ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Tuesday, March 17, 2020

கொரானாவும் ஆயுள் பாவமும்

உலகையே இன்று அச்சுருத்தும் பெரிய விஷயம் கொரானா வைரஸ் தொற்று நோய் என்றால் அது மிகையாகாது.

டிசம்பர் 2019 மாதம் முதல் சீனாவில் பரவிப் பல உயிர்களைப் பலி வாங்கிய கொரோனா வைரஸ் இப்போது வரை உலகில் நூற்றுக்கும் மேர்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவிலும் பலருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு புறம் நோய் பரவும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் மறுபுறம் கொரோனா குறித்த வதந்திகளும் வலம் வந்து கொண்டே இருக்கின்றன. இதனால் கொரோனா வைரஸ் மற்றும் அது ஏற்படுத்தும் கோவிட்-19 (COVID-19) நோய் குறித்த கேள்விகளுக்கு உலக சுகாதார மையம் (WHO) விளக்கமளித்துள்ளது. அவற்றில் சிலவற்றை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

ஒரு ஆய்வில், இந்த நோயை சரியாக கையாளாவிட்டால் ஒன்றரை கோடிக்கும் அதிகமான மக்கள் மரணிக்க அல்லது கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

கொரோனா ஒரு தொற்றுநோய் என்பதால் இதனால் பாதிக்கப்படுபவர்கள் படும் வேதனை மிகவும் அதிகம். இவர்களை யாரும் கவனிப்பதில்லை, சில சமயங்களில் இவர்களின் குடும்ப உறுப்பினர்களே அல்லது நண்பர்களே கைவிட்டு விடுகின்றனர். இறப்பு ஏற்படும்பட்சத்தில் யாரும் உதவ முன்வருவதில்லை. சில இடங்களில் அனாதைப் பிணங்களாக குப்பைகளில் வீசி எறியப்படுகின்றனர்.

இந்த நோயைப் பற்றியும், பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றியும்,
ஜோதிடரீதியாக யாரெல்லாம் மீண்டு வருவார்கள் என்பதையும் பார்ப்போம்.

ஜோதிடரீதியாக இதை ஆராய்வோம்.
இதுகுறித்து பஞ்சாங்கத்தில் டிசம்பர் மாதம் 2019 (மார்கழி) மேற்கு திக்கில் இருந்து புதிய வைரஸ் நோய் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் ஆறு கிரக கூட்டணி தனுசில் இருந்து ராகு பார்வை பெற்றது. அதன்படியே சீனாவில் கொரோனா உருவாகி உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருவது குறிப்பிடத்தக்கது. ராகு கிருமிகளுக்கு காரகன் என்பதாலும் காற்று ராசியில் இருந்து பார்வையிட்டதாலும் இந்நோய் காற்றைப்போல வேகமாக பரவுகிறது. இந்த கிரக கூட்டணி ராசி மாரும்போது  இந்த வைரஸ் நோய் ஏப்ரல் 14ம் தேதி முதல் படிப்படியாக குறைந்து ஜுன் 30க்குள் கட்டுக்குள் வரும் என்று கணிக்கப்படுகிறது. ஆனாலும் ஒழிப்பது 
 கடினம். மீண்டும் கடினமாக தாக்கும் அபாயம் உண்டு.

எந்த ஒரு நோய் வந்தாலும் நம் கர்மவினை முடியாமல் நாம் இந்த உலகத்தை விட்டு நீங்க மாட்டோம்.
அந்த கர்ம பதிவை காட்டும் கண்ணாடியே நமது ஜாதகம். 

எட்டாம் பாவம் என்பது ஜாதகரின் ஆயுள் பற்றி கூறுகிறது. ஆயுள் காரகன் சனி, ஜாதகரின் லக்னத்திற்கு பாதகம் செய்யும் பாப கிரகங்களின் நிலையை வைத்துதான் ஒருவரின் ஆயுள் பற்றி கூற முடியும். ஒருவரின் ஆயுள் முடிவு பல விதமாக இருக்கலாம் என்றாலும், நோயால் ஏற்படும் மரணம் பற்றிதான் நாம் இங்கே பார்க்கப் போகிறோம்.


