மற்ற பதிவுகள்

Thursday, April 3, 2014

ஜோதிடம் காட்டும் துரதிர்ஷ்டங்கள் (கடன், விபத்து, பிரிவு.......)


1 மூதாதையரின் சொத்துகள் விரயமாகும் அமைப்பு:

இலக்கினாதிபன் 12-இல் நிற்க 9-க்குடையவனும் 2-குடையவனும் விரயஸ்தானமாகிய 12-இல் நிற்க இவனுக்குப் பாக்கியம் நிறைய உண்டெனினும் மூதாதையரின் சொத்துகளும் பிறவும் விரயமாகும்.

2 மலடி
ஐந்தாம் வீட்டுக்கு உரியவர் நீச்சனாய் 6, 8, 12 வீடுகளில் மறைந்தால் அவர் மனைவி மலட்டுத் தன்மையைப் பெறுவார்.

அதேபோல், ஐந்தாம் வீட்டில் புதனும் கேதுவும் இருந்தால் அவர் மனைவி மலடி ஆவார். இது எந்த லக்னத்திற்கும் பொருந்தும். ஆனால் இவர்களை குருவோ சுக்கிர பகவானோ பார்த்தாலோ, ஐந்தாம் வீட்டுக்கு உரியவர் ஆறில் நீச்சம் அடைந்தால் அவர் மனைவியின் மலட்டுத்தன்மை விலகும். மேலும், ஐந்தாம் வீட்டுக்குரியவர் நீசமாகி ஐந்தாம் வீட்டில் புதனும் சனியும் இருந்தால் அந்த ஜாதகரின் மனைவி மலடி ஆவார்

3 விதவைப் பெண்:

7
ம் இடத்தில் உள்ள செவ்வாய் சூரியன் சேர்கை பெற்றால் அவள் விதவையாவாள்.

மூன்று அசுபர்கள் 7ம் இடத்தில் அமையப்பெற்றால் அந்தப் பெண் மாங்கல்ய பலம் இழந்து விடுவாள்.

8
ம் இடமான மங்கல்ய ஸ்தானத்தில் செவ்வாய், சனி, ராகு, கேது, போன்ற அசுபர்கள் அமையப்பெற்றாலும் விதவையாகி விடுவாள்.

பனிரெண்டாம் இடத்தில் இருக்கும் குருவோடு, செவ்வாய் சேர்கை பெற்றால் மறு விவாகம் உண்டு.

4 நன்மை செய்யாத தசாபுத்தி

ஒரு ஜாதகத்தில் தசை நடை பெறும் போது தசாநாதனுக்கு 6, 8, 12ல் உள்ள கிரகம் தனது புத்தியில் நன்மைகள் தாராது.

5 கடனாளி
பொதுவாக லக்னத்தையும், லக்னாதிபதியையும் பாவகிரகங்கள் சூழ்ந்தால் அந்த ஜாதகர் வாழ்க்கை முழுவதும் யாருக்காவது கடன் பட்டிருப்பார்.
2 க்குடையவர் திசையில் 6,8,12 க்குடையவர்கள் புத்தியில் கடன்பட வேண்டும் .

11
க்குடையவர் திசையில் 6,8,12 க்குடையவர் புத்தியில் கடன்பட வேண்டும்

6,8,12 க்குடையவர் திசையில் கடன்பட வேண்டும் .

ஜாதகத்தில் செவ்வாய் சனி கேது போன்ற கிரகங்கள் ஒன்றுக்கொன்று சேர்ந்தோ அல்லது பார்வை பட்டோ இருக்கிறது அதாவது சனி கிரகம் ஒருமனிதனின் பூர்வ ஜென்ம கர்மாவின் பலனை தரக்கூடியதாக இருக்கிறது அதே போல இதனோடு செவ்வாய் சம்பந்தப்படும்போது இக்கட்டான கொடிய வறுமை மனிதனை பிடித்துக்கொள்கிறது இந்த இரண்டு கிரகங்களோடு கேதுவும் சேரும் போது அது பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க கடன் வாங்க மனிதனை தூண்டுகிறது 

கடன் தொல்லையில் இருந்து விடுபட

    அஸ்வினி நட்சத்திர நாளில் மேஷ லக்னம் வரும் வேளையிலோ, அனுஷ நட்சத்திரம் வரும் நாளில் விருச்சிக லக்னம் வரும் வேளையிலோ (பொதுவாக இதை மைத்ர முகூர்த்தம் என்று சொல்வார்கள்)  யாரிடம் அதிகமாகக் கடன் பட்டிருக்கிறோமோ அவர்களுக்கு அந்த நேரத்தில் சிறிய தொகையையாவது திருப்பிக் கொடுக்க வேண்டும்.  

