தவன், பொய் பேச வெட்கப்படுவான்.
திருதியையில் பிறந்தவன், நினைத்த காரியத்தை முடிப்பான்.
சதுர்த்தியில் பிறந்தவன், மந்திர சித்தியில் விருப்பம் உடையவனாய் இருப்பான்.
பஞ்சமியில் பிறந்தவன், பெண்களிடத்தில் ஆசை உடையவனாய் இருப்பான்.
சஷ்டியில் பிறந்தவன், செல்வர்களால் விரும்பப்படுவான்.
சப்தமியில் பிறந்தவன், இரக்கம் உடையவனாய் இருப்பான்.
அஷ்டமியில் பிறந்தவன்,குழந்தைகளிடத்தில் பிரியம் உள்ளவனாய் இருப்பான்.
நவமியில் பிறந்தவன்,புகழில் நாட்டம் உடையவனாய் இருப்பான்.
தசமியில் பிறந்தவன், ஒழுக்கம் மிக்கவனாய் இருப்பான்.
ஏகாதசியில் பிறந்தவன், பொருள் ஈட்டுவதில் நாட்டம்
உள்ளவனாய் இருப்பான்.
துவாதசியில் பிறந்தவன்,புதுமையான தொழில்களில் ஈடுபடுவான்.
திரயோதசியில் பிறந்தவன்,உறவினர்களோடு ஓட்டி வாழமாட்டான்.
சதுர்த்தசியில் பிறந்தவன்,பிறர் செய்த சிறு தவறுகளையும் மன்னிக்கமாட்டான்
பௌர்ணமியில் பிறந்தவன்,மிகவும் தெளிவான சிந்தனா சத்தி உடையவனாய் இருப்பான்.
அமாவாசையில் பிறந்தவன், தன் அறிவையும், ஆற்றலையும் மேலும் பெருக்கிக்கொள்வதிலேயே ஆர்வம் உடையவனாய் இருப்பான்.