8-ம் இடத்திற்கான அதிபதி, எட்டில் இருப்பது அந்த ஜாதகருக்கு நீண்ட ஆயுளைத் தரக்கூடும். 8-ம் இடத்திற்கான அதிபதி 6-ல் மறைவதை விட, 12-ல் மறைவது, நல்ல ஆரோக்கியத்தையும், தீர்க்க ஆயுளையும் வழங்கும். எட்டாம் இட அதிபதி இரண்டாம் இடத்தில் இருந்தால், அவர் 7-ம் பார்வையாக எட்டாம் இடத்தைப் பார்ப்பார். அதன் மூலம் ஜாதகருக்கு தீர்க்க ஆயுள் கிடைக்கும். எட்டாம் இடத்தின் அதிபதி லக்னத்தில் இருந்தால் சில சங்கடங்கள் தோன்றும் என்றாலும், நல்ல ஆயுள் பலன் இருக்கும்.

மேஷ லக்னத்திற்கு செவ்வாய் லக்னாதிபதியாகவும், எட்டாம் இட அதிபதியாகவும் உள்ளார். எனவே செவ்வாய் நீச்சம் பெற்றால் உடல் ஆரோக்கியம் கெடும். மனக் கஷ்டம் இருக்கும். எந்நேரமும் நோய் இருந்து கொண்டே இருக்கும். துலாம் லக்னத்திற்கு, சுக்ரன் தான் லக்னாதிபதியாகவும், எட்டாம் இட அதிபதியாகவும் இருக்கிறார். இவர் உச்சம் பெறுவது ஆறாம் இடம் என்பதால் நோய் தாக்கம் அதிகரிக்கும்.

ரிஷபம் மற்றும் சிம்ம லக்னத்திற்கு குரு தான் எட்டாம் இடத்தின் அதிபதி. இந்த ஜாதகர்களைப் பொறுத்தவரை குரு நீச்சம் பெறாமல் இருப்பது நல்லது. உச்சம் பெறாமலும் இருக்க வேண்டும். குரு உச்சம் பெறாமல் எந்த இடத்தில் இருந்தாலும் நன்மையைச் செய்வார். அதுவே நீச்சம், உச்சம் பெற்றிருந்தால் சிறுவயது முதல் நோய்கள் வந்து கொண்டே இருக்கும்.

மிதுன லக்னத்திற்கும், கடக லக்னத்திற்கும் சனியே எட்டாம் இடத்தின் அதிபதி. இவர் நீச்சம் பெறாமல் இருக்க வேண்டும். அப்படி நீச்சம் பெற்றால் அந்த ஜாதகரின் மனம் ஒரு நிலையில் இருக்காது. தவிர மூட்டு வலி, வயிற்றுக் கோளாறு, மூல நோய் வரக்கூடும். முதுமை காலத்தில் தொற்று நோய் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

விருச்சிகம், கும்பம் லக்னத்திற்கு புதன் எட்டாம் இடத்தின் அதிபதி. எனவே புதன் ஆட்சி, உச்சம் பெற்றால் ஜாதகருக்கு யோகம். அதுவே நீச்சம் பெற்றால், ஜாதகரின் ஆயுள் பலம் குறையும். குடல் புண், ரத்த அழுத்தம் வரும், நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

கன்னி லக்னத்திற்கு செவ்வாய் எட்டாம் இட அதிபதியாக இருக்கிறார். இவர் மகரத்தில் உச்சம் பெறுவது நல்ல யோக பலன் தரும். நீண்ட ஆயுள் இருக்கும். மாறாக நீச்சம் பெற்றால் ஜாதகருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், எலும்பு தேய்மானம், மூட்டு வலிகள் தொல்லை தரும். தனுசு லக்னத்திற்கு எட்டாம் பாவாதிபதி சந்திரன். அவர் 6-ம் பாவத்தில் உச்சம் பெறுவது யோகம். என்றாலும் ஜாதகர் மனநோயாளி போல் சில சமயம் நடந்து கொள்வார். சந்திரன் நீச்சம் பெற்றால் ஜாதகருக்கு முடக்குவாதம் வரும்.

