ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Wednesday, June 11, 2014

முகூர்த்த நாள்



திருமணம் செய்வதற்கு ஒரு ஆணும் பெண்ணும் எப்படி அவசியமோ, அதே போலத் தான் முகூர்த்த நாள் நிர்ணயிப்பதும். ஒரு குழந்தையின் வளர்ச்சி, ஆரோக்கியம், புகழ், ஆயுள் போன்றவற்றைப் பார்க்க எப்படி குழந்தையின் ஜனன ஜாதகம் அவசியமோ அதே போல முகூர்த்த நாள் மற்றும் நேரம் நிர்ணயம் அவசியமாகிறது. கணவன், மனைவி பந்தம், சமுதாயத்தில்அவர்கள் வாழ்க்கை சிறத்தல், . இருவருக்கும் உள்ள அன்னியோன்யம், குழந்தைப்பேறு முதலிய பல நிகழ்வுகள் நல்லபடியாக அமைவதற்கு முகூர்த்த நாள் மற்றும் நேர நிர்ணயம் அவசியமாகிறது . மணமக்களின் ஜாதகங்களில் ஒரு சில குறைகள் இருந்தாலும் இந்த முகூர்த்த நேர லக்னம் நன்கு அமையுமானால் அந்தக் குறைகள் தெரியாமல் போகிறது. நாள் செய்வதை நல்லோரும் செய்யார்.

நல்ல நாள் பார்த்து எந்தவொரு வேலையையும் செய்தோம் என்றால் அந்த வேலையை சிறந்த முறையில் நவக்கிரகங்கள் நமக்கு அமைத்துக் கொடுத்துவிடும். மணமக்கள் இருவர் ஜாதகங் களையும் ஒப்பிட்டுப் பார்த்து இவர்களுக்கு திருமணம் செய்விக்கலாம் என்று ஜோதிடர்கள் தெரிவித்த பின்பு, இருவர் வீட்டில் உள்ள அனைவரும் சம்மதம் தெரிவித்த பின்னர் திருமண முகூர்த்த நாளை தேர்வு செய்ய முற்படவேண்டும். திருமணம் ஒருவருக்கு செய்ய முயலும் போது முதலில் அவரது நட்சத்திரத்தின்படி குருபலம் உள்ளதா என்று அறிய வேண்டும்.

குருபகவான் அவரவர் ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ம் இடங்களில் பிரவேசம் செய்யும் போது குரு பலம் இருப்பதாக கருதப்படுகிறது. 

குருபகவான் 2 ல் இருக்கும் போது திருமணம் செய்வித்தால் அந்த தம்பதியருக்கு தனசம்பத்துகள் கிடைக்கும்.

5 ல் குரு இருக்கும் போது திருமணம் நடந்தால் சொற்படி நடக்கும் சத்புத்திரர்கள் பிறப்பார்கள்.

7ல் குரு இருந்தால் பெண்கள் என்றும் தீர்க்கசுமங்கலியாக இருப்பார்கள்.  

9ல் இருக்கும்போது கணவருக்கு சகல செல்வாக்கும்,

11ல் குரு தங்கும் போது திருமணம் செய்தால் மனைவி அல்லது கணவன் மூலம் செல்வங்கள் பல வந்து சேரும். குருபலம் ஆண் பெண் இருவருக்கும் இருப்பின் மிக்க நலம். இதில் பெண்ணிற்கு மட்டுமாவது இருப்பது இன்றியமையாதது. 

குருபலம் போலவே சூரிய பலமும் சிறிது முக்கியமாக கருதப்படுகிறது.

சூரிய பலம் என்பது ஒருவரின் ஜென்ம ராசிக்கு சூரியன் 3, 6, 10, 11 ம் இடங்களில் பிரவேசம் செய்வதே ஆகும். சூரிய பலம் பெண்ணைவிட ஆணுக்கு மிக முக்கியமாக கருதப்படுகிறது. திருமணக்காலங்கள் மணமக்களுக்கு யோகாதிபதிகளின் தசாபுக்திகளாக அமைந்தால் அந்தத் திருமணம் சீரும் சிறப்புமாக அமையும்.

