மற்ற பதிவுகள்

Wednesday, April 16, 2014

ராசி காரகங்கள்



இராசி காரகங்கள்
ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருப்பதுபோலவே, ஒவ்வொரு இராசிக்கும் சிற்சில தனிப்பட்ட குணாதிசயங்கள் இருக்கின்றன. இவற்றை அந்த இராசிக்குரிய காரகங்கள் என்று சோதிடர்கள் விளிப்பார்கள். எந்த இராசிக்கு என்னென்ன காரகங்கள் என்பதைப் பார்க்கலாம். 

மேஷம்:
முட்செடிகள், மலை, சிறு காடு, போர்க்களம், நெருப்புள்ள பகுதி, கள்ளர்கள் வாழும் பகுதி, பகலில் காடு, இரவில் ஊர் அதிகவாசி, சிவப்பு நிறம், அரசு, தலைப்பாகம், இராணுவம், தீயணைப்புத் துறை, தொழிற்சாலை, விவசாயம்.

ரிஷபம்:
மாட்டுத் தொழுவம், பழங்கள், வெண்மை நிறம், உணவுத் தானியங்கள், முகம், வயல்வெளி, தச்சுப்பட்டறை, பெண், வெள்ளி, இரத்தின
க் கற்கள், வியாபாரம், வட்டித் தொழில், கால்நடை வளர்ப்பு, கலைப் பொருட்கள், வாசனைப்பொருட்கள், திரைப்படம், கவிதை, பாட்டு, தங்கும் விடுதி.

மிதுனம்:
வியாபார ஸ்தலம், பெரிய மண்டபம், சூதாட்ட ஸ்தலம், நகரங்கள், கடலுக்கு அண்மைய இடம், பாடசாலை புத்தகப்பை வைக்கும் இடம், செய்தி மற்றும் தகவல் தொடர்புத்துறை, விண்வெளித்துறை, கல்வித்துறை, நிதித்துறை, சோதிடம், வியாபாரம், எழுத்துத்துறை, மேடைப்பேச்சு.

கடகம்:
நீர்நிலை, ஆறு, குளம், குளியல் அறை, வயல் சார்ந்த இடம், முத்து, சங்கு, திரவப் பொருட்கள், ஏற்றுமதி, இறக்குமதி வேளாண்மைத் தொழில், சோதிடம், மருத்துவம், போக்குவரத்துத் துறை, கல்வித்துறை, கலைத்துறை, பால் விற்பனைத் தலம், தெய்வஸ்தலம், இளஞ்சிவப்பு நிறம்.

சிம்மம்:
அரண்மனை, அலுவலகம், குகை, உயரமான பகுதி, விலங்குகள் வசிக்கும் இடம், மாநில அரசு, வயிறு, அரசு உத்தியோகம், அரசியல் நிர்வாகப் பொறுப்பு, இரும்பு மற்றும் நெருப்பு சம்பந்தமான தொழில், பொறியியல் துறை, அறுவை சிகிச்சை மருத்துவர், சமூக சேவை செய்தல், தர்ம ஸ்தாபனம் நடத்துதல்.

கன்னி:
புத்திசாலித்தனம், கூர்மையான அறிவு, பெரிய வியாபார ஸ்தலம், படரும் கொடிகள், கல்விச் சாலை, சாம்பல் நிறம், இடுப்பு, பூந்தோட்டம், நகரம், கணக்கர், தணிக்கையாளர், பலவித வியாபாரம், ஆசிரியர், எழுத்தர், மளிகைக்கடை, தானிய சேமிப்புக் கிடங்கு.துலாம்:
வியாபார வீதி, பணம் வைக்கும் இடம், பெண்கள் குழுமியுள்ள இடம், மனிதன் துலாக்கோலைப் பிடித்து இழுக்கும் தோற்றம், பலதரப்பட்ட நிறம், அடி வயிற்றுக்கு மேலுள்ள வயிற்றுப்பகுதி.

விருச்சிகம்:
முட்கள், கற்கள் நிறைந்த பகுதி
, விஷ ஜந்துகள் வாழும் பகுதி, கிராமம், பள்ளத்தாக்கு, தொழிற்சாலைப் பகுதி, குப்பை கொட்டும் பகுதி, சுரங்கம், ஆண் மற்றும் பெண்களின் மர்ம உறுப்புகள், கறுப்பும் சிவப்பும் கலந்த நிறம், இரும்பு, நெருப்பு சம்பந்தமான தொழில், மின்னியல் துறை, மாந்திரிகம், சோதிடம், ஆன்மீகம், ஆராய்ச்சி செய்தல், தாதுப்பொருட்கள் சம்பந்தமான தொழில். 

தனுசு:
காட்டுப் பிரதேசம், ஆயுத உற்பத்திச்சாலை, வில் வித்தை, தொடை, வளமான பகுதி, இராணுவத் தளம், பூஜை செய்யும் அறை, கஜானா, மரவியாபாரம், ஆன்மீகத் துறை, சட்டம் மற்றும் நீதித்துறை, அறநிலையத்துறை, நிதித்துறை, கல்வித்துறை, போர்ப் பயிற்சி, தர்மஸ்தாபனம் நடத்துதல்.

மகரம்:
வீட்டுப் பொருள் வைக்கும் பகுதி, அணைக்கட்டுப் பகுதி, கடற்கரை, சேறு நிரம்பிய பகுதி, காவலர் குடியிருப்பு, தொழிற்சாலை நிரம்பிய பகுதி, உணவு விடுதி, உர வியாபாரம், எண்ணெய் வியாபாரம், சுரங்கத் தொழில், திரவப் பொருள் விற்பனை, கழிவுப் பொருட்கள் விற்பனை, தோல், இரும்பு வியாபாரம், கட்டிட வேலை, கடினமான வேலை, கீழ்மட்ட ஊழியம், முழங்கால்.

கும்பம்:
மறைவிடம், ரகசிய இடம், இருண்ட பிரதேசம், மதுபானக் கடைகள், இடுப்பின் பின்புறம், சூதாட்ட ஸ்தலங்கள், கசாப்புக் கடை, சோம்பேறிகள், புஞ்சை தானியம் விளையும் இடம், சோதிடம், ஆன்மீகம், ஆசிரியர், ஆலோசனை வழங்குபவர், விமானத்துறை, தீயணைப்புத் துறை, சிறைச்சாலை, வெடிகுண்டு தயாரித்தல், சுங்க இலாகா, உளவுத்துறை.

மீனம்:
கிணறு, நீர் நிறைந்த தொட்டி, கடற்கரை, நதிக்கரை, புண்ணிய ஸ்தலங்கள், கல்வித் துறை, மருத்துவம், நீதித்துறை, கடற்படை, ஆலயப் பணி, மத போதகர்கள், புனித யாத்திரை, பாதங்கள்.

இங்கு கொடுத்திருக்கும் காரகங்களைத் தவிர, மேலும் பல காரகங்கள் இருக்கின்றன.
இங்கு கொடுத்துள்ளவை பாவ காரகங்கள் அல்ல. ராசிகாரகங்களே. ஒரு ராசியில் ஒரு கிரகம் நின்றால் அந்த ராசியின் காரகத்துவம் அந்தக் கிரகத்தைத் தாக்கும் என்பது விதி.