மகர லக்னத்திற்கு சூரியனே எட்டாம் இடத்தின் அதிபதி. சூரியன் 4-ம் இடமான மேஷ ராசியில் உச்சம் பெறலாம். ஆனால் 10-ம் இடமான துலாம் ராசியில் நீச்சம் பெற்று விடக்கூடாது. அவ்வாறு நீச்சம் பெற்றால் ஜாதகருக்கு தலைவலி, ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் போவது, உடல் சோர்வு, நரம்பு தளர்வு, சரியான உறக்கம் இல்லாமை போன்றவற்றால் தவிப்பார்கள்.

மீன லக்னத்திற்கு 8-ம் இடத்தின் அதிபதி சுக்ரன். இவர் 7-ம் இடமான கன்னியில் நீச்சம் பெறுவது நன்மையை வழங்கும். மாறாக உச்சம் பெற்றால் அந்த ஜாதகருக்கு சர்க்கரை நோய், உடல் பருமன், தசைப்பிடிப்பு, தொற்று நோய்கள் வரக்கூடும். சிறுவயதில் முதல் நெஞ்சில் சளித் தொல்லை இருக்கும்.

ஜாதகத்தில் சனியின் நிலையே மரணத்தின் வகையை நிர்ணயிக்கும். ஒருவருக்கு நீண்ட சிறப்பான ஆயுளைத் தரும் கிரகம் சனி பகவான் ஆவார்

சத்ரு வீட்டில் இருக்கும் கிரகம், நீச்ச வீட்டில் இருக்கும் கிரகம், சூரியனுடன் சேர்க்கை பெற்ற கிரகம்.. இவர்களால் ஆயுள் குறையும். வக்ரம் பெற்ற கிரகம், வர்கோத்தமம் அடைந்த கிரகம், உச்சம் பெற்ற கிரகம் போன்றவை ஆயுளைக் கூட்டும். லக்னேசனுக்கு விரோதியான கிரகம், லக்னேசனது திசையில் தனது ஆட்சி காலத்தில் ஜாதகருக்கு மரணத்தைக் கொடுக்கலாம்.
ஒருவர் ஜாதகத்தில் லக்னத்துக்கு 3, 6, 11 ஆகிய இடங்களில் 8-ம் வீட்டோன் (ஆயுள்காரகன்) இருந்தால் அந்த ஜாதகரின் ஆயுள் கூடும். 8-ம் வீட்டோன் இருக்கின்ற ராசி, அம்சம், நட்சத்திரம் ஆகியவற்றின் அதிபதிக்குள்ள பலத்தைக் கொண்டு ஆயுளை நிர்ணயிக்க வேண்டும். 8-க்குரியவன் (அஷ்டமாதிபதி) ஆயுள் ஸ்தானாதிபதி, 12-ம் வீட்டில் மறைய ஆயுள் குறையும்.

லக்னாதிபதியும் எட்டாமதிபதி, சந்திரன், சனி ஆகிய அனைவரும் சர ராசியில் இருந்தால் பூர்ண ஆயுள். மாறாக இவை அனைத்தும் ஸ்திர ராசியில் இருந்தால் அற்ப ஆயுள். ஆனால் இவை அனைத்தும் உபய ராசியில் நின்றால் மத்திம ஆயுள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது

லக்னேசன், பூர்வ புண்ணிய ஸ்தானம் என்னும் 5-ம் வீட்டோன், பாக்கியாதிபதி என்னும் 9-ம் வீட்டோன் ஆகிய மூவரும் பலம் பெற அந்த ஜாதகர் தீர்க்காயுள் உள்ளவராக திகழ்வார். அவர்கள் நிச்சயம் நோய் தாக்கானாலும் மீண்டு வருவார்கள்.