மணமக்கள் இருவருக்கும் குருபலம் இல்லாத சமயத்தில் இவர்களுக்கு சுக்ரன், அல்லது 2, 7, 11 ம் அதிபதிகளின் தசாபுக்திகள் நடந்தாலும் திருமணம் செய்விக்கலாம். மணமக்களுக்கு அஷ்டம சனி காலத்திலும் விரய சனி நேரத்திலும் திருமணத்தை தள்ளிப்போடுவது சிறப்பை தரும். குருபலம், சூரியபலம், நல்ல தசாபுக்தி மற்றும் சனிபகவானின் தாக்கம் இல்லாத காலங்களை தேர்ந்தெடுத்த பின்னர் ஒரு நல்ல நாளை கீழ்கண்டவாறு தேர்வு செய்யலாம்.

1. சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி மற்றும் தை மாதங்ளை தேர்வு செய்து இவைகளில் மலமாதம் இல்லாத மாதத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

2. வளர்பிறையின் துவிதியை, திரிதியை, பஞ்சமி, சப்தமி மற்றும் திரயோதசி உள்ள நாட்கள்.

3. இருவர் நட்சத்திரத்திற்கும் தாராபலம் ஏற்றார்போல் உள்ள நாட்கள்.

4. அன்றைக்கு சந்திரன் ஐன்ம ராசிக்கு 1, 3, 6, 7, 10, 11 ராசிகளில் இருப்பது.

5. இரு கண்ணுள்ள நாட்களான புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகள் சிறந்தது. ஒரு கண்ணுள்ள நாட்களான ஞாயிறு மற்றும் திங்கள் பாதி சிறந்தது. குருட்டு நாட்களான செவ்வாய் சனியை தவிர்ப்பது உத்தமம்.

6. அக்னி ராசிகளான சிம்மம் மற்றும் மேஷம் முகூர்த்த லக்னமாக இல்லாது இருப்பது.

7. முகூர்த்த லக்னத்திற்க்கு 7, 8 இடங்கள் திதி சூன்ய ராசிகளாக அமையாமல் இருப்பது.

8. முகூர்த்த லக்னத்திற்க்கு ஏழாமிடம் சுத்தமாக இருப்பின் நல்ல கணவன் மனைவி அமையும். எட்டாம் இடம் சுத்தமாயின் நீடித்த திருமணபந்தம். 12ம் இடம் சந்தோஷத்தை குறிக்கின்றது. ஆக 2,7,8ம் இடங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் மற்றும் எட்டாம் இடத்தை குரு அல்லது சுக்ரன் பார்க்கலாமேவொழிய இந்த இடங்களில்இவர்கள் யாரும் இருக்கக்கூடாது.

9. உபஜெய ஸ்தானங்களான 3, 6, 11 ல் தீய கிரகங்கள் இருப்பது வாழ்க்கையின் வெற்றி மற்றும் ஆதாயங்களை குறிக்கும்.

10. திருமணநாள் மணமக்களின் ஜென்ம நட்சத்திரமாகவோ, ஜென்ம கிழமையாகவோஅமையாமல் இருப்பது மிக நல்லது.

11. நவக்கிரகங்களில் அதிக சுபத்தன்மை பொருந்திய குருவும் சுக்ரனும் மூடம் என்கின்றஅஸ்தங்க தோஷம் அடைந்திருக்க கூடவே கூடாது.

12. ராகு காலம் மற்றும் ஏமகண்டம் போன்ற விஷ நேரங்களை ஒதுக்க வேண்டும். குளிகைகாலத்தைக் கூட தவிர்ப்பது சிறந்தது. காரணம் குளிகை காலத்தில் செய்யும் காரியங்கள்திரும்பவும் செய்ய நேரிடலாம்.

13. மொத்தம் உள்ள பதினோறு கரணங்களில் அசுப கரணங்களை ஒதுக்கவேண்டும்.