 அப்படிக் கொடுக்கும் பட்சத்தில் கடன் சிறுது சிறிதாக குறைந்து முற்றிலும் இல்லாது போய்விடும்  இந்த லக்ன கணக்குத் தெரியாதவர்கள் நவமி திதி, வரும் செவ்வாய் கிழமையிலோ சதுர்த்தி திதி வரும் ஞாயிறு (அ) சனிக்கிழமையிலோ தினசரி காலண்டல் போட்டிருக்கும் குளிகை நேரத்தில் மேலே சொன்னது போல கடனைத் திருப்பிக் கொடுக்கலாம்.  இதுவும் கணிக்கத் தெயாதவர்கள் செவ்வாய்கிழமை செவ்வாய் ஹோரையில் அப்படிச செய்தால் நிச்சயமாக கடன் சுமை தீரும்

6 அலியாக மாறும் ஜாதகர்
 நவக்கிரகங்களுள் புதன் பகவானும், சனி பகவானும் அலிக் கிரகங்களாய் விளங்குகின்றனர். அவற்றுள் புத பகவான் பெண் தன்மை அதிகம் கொண்ட பெண் அலியாகவும், சனி பகவான் ஆண் தன்மை அதிகம் கொண்ட ஆண் அலியாகவும் விளங்குகின்றனர். இவ்விரு கிரகங்களுடன் பிற கிரகங்கள் சம்பந்தப்படும்போது, அந்த ஜாதகருக்கு அலித்தன்மை ஏற்படுகிறது

7 விபத்து
ஒரு ஜாதகத்தில் குருவிற்கு பனிரெண்டாவது இடத்தில் செவ்வாயும் இரண்டாம் இடத்தில் ராகு இருந்தாலும் சனியும் செவ்வாயும் ஒரே ராசியிலிருந்து அதற்கு இரண்டாவது இராசியில் ராகு இருந்தாலும் விபத்து ஏற்படும் என்று ஜோதிட நூல்கள் சொல்கின்றன

பொதுவாக ஒரு ஜாதகனின் உயிரை குறிப்பிடும் கிரகம் லக்கினாதிபதியாகும் உடலில் ஏற்படும் காயங்களை குறிக்கும் கிரகம் செவ்வாய் மரணத்தை சுட்டிக்காட்டுவது ராகு விபத்து மற்றும் அகால மரணத்தை செவ்வாயும் ராகுவும் குறிக்கின்றன 

லக்கினத்திலோ அல்லது லக்கினத்தின் திரிகோண அமைப்பிலோ செவ்வாய் ராகு ஆகிய இரண்டு கிரகங்களும் சேர்க்கை பெற்று இருந்தால் விபத்துக்களால் காயமோ மரணமோ ஏற்படும் என்று சொல்கிறார்கள் அதை போலவே லக்கினாதிபதி இருக்கும் இடத்திலிருந்து மூன்று ஐந்து ஒன்பது ஆகிய வீடுகளில் செவ்வாய் ராகு இருந்தால் ஜாதகருக்கு கண்டிப்பாக விபத்து மூலம் மரணம் ஏற்படும் என்றும் சொல்லப்படுகிறது 
விபத்து காலம்
ஒரு சாதகனின் ஆயுள்காலத்தை இரண்டு கிரகங்கள் காட்டுகிறது ஒன்று ஜீவகாரகன் என்று அழைக்கப்படும் குரு மற்றொன்று கர்மகாரகன் என்று அழைக்கப்படும் சனி. இந்த இரண்டு கிரகத்தின் சஞ்சாரத்தை வைத்து ஒரு மனிதனின் ஆயுளையும் அதற்கு வரும் ஆபத்தையும் ஓரளவு தெரிந்து  கொள்ளலாம். அதை போல திடீரென்று ஏற்படும் விபத்து பெரிய காயங்கள் ஆகியவற்றை ராகு கிரகத்தின் இயக்கத்தை வைத்து அறிந்து கொள்ள முடியும்.

ஒரு ஜாதகத்தில் குரு அல்லது சனியோடு ராகு சேரும்போது அவனுக்கு விபத்துக்கள் ஏற்படும் காலமென்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது.


8 தகப்பனுக்கு அபாயம்
ஒரு ஜாதகத்தில் சூரியன் செவ்வாய் ராகு ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று திரிகோணத்தில் இருந்தாலும் சூரியனுக்கு பனிரெண்டாவது இடத்திலும் ஐந்தாம் இடத்திலும் செவ்வாய் ராகு இருந்தாலும் தகப்பனுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் என்று ஜாதக அலங்காரம் என்ற நூல் சொல்கிறது. 

9 தகப்பனிடம் சண்டை
ஒரு குழந்தையின் பிறப்பு நேரத்தில் சூரியன் சனி கேது ஆகிய மூன்று கிரகங்களும் ஒரே வீட்டில் இருந்தால் தகப்பனுக்கும் குழந்தைக்கும் கருத்து வேற்றுமை ஏற்படுவதை தவிர்க்கவே முடியாது மேலும் அடுத்தடுத்த ராசிகளில் இந்த கிரகங்கள் வரிசையாக அமர்திருந்தாலும் இந்த நிலைமை தான் ஏற்படும் அதே போல சூரியன் சனி கேது ஆகிய மூன்றும் ஒன்று ஐந்து ஒன்பது ஆகிய இடங்களில் இருந்தாலும் கருத்து வேற்றுமையை தடுத்து நிறுத்த இயலாது

10 பில்லி சூனிய பாதிப்பு
ராகு துஷ்ட தேவதைகள் மற்றும் தீய ஆவிகளை கட்டுபடுத்தும் கிரகமாகும் அதே போல சந்திரன் மன பலகீனத்தை காட்டும் கிரகமாகும் செவ்வாய் கொலை மற்றும் கொடூர செயல்களை காட்டும் கிரகமாகும் இந்த மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று திரிகோணத்தில் இருந்தாலோ ஒரே ராசியில் செயற்கை பெற்று இருந்தாலோ பில்லி சூனியத்தால் பாதிப்பு வரும்