சமூக வலைதளங்களில் இடம்பெற்ற உரையாடல்



தொடர்ச்சி

கொரோனாவில் இருந்து பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய விரிவான அலசல் அடுத்த பதிவில்

Tuesday, November 5, 2019

உணவில் உள்ள கலப்படங்கள்

கலப்படத்துக்கு, அடிப்படை காரணம், மனிதனின் பேராசை தான். குறுக்கு வழியில் சம்பாதிக்க வேண்டும்; கொள்ளை லாபம் பெற வேண்டும் என, வியாபாரிகள்  ஆசைப்படுவது தான், கலப்படத்துக்கு பாதை அமைக்கிறது.

 2019ல் இதைப்பற்றி அரவம் திரைப்படத்தில் இடம்பெற்ற வீடியோ உங்கள் பார்வைக்கு.



மக்களின் விழிப்புணர்வுக்காக.

நன்றி youtube


பால்
முன்னர் எல்லாம் பாலோடு தண்ணீரைத்தான் கலப்பதை கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் இப்போது பால் கெட்டுப்போகாமல் இருக்கவும், வெண்மை நிறம், கெட்டிதன்மை, தடிமன் போன்ற பல காரணங்களுக்காக சிலரால் யூரியா, சோடியம் கார்போனேட், சோடியம் ஹைடிராக்ஸைட், பார்மால்டிஹைட், ஹைடிரோஜன் பெராக்ஸைட் போன்றவை சேர்க்கப்படுகிறது. இதனால் குடலில் அரிப்பு மற்றும் பல  பாதிப்புகள் உண்டாகும்.

தமிழகத்தில் வினியோகிக்கப்படும் பாலில், அனுமதிக்கப்பட்ட அளவை விட, நஞ்சு அதிகமிருப்பதாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு ஆணையம்(FSSAI), November 2019ல் தெரிவித்திருந்த நிலையில், தற்போது, பாதுகாப்பற்ற உணவுகள் தமிழகத்தில் தான் அதிகம் விற்படுவதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.


தரமில்லா உணவகங்கள்.
உணவு வண்ணங்கள் , நறுமணங்கள், பதனப் பொருட்கள், ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் போன்றவை அதிக அளவில் சேர்க்கப்பட்டாலும் அல்லது அவை அனுமதிக்கப் படாதவையாக இருந்தாலும் உடல் நலம் பாதிப்படையும்.



காய்கறிகள் மற்றும் பழங்கள்

செயற்கையான முறையில் காய்கறிகள் மற்றும் பழங்களை பழுக்க வைப்பதற்கு கால்சியம் கார்பைட் , எதிபான் மற்றும் ஆக்ஸிடோஸின் பயன் படுத்தப்படுகிறது. கால்சியம் கார்பைட், கேன்ஸர் உருவாக காரணமாகிறது

மற்ற குறிப்பிடத்தக்க கலப்படங்கள்

தேன் உடன்  சர்க்கரைப்பாகு

மிளகு உடன் கலக்கப்படும் பப்பாளி விதை

மிளகாய் அல்லது மஞ்சள் தூள்  உடன் கலக்கப்படும் நிறமிகள்


நெய் மற்றும் வெண்ணெயில் பிசைந்த உருளைக்கிழங்கு அல்லது ஸ்டார்ச் மாவு

ராகி அல்லது கேழ்வரகில் ரோடமைன் பி என்ற ரசாயனப் பொருள்

காபித்தூளில் தேவைக்கு அதிகமாக சிக்கரித்தூள்



கலப்படத்தால் ஏற்படும் கேடுகள்:


சில கலப்பட உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் நம் உடல்நலம் பாதிப்படையும். வெள்ளை சர்க்கரை, கலப்பட மற்றும் ரசாயன உணவுகளை பல வருடங்கள் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, உடல் பருமன், புற்றுநோய் உள்ளிட்ட பலவிதமான நோய்கள் நம்மை தாக்கக்கூடும்.