சித்தயோகத்தை மாங்கல்ய தாரணத்திற்கும் அமிர்தயோகத்தை சாந்தி

முகூர்த்தத்திற்க்கும் தேர்வு செய்தல் வேண்டும்.

14. “பஞ்சகம்என்ற முறையில் நல்ல நாளை தேர்வு செய்ய வேண்டும். பஞ்சகமுறையில் பார்த்தால் வருடத்திற்க்கு மிக குறைந்த முகூர்த்த நாட்களே வரும்.எனவே இதற்கு பரிகாரமாக இரத்தினம், சந்தனம், எலுமிச்சை, தீபம் மற்றும் தானியம்முதலியவைகளை துணிமணிகளுடன் சேர்த்து தானம் செய்யவேண்டும்.

15. பெண்ணிற்கு மாதவிலக்குக்கு உரிய நாட்களாக அமையாமல் இருப்பது அவசியம்.ஏனென்றால் இதில் புனிதமான அக்னியை வார்த்து இறைவனை அதில் வரவழைத்து வணங்குகிறோம்.

16. திருமணம் செய்ய இருக்கும் நாளுக்கு 15 தினங்கள் முன்பு அவரவர் குல தெய்வத்திற்கு பொங்கலிட்டு ஆராதனைகள் செய்து பிறகு முன்னோர்களை தியானித்துஅனுமதி பெறவேண்டும்.

இப்படி அமையும் திருமண உறவு என்றும் நிலைத்திருப்பதுடன், ஒருவரையொருவர் விட்டுத் தராமல் அன்புடன் இல்லற இன்பம் பெறுவார்கள் என்பது ஜோதிட ரகசியங்களில் ஒன்றாகும்.

Wednesday, May 21, 2014

யோகங்கள் - பகுதி 4


யோகங்கள் பகுதி 3ன் தொடர்ச்சி




யோகங்கள் என்ற வார்த்தை ஒரு கிரகத்திற்கும் இன்னொரு கிரகத்திற்கும் தொடர்பை குறிக்கும். 
குறிப்பு: ஜாதகங்களிலே நல்ல யோகங்கள் இருப்பது மட்டும் போதாது. அக்கிரகங்களின் தசைகள் வயது காலத்தில் வந்தால்தான் யோகங்களுக்கும் பலன் உண்டு மற்றும் யோகக்கிரகங்கள் துர்ஸ்தானங்களில் இல்லாமல் நல்ல இடங்களில் அமர வேண்டும். அசுபக்கிரகங்களின் சேர்க்கையோ பார்வையோ உண்டானால் யோகபங்கமாகும்.


100) அசுர யோகம்
லக்னத்தில் குருவும் சந்திரனும் கூடி இருந்து லக்னாதிபதி சுபருடன் கூடி இருக்க பெறின் அசுர யோகம் உண்டாகிறது.
பலன்
அரசியல் ஈடுபாடும் உயர்பதவியும் பெறுகின்றனர். இந்த யோகம் 4௦ வயதுக்கு மேல் உண்டாகும்.

101) சுமத்திர யோகம்
லக்னத்தில் கேது இருந்து 7ல் சந்திரன் இருந்து சந்திரனுக்கு 8ல் சூரியன் இருக்க பெறின் சுமத்திர யோகம் உண்டாகிறது.
பலன்
முன் வயதில் யோகமுடையவர். கிராமத்திற்கோ அல்லது சிருபகுதிக்கோ அதிகாரியாக திகழ்வார்கள்.

102) பாதாள யோகம்
லக்னத்திற்கு 12ல் சுக்கிரன் இருந்து 12க்கு உரியவன் உச்சம் பெற்று குருவுடன் சேர்ந்திருக்க பாதாள யோகம் அமைகிறது.
பலன்
பிற்கால வாழ்கையில்  செல்வம், சிறப்பு பெற்று வளமுடன் வாழ்வர்.

103) வசுமதி யோகம்
லக்னதிற்கோ அல்லது சந்திரனுக்கோ 3, 6, 1, 11 ல் சுப கிரகங்கள் இருந்தால் வசுமதி யோகம் உண்டாகிறது.
பலன்
சகல செல்வங்களும் பெற்று வசதியுடன் வாழ்வார்.

104) தனயோகம்
லக்னத்திற்கு 2,9,1௦ அதிபதிகள் இணைவது
லக்னத்திற்கு 2,5,6 அதிபதிகள் இணைவது
லக்னத்திற்கு 6,7 ஆம் அதிபதிகள் பலம் பெற்று 2 ஆம் அதிபதியுடன் சம்பந்தம் பெறுவது ஆகியன தனயோகம் ஆகும்.
பலன்
தொழில் முறையில் செல்வம் சேர்கின்றனர்.

105) சந்திர யோகம்
குருவும், சனியும், சந்திரனுக்கு 2ல் அமையப்பெறின் சந்திரயோகம் உண்டாகிறது.
பலன்
சுயநலமிக்கவர்கள்

106) கவுரி யோகம்
சந்திரன் உச்சம் பெற்று குருவால் பார்க்கப்பட்டால் கவுரியோகம் உண்டாகிறது.
பலன்
தெய்வீக வழிபாடு, நல்ல குடும்ப வாழ்க்கை உண்டாகிறது.

106) இந்திர யோகம்
5ல் சந்திரன் அமையப்பெற்று 5,11 அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றால் இந்திரயோகம் உண்டாகிறது.
பலன்
தைரியம் மிக்கவர், புகழ் மிகுந்த வாழ்க்கை வாழ்கின்றனர்.

107) பிரபை யோகம்
லாபாதிபதி சுக்ரனுடன் சேர்ந்து 1,4,7,1௦ ஆகிய இடங்களில் இருக்க பிரபை யோகம் உண்டாகிறது.
பலன்
முன் பகுதி யோகம் உடையவர். அரசியல் ஈடுபாடு இருக்கும். செல்வாக்கு பெற்றவர். தீயாக உள்ளம் கொண்டவர்.

108) பாரிஜாத யோகம்
11 ஆம் அதிபதி ஆட்சி/உச்சம் பெறின் பாரிஜாத யோகம் உண்டாகிறது.
பலன்
நற்குணம் மிக்கவர், செல்வம் செல்வாக்கு பெற்று விளங்குபவர்.

109) மாலா யோகம்
சந்திரனுக்கு 1௦ல் குரு இருக்க மாலா யோகம் உண்டாகிறது.
பலன்
அரசு தொடர்புடைய பணியில் அமர்வர். செல்வ செழிப்புடன் வாழ்வர்.

110) மகாலட்சுமி யோகம்
ஒன்பதாம் அதிபதியும் சுக்கிரனும் 1,5,9,4,7,10 ல் அமர மகாலட்சுமி யோகம் உண்டாகிறது.
பலன்
மனைவி வழியில் லாபம் உண்டாகும். அதிகாரம் செய்யும் பதவி அடைவர். வாகன வசதி உண்டு.

111) சதா சஞ்சார யோகம்
லக்னாதிபதி சரராசியில் இருப்பது சதா சஞ்சார யோகமாகும்.
பலன்
அதிக அலைச்சல், அதிகப்படியான பயணங்கள் மேற்கொள்ளும் நிலை உண்டாகிறது.

112) மாதுரு மூலதன யோகம்
இரண்டாம் வீட்டு அதிபதி நான்காம் வீட்டு அதிபதி உடன் சேர்ந்திருக்க மாதுரு மூலதன யோகம் உண்டாகிறது.
பலன்
தாயாருடைய உதவியால் அதிக லாபம் கிட்டும்.

113) களத்திர மூலதன யோகம்
இரண்டாம் வீட்டு அதிபதியை ஏழாம் வீட்டு அதிபதி பார்த்தால் களத்திர மூலதன யோகம் அமைகிறது.
பலன்
மனைவி வழியில் அதிக லாபங்கள் உண்டாகிறது.