இதைப்பற்றிய ஆவணப் படம்
உங்கள் பார்வைக்கு.




இந்தியாவில் 2018-19ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 3ல் ஒரு பங்கு உணவு கலப்படம் செய்யப்பட்டவை என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

காற்று மாசில் தலைநகர் டில்லியும், உணவுக் கலப்படத்தில் தமிழகமும் முன்னிலை வகிப்பது வருத்தமான நிகழ்வு.






‘பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் ’ என்பது ஒரு பழமொழி . ஆனால் இந்த பசியை போக்குவதற்காக மனிதர்கள் உண்ணும் உணவுப் பொருட்கள், இன்றைய காலகட்டத்தில் பல நேரங்களில் உடல்நலத்திற்கும், சில நேரங்களில் உயிருக்கும் கூட உலை வைத்து விடுகிறது. இதற்கு காரணம் அசுர வேகத்தில் அரக்கனாய் மாறும் ரசாயனங்கள். பளிச்சென்று இருந்தால் அது தரமான உணவு என்ற எண்ணம், பாமரர்கள் மட்டுமன்றி, படித்தவர்களிடமும் பரவியிருப்பது விந்தையான வேதனை. கோடிகளில் புரள்வோரையும், தெருக்கோடிகளில் தவிப்போரையும் இணைக்கும் ஒரே புள்ளி பசி என்றால் அது மிகையல்ல. எனவே, ருசி பார்த்து அந்த பசியை போக்காமல், உணவின் தரம் பார்த்து  உட்கொண்டால் மட்டுமே, ஆரோக்கிய வாழ்வின் அடிபற்றி நடக்கும் நாளைய தலைமுறை.




Friday, November 1, 2019

சொந்த தொழில் பலன் தருமா?


எல்லோரும் "நீங்களும் அம்பானி ஆகலாம் என்று நினைக்க கூடாது". அவரவர் பூர்வபுண்ணிய யோகப்படிதான் இந்த தொழில் யோகம் அமைகிறது

சொந்த தொழில் யோகம் இருந்தாலும் சரியான திசாபுத்திகள் வராவிட்டால் தொழில் செய்தும் பயன் இருக்காது.
எந்த திசையிலும் சுய புத்தியில் தொழில் ஆரம்பிப்பது நல்லதல்ல. 7 1/2 சனி,  அஷ்டம சனி காலங்களில் புதிய முதலீடுகளை செய்யகூடாது.

லக்னத்துக்கு பத்தாம் இடமே இந்த தொழிலுக்குரிய பலனை தெரிந்து கொள்ளும் இடமாகும்.

லக்கினாதிபதி வலுப்பெறவில்லை என்றால் தொழிலில் அலைச்சலும் சிரமங்களும் இருந்து கொண்டே இருக்கும். 2, 9, 11 ம் அதிபதிகளில் யாரேனும் ஒருவர் வலுப்பெற்றால் தொழிலில் லாபம் தரும்.  ஜாதகத்தில் 6-ம் அதிபதி பலம் இழந்து 10-ம் அதிபதி ஆட்சி அல்லது உச்சம் பெற்று வலுப்பெற்று அமர்ந்தால் ஜாதகர் எந்த தொழிலை செய்தாலும் வெற்றி பெறுவார்.10-ம் அதிபதி கேந்திர ஸ்தானங்களில் சுபர் சேர்கை பெற்று இருந்தால் நற்பலன்.

தொழில் ஸ்தானத்தில் 8, 12-ம் அதிபதி இருந்தாலும், குரு அல்லது கேது கெட்டு இருந்தாலும் தொழிலை அடிக்கடி மாற்றம் செய்வார்.

பத்தில் ஒரு கிரகமாவது இருந்தால்தான் நல்லது என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அப்படி 10ல் இல்லா விட்டாலும் 4ம் விட்டில் இருந்தால் அவை கண்டிப்பாக 10ம் வீட்டை பார்க்கும். இந்த மாதிரி இருந்தாலும் நலலதுதான்.

எந்த லக்கினக்காரர்களுக்கும் பாதகாதிபதி 10-ல் 8 அல்லது 12ம் அதிபதி உடன் அமர்வது அடிக்கடி தொழில் மாற்றத்தையும் இடம் மாற்றத்தையும் அலைச்சல்களையும், நஷ்டத்தையும் தரும்.

10-ம் அதிபதி பலம் குன்றி 6-ம் அதிபதியும் செவ்வாயும் வலுப்பெற்று அமர்ந்தால் அதன் திசாகாலங்களில்  நல்ல உத்யோகம் அமையும்.
6-ம் அதிபதி, செவ்வாய், 10-ம் அதிபதி, சனி ஆகிய கிரகங்கள் வலுவிழந்தால் தொழில் உத்யோகம் இரண்டும் சரிவர அமையாது. தொழில் ஸ்தானாதிபதி அல்லது சனி  நீசம், பெற்றால் சொந்த தொழில் கூடாது.

ஒருத்தரின் ஜீவன அமைப்பு பற்றி ஜோதிட ரீதியாக ஆராயும் போது பத்தாம் வீடு, பத்தாம் வீட்டின் அதிபதி, 10ம் வீட்டில் இருக்கும் கிரகங்கள், 10ம் வீட்டின் அதிபதியோடு சேர்ந்த கிரகங்கள், பத்தாம் வீட்டின் அதிபதியை பார்க்கும் கிரகங்கள், 10ம்வீட்டின் அதிபதி நவாம்சத்தில் இருக்கம் இடங்கள் என பல விசயங்களும் தீர்மானிக்கின்றன.

சூரியன் லக்னத்திற்கு பத்தில் இருந்தால் பத்தாம் வீட்டில் சூரியன் பலமாக இருந்தால் பல சாதனை படைக்கும் அமைப்பு , அதிகம் சம்பாதிக்கூடிய யோகம் அமையப்பெறும். அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் கௌவமான பதவி பெறும் யோகம், பாங் வேலை, வருமான வரி துறையில் வேலை, தந்தை மூலம் தொழில், நீதித்துறைகளில் வேலை, என இவற்றில் உயர் பதவிகளை பெறும் யோகம் அமையும். நல்ல நிர்வாக திறனம் அமையப்பெறும். முக்கியமாக மூளை சூப்பரா வேலை செய்யும். சூரியனுடன் ராகு கேது சனி கிரகங்கள் சம்பந்தம் பெறுவது வேலைக்காரர்களால் சிக்கல் மறைமுக எதிர்ப்புகள், தேவையற்ற தடை தாமதம் இன்னல்கள், சட்ட பிரச்சனைகள் மற்றம் சிக்கல்கள் போன்றவைகளை சந்திக்க நேரிடும்.

சந்திரன் லக்னத்திற்கு பத்தில் இருக்குமானால் நீர் சாந்த, பயனம் சார்ந்த கடல் சார்ந்த துறைகளில் வருமானம் பெறும் நிலை, ஹோட்டல் தொழில் , பால் பண்ணை தொழில் ஏற்றுமதி இறக்குமதி தொழில், பட்டு ஆடைகள் மற்றம் முத்து , அழகு ஆபரணங்கள் , உப்பு சார்ந்த தொழில்கள், மலை சார்ந்த தொழில்கள் பால் சாக்லேட் சார்ந்த தொழில்கள் அடிக்கடி பயணம் செய்யக்௯டிய தொழில்கள் ஆகியவற்றில் மூலம் நிறைய லாபம் சம்பாதிக்கக்கூடிய வகையில் யோகம் அமையும். சந்திரன் கெட்டு போய் இருந்தால் தேவையற்ற மனகுழப்பம், பீதி, டென்சன், எரிச்சல், தவறான எண்ணம், கெட்ட சிந்தனை, சரியான முடிவு எடுக்க திணறல் எடுத்த காரியத்தில் தோல்வி, செய்யும் தொழிலில் இடையூறு போன்ற சூழ்நிலையை சந்திக்கும் யோக நிலை உருவாகும். சந்திரன் பத்தாமிடத்தில் இருந்தால் தாய்வழிச் சொத்துக்கள் கிடைக்கலாம்.