114) அங்கிஸ யோகம்
குருபகவான் உச்சம் பெற்று சந்திரன் லக்னத்திற்கு 5,7,9 ல் இருக்க அங்கிஸ யோகம் உண்டாகிறது.
பலன்
எல்லா வகை செல்வங்களும் பெற்று வசதியுடன் வாழ்வர். நீண்ட வயது வாழ்வர்
115) சௌரிய யோகம்
லக்னதிலோ அல்லது லக்னத்திற்கு 3ல் சுப கிரகம் இருப்பது சௌரிய யோகம் ஆகும். தனாதிபதி வலுவாக இருபினும். இந்த யோகம் உண்டாகிறது.
பலன்
சகல வசதிகளுடன் பலரும் போற்றும் வாழ்க்கை உண்டாகிறது.

116) உதாந்திரி யோகம்
லக்னத்திற்கு 2,5,9 ஆம் அதிபதிகள் லக்னத்தில் நிற்க உதாந்திரி யோகம் உண்டாகிறது.
பலன்
சட்டத்துறையில் வல்லவராக விளங்குவர். குடும்பம் மகிழ்ச்சியாக விளங்கும்.
 117) ஆன்மீக யோகம்
குருவும், சனியும் எவ்விதத்திலாவது சம்பந்தம் பெறுவது (பார்வை / சேர்கை / பரிவர்த்தனை) ஆன்மீக யோகம் ஆகும்.
பலன்
தெய்வபக்தி மிக்கவர். ஆன்மிக வாழ்க்கை வாழ்பவர்.

118) இல்லற சந்நியாசி யோகம்
சனியின் வீட்டில் சந்திரன் இருப்பது, சனி தன் இரு வீடுகளில் ஒரு வீட்டை பார்பது இல்லற சந்நியாசி யோகம் ஆகும்.
பலன்
பற்றற்ற வாழ்க்கை நடத்துவர். இல்லறத்தில் ஈடுபாடு குறைந்து இருக்கும். இதனால் இவர்கள் இல்லற சந்நியாசி ஆகின்றனர்.

119) பூமி லாப யோகம்
4 க்கு உரியவன் லக்னதிலோ அல்லது லக்னாதிபதி 4 ல் இருப்பின் அல்லது 4 க்கு உரியவன் பலம் பெற்று இருப்பின் பூமி லாப யோகம் உண்டாகிறது.
பலன்
தனது பெயரில் நிலம், மனை, வீடு அமையப் பெறுகின்றனர்.

120) சுக யோகம்
12 க்கு உரியவன் சுபர் சம்பந்தம் பெற்றிருக்க படுக்கை சுக யோகம் அமைகிறது.
பலன்
கட்டில் சுகம் உண்டு

121) பந்து பூஜ்ய யோகம்
4 ஆம் அதிபதி உச்சம் பெற்று அல்லது நட்பு பெற்று குரு பார்வை பெற்றிருக்க பந்து பூஜ்ய யோகம் உண்டாகிறது.
பலன்
பந்துகளால் புகழப்படுவான்.

122) வாகன லாப யோகம்
4க்கு உரியவன் சுப கிரகத்துடன் கூடி 9 ல் இருப்பினும், 9 க்கு உரியவனுடன் கூடியிருபினும் வாகன லாப யோகம் உண்டாகிறது.
பலன்
வீடு, வாகனம் நன்கு அமைகிறது.

123) ஸ்வீகார புத்திர யோகம்
மிதுனம் அல்லது கன்னி லக்னமாகி 5ல் செவ்வாய் சனி இருந்து, புதன் பார்வை அல்லது சேர்கை இருப்பின் ஸ்வீகார புத்திர யோகம் அமைகிறது.
பலன்
தனக்கு பிள்ளைகள் பிரப்பதில்லை. ஸ்வீகார புத்திர ப்ராப்தி உண்டாகிறது.