செவ்வாய் லக்னத்திற்கு 10ல் பலம் பெற்று இருந்தால் செவ்வாய் வீரத்துக்குரியோன் நிலத்துக்குரியோன் கோபத்துக்குரியோன்.  இந்த கிரகம் 10ல் பலம் பெற்று இருந்தால் போலீஸ், ரவுடி, மிலிட்டரி, நிலம் வீடு மனைகள் வாங்கி விற்கும் தொழில், பாதுகாப்பு துறை, தீயணைக்கும் படையில் வேலை, வீரதீர சாகஸ வேலை, சிங்கம் புலி யானை போன்ற மிருகங்களை வைத்து சர்க்கஸ் செய்யும் வேலை, தீப்பெட்டி, பட்டாச தொழில், போன்ற தொழில்களில் ஈடுபட்டு அதிகமான லாபம் பெறக்கூடிய யோகம் அமையம். இந்த கிரகம் பலமாக இருந்தால்தான் மேற்கூறியபடி இருக்கும். நல்ல நிர்வாக திறமையம் இருக்கும். அதுவெ பலமிலந்து இருந்தால் சரியான பயந்தான் கொள்ளியாக தொடைநடுங்கியாக பகைவர்களின் தொல்லைக்கு ஆளாபவர்களாக, தொழிலில் நஷ்டத்தை ச்ந்திப்பவர்களாக யோக நிலையை தந்துவிடும்

லக்கினத்திற்கு பத்தில் புதன் கிரகம் பலம் பெற்று அமைந்தால் ஸ்கூல் மற்றும் காலேஜ் ஆகியவற்றில் டீச்சர்களாக புரபசர்களாக வேலை,  கவிஞர்களாக, கணக்கர்களாக, எழுத்தாளர்களாக, பேச்சாளர்களாக, உபதேசம் செய்பர்களாக, ஆலோசனை கூறுபவர்களாக கணித துறை வங்கி தறை இன்சூரன்ஸ் துறை பத்திரிக்கை டிவி, செய்தி, சார்நத துறைகளில் ஈடுபட்டு நிறைய லாபம் சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும். வலு குறைந்தால் சமயோசித புத்தியின்மை, மறதி, விவேகமின்மை சாதுரியமின்மை ஆகிய தொல்லைகள் உருவாகும். புதன் பத்தாமிடத்தில் இருக்கும் போது நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து செய்யும் தொழில்களில் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு அதிகம்.

குரு கிரகம் லக்னத்துக்கு பத்தில் இருக்கக்கூடிய அமைப்பாக இருந்தால்
குரு நேர்மைக்க சொந்தக்காரர். நியாயமாக நடக்க வைப்பவர். ஒழுக்கமான வேலைகளை தருபவர். வலுவான குரு பல்கலை கழகத்தில் புரபசராகவும், மருத்துவராகவும் வரி, கல்விதுறை, அரசியல் துறை ஆலய துறை,ஆராய்ச்சி துறை, வர்த்தகத்துறை, சட்டம் ஒழுங்க துறை, வங்கி துறை,ஆகிய துறைகளில் உத்தியோகம் மற்றும் தொழில்களில் ஈடுபட்டு கை நிறைய சம்பாதிக்க கூடிய யோகம் அமையம். இந்த குருவே கெட்டுபோய் இருந்தால் பொய் லஞ்சம்  துரோகம் செய்தல் காட்டி கொடுத்தல், குழிபறித்தல் வீண பழி சொல். அதிகாரிகளின் கெடுபிடி அகிய சுபமற்ற பலன்கள் கிடைக்க ஆரம்பிக்கும்.

சுக்கிரன் லக்கினத்திற்கு 10ல் இருந்துவிட்டால். இயல் இசை நாடகம் டிவி சினிமா சீரியல் நடிப்பு நாட்டியம் சங்கீதம் ஆடம்பரம் அழகு அணிகலன்கள் தங்கம் வைரம்  அழகு ஜவுளி கடைகள் பட்டு மால்கள் மாட மாளிகைகள் வாசனை துறைகள் குதிரை பந்தயம் மருந்து விற்பனை மால்கள், என ஈடுபட்டு கை நிறைய பணம் சம்பாதிக்கும் யோகம் அமையும். அப்படி கிரகம் வலுவற்று இருந்தால் விபச்சாரம், அடிமை தொழில், தீய பழக்கங்கள் பெண்பித்து நிலை என தீய யோகங்கள் கிடைக்கம் அல்லது சிலருக்கு பணம் இருந்தும் நல்ல சுகமாக சொகுசாக இல்லாமல் மிகவும் சாதரணமாக எந்த ஒரு சந்தோசத்தையும் அனுபவிக்காமல் இருக்கக்கூடிய யோகத்தை இந்த பலமற்ற சுக்கிரன் தரும்.

லக்னத்துக்கு 10ல் சனி இருந்துவிட்டால் அதவும் பலமாக இருந்துவிட்டால்
விவசாய துறை, மருத்துவ துறை இன்சூரன்ஸ், ஏஜென்ஸி, இரும்பு ஈயம், எண்ணெய் வியாபாரம், அரிசி மண்டிகள் பருப்பு பயறு புண்ணாக்கு மண்டிகள். தொழிற்சாலை அமைத்தல், பணணை தொழில் அமைத்தல், போன்றவற்றில் ஈடுபட்டு கை நிறைய பணம் சம்பாதிக்கக்கூடிய நிலையை உருவாக்கும். இதுவே பலமற்ற சனியாக இருந்தால் அடிமை வேலை, அழுக்கு வேலை, திருட்டு வேலை, மாட்டு தொழுவத்தில் சாணி அள்ளும் வேலை, காவல் வேலை, தோட்ட வேலை, மரம் வெட்டும் வேலை கூட்டுறவு சங்கம் வேலை கூட்டுறவு பண்ணை வேலை போன்ற கீழ்நிலை வேலைகளில் ஈடுபடும் நிலை உருவாகும்.

லக்னத்திற்கு பத்தில் ராகு இருந்துவிட்டால் விண்வெளி பயணம், ஆராய்ச்சி, வானொலி, சர்க்கஸ், தெய்வீக பணி மருத்துவ பணி கெமிக்கல் பணி மாந்திரீக பணி என பணிகளை தரும். ராகு எந்த கட்டத்தில் உள்ளதோ அந்த கிரகம் சார்ந்த பணிகளை செய்ய வைக்கும். பலமற்ற ராகு சந்தேக புத்தியையும் எதையும் நம்ப இயலாத தன்மையையும் உருவாக்கும். செய்யும் செயல்களில் ஏடாகூட நிலையை, மனக்குழப்பத்தை உருவாக்கும்.

10ல் கேது பலம் பெற்று இருக்குமானால்
தெய்வீகம் சம்பந்தப்பட்ட துறைகள் வெளிநாட்டு வர்த்தகம் ஏற்றுமதி இறக்குமதி,  விஞ்ஞானம் அறிவியல் சார்ந்த துறைகள் மெஸ்மரிசம் வசீகரம் கட்ட பஞ்சாயத்து ஆன்மீகம் சம்பந்தப்பட்ட துறைகள்
போன்றவற்றில் ஈடுபட்டு  கைநிறைய பணம் சம்பாதிக்கக் கூடிய யோகம் கிடைக்கும்.