124) சர்ப்ப கண்ட யோகம்
2ல் ராகு மாந்தியுடன் கூடி இருப்பின் சர்ப்ப கண்ட யோகம் உண்டாகும்.
பலன்
பாம்பு கடியால் மரணம் உண்டாகும்.

125) பூமி விருத்தி யோகம்
4க்கு உடையவன் தனது உச்ச வீட்டிலோ சொந்த வீட்டிலோ நட்பு வீட்டிலோ இருந்து அவனை சுபர் பர்ர்க்க பூமி விருத்தி யோகம் உண்டாகிறது.
பலன்
சொந்த வீடு அமைகிறது. வீட்டின் மூலம் வருமானம் அமைகிறது.

126) சகோதர லாப யோகம்
3 ஆம் இடம் வலுத்து மூன்றுக்கு உரியவன் பலம் பெற்று 3ல் சுபர் அமையப் பெறின் சகோதர யோகம் அமைகிறது.
பலன்
சகோதர்களுடன் உறவு நீடிக்கிறது. சகோதர்களால் உதவிகள் கிட்டும்.

127) மஹா பாக்கியயோகம்
ஆணாக பிறந்தவர்களுக்கு சூரியன், சந்திரன் ஆண் ராசியிலும் பெண்ணாக பிறந்தவர்களுக்கு சூரியன் சந்திரன் பெண் ராசியிலும் அமர்ந்தால் மஹா பாக்கியயோகம் உண்டாகிறது.
பலன்
ஒரு நாட்டையோ அல்லது ஒரு பகுதியையோ அல்லது ஒரு நிவாகத்தையோ நடத்தும் யோகம் உண்டாகிறது.

128) சன்யாச யோகம்
கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 1௦ ல் சூரியன், புதன், சுக்கிரன் இருப்பின் சன்யாச யோகம் உண்டாகிறது.
பலன்
ஒரு மதத்தின் தலைவராகவோ அல்லது ஆன்மீக தலைவராகவோ ஆகும் அமைப்பு உண்டாகிறது. புத்தர் ஜாதகம், சங்கராச்சாரியார் சுவாமிகள், ராமானுஜர் ஜாதகத்தில் இந்த யோகம் அமைந்துள்ளதை காணலாம்.

129) தீர்க்க தேக யோகம்
புதனுக்கு 7 ல் செவ்வாய் இருக்க தீர்க்க தேக யோகம் உண்டாகிறது.
பலன்
நல்ல உடல் கட்டு உடையவர் ஆவார்.

130) மாதுரு சாப புத்ர தோசம்
மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 5 ல்பாபர் இருக்க சந்திரன் பாபர் நடுவிலோ அல்லது நீசம் பெற்றோ இருக்க, மாதுரு சாபத்தால் புத்திர தோஷம் உண்டாகிறது.
பலன்
மாதுரு சாபத்தால் புத்திர தோஷம் உண்டாகிறது.

131)  கோடீஸ்வர யோகங்கள்‍
|
1) ஒரு ஜாதகத்தில் 4,7,12க்கு உடையவர்கள் வலுவுடன் சுபர் பார்வை பெற்று நின்றால் கோடீஸ்வர யோகம் அமையும்.
மேஷ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு 4,9 ஒன்றில் குரு நின்று, 2ல் சுக்கிரன், 7ல் சந்திரன் எனும் அமைப்பு ஏற்ப்பட்டாலே கோடீஸ்வர யோகம் ஏற்ப்படும்.
2) ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெற்று அவர்கள் லக்கினாதிபதிக்கும், ராசிநாதனுக்கும் வேண்டியவர்களாக அமைந்தால் கோடீஸ்வரயோகம் ஏற்படும்.
3) லக்கினாதிபதி, ராசிநாதன், யோகாதிபதி கெடாது ஜாதகத்தில் நல்ல விதமாக இவர்கள் சம்பந்தம் பெற்றால் கோடீஸ்வரர் ஆகலாம். இவர்கள் கெடாது சாதாரண நிலையில் அமர்ந்து சுபர் பார்வை பெற்றாலும் சுய முயற்ச்சியால் ஜாதகர் கோடீஸ்வரர் ஆகமுடியும்.

132) இயற்கையாகவே நன்மை பயக்கக்கூடிய
சில கிரக சேர்க்கைகள்:

 
1. குருவும் சந்திரனும் சேர்ந்திருந்தால்
அதைக் குருச்சந்திர யோகம் என்பார்கள்

2. சந்திரனும், செவ்வாயும் சேர்ந்திருந்தால்
சசிமங்கள யோகம் என்பார்கள்

3. புதனும், சூரியனும் சேர்ந்திருந்தால்
புத-ஆதித்ய யோகம் என்பார்கள்

4. புதனும் சுக்கிரனும் சேர்ந்திருந்தால்
நிபுனத்துவ யோகம் என்பார்கள்

5. ஒரு நீசம் பெற்ற கிரகத்துடன் ஒரு
உச்சம் பெற்ற கிரகம் சேர்ந்திருந்தால்
அது நீசபங்க ராஜயோகம் எனப்படும்



ஒரு இடத்தில் அடி வாங்கினாலும் மற்றொரு இடத்தில் புகழ் பெறுவதுதான் நீசபங்க ராஜயோகம்.

கல்விக்கு அதிபதி புதன். அவர் நீச்சமாகி இருந்தால் எவ்வளவு படித்தாலும் மதிப்பெண் குறைவாகவே கிடைக்கும். புதன் மீனத்தில் நீச்சமாகிறது. மீனம் குரு பகவானின் வீடு. குரு கடகத்தில் உச்சமடைந்தால் அது நீசபங்க ராஜயோகம் எனக் கொள்ளப்படும்.
நீசன் நின்ற ராசிநாதன் ஆட்சி உச்சமாகினும் நீசபங்க ராஜயோகம்...என்பது பாடல். புதன் நீச்சமாக இருந்தால் அவர்களின் இளமைக்காலக் கல்வி சுமாராகவே இருக்கும். ஒரு சிலருக்கு கல்வி தடைபடலாம். எனினும், மீண்டும் படிப்பைத் தொடருவதுடன், முதல் மதிப்பெண் வாங்க வைப்பதுதான் நீசபங்க ராஜயோகம்.
உதாரணமாக 10ம் வகுப்பில் திக்கித் திணறி தேர்ச்சி பெற்றவர் கல்லூரியில் முதல் மதிப்பெண் பெறுவதும், குறைந்த மதிப்பெண் பெற்றதால் பட்டயப்படிப்பில் சேருபவர் பின்னர் அதில் சிறப்பான மதிப்பெண் பெற்று பொறியியல் படிப்பில் சேருவதும் நீசபங்க ராஜயோகம் காரணமாக ஏற்படுவதுதான்.
மேற்கூறிய பலன்கள் புதனுக்கு உரியது. இதுபோல் சூரியன், சந்திரன், செவ்வாய் போன்ற கிரகங்களுக்கும் நீசபங்க ராஜயோகம் ஏற்படும். உதாரணமாக செவ்வாய் நீசபங்க ராஜயோகம் அடைந்திருந்தால் சகோதரர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படும். சொத்துத் தகராறு போன்றவை வரலாம்.எனினும், இறுதியில் ஒருவரைக் கேட்காமல் மற்றொருவர் முடிவு செய்யமாட்டார் என்பது போல் வாழ்வார்கள்.

எனவே, எந்த கிரகம் நீச்சமாகிறதோ அந்த கிரகத்தின் காரகத்துவங்களை அடைவதற்கு தடைகளும், அது கிடைக்கவில்லையே என்ற ஏக்கமும், தோல்விகளையும் நீசம் கொடுக்கும். அதுவே ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்கும் பின்னர் இழந்த எல்லாவற்றையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக வழங்கி விட்டு போய்விடும் -
 

___________________________